Untitled Document
October 23, 2026 [GMT]
 
மனைவி கைக்குழந்தையுடன் நடுரோட்டில் நிற்கிறேன் - நாஞ்சில் விஜயனுக்கு என்ன ஆனது?
[Monday 2026-10-05 09:00]

நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலம் ஆனவர். குறிப்பாக பெண் வேடத்தில் அவர் அதிகம் நிகழ்ச்சிகளில் காமெடி செய்து இருப்பார். நாஞ்சில் விஜயன் தற்போது தான் நடுரோட்டில் குடும்பத்துடன் நிற்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் புக் செய்த பேருந்து நிறுவனம் மீது கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.


சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் வரும் பிரச்சனை: காட்டமாக பதிவிட்ட சமந்தா!
[Monday 2026-10-05 09:00]

நடிகை சமந்தா எப்போதும் தைரியமாக பல்வேறு விஷயங்களை பேசக்கூடியவர். குறிப்பாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி அடிக்கடி பேசி வருகிறார். தற்போது சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் போட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.


"மீசைய முறுக்கு 2" திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-10-05 09:00]

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வெளிவந்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மீசைய முறுக்கு 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் கானா பாடகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்து, இசையமைத்துள்ளார்.


போராட்டம்: திரை விமர்சனம்!
[Friday 2026-10-02 08:00]

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'போராட்டம்'. ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களிலேயே நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ எடுக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.


முதல் நாள் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Friday 2026-10-02 08:00]

இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பத்தா. இவர்கள் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணோம், சீதாக்காதி ஆகிய திரைப்படங்களில் கூட்டணி அமைத்துள்ளனர். இதில் நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணோம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. ஆனால், சீதாக்காதி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.


சன் டிவியில் மூன்று முக்கிய சீரியல்கள் மகா சங்கமம்!
[Friday 2026-10-02 08:00]

முன்னணி சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்புவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக மாறி இருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களும் அதை அடிக்கடி செய்ய தொடங்கி இருக்கின்றன.


விஜய் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா!
[Friday 2026-10-02 08:00]

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த சமயத்தில் முழு நேர அரசியலில் குதித்தார். தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் இயக்கி இருக்கும் சிக்மா படம் நாளை திரைக்கு வருகிறது.


நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு: தங்கம் மட்டும் இத்தனை கிலோவா?
[Friday 2026-10-02 08:00]

நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்த விபரத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் இயக்குனர் சுந்தர் சி-யைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சமீபத்தில் தனது மகளின் திருமணத்தினை கோலாகலமாக நடத்தினார். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியதுடன், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.


மோசமான விமர்சனம் வந்தும் இத்தனை கோடிகள் வசூலா?
[Thursday 2026-10-01 16:00]

நானி தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் பாரடைஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிக கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதோடு முதல் நாளே இந்த படம் அவ்ளோ தான், வசூலில் பெரிய அடி வாங்கும் என நினைத்தாரகள்.


"விடுங்கண்ணே மக்கள் தேடட்டும்" - சீமானிடம் சொன்ன சிவகார்த்திகேயன்!
[Thursday 2026-10-01 16:00]

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர். இவர் நடிப்பில் சேயோன் படம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் சீமான் அவர்கள் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கின்றார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசுகையில், சினிமாவில் நடித்தால் தானே வாக்களிப்பீர்கள், அதனால் தான் நானும் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்றுவிட்டேன்.


ஜெயிலர் 2 படத்தில் இப்படியொரு காட்சியா?
[Thursday 2026-10-01 16:00]

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் உலகம் முழுவதும் கண்டிப்பாக ரூ 1000 கோடிகள் வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதோடு தமிழ் சினிமாவிற்கு இதுவரை ரூ 1000 கோடி என்பது வந்ததே இல்லை, அதனால் கண்டிப்பாக இந்த படம் ரூ 1000 கோடி வசூல் வந்தே ஆகவேண்டும் என ரசிகர்களே காத்திருக்கின்றனர்.


ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்!
[Thursday 2026-10-01 07:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். கடைசியாக இவர் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது, அதன்பின் அவர் கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தனது குழுவினர்களுடன் கலந்துகொண்டார்.


பிக்பாஸ் 10ல் Eviction Free Pass வென்ற போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
[Thursday 2026-10-01 07:00]

பிக்பாஸ் 10 துவங்கப்பட்டு 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் போட்டியில் ஒரு முக்கியமான திருப்புமுனையை நோக்கி நகர்கிறது. Leader Exit Poll மூலம் வெளியேறிய லட்சுமி ப்ரியா வீட்டிற்கு வந்த வீடே பயர் ஆகிவிட்டது. கடைசி எபிசோடில் விஜய் சேதுபதி பங்குபெற்ற போது Eviction Free Pass பற்றி கூறியிருந்தார். அதற்கான போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடக்கிறது.


சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா?
[Wednesday 2026-09-30 16:00]

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தார். இப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வில் உள்ளார்.


ஓடிடியில் சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் ஜனநாயகன்!
[Wednesday 2026-09-30 16:00]

2026-ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ். பல தடைகளை தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த ஜனநாயகன் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சற்று தடுமாறியது. அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் தோல்வியை தழுவினாலும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசூல் அள்ளி சாதனை படைத்தது.


மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-09-30 16:00]

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ள திரைப்படங்களில் ஒன்று மண்டாடி. மேலும், இது சூரி நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், சுஹாஸ் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ரூ.7000 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகை: என்ன நடந்தது?
[Wednesday 2026-09-30 07:00]

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் ஊர்வசி ரவுடேலா. அவர் தமிழில் லெஜெண்ட் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்வசி தற்போது 7000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


ராகவேந்திரா மண்டபத்தை இடித்துவிட்டு ஸ்டார் ஹோட்டல் கட்டும் ரஜினி?
[Wednesday 2026-09-30 07:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். 90களில் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்டிய அந்த திருமண மண்டபத்தில் திருமணங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் ரஜினி ரசிகர் மன்றம் நிகழ்வுகள் மற்றும் ரஜினி தொடர்புடைய பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் அந்த மண்டபத்தில் தான் நடைபெற்றது.


5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-09-29 16:00]

தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிறைய புதுப்புதுப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கடந்த வாரம் தெலுங்கு சினிமாவில் வெளியான திரைப்படம் தி பாரடைஸ். எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை இப்படம் வெளியாகி இருந்தது.


2 கோடி பட்ஜெட், 400 கோடி வசூல்: இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்!
[Tuesday 2026-09-29 16:00]

குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சரி, கன்டென்ட் மட்டும்தான் இங்கு கிங் என்பதை ஒவ்வொரு முறையும் லோ பட்ஜெட் திரைப்படங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.


4 நாட்களில் செம வசூல் வேட்டையில் டோரதி!
[Tuesday 2026-09-29 16:00]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் டோரதி. 1990களை பின்னணியாகக் கொண்ட டோரதி படம், இரண்டு ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருவதால் உருவாகும் உறவுகளை மையமாக கொண்டு உருவானது. வழக்கமான காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த சில ரசிகர்களுக்கு படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.


பிக் பாஸ் பரிசு தொகை குறைப்பு: கடும் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
[Tuesday 2026-09-29 07:00]

பிக் பாஸ் ஷோ என்றாலே அதன் வெற்றியாளருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுவது தான் வழக்கம். அந்த பரிசுக்காகவே 100 நாட்கள் அந்த ஷோவில் பங்கேற்க பிரபலங்களும் வருகிறார்கள். அது மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்த நாட்களுக்கு ஏற்ப சம்பளமும் தரப்படுகிறது.


துல்கர் சல்மான் பெயரில் மோசடி செய்யும் நபர்!
[Tuesday 2026-09-29 07:00]

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. துல்கர் சல்மான் தற்போது தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி X தளத்தில் மோசடி செய்யும் நபர் பற்றி காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.


வெங்கட் பிரபுவின் படத்தை கைவிட்டாரா பிரபல நடிகர்!
[Monday 2026-09-28 16:00]

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் கங்கை அமரன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், வெங்கட் பிரபுவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது, நன்றாக யோசிக்கிறார், படம் பண்ணுகிறார். வேறொரு படத்தை நம்பியிருந்தார், அந்தப் படம் கைகூடாத காரணத்தால் அவரது புதுப்படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


மண்டாடி தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல்!
[Monday 2026-09-28 16:00]

சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு நடிகரான சுஹாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா?
[Monday 2026-09-28 16:00]

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். கடந்த 2023-ஆம் ஆண்டு இவர்களது தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், 3 ஆண்டுகள் கழித்து வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ஜெயிலர் 2 திரைக்கு வரவிருக்கிறது.


3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-09-28 08:00]

மீசைய முறுக்கு 2 திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம். ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் தனி ஒருவன், இன்று நேற்று நாளை, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர், 2017-ஆம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் களமிறங்கினார். தனது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.


Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா?
[Monday 2026-09-28 08:00]

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் தான் எப்போதும் வசூலில் உச்சமாக இருக்கும். அந்த வகையில் மார்வல் தான் இதை சரியாக புரிந்துகொண்டு தங்கள் சூப்பர் ஹீரோக்களுக்கு தனி தனி படங்கள் எடுத்து பிறகு, எல்லோரையும் ஒரே படத்தில் கொண்டு வந்த அதை கச்சிதமாக எடுத்து மெகா ஹிட் ஆக்குவார்கள். அந்த வகையில், ரோஷோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளிவந்த அவேஞ்சர்ஸ் எண்ட் கேம் ரீரிலிஸ் ஆகியுள்ளது எல்லோரும் அறிந்ததே.


2 நாள் முடிவில் மாஸ் வசூல் வேட்டை செய்த நானியின் "தி பாரடைஸ்"!
[Sunday 2026-09-27 05:00]

தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஹிப்ஹாப் ஆதி டித்த மீசைய முறுக்கு 2 என்ற படம் வெளியாகி இருந்தது. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர் நானி நடித்த தி பாரடைஸ் என்ற படம் வெளியாகி இருந்தது, தெலுங்கில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நானியுடன் இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தாய் - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


தனுஷுடன் இதுவரை இணைந்து நடிக்காதது ஏன்?- விளக்கம் கொடுத்த வடிவேலு!
[Sunday 2026-09-27 05:00]

நடிகர் தனுஷ் கடந்த சில நாட்களாக செய்திகளில் அதிகம் வந்த வண்ணம் உள்ளார். டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி மர்முவிடமிருந்து கேப்டன் மில்லர், ராயன் படத்திற்காக 2 தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய விருதை தனது அம்மாவிற்கு சமர்ப்பித்து அவர் வெளியிட்ட போட்டோ வைரலானது. அதன்பின் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.

Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா