Untitled Document
October 23, 2026 [GMT]
 
பிக் பாஸ் 10 வீட்டில் புது வைல்டு கார்டு என்ட்ரி!
[Monday 2026-09-14 08:00]

பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிந்து இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் என வர தொடங்கி இருக்கிறது. அரசியல் பற்றி விஜய் சேதுபதி பேசிய கருத்துக்களும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புது வைல்ட் கார்டு என்ட்ரி வீட்டில் நுழைந்திருக்கிறார்.


ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ? ப்ளாப்-ஆ?
[Monday 2026-09-14 08:00]

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டார். அந்த வகையில் அவரின் கடைசி படமாக, ஹெச். வினோத் இயக்க பகவத் கேசரி ரீமேக் ஆக 'ஜனநாயகன்' சில மாற்றங்களுடன் உருவானது. இந்த படம் தியேட்டர் ரிலிஸுக்கு முன்பே இணையத்தில் படம் லீக் ஆகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.


வசூல் வேட்டையில் நடிகர் சூரியின் மண்டாடி!
[Sunday 2026-09-13 05:00]

வெற்றிமாறன் உதவி இயக்குனராக இருந்தவர் மதிமாறன் புகழேந்தி. இவர் முதன்முதலில் செல்ஃபி என்ற படத்தை இயக்கினார், ஆனால் அது சரியாக போகவில்லை. இப்போது அடுத்ததாக நடிகர் சூரியை வைத்து மண்டாடி என்ற படத்தை இயக்கியுள்ளார். சூரியுடன் இதில் சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.


Fall 2: Deadpoint திரை விமர்சனம்!
[Sunday 2026-09-13 05:00]

ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Fall 2: Deadpoin சர்வைவல் த்ரில்லர் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. சாகசங்களை மேற்கொள்ளும் தனது சகோதரி ஷைலோ ஹன்டரின் மரணத்திற்கு பிறகு ஜாக்ஸ் ஹன்டர் துயரத்தில் மூழ்கியிருக்கிறார். அந்த சமயத்தில் ஷைலாவின் மீட்கப்பட்ட ட்ரக் ஒன்றை விற்பதற்காக, அவளது தோழி லூஸ் என்ற பெண் ஜாக்ஸை சந்திக்கிறார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை!
[Sunday 2026-09-13 05:00]

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட மயில் போக இடமில்லாமல் கோவிலில் அமர்ந்துகொண்டிருந்த வரை பாண்டியன்-கோமதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.


15 நாள் முடிவில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-09-12 15:00]

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் தயாராகி இருந்த திரைப்படம் ஹாய். கவின்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி இருந்தது. இவர்களை தாண்டி ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிக்பாஸ் 10 போட்டியாளரின் தாயார் திடீர் மரணம்: அவர் எடுத்த அதிரடி முடிவு!
[Saturday 2026-09-12 15:00]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வர கடந்த 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் இப்போது 10வது சீசன் தொகுத்து வழங்குகிறார்.


தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா?
[Saturday 2026-09-12 15:00]

தீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான். அந்த வகையில் இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது, ஆம் தீபாவளி விருந்தாக தமிழில் சூர்யாவின் சீன், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, பிரபுதேவா நடிப்பில் மூன்வாக் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது.


"லண்டன்ல தானே அது நடக்குது" - கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு காட்டமாக பதிலடி!
[Saturday 2026-09-12 07:00]

நடிகர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல் முறையாக லண்டன் சென்று இருக்கிறார். அங்கே நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை விஜய் தொடங்கி வைக்கிறார். இது ஒருபுறம் இருக்க கீர்த்தி சுரேஷ் தற்போது வெளிநாட்டுக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அவர் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, அவரும் லண்டன் செல்வதாக சிலர் வதந்தி பரப்பி உள்ளனர்.


ஆங்கிலத்திலும் டாக்சிக் படுதோல்வி!
[Saturday 2026-09-12 07:00]

யாஷ் நடித்த டாக்சிக் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது. அதனால் வசூலில் சொதப்பி படம் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் டாக்சிக் படத்தை ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்திருந்தனர்.


பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!
[Friday 2026-09-11 16:00]

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான தமிழறிஞர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் – பாக்கியம் இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்த அவர், குடும்ப வறுமையால் நண்பர்களின் உதவியுடன் கல்வியைத் தொடர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.


மண்டாடி பிரம்மாண்ட வெற்றி: சூரியின் அடுத்த படத்தின் இமாலய சம்பளம்!
[Friday 2026-09-11 16:00]

சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக வந்து இன்று உச்சம் நோக்கி பயணிக்கிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை, மாமன், கருடன் என அனைத்து படங்களும் ஹிட் ஆக தற்போது வெளிவந்த மண்டாடி படமும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2!
[Friday 2026-09-11 16:00]

'சர்தார் 2' கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான படம். இப்படம் முதல் பாகத்தை போலவே பெரிய வெற்றி பெறும் என நினைத்தார்கள். படத்தின் விமர்சனமும் டீசண்டாகத்தான் வந்தது. ஆனால், இந்த படம் மிக மோசமான ஓப்பனிங்கையே பெற்றுள்ளது. அதைவிட இரண்டாம் நாளான இன்று மிகப்பெரிய சரிவை 'சர்தார் 2' சந்தித்துள்ளது. நேற்றை விட 20% குறைந்த வசூல் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


’தல’ பங்கேற்கும் கார் ரேஸை தொடங்கி வைக்கும் தளபதி!
[Friday 2026-09-11 07:00]

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து லண்டன் சென்ற முதல்வர் விஜய்யை ஏராளமானோர் திரண்டு வந்து வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நடிகரும் கார் ரேஸ் வருமான அஜித்குமார் பங்கேற்கும் கார்பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். தொடர்ந்து தொழில்துறை சார்பில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சர்தார் 2: திரை விமர்சனம்!
[Friday 2026-09-11 07:00]

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 உருவாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன் சர்தார் முதல் பாகத்தின் கதையை சற்று பார்ப்போம். சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' என்கிற திட்டத்தை வில்லன் மகாராஜ் ரத்தோர் இந்தியாவில் கொண்டு வருகிறார். இந்த திட்டம் கேட்க நன்றாக இருந்தாலும், இது முற்றிலும் மக்களுக்கு எதிரான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மொத்த தண்ணீரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மக்களை அல்லோலப்பட வைக்க வேண்டும் என்பதே மகாராஜ் ரத்தோரின் திட்டமாகும்.


மண்டாடி திரை விமர்சனம்!
[Thursday 2026-09-10 15:00]

வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் மதிமாறன் புகழேந்தி, காமெடியன் டூ ஹீரோ சூரி தொடர் வெற்றி நாயகனாக வருபவர், இவர்கள் இணைந்து கொடுத்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா மண்டாடி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம். சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார். அவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்தில் படகு போட்டி சண்டையால் சாட்டைபுலி(சுஹாஸ்) மகனை, மாரி என்பவர் கொல்ல முயற்சிக்கிறார். இதனால் மாரியை கொல்ல சாட்டைபுலி துணிய, மாரியை சூரியிடம் தஞ்சம் போக சொல்கின்றனர்.


ரூ. 1000 கோடி மொத்த வசூல்: சாதனை படைப்பாரா சூர்யா?
[Thursday 2026-09-10 15:00]

நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகிவிட்டார். பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த சூர்யா, ஆனால், இந்த வருடம் சும்மா அடித்து நொறுக்கி வருகிறார். ஏற்கனவே கருப்பு புயல் வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் வசூல் விருந்து வைத்தது. அதை தொடர்ந்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் க்ளாஸாக இருந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.


ஜெயிலர் 2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா?
[Thursday 2026-09-10 15:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெயிலர் 2. ஏற்கனவே ஜெயிலர் வெளிவந்து மெகா ஹிட் அடிக்க, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ரூ. 700 கோடி வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயிலர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்த படம், முதல் பாகம் அங்கு ரூ. 84 கோடி வரை வசூல் செய்ய, இரண்டாம் பாகம் கண்டிப்பாக தெலுங்கில் ரூ. 150 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டாக்ஸிக் படுதோல்வி: வலியுடன் பேசிய நடிகர் யாஷ்!
[Thursday 2026-09-10 07:00]

கேஜிஎஃப் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் யாஷ். அவர் அடுத்து நடித்த டாக்ஸிக் படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார். அடல்ட் ஒன்லி படமாக உருவான அதை கீத்து மோகன்தாஸ் தான் இயக்கி இருந்தார். சமீபத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி ரிலீஸ் ஆன டாக்ஸி படம் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. அதனால் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்தது.


"நீங்க இல்லாம முதல் திருமண நாள்" - கண்ணீர் விட்ட புகழ்!
[Thursday 2026-09-10 07:00]

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் புகழ். இவரின் கெட்டப், டைமிங் என அனைத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் குக் வித் கோமாளி 2 இவர் அஷ்வின் சிவாங்கி என பலரும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகினர்.


பிக் பாஸ் 10ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்!
[Wednesday 2026-09-09 07:00]

பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷோ தொடங்கி சில தினங்கள் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது ஒரு முக்கிய போட்டியாளர் வெளியில் சென்றுவிட்டார்.


புது தொழில் தொடங்கும் விஜய் தேவரகொண்டா!
[Wednesday 2026-09-09 07:00]

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ராஷ்மிகா பிசியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் இடுப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார்.


விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!
[Wednesday 2026-09-09 07:00]

நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 வெற்றி வருடம் தான். முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியானது, சூர்யா, த்ரிஷா என பலர் நடித்துள்ள இப்படம் வெளியாகி ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை செய்தது. இப்பட வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியானது.


திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்? - நடிகை திவ்யா ஸ்பந்தனா!
[Wednesday 2026-09-09 07:00]

தமிழில் சிம்பு நடித்த குத்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அதன்பின் அர்ஜுனுடன் கிரி, பொல்லாதலன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். ஏராளமான கன்னட படங்களிலும் நடித்துள்ள திவ்யா என்கிற ரம்யா ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.


நண்பர் அஜித்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!
[Tuesday 2026-09-08 16:00]

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டனுக்கு செல்லவிருக்கும் நிலையில், அன்று கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்தை நேரில் சந்திக்கபோவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார். விஜய்யின் தவெக அரசு பொறுப்பேற்று கிட்டதட்ட 120 நாட்கள் ஆகவுள்ள நிலையில், பல பாராட்டுகளும், அதே அளவிற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.


பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம்!
[Tuesday 2026-09-08 16:00]

பாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷால் சத்ருவேதி இயக்கத்தில் ஷோபினவ் சத்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் 'ஹனுமன் அன்ஷ்'. இப்படத்தை ஸ்வாம்பு மீடியா நெட்வொர்க் மற்றும் ஹோலி கவ் ஹோம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.


11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-09-08 16:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் - காமெடி என்பது சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜானர்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஹாய் திரைப்படம்.


Toxic ஓடிடி rights விலை கடும் சரிவு!
[Tuesday 2026-09-08 07:00]

யாஷ் நடித்த டாக்ஸிக் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனத்தால் தற்போது ஓடிடி உரிமையை விற்பதில் தயாரிப்பாளருக்கு பெரிய சிக்கல் எழுந்து இருக்கிறது. ஏற்கனவே தியேட்டரில் படம் மிக குறைவான வசூலை பெற்று நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புது சிக்கல் வந்திருக்கிறது.


விஸ்வநாத் & சன்ஸ் 25 நாள் மொத்த வசூல்!
[Tuesday 2026-09-08 07:00]

கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை ஈட்டி வந்தது. தமிழை விட தெலுங்கில் தான் இந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்திருக்கிறது.


விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் சூரி!
[Monday 2026-09-07 16:00]

விஜய் இடத்தை சினிமாவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என சமீபத்தில் நடிகர் சூரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுதலை திரைப்படத்திற்கு பின் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சூரி, கொட்டுக்காளி, கருடன், மாமன், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள மாஸ் ஆக்ஷன் திரைப்படம் மண்டாடி.

 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா