Untitled Document
October 23, 2026 [GMT]
 
"நான் இங்க தான் இருக்கேன்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சூர்யா!
[Tuesday 2026-09-01 07:00]

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகவே செய்தி வருகிறது. ஹிந்தி படங்களில் மீண்டும் நடிக்க தொடங்க, குழந்தைகள் படிப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே மும்பைக்கு சென்றதாக ஜோதிகாவும் கூறி இருந்தார்.


17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-08-31 16:00]

முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 17 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்.


முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு!
[Monday 2026-08-31 16:00]

மமிதா பைஜு தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை. இந்த இரண்டு மாதங்களிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட், ஜனநாயகன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துவிட்டன. இதில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.


3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-08-31 16:00]

கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் விதவிதமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் 'ஹாய்'.


அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினியும் நடிக்கிறாரா?
[Monday 2026-08-31 07:00]

அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார். செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரவி தேஜா இருமுடி பட லாபத்தில் வரும் பங்கு!
[Monday 2026-08-31 07:00]

நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சம்பளமாக பெரிய தொகை வாங்க வில்லையாம், அதற்கு பதிலாக லாபத்தில் பங்கு தொகையை அவர் பெறுகிறார்.


சிறுத்தை சிவாவின் அடுத்த படம்!
[Sunday 2026-08-30 17:00]

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் படங்களை கொடுப்பவர். இவர் சமீப காலமாக மிகப்பெரிய பின்னடைவில் சந்தித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தை வைத்து இவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிஸியாக இருக்க, தற்போது சிவா 'சரி இனி சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது' என நடிகர் தனுஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.


GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்!
[Sunday 2026-08-30 17:00]

ஜிவி பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இந்த வருடம் இசையமைத்த யூத், இருமுடி, ஹாப்பி ராஜ், விஸ்வநாத் & சன்ஸ் என பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் இம்மார்டல் (Immortal) படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கயாடு நடித்துள்ளார். அதோடு ஒரு வித்தியாசமான கிரியேச்சர் இந்த படத்தில் இடம்பெற, இந்த ட்ரைலர் சமீபத்தில் வந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.


பிக் பாஸ் 10 போட்டியாளர்கள் இவர்கள் தானா?
[Sunday 2026-08-30 17:00]

வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 10 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி பிக் பாஸ் 10 தொடங்கவுள்ளது. இந்த நிலையில், காமென் மேன் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதிலிருந்து முனியம்மா, ஜேசன் மற்றும் கரிஷ்மா ஆகிய மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வெற்றிமாறனை அழைத்து வாய்ப்பு கொடுத்த விஜய்!
[Sunday 2026-08-30 07:00]

விஜய் அரசியலுக்கு வரும் முன் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் படம் இயக்காதது ஏன் என்கிற காரணத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார்.


பிக் பாஸ் 10க்கு வரும் சர்ச்சை பிரபலம்!
[Sunday 2026-08-30 07:00]

பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே அதற்கு பல வாரங்களுக்கு முன்பு இருந்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என தகவல்கள் வலம் வர தொடங்கி விடும். போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என பிரபலங்களின் பெயர்கள் அந்த பட்டியலில் கிசுகிசுக்கப்படும். அப்படி கிசுகிசுக்கப்படும் பெயர்களில் பலர் வராமல் போவதும் உண்டு.


படு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை ரைசா வில்சன்! Top News
[Saturday 2026-08-29 17:00]

அட பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சனுக்கு என்ன தான் ஆச்சு என கேட்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாகவே ஒரே கிளாமர் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். படங்கள் பற்றிய அறிவிப்பு ஏதாவது வெளியிடுவார் என பார்த்தால் கிளாமராக உடை அணிந்து போட்டோஸ் தான் வெளியாகிறது.


நாஞ்சில் விஜயன் பிரச்சனை குறித்து வைஷு பதிலடி!
[Saturday 2026-08-29 17:00]

நாஞ்சில் விஜயம், தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரக்கூடியவர். விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் அதிகம் பெண் வேடம் போட்டு நடித்து மக்களை சிரிக்க வைப்பார். பல மேடை பேச்சுகள், சொந்த தொழில் என பிஸியாக இருந்தவருக்கு வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது. அதாவது நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.


அஜித் படத்தின் ட்ரைலர் ரெடி: ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்புக்கு செம விருந்து!
[Saturday 2026-08-29 17:00]

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் நடிப்பார், படம் எப்போது வரும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் அடுத்து தன் சொந்த தயாரிப்பிலேயே ஆதிக் இயக்கத்தில் டேர் டெவில் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் சென்னை அதை தொடர்ந்து ஐதராபாத்-தில் நடக்கவுள்ளது.


செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி!
[Saturday 2026-08-29 07:00]

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் செஃப் தாமு. அவர் அந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்தே நடுவராக இருந்து வருகிறார். அவர் உடல்நிலை காரணமாக அவர் எப்போதும் அமர்ந்துகொண்டு தான் ஷோவில் பேசுவது வழக்கம். சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட CWC 7ம் சீசன் செமி பைனலில் தாமு பங்கேற்கவில்லை.


"கர்ப்பமாக இருக்கும்போது 'அல போலேலோ' ஆடினேன்" - பூர்ணா!
[Saturday 2026-08-29 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் 'அல போலேலோ' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது. அந்த பாடலில் நடிகை பூர்ணா டான்ஸ் ஆடி இருந்தார். அது பற்றி அவர் தற்போது அளித்த பேட்டி எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.


தமிழகத்தில் மிக மோசமான வசூலில் டாக்ஸிக்!
[Friday 2026-08-28 16:00]

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ரூ. 400 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் டாக்சிக். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது வரை இப்படம் மிக மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் நாள் ரூ. 7 கோடி வரை வசூல் செய்த இப்படம், இரண்டாம் நாளான நேற்று வெறும் ரூ. 2 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.


ஹாய்: திரை விமர்சனம்!
[Friday 2026-08-28 16:00]

பாடலாசிரியர் விஷ்ணு எடவனின் அறிமுக இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள ஹாய் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. திருமணம் செய்தால் காதலித்துத்தான் செய்து கொள்வேன் என்கிற லட்சியத்தோடு இருக்கிறார் கதாநாயகன் கவின் (மயில்சாமி). ஆனால், இவர் எந்த பெண்ணிடம் தனது காதலை கூறினாலும், அவர்கள் 'நோ' மட்டும்தான் சொல்கிறார்கள். இப்படி பல நிராகரிப்புகளை சந்தித்து வரும் கவினுக்கு, அவருடைய வீட்டில் பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இந்த திருமணத்தில் தனக்கு துளிகூட விருப்பம் இல்லாத காரணத்தினால், தனது ஊரிலிருந்து சென்னைக்கு வந்துவிடுகிறார்.


மனைவியை பிரிந்துவிட்டாரா நாஞ்சில் விஜயன்?
[Friday 2026-08-28 16:00]

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த சில மாதங்களாக சொந்த தொழிலை மனைவியுடன் சேர்ந்து கவனித்து வந்தார். திருமணம், குழந்தை, வீடு, கார் என தங்களது உழைப்பின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்கள். ஆனால் இப்போது என்ன ஆனது என தெரியவில்லை, நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒரு பரபரப்பான செய்தி வலம் வருகிறது.


பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Friday 2026-08-28 07:00]

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் 6 நாட்கள் வசூல் விவரம் இதோ. பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.


டாக்சிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா?
[Friday 2026-08-28 07:00]

யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ஹுமா, ருக்மினி, தாரா என இந்தியாவின் முன்னணி நடிகைகள் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை தான் ரசிகர்களிடம் பெற்று வருகிறது. ஆனாலும் இப்படத்தின் முதல் நாள் வசூலில் எந்த குறையும் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மமிதா!
[Wednesday 2026-08-26 16:00]

கடந்த வாரம் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் இந்த ஆண்டு தனது முதல் வெற்றியை மமிதா பைஜூ பதிவு செய்தார். இதை தொடர்ந்து வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் மூலம் தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.


லோகேஷ் கனகராஜ் படத்தின் மீது கடும் அதிருப்தியில் நிவின் பாலி!
[Wednesday 2026-08-26 16:00]

நிவின் பாலி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவருக்கு என தென்னிந்தியா முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிரேமம் தான். தற்போது இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பெத்லஹேம் குடும்ப யூனிட் ரூ. 100 கோடி வசூலை கடந்து செம ஹிட் ஆகியுள்ளது.


டாக்ஸிக்: திரை விமர்சனம்!
[Wednesday 2026-08-26 16:00]

இந்திய அளவில் டாப் ஸ்டாராக மாறியிருக்கும் யஷ் மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி ஆகியோர் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க. 1947யில் இந்தியா விடுதலை பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. சால்வடார் என்ற நபர் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்க, அவருக்கு துணையாக ராயாவும் (யஷ்), அவரது அக்கா கங்காவும் (நயன்தாரா) உள்ளனர்.


குக் வித் கோமாளி 7 டைட்டில் வின்னர் இவர் தான்!
[Wednesday 2026-08-26 07:00]

விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் போட்டி முறையில் சில மாற்றங்களை செய்து இருந்தனர். போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த வருடம் கலந்து கொண்டு இருக்கின்றனர்.


ரஜினியை எதேச்சையாக சந்தித்த கயாடு லோஹர்!
[Wednesday 2026-08-26 07:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மற்ற நடிகர் நடிகைகளே பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆக இருக்கின்றனர். இன்று நடிகை ஸ்ரேயா சரண் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். அதனால் அவர் தர்மன் படத்தில் நடிக்கிறாரா என கேள்வி எழுந்தது.


வசூல் சாதனை செய்யும் இருமுடி!
[Tuesday 2026-08-25 17:00]

கடந்த வாரம் வெளிவந்த இருமுடி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2026-08-25 17:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யாவிற்கு கருப்பு திரைப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கிடைத்தது. மேலும் ரூ. 340 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து, சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.


அட்வான்ஸ் புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் டாக்சிக்!
[Tuesday 2026-08-25 17:00]

யாஷ் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் டாக்சிக் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.


தன்னை தானே கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன்!
[Tuesday 2026-08-25 07:00]

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த LIK படம் படுதோல்வி அடைந்தது. நேற்று சென்னையில் டாக்சிக் படத்தின் விழா நடைபெற்றது. அதில் யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா