Untitled Document
October 23, 2026 [GMT]
 
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!
[Sunday 2026-09-20 06:00]

பாலிவுட் சினிமா ரசிகர்களின் பேவரெட் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது. பின் இவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.


மாஸாக வெளியான அஜித்தின் Gladiators டிரைலர்! Top News
[Sunday 2026-09-20 06:00]

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படமும் வரவில்லை. ஆனால் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இப்போது ஒரு டிரெய்லர் வெளியாகியுள்ளது. படங்களை நிறுத்தி வைத்து கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித் அதனை ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளார், அதற்கு க்ளாடியேட்டர்ஸ் என்றும் பெயர் வைத்துள்ளார்.


மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல்!
[Saturday 2026-09-19 18:00]

ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளியான மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மண்டாடி. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.


ஜீ தமிழுக்கு வரும் இரண்டு புதிய சீரியல்கள்!
[Saturday 2026-09-19 18:00]

ஜீ தமிழ் தற்போது சன் டிவி, விஜய் டிவி போல் சீரியல்களில் கலக்கி வருகிறது. கார்த்திகை தீபம், சந்தியாராகம், வீரா, வாகை சூடவா என பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் TRP-யிலும் கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு சீரியல்களை ஜீ தமிழ் களமிறக்கவுள்ளது. இந்த இரண்டு சீரியல்களில் ஒன்று ஹிந்தி டப்பிங், மற்றொன்று தெலுங்கு டப்பிங் சீரியலாம்.


ஜெயிலர் 2 படத்தை வாங்கிய நிறுவனம்!
[Saturday 2026-09-19 18:00]

ஜெயிலர் 2 திரைப்படத்தின் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவின் திரையரங்கு உரிமம் ரெக்கார்ட் பிரேக்கிங் விலைக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து ஜெயிலர் 2 எப்போது என்கிற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து கேட்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜெயிலர் 2-வின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.


பிக் பாஸ் சர்ச்சைக்கு நடுவில் விஜய் பற்றி பேசிய விஜய் சேதுபதி!
[Saturday 2026-09-19 07:00]

சமீபத்தில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை தாக்கி பேசியதாக சர்ச்சை வெடித்தது. அவர் விஜய் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பேசிய விஷயங்கள் விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்தது. அதனால் விஜய் சேதுபதியை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.


Resident Evil: திரை விமர்சனம்!
[Saturday 2026-09-19 07:00]

ஹாலிவுட் திரையுலகை தாண்டி, உலகம் முழுவதுமே ரெசிண்டண்ட் ஈவில் சீரிஸ் படங்களுக்கு பெரிய ரசிகர்கள் இருக்க, இன்று வெளிவந்துள்ள ஜாக் கிரிகேர் இயக்கத்தில் இந்த ரெசிடண்ட் ஈவில் எப்படியுள்ளது? பார்ப்போம். நாயகன் ப்ரேயான் ஒரு மெடிக்கல் கொரியர் பாய் ஆக வேலை பார்த்து வருகிறார். அதாவாது முக்கியமான ஆர்கான் இன்னொருத்துருக்கு தேவைப்படும் போது அதை தேவைப்படும் மருத்துவ மனையில் கொடுப்பது.


தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்!
[Friday 2026-09-18 16:00]

சீரியலில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் சித்து தற்போது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார். மிஸ்டரி க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 'தி டார்க் ஹெவன்' என்கிற அமானுஷ்யம் நிறைந்த புத்தகம் ஒன்று நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கிடைக்கிறது. அதில் எழுதியிருக்கும் உள்ள விஷயங்களை அவர் படிக்க, அவை அப்படியே நிஜத்திலும் நடக்கிறது.


பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2!
[Friday 2026-09-18 16:00]

இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது.


அஜித்தின் Dare Devil படத்தில் இருந்து வெளியேறிய மோகன்லால்!
[Friday 2026-09-18 16:00]

கடந்த வருடம் நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. விடாமுயற்சி கொஞ்சம் சொதப்ப குட் பேட் அக்லி படு மாஸ் வெற்றியை அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து படங்கள் நடிப்பதை கொஞ்சம் நிறுத்தி தனது கனவை நோக்கி பயணித்து வந்தார் அஜித். சமீபத்தில் அஜித்குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார்.


பிக் பாஸ் 10ல் இந்த வார எலிமினேஷன்!
[Friday 2026-09-18 07:00]

பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. அதற்குள் பல சர்ச்சைகளில் நிகழ்ச்சி சிக்கி வருகிறது. மேலும் போட்டியாளர்களுக்கு டாஸ்குகளும் கடுமையாகவே இருந்து வருகிறது.


டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2026-09-18 07:00]

அருள்நிதி நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனம் தான் டிமாண்டி காலனி 3 மற்றும் 4 ஆகிய அடுத்தடுத்த படங்களை எடுக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.


மண்டாடி 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
[Thursday 2026-09-17 16:00]

சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மண்டாடி. இப்படம் எல்லோர் எதிர்ப்பார்ப்பை போலவே மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்தது. இதைபோலவே பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, இந்த வருடம் சூரிக்கு மிகச்சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது.


7 நாட்களில் கார்த்தியின் சர்தார் 2 செய்த மோசமான வசூல் விவரம்!
[Thursday 2026-09-17 16:00]

ஒரு படம் வெளியாகி செம ஹிட்டடித்தால் அதேபோல் அதே பெயரில், அந்த நடிகர்களை வைத்தே 2ம் பாகம் தயாராவது வழக்கம். அப்படி தான் கார்த்தியின் சர்தார் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தை போலவே மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


திரையரங்கு தாண்டி OTT-யிலும் சம்பவம் செய்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!
[Thursday 2026-09-17 16:00]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. அதோடு சூர்யா தாண்டி மமிதா பைஜு பெர்ப்பாமன்ஸ் இந்த படத்தில் இளைஞர்கள் பலராலும் பேசப்பட்டது. இந்நிலையில் இப்படம் தியேட்டரிகலாக ரூ 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது!
[Thursday 2026-09-17 07:00]

நடிகர் அஜித்தின் அடுத்த படமான டேர் டெவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் ஷூட்டிங் தொடங்காமல் தான் இருந்தது. அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்ததால் அவர் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸில் அஜித் கலந்துகொண்ட நிலையில், அதை நடிகர் விஜய் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக்காக போகும் தமிழ் படம்!
[Thursday 2026-09-17 07:00]

சினிமா பிரபலங்கள் எல்லோருக்கும் அவர்களின் முதல் படம், 25வது படம், 50வது படம், 75வது போன்ற படங்கள் எல்லாமே ஸ்பெஷல் தான். அப்போது வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு 50வது திரைப்படமாக அமைந்தது தான் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கிய இப்படம் ஒரு குப்பைத்தொட்டியையும் அதன்பின் இருக்கும் எமோஷ்னலான கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.


திரிஷா இடத்தில் நான் இருந்தால் இதை தான் செய்திருப்பேன் - பிரபல நடிகை!
[Wednesday 2026-09-16 16:00]

முதல்வர் விஜய் சமீபத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் பார்க்க லண்டன் சென்றார். அங்கு அவர் சென்று அஜித்தை பார்த்து கட்டி தழுவி அன்பை பறிமாறிய வீடியோக்கள், போட்டோக்கள் என அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி விட்டனர். ஆனால், அதே நிகவுக்கு நடிகை திரிஷாவும் வந்து இருந்தார், அவர் வீடியோவில் வந்தபோது முதல்வர் விஜய் உடனே தன் முகத்தை திருப்பிகொண்டார்.


6 நாட்களில் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் சூரியின் மண்டாடி!
[Wednesday 2026-09-16 16:00]

அறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. சூரியுடன், மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படகு போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிக்க சூரிக்கு ரூ. 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதேபோல் நாயகியாக நடித்த மஹிமா நம்பியாருக்கு ரூ. 1 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வருகின்றன.


ஜெய்லர் 2 வியாபாரம் இத்தனை கோடிகளா?
[Wednesday 2026-09-16 16:00]

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன படம் ஜெய்லர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி ஜெய்லர் 2-வில் இன்னும் பிரமாண்டமாக இணைய, இப்படம் அக்டோபர் மாதம் 15ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கி விட்டது, அனைத்து இடங்களிலும் இப்படத்திற்கு ரெக்கார்ட் வியாபாரம் தான் நடந்துள்ளதாம்.


தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து இணையும் பட டைட்டில்!
[Wednesday 2026-09-16 07:00]

தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை தனுஷ்56 என தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்க இருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வருகிறது.


மார்க்கெட் சரிந்ததால் விஜய் சேதுபதி இப்படி பேசுகிறார்: தாக்கிய தவெக எம்எல்ஏ!
[Wednesday 2026-09-16 07:00]

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துக்கள் அவரை பிரச்சனையில் சிக்க வைத்து இருக்கிறது. முதலமைச்சர் விஜய்யை அவர் தாக்கி பேசியதாக தவெக தரப்பினர் விஜய் சேதுபதியை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் அளித்த பேட்டியில், " விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் எங்கே போனாலும் முற்றுகை இடுவோம்." என தெரிவித்து இருக்கிறார்.


எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா!
[Tuesday 2026-09-15 16:00]

பான்-இந்தியன் ஸ்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நாளை நடிகர் கமல் ஹாசன் படத்தை தொடங்கி வைக்கிறார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போகிறார். இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


மண்டாடி படத்தில் நடித்த சூரி, சுஹாஸ், சத்யராஜ், மஹிமா வாங்கிய சம்பளம்!
[Tuesday 2026-09-15 16:00]

சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் மண்டாடி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சூரி, சுஹாஸ், சத்யராஜ் மற்றும் நடிகை மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்த அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மண்டாடி. இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்துள்ளார். முதல் தமிழ் படத்திலேயே இவருக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ள சர்தார் 2!
[Tuesday 2026-09-15 16:00]

முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாவது பாகம் வருவது வழக்கம். அப்படி நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாக வெற்றியால் இரண்டாம் பாகம் தயாரானது. இதில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


விஜய் சேதுபதி பேச்சால் வெடித்த சர்ச்சை: விளக்கம் கொடுத்த விஜய் டிவி தரப்பு!
[Tuesday 2026-09-15 07:00]

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. அரசியல், தலைவர், தலைமைத்துவம் பற்றி பேசிய விஜய் சேதுபதி மறைமுகமாக முதலமைச்சர் விஜய்யை தான் தாக்கி பேசினார் என சர்ச்சை எழுந்தது. அதனால் விஜய் சேதுபதியை மட்டுமின்றி விஜய் டிவியையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.


45 வயதில் பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்!
[Tuesday 2026-09-15 07:00]

பிரபல பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பல ஹிட் பாடல்களை பாடி இருப்பவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். 'முன்பே வா என் அன்பே வா' பாடல் தொடங்கி, மெர்சல் படத்தில் வரும் 'மெர்சல் அரசன்' பாடல் வரை அவரது குரலுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.


தமிழ்நாட்டில் எது அதிக வசூல் செய்துள்ளது?
[Monday 2026-09-14 17:00]

கடந்த வாரம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி மற்றும் சர்தார் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சூரி நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக அது பந்தயம் அடிக்கும் என்பதை மீண்டும் மண்டாடி திரைப்படம் நிரூபித்துள்ளது. முதல் நாளிலிருந்தே இப்படம் உலகளவிலும் தமிழ்நாட்டிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த நிலையில், 4 நாட்களில் மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் ஆகும்.


அமெரிக்காவில் ஆல் டைம் வசூல் செய்த ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே!
[Monday 2026-09-14 17:00]

ஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே படம் உலகம் முழுவதும் 23 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.


ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
[Monday 2026-09-14 17:00]

முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது ஆடை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகை கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை பரப்பி வந்தனர்.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா