Untitled Document
October 23, 2026 [GMT]
 
விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு தமிழ்நாட்டில் பல கோடி நஷ்டம்!
[Saturday 2026-09-26 17:00]

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய லக்கி பாஸ்கர் மாபெரும் வெற்றி பெற்றது.


16 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-09-26 17:00]

மண்டாடி திரைப்படம் 16 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மண்டாடி. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.


'வருமானத்திற்காக எதையும் செய்யலாம்' - நடிகை பாத்திமா சனா ஷேக்!
[Saturday 2026-09-26 16:00]

பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்சமீபத்திய பேட்டி ஒன்றில் "வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறோம்" என கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமீர் கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாத்திமா சனா ஷேக். இதன்பின், தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான், சாம் பகதூர், மெட்ரோ இன் டைனோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பிரம்மாண்ட தொகைக்கு விலை போன சல்மான் - நயன்தாரா படம்!
[Saturday 2026-09-26 07:00]

நடிகை நயன்தாரா தமிழ் தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கி விட்டார். அவர் ஜவான் படத்தை தொடர்ந்து தற்போது சல்மான்கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மான்ஸ்டர் என அந்த படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. வாரிசு படப்புகழ் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்குகிறார். தில் ராஜு தயாரித்திருக்கிறார்.


அதிகம் ட்ரோல் ஆகும் Paradise படம்: நானி கொடுத்த பதில்!
[Saturday 2026-09-26 07:00]

தெலுங்கில் முன்னணி ஹீரோவான நானி நடிப்பில் நேற்று 'தி பாரடைஸ்' என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அந்த படத்தில் நானியின் லுக் ஏற்கனவே பேசு பொருளாக மாறி இருந்த நிலையில் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அதிகம் நெகடிவ் விமர்சனங்களை தான் கூறி வருகின்றனர். இந்நிலையில் ட்ரோல்களை ஏற்றுக்கொள்வதாக நானி உருக்கமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.


மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்!
[Friday 2026-09-25 16:00]

ஹிப்ஹாப் ஆதி 2K கிட்ஸுகள் பலரின் இன்ஸ்பிரிஷனாக சினிமாவில் கலக்கி வந்த இவர், நடிப்பிலும் இயக்கத்திலும் களம் இறங்கி கலக்கிய படம் மீசைய முறுக்கு, தற்போது மீண்டும் இந்த ஜென் சி-காக மீசைய முறுக்கு 2-வுடன் களத்தில் இறங்க இதுவும் முதல் பாகத்தின் வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம். ஹிப் ஹாப் ஆதி 1970-களில் கர்நாடக சங்கீதமி அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்ய, ஆதி தன் கானா மூலம் மிகப்பெரிய கலைஞன் ஆக போராட், ஆனால் அனைத்து இடங்களிலும் கானாவை ஒதுக்குகின்றனர்.


டோரதி: திரை விமர்சனம்!
[Friday 2026-09-25 16:00]

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'டோரதி' திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம். பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் கார்த்தி (ரிஷிகாந்த்) - சுப்பு (சனந்த்) வளர்ந்து ஊருக்குள் ரௌடிகளாக திரிகிறார்கள். என்னதான் கார்த்தி, சுப்புவின் நண்பனாக இருந்தாலும், சுப்புவின் அப்பா கார்த்தியை வேறொரு சாதி ஆளாகத்தான் பார்க்கிறார். மேலும், சுப்புவின் அம்மா மற்றும் தங்கை இருவரையும் அவர்தான் ஆணவக்கொலை செய்துள்ளார்.


முதல் நாள் முடிவில் நடிகர் நானியின் The Paradise செய்துள்ள மொத்த வசூல்!
[Friday 2026-09-25 16:00]

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 24) வெளியான திரைப்படம் தான் தி பாரடைஸ். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். அதேபோல் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரே ஒரு பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடியுள்ளார்.


டிராகன் 2 போஸ்டர் போலியானது: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
[Friday 2026-09-25 07:00]

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வந்த டிராகன் படம் கடந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாகவும் ஒரு போஸ்டர் சமீபத்தில் வைரல் ஆனது.


கீர்த்தி சுரேஷ் படத்திற்கு மலேசிய நாட்டில் தடை!
[Friday 2026-09-25 07:00]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் படம் டோரதி. இதற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.


தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்!
[Thursday 2026-09-24 16:00]

பகத் பாசில் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வசூல் செய்த மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பகத் பாசில் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.


பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? - ரசிகர்களின் விமர்சனம்!
[Thursday 2026-09-24 16:00]

நானி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'பாரடைஸ்' திரைப்படத்தை சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்கள், தங்களின் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். வாங்க படம் எப்படி உள்ளது என்பதை ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் பார்ப்போம். நானி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பாரடைஸ். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.


கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்!
[Thursday 2026-09-24 16:00]

கென் கருணாஸ், பிரபலத்தின் மகன் என்றாலும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்றவர். அசுரன் படத்தில் தனுஷின் மகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டுக்களை பெற்றார். பின் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த கென் கருணாஸ் யூத் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் என பலர் நடித்த இப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது.


திருமணம், குழந்தை பெறுவது பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன்!
[Thursday 2026-09-24 07:00]

நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசக்கூடியவர். அவர் இதற்கு முன் காதலில் இருந்ததையும் வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அதில் ஒருமுறை திருமணம் செய்யும் அளவுக்கு கூட அவர் சென்று இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் காதல் பிரேக்கப்பில் முடிந்தது.


"ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்" - தனுஷ்!
[Thursday 2026-09-24 07:00]

தனுஷ் நடிப்பில் அடுத்து ஓம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அந்த படம் அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ஆம் தேதி வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.


டிராகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோயின் இவங்க தான்!
[Wednesday 2026-09-23 18:00]

டிராகன் ப்ரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் வெளிவந்து பிரம்மாண்ட ஹிட் அடித்த படம். சுமார் ரூ. 150 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது. இப்படத்தில் ப்ரதீப் திருமணம் செய்யப்போகும் பெண்ணாக கயாடு நடித்திருப்பார்; அந்த ஒரே கதாபாத்திரம் கயாடுவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி தந்தது. இதை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.


"ஓடும் இரயில் தள்ளிவிட பார்த்தார்" - ராம் கூறிய அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2026-09-23 18:00]

ராம் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புகளை எடுத்தவர். இவரின் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் யாரும் பேசாத பேச விரும்பாத பல தைரியமான விஷயங்களை தன் படங்களின் வாயிலாக பேசி வருகிறார். இந்நிலையில் ராம் இயக்கத்தில் அக்டோபர் 2-ம் தேதி நிவின் பாலி, சூரி நடிப்பில் 7 கடல் 7 மலை என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தன் 20 வயதில் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த போது, நானும் 35 வயதுள்ள ஒரு ஆள் மட்டும் இருந்தோம்.


அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!
[Wednesday 2026-09-23 18:00]

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் என எந்த ஹைப் இல்லை என்றாலும் அவரின் படத்திற்கான ஓப்பனிங் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருக்கும். அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் படைப்பலம் கொண்டவர் அஜித். இவர் சினிமாவே இப்போது பார்ட் டைம் போல் தான் நடிக்கிறார், தன் முழு கவனமும் கார் ரேஸ் தான் என முடிவு செய்துவிட்டார்.


கணவரை பிரிந்த அயலி சீரியல் நடிகை வித்யா!
[Wednesday 2026-09-23 05:00]

சன் டிவியின் வள்ளி, அபியும் நானும் போன்ற் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் வித்யா வினு மோகன். அவர் தற்போது ஜீ தமிழின் அயலி சீரியலில் நடித்து வருகிறார். நடிகை வித்யா மலையாள நடிகர் வினு மோகன் என்பவரை 13 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.


அசோக் செல்வனின் "அன்பில் அவன்" ரிலீஸ் தள்ளிவைப்பு!
[Wednesday 2026-09-23 05:00]

அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் அன்பில் அவன் படம் இந்த வாரம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போர் தொழில் படப்புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.


மண்டாடி 12 நாளில் தமிழகத்தில் இத்தனை கோடிகள் வசூலா?
[Tuesday 2026-09-22 16:00]

மண்டாடி சூரி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது. போட் ரேஸை மையமாக வைத்து எடுத்த இந்த மண்டாடி உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது. இது எந்தளவிற்கு என்றால் இந்த வாரம் வரவிருக்கும் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியாத அளவிற்கு மண்டாடி ஓட்டம் நிற்கவில்லை. இந்நிலையில் மண்டாடி வெளியாகிய 12 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 64 கோடிகளை தாண்டி பிரமாண்ட வசூல் செய்துள்ளது.


தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படங்கள்!
[Tuesday 2026-09-22 16:00]

தமிழ் சினிமா தற்போது வேகவேகமாக அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உலகம் முழுவதும் பல மொழிகளில் OTT வளர்ச்சியால் தமிழ் சினிமா பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து ஆனால் படத்தின் விமர்சனங்கள் ரசிகர்களை கவராமல் படுதோல்வி அடைந்த படங்கள் ஏராளம். அந்த வகையில் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த படங்களை தான் நாம் பார்க்க போகிறோம்...


நடிகர் ராகவா லாரன்ஸ் 25வது படத்தின் ஃபஸ்ட் லுக்!
[Tuesday 2026-09-22 16:00]

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தன்னை முதலில் அறிமுகப்படுத்தி பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். நடனத்தை வைத்தே அப்படியே நடிப்பில் களமிறங்கியவர் ஆக்ஷன், காமெடி என எல்லா எமோஷனையும் அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி வந்தார். நடிப்போடு இயக்கத்திலும் என்ட்ரி கொடுத்தவர் அதிலும் வெற்றிக்கண்டார். தமிழை தாண்டி தெலுங்கிலும் ராகவா லாரன்ஸிற்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.


5 வருடமாக ஓடும் சன் டிவி முக்கிய சீரியல் முடிகிறது: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
[Tuesday 2026-09-22 07:00]

சன் டிவியில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய சீரியல் கிளைமாக்ஸ் தற்போது விரைவில் வர இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 5 வருடமாக 1500 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் தான் முடியப்போகிறது.


கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா!
[Tuesday 2026-09-22 07:00]

அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ராக்கா. ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அட்லீ இந்த படத்தை எடுத்து வருகிறார். இதில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.


விஸ்வநாத் & சன்ஸ் படத்தை விட அதிக வசூல் செய்த மண்டாடி!
[Monday 2026-09-21 16:00]

சூரி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த விடுதலை, மாமன், கருடன் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.


படுதோல்வி அடைந்த சர்தார் 2: இறுதி வசூல் விவரம்!
[Monday 2026-09-21 16:00]

கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க. கார்த்தி - பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கார்த்தியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இது அமைந்தது.


மீசைய முறுக்கு 2: முதல் விமர்சனம்!
[Monday 2026-09-21 16:00]

ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது; படம் எப்படி உள்ளது என்பதை இந்த முதல் விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க. பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு. தன்னுடைய வாழ்க்கையை வைத்து இப்படத்தை எடுத்திருப்பார். 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.


சிபிராஜ் மகன் செய்த சாதனை: குவியும் வாழ்த்து!
[Monday 2026-09-21 07:00]

நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக மட்டுமின்றி மல்டிஸ்டாரர் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சிபிராஜ் தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அப்பா சத்யராஜ் மற்றும் சகோதரி இருவரும் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கடந்த தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து பதிவிடும் விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.


இர்பான் கார் மோதி உயிரிழந்த சம்பவம்: ரூ. 30 லட்சம் அபராதம்!
[Monday 2026-09-21 07:00]

கடந்த 2023-ஆம் ஆண்டு யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Food Vlog மூலம் யூடியூப்பில் பிரபலமானவர் முகமது இர்ஃபான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா