Untitled Document
October 23, 2026 [GMT]
 
'பிக் பாஸ் 10' தொடக்க விழா தேதி மற்றும் நேரம் வெளியானது!
[Tuesday 2026-08-25 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் எப்போது தொடங்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகம் இருந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது. அதில் பல சீரியல் நடிகர் நடிகைகளும் இருக்கிறார்கள்.


"ஐட்டம் பாடலுக்கு என்றுமே நான் No தான் சொல்வேன்" - சித்தார்த்!
[Monday 2026-08-24 16:00]

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக மணிரத்னம் அவர்களிடம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் சித்தார்த். அதை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவின் நாயகனாக அறிமுகமானார். பிறகு தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் சின்ன சறுக்கலை சந்தித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சித்தா மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இதன் பிறகு மிக கவனமாக தான், தன்னுடைய அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து சித்தார்த் நடித்து வருகிறார்.


All time disaster ஆன மகுடம்: அதிர்ச்சி கொடுத்த இறுதி வசூல்!
[Monday 2026-08-24 16:00]

விஷால் நடித்து இயக்கிய முதல் படம் மகுடம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு டீசண்ட் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் விஷால் முதன் முறையாக இயக்கி நடிப்பதால். அதனால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக வரும் என நினைத்தார்கள். ஆனால், படம் வெளியாகிய இரண்டே வாரத்தில் இப்படத்தை ரசிகர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டனர் என்பது கோலிவுட்டே அதிர்ச்சியாகியுள்ளது.


புதியதாக வெப் தொடரில் நடிக்கப்போகும் நடிகை த்ரிஷா!
[Monday 2026-08-24 16:00]

தமிழ் சினிமாவில் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை த்ரிஷா. மாடலிங் துறையில் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் இப்போது கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்று முன்னணி நாயகியாக தென்னிந்தியாவில் வலம் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது.


நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்!
[Monday 2026-08-24 07:00]

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவின் முதல் சம்பளம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் தான் ஒரு பேஷன் நிகழ்ச்சிக்கான மாடலிங் செய்ததற்கு 2000 - 3000 ரூபாய் சம்பளமாக கொடுத்த்தார்கள், அது தான் என் முதல் சம்பளம் என கூறி இருக்கிறார்.


தனுஷ் அரசியல் கட்சி பெயர்: 5 பெயர்களை தேர்வு செய்த தனுஷ்!
[Monday 2026-08-24 07:00]

நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதன் பின் அதை அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே போல தனுஷும் காய்நகர்த்த தொடங்கி இருக்கிறார்.


முன்திவு வசூலில் உச்சம் தொட்ட "டாக்சிக்"!
[Sunday 2026-08-23 17:00]

இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம்தான் கே.ஜி.எப். அதில் நாயகனாக நடித்து பேன் இந்தியா நடிகர் ஆனவர் யஷ். இவர் இதை தொடர்ந்து என்ன படம் நடிப்பார் என இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்க, அவர் ஒரு பெண் இயக்குநர் படத்தில் கமிட் ஆனார்.


16 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-08-23 17:00]

2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி மற்றும் சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


குக் வித் கோமாளி: இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பைனலிஸ்ட்கள்!
[Sunday 2026-08-23 17:00]

குக் வித் கோமாளி சீசன் 7-ல் நான்கு போட்டியாளர்கள் இறுதி போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் மொத்தம் 9 ஜோடிகள் போட்டியிட்ட நிலையில், அரை இறுதி போட்டிக்கு 3 ஜோடிகள் மட்டுமே தேர்வாகினார்கள்.


தொலைக்காட்சி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த வானம் பட நடிகை!
[Sunday 2026-08-23 17:00]

வானம்’ திரைப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்த ஜாஸ்மின் பாசின், ஒரு விபத்துக்குப் பிறகு சுமார் 72 மணி நேரம் தனது நினைவுகளை இழந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது, அதன்பிறகு அவரது திரைப்பயணம் எப்படி மாறியது என்பது குறித்து ஜாஸ்மின் பாசின் பகிர்ந்துக்கொண்ட அனுபவம் பற்றி தவகலை இந்த பதிவில் பார்க்கலாம்.


"என்னை தேடாதீர்கள்" - அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய்!
[Sunday 2026-08-23 17:00]

முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.


'இனி புது திரைப்படங்கள் வெளியாகாது' - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!
[Saturday 2026-08-22 17:00]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வருகிற செப்டம்பர் 1 முதல் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என்கிற முடிவை எடுத்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில், எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.


அன்பே டயானா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
[Saturday 2026-08-22 17:00]

பாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இப்போதெல்லாம் மதம், ஜாதி, மாநிலம், நாடு என எதையும் பார்க்காமல் காதலால் இணை பழைய விஷயங்களை பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழையும் போது ஏற்படும் எதிர்ப்பாராத மாற்றங்களைச் சொல்கிறது அன்பே டயானா.


இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்!
[Saturday 2026-08-22 17:00]

ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிரள வைக்கும் இன்ஸிடியஸ் சீரிஸின் அடுத்த படமான 'இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர்' எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. தனது தாய் தன் கண்ணே முன்னேயே தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்த ஜெம்மா, அவரது நினைவுகளை சுமக்கும் வகையில் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். பல் மருத்துவரான ஜெம்மா, தனது மகள் மாயாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சல்லிவன்ஸ் என்ற வயதான அண்டை வீட்டு தம்பதியினர் ஜெம்மாவுடன் நட்பு ரீதியில் உள்ளனர். தன் பாட்டியைப் பற்றி மாயா மேலும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஜெம்மா முற்பட, ஒருநாள் அவருக்கு தாய் உதவி கேட்பது போல் கனவு வருகிறது.


"அதை நானே நினைக்கவில்லை" - விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கவின்!
[Saturday 2026-08-22 07:00]

நடிகர் கவின் சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர். அவர் தற்போது நயன்தாரா உடன் ஜோடியாக நடித்து இருக்கும் Hi படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கவின் நயன்தாரா உடன் நடித்து இருப்பதை பற்றி பலரும் சொன்ன கமெண்ட் என்னவென்றால் 'அவர் நயன்தாரா உடன் நடிப்பார் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார்' என்பதுதான்.


ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததா லோகேஷ் கனகராஜின் 'டிசி'?
[Saturday 2026-08-22 07:00]

ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என விஜய்யின் பட வசனம் வருவது போல் இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் மாஸ் காட்டுவேன் வசூல் வேட்டை செய்வேன் என செய்து காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் டிசி.


பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!
[Friday 2026-08-21 15:00]

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் தான் சௌகார் ஜானகி. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே 300க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். 1950ம் ஆண்டு வெளியான சௌகார் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழ், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.


மொத ராத்திரி: திரை விமர்சனம்!
[Friday 2026-08-21 15:00]

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க. கதாநாயகன் ரிஷிகாந்த் (மருதநாயகம்), தான் காதலித்த பெண் தற்கொலை செய்துகொண்டதால், திருமணமே தனக்கு வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். துபாயில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் மருதுநாயகத்திற்கு திருமணம் ஏற்பாடுகளை அவருடைய குடும்பம் செய்துவிடுகிறார்கள்.


14 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Friday 2026-08-21 15:00]

14 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று விஸ்வநாத் & சன்ஸ். அதுவும் கருப்பு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இப்படம் வெளியானதால், வழக்கத்தை விட இரட்டிப்பு எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது.


கவின்-நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள ஹாய் பட டிரைலர்! Top News
[Friday 2026-08-21 07:00]

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள்.


"அரசியலில் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு உண்டு" - ஜி.வி.பிரகாஷ்!
[Friday 2026-08-21 07:00]

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்கள், குழந்தைகள் கூட இப்போது அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம், நடிகர் விஜய் தான். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இரண்டரை ஆண்டுகளில் தேர்தலை சந்தித்து இப்போது தமிழக முதலமைச்சராக கலக்கி வருகிறார். விஜய் அரசியலில் களமிறங்கியபோது பிரபலங்கள் பலரும் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வந்தனர்.


வசூலில் லாப கணக்கை தொடங்கிய விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம்!
[Thursday 2026-08-20 18:00]

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லாப கணக்கை தொடங்கிவிட்டது. கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.


டிசி திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-08-20 18:00]

டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 13 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கி மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மாபெரும் உச்சத்தை தொட்ட இவர், டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.


"சூர்யாவை காதலிக்க ஆசை" - நடிகை ருக்மிணி ஓபன் டாக்!
[Thursday 2026-08-20 18:00]

ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் படம் இவரை இந்தியளவில் புகழ் பெற செய்தது. இந்நிலையில் ருக்மிணி தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஜுனியர் என் டி ஆர் படமும் ஒன்று, இவர் நடிப்பில் அடுத்த வாரம் டாக்சிக் படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை மருத்துவமனையில் அனுமதி!
[Thursday 2026-08-20 08:00]

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.


ஒரே நேரத்தில் 7 படங்கள்: 66 வயதிலும் பிசியாக நடிக்கும் மோகன்லால்!
[Thursday 2026-08-20 08:00]

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருகிறார். 66 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இளம் ஹீரோக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.


கருப்பு நிறத்தில் படு கிளாமரான உடை அணிந்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோஸ்! Top News
[Thursday 2026-08-20 08:00]

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நிறைய நடிகைகள் களமிறங்கி வருகிறார்கள். அப்படி சில படங்கள் நடித்து அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது படங்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி எல்லா நடிகைகளை போல இவரும் போட்டோ ஷுட்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


விக்ரம் வீடியோவால் வந்த சர்ச்சை: அரிய வகை குரங்கு பறிமுதல்!
[Wednesday 2026-08-19 07:00]

விக்ரம் சமீபத்தில் ஒரு அரிய வகை குரங்கு உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது வைரல் ஆக பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அவரது சம்மந்தி வீட்டுக்கு சென்றபோது எடுத்த வீடியோ தான் அது என சொல்லப்பட்டது. அது பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


காய்கறி வியாபாரம் செய்யும் நடிகர் விமல்!
[Wednesday 2026-08-19 07:00]

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர். அவர் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் பேட்டிகளில் அவர் பதில் அளிக்கும் விதமும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகும்.


ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி!
[Tuesday 2026-08-18 16:00]

தமிழ் சினிமா 30 வருடங்களுக்கு மேலாக கொண்டாடிய ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான். ஜனநாயகன் படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரைப் பற்றிய காட்சிகள் கண்டிப்பாக இனி வரும் புதுப்படங்களில் இடம்பெறும். அந்த அளவிற்கு மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக உள்ளார்.

Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா