Untitled Document
October 23, 2026 [GMT]
 
'பத்தா' 9 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-10-10 17:00]

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பத்தா. இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்பார்ப்பே இல்லை என்பது தான் உண்மை, சாய் அபயங்கர் இசையில் ஒரு பாடல் ஹிட் ஆக, பிறகு இந்த படத்திற்கு கொஞ்சம் ஹைப் வர, முதல் நாள் இப்படத்திம் விமர்சனம் மூலம் தான் மிகப்பெரிய வரவேற்பு இப்படத்துக்கு கிடைத்தது.


Other Mommy: திரை விமர்சனம்!
[Saturday 2026-10-10 17:00]

ஹாலிவுட்டில் சைக்கோலாஜிக்கல் ஹாரர் திரைப்படமாக வெளியாகியுள்ள Other Mommy எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. பெல்லா எனும் சிறுமி இசபெல்லா தனது அம்மா உர்சுலா, அப்பா ரஸலுடன் வசித்து வருகிறாள். உர்சுலா, ரஸல் இடையே உள்ள உறவின் விரிசலால் பெல்லா பாதிக்கப்படுகிறாள். இந்த சூழலில்தான் தனது அம்மாவைப் போன்ற தோற்றம் கொண்ட அமானுஷ்ய சக்தியை பெல்லா சந்திக்கிறாள்.


திவ்யா கணேஷ் நடிக்கும் புது சீரியல்!
[Saturday 2026-10-10 07:00]

பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு புது சீரியல்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது அவர் "மேடம் போலீஸ் " என்ற புது தொடரில் கமிட் ஆகி இருக்கிறாராம்.


"நீங்க தானே எனக்கு ரெட் கார்டு வாங்கி கொடுத்தது" - முத்துகுமாரனை தாக்கிய VJ பார்வதி!
[Saturday 2026-10-10 07:00]

பிக் பாஸ் 8ம் சீசன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தன்னுடன் பழகி எல்லாம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றிவிட்டார் என முத்துக்குமரன் மீது ஒரு பெண் புகார் அளித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது பெரிய அளவில் வைரல் ஆக பரவி வருகிறது. பலரும் முத்துகுமாரனை விமர்சித்து வருகின்றனர்.


சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை திரிஷா செயின்!
[Friday 2026-10-09 16:00]

திரிஷா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை, அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டாப்-ல் தான் திரிஷா இருந்து வருகிறார். திரிஷா தற்போது கூட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடிக்கின்றார்.


முன்பதிவில் ரெக்கார்ட் வைக்கும் ஜெயிலர் 2!
[Friday 2026-10-09 16:00]

சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றாலே தமிழகம் தாண்டி இந்தியா முழுவதுமே எதிர்பார்க்கும். ஏனெனில் ரஜினிக்கு தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவாண்ணா, ஹிரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருப்பது கண்டிப்பாக படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளது.


கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்!
[Friday 2026-10-09 16:00]

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் அவரின் மகன் சிக்மா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.


"பணம் கொடுத்து என் தவறான வீடியோ பரப்புகிறார்கள்" - சீரியல் நடிகை பிரதிபா பதிலடி!
[Friday 2026-10-09 07:00]

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரதீபா. அவர் தொடரிலிருந்து பாதியில் வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு அவர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். நடிகை பிரதிபாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் ட்ரெண்டி மற்றும் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது.


மைல் கல் வசூலை தொட்ட மீசைய முறுக்கு 2!
[Friday 2026-10-09 07:00]

மீசைய முறுக்கு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவது செம ஹிட் அடித்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் மீசைய முறுக்கு 2 படம் உலகம் முழுவதும் ரூ 51+ கோடி வசூல் செய்துள்ளது.


காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்!
[Thursday 2026-10-08 16:00]

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 75. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா படேகர். இவர் தமிழில் வெளியான பொம்மலாட்டம், காலா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை, உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகச் சொல்லப்படுகிறது.


"நாங்க எங்க குடும்பத்தை பார்க்கணும்" - அஜித்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!
[Thursday 2026-10-08 16:00]

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படம் எந்த காம்போவாக இருந்தாலும் முதல் நாள் அவருடைய ரசிகர்கள் குமிந்து விடுவார்கள். கண்டிப்பாக இன்று வரை அஜித் கிங் ஆப் ஓப்பனிங் என இருக்க காரணம் அவருடைய ரசிகர்கள் தான், அப்படி பிரமாண்ட ரசிகர்கள் வைத்திருக்கும் அஜித், நடிப்பை விட்டு முழுகவனமும் தற்போது ரேஸில் தான் செலுத்தி வருகிறார்.


அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் அப்டேட் வெளியானது!
[Thursday 2026-10-08 16:00]

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வெளியானது.


7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-10-08 16:00]

பத்தா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 7 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் பல தரமான திரைப்படங்களில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம்தான் பத்தா.


நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல்!
[Thursday 2026-10-08 07:00]

படகுப் போட்டியை மையப்படுத்திய கதையாக தமிழ் சினிமாவில் வெளியாகி படு வெற்றியடைந்த திரைப்படம் மண்டாடி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு கடலோரப் பகுதியின் பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள்.


ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
[Thursday 2026-10-08 07:00]

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். அப்படி ஹாலிவுட் தயாராகி இந்தியாவில் வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி மாஸ் வசூல் வேட்டை செய்தது. டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் கடந்த ஜுலை 31ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே. இதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர்.


முன்பதிவில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் 2!
[Wednesday 2026-10-07 16:00]

ஜெயிலர் 2 ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


மெகா ஹிட் இயக்குனரின் ஃபேண்டஸி படத்தில் நயன்தாரா!
[Wednesday 2026-10-07 16:00]

நயன்தாரா இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாகிவிட்டார். இவர் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பால்லிவுட் கிங்கான் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து அசத்தினார். இந்நிலையில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது.


"திரையுலகில் ஒதுக்கப்பட்டேன்" - நடிகை பார்வதி!
[Wednesday 2026-10-07 16:00]

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பார்வதி சமீபத்திய பேட்டி ஒன்றில், திரையுலகில் இருந்து தான் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இவர் கூறியது இணையத்தில் வைரலான நிலையில், அதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க. மலையாளத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த Out of Syllabus என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி. இவர் பூ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், தங்கலான் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.


கன்னத்தை கிள்ளிய நபர்: கோபம் வரவில்லை என நடிகை சொன்னது ஏன்?
[Wednesday 2026-10-07 07:00]

நடிகை ரச்சிதா ராம் கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபொது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது ஒரு நபர் இரண்டு கைகளால் ரச்சிதாவின் கன்னத்தை கிள்ளினார். அதனால் ஷாக் ஆகி ஒரு நொடி நின்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.


8 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி கொடுக்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்!
[Wednesday 2026-10-07 07:00]

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களில் நடித்த ஹிட் படங்களில் ஒன்று தான் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. வருகிற அக்டோபர் 15ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் டிரைலரும் வெளியானது.


ரீ-ரிலீஸ் செய்யப்படும் 96 திரைப்படம்!
[Tuesday 2026-10-06 16:00]

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த 96 திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. காதல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


11 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-10-06 16:00]

மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஆக அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். TTT படத்தில் தொடங்கி வித் லவ், ஹாப்பி ராஜ், தாய் கிழவி, யூத், கருப்பு, பிளாஸ்ட், கட்டா குஸ்தி 2, DC, மண்டாடி என தொடர்ந்து பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.


ராஷ்மிகாவின் அன்பு குறித்து மனம் திறந்து பேசிய விஜய்!
[Tuesday 2026-10-06 16:00]

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கணவருடன் அளித்த பேட்டியில் உறவுகளுக்கு இடையிலான அன்பு குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி அதில் அவர் என்ன கூறினார் என்பதை முழுமையாக பார்க்கலாம் வாங்க. திரையுலகில் ஜோடிகளாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா காதலிக்க தொடங்கி, அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது, அங்கிருந்து எடுக்கும் புகைப்படங்களை வைத்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்கிற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.


"நான் பினாமி அல்ல" - ஐடி ரெய்டு சர்ச்சைக்கு நடிகை ராகுல் ப்ரீத் காட்டமான பதிலடி!
[Tuesday 2026-10-06 07:00]

நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபலமான நடிகை. அவரது மாமனார் Vashu Bhagnani ஒரு பிரபல தயாரிப்பாளர். கடந்த வாரம் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர். நடிகை ராகுல் பிரீத் சிங் சட்ட விரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாகவும், அது பற்றி விசாரிக்க தான் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.


விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர் - திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை: வெளிவந்த உண்மை!
[Tuesday 2026-10-06 07:00]

கொலை, கொள்ளை என நாடு எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. தற்போது தமிழகத்தில் நிறைய பரபரப்பாக விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன் இறந்த ஒரு நடிகரின் இறப்பு குறித்து ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரண்ராஜ் என்பவர் 2023ம் ஆண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது இறப்பு குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.


ஜெயிலர் 2 முன்பதிவு வசூல் விவரம்!
[Monday 2026-10-05 16:00]

ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க. ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், 3 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 15-ஆம் தேதி ஜெயிலர் 2 திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆன சூரி: அதிகாரப்பூர்வ வசூல்!
[Monday 2026-10-05 16:00]

சூரி நடித்த மண்டாடி திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியும் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். விடுதலை, கருடன், மாமன் என தொடர் வெற்றியை தந்த சூரி, மேலும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை மண்டாடி தேடி தந்துள்ளது. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.


பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்த சூர்யாவின் 'சீன்'!
[Monday 2026-10-05 16:00]

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் ஓடிடி விற்பனையின் மூலம் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர் வெற்றியை தந்து வரும் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் சீன். இப்படத்தை மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்க, நஸ்ரியா, நஸ்லன், ஆனந்த்ராஜ், லால், ராஜ் ப்ரியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.


விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்!
[Monday 2026-10-05 09:00]

தமிழ் சினிமாவில் எப்போதுமே இரு நடிகர்களின் படங்களுக்குள் சண்டை இருக்கும். அப்படி ரஜினி-கமல் காலத்திற்கு பிறகு விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை பெரிய அளவிற்கு சென்றது. நாளுக்கு நாள் சண்டை அதிகமாகி பிரபலங்கள் பலருமே இருவரும் தங்களது ரசிகர்களை கண்டிக்க வேண்டும், ஏதாவது கூற வேண்டும் என்று எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.


3 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-10-05 09:00]

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி, மக்களின் பேராதரவோடு இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்திருப்பவர் தளபதி விஜய். இவர் சினிமாவை விட்டு வெளியேறிய நிலையில், இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா