Untitled Document
October 23, 2026 [GMT]
 
அஜித் படத்திற்கு பிரம்மாண்ட Audio Launch ஆ?
[Monday 2026-09-07 16:00]

அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். அதனாலேயே தன் அடுத்த படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்துவிட்டார். இவர் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை ஷாலினி தயாரிக்கிறார். இதற்கு முன்பு அஜித்தின் கார் ரேஸ் டாக்குமெண்டரி ஒன்று கிளாடியேட்டர் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இந்த கிளாடியேட்டர் ட்ரைலர் நேற்று தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியானது.


உலகம் முழுவதும் மெகா ஹிட்: தமிழகத்தில் படுதோல்வியா?
[Monday 2026-09-07 16:00]

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 220 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. அதிலும் தெலுங்கில் மட்டும் இப்படம் ரூ. 80 கோடி வசூலை தாண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!
[Monday 2026-09-07 07:00]

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.


பிரபல நடிகருடன் கைகோர்த்த நடிகை பிரியங்கா மோகன்!
[Monday 2026-09-07 07:00]

ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் 29-வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ். மதராசபட்டினம், தனி ஒருவன், பிகில், லவ் டுடே, டிராகன், கோட், என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ளனர்.


பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட்!
[Sunday 2026-09-06 06:00]

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 10 சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. மொத்தம் 24 போட்டியாளர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடக்க விழாவில் ஒரு அதிர்ச்சி எல்லோருக்கும் காத்திருந்தது. மொத்தம் 35 போட்டியாளர்கள் கொண்டுவரப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் தொடக்க விழா மேடையிலேயே 11 பேரை எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.


பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்தது ஏன்? - ஜாய் கிரீஸில்டா விளக்கம்!
[Sunday 2026-09-06 06:00]

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரீஸில்டா சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனையால் அதிகம் வைரல் ஆனவர். தன்னை கர்ப்பமாக்கி அவர் ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிஎன்ஏ சோதனையில் அவருக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையது தான் என உறுதியானது.


இப்படியெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலாமா? - குவியும் எதிர்ப்புக்கள்!
[Sunday 2026-09-06 06:00]

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லாதவனில் ஆரம்பித்து ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல தரமான படங்களை கொடுத்தவர்.


அஜித் ட்ரைலருக்கே இப்படி ஒரு வரவேற்பா?
[Sunday 2026-09-06 06:00]

அஜிய் தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் சமீப காலமாக தன் படங்களில் பெரிதும் கவனமின்றி கார் ரேஸ்-ல் தான் முழுகவனமும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தான் பங்கேற்ற கார் பந்தய வீடியோக்களை தொகுத்து ஒரு டாக்குமெண்ட்ரி ஆக கிளாடியேட்டர் என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். அதை மிக விரைவில் திரைக்கு கொண்டு வர உள்ளாராம்.


நடிகர் சூர்யாவின் 50வது படத்தின் இயக்குனர் இவரா?
[Sunday 2026-09-06 06:00]

சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். பல வருடங்கள் ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பேக் டூ பேக் மெகா ஹிட் படங்களை கொடுத்து வசூல் நாயகன் ஆகிவிட்டார். இந்நிலையில் சூர்யா தன் அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம், அதில் அடுத்து ஜெய் பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.


நயன்தாரா வீட்டில் பி.வி சிந்து!
[Saturday 2026-09-05 05:00]

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மற்ற மொழி பிரபலங்களும் அவருடன் நட்புடன் இருந்து வருகின்றனர். அப்படி பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது நயன்தாராவின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.


"அஜித் போனில் சொன்ன விஷயம், எனக்கு தூக்கமே வரவில்லை": ஜீ.வி.பிரகாஷ்!
[Saturday 2026-09-05 05:00]

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் இன்று Immortal என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. அதில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.. இருப்பினும் ஜீ.வி விடாமுயற்சியுடன் ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகிறார். இன்று தஞ்சாவூரில் ஒரு தியேட்டரில் மக்களுடன் அவர் படம் பார்த்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர்! Top News
[Friday 2026-09-04 16:00]

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'போராட்டம்'. இப்படத்தை ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


இம்மார்ட்டல்: திரை விமர்சனம்!
[Friday 2026-09-04 16:00]

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள இம்மார்ட்டல் (Immortal) திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க. சுமார் 1000 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணுக்கு ராட்சச உருவத்தில் குழந்தை ஒன்று பிறக்கிறது. இந்த குழந்தையை கொண்டு போய்விடு என அந்த பெண்ணின் கணவரிடம் பிரசவம் பார்த்த மூதாட்டி கூறுகிறார். இதனால் அந்த குழந்தையை அங்கிருந்து தொலைதூரத்திற்கு எடுத்து சென்று விட்டுவிடப்படுகிறது.


சூர்யா 49வது படம் குறித்து வந்த சூப்பர் தகவல்!
[Friday 2026-09-04 16:00]

நடிகர் சூர்யா, இந்த வருடத்தில் மட்டும் அவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. முதலில் சூர்யாவின் கருப்பு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாரான கருப்பு திரைப்படம் வெளியானது. பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். தெலுங்கு சினிமா இயக்குனர் இயக்கியுள்ள இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த சண்டே விஜய் டிவியில் ஒரே மாஸ் தான்!
[Friday 2026-09-04 07:00]

விஜய் டிவி, இளைஞர்களுக்கு என்ன பிடிக்குதோ, அவர்களின் பல்ஸை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறார்கள். வார நாட்களில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களும், வார இறுதி நாட்களில் சூப்பர் சிங்கர், கேம் ஷோக்கள் எனவும் ஒளிபரப்பாகி வருகிறது.


"மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்" - பிரபல நடிகர் வருத்தம்!
[Friday 2026-09-04 07:00]

பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைப்பில் வெளியாகி இருந்தது. விஜய்யின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என ஒரு பிரபலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.


கமல் ஹாசனின் அடுத்த படம்!
[Thursday 2026-09-03 16:00]

உலகநாயகன் கமல் ஹாசனின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு தக் லைஃப் திரைப்படம் வெளியானது. மணி ரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கமல் நடித்துள்ளதால் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.


Toxic இத்தனை கோடிகள் நஷ்டம் வருமா?
[Thursday 2026-09-03 16:00]

யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ரூ. 500 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் டாக்சிக். இந்த படம் ரூ. 1500 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் முதல் நாளே மிக மோசமான விமர்சகர்கள் பெற்றது. அதனால் படத்தின் வசூல் தற்போது ரூ. 400 கோடி தாண்டினாலே பெரிய விஷயம் தான் என கூறப்படுகிறது.


ஜெயிலர் 2 படத்துடன் மோதும் விஜய்!
[Thursday 2026-09-03 16:00]

ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத்தின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படம் கண்டிப்பாக அக்டோபர் 15-ம் தேதி வெளிவரும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


புது படத்தை தொடங்கிய த்ரிஷா!
[Thursday 2026-09-03 07:00]

நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் புது படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது . Panorama Studios இந்த படத்தை தயாரிக்கிறது . ராஜா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் த்ரிஷா உடன் ராதிகா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


2 வாரத்தில் இருமுடி செய்த அதிகாரபூர்வ வசூல்!
[Thursday 2026-09-03 07:00]

ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இருமுடி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் இந்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது. முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது புது சாதனையை படம் படைத்து இருக்கிறது.


மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்களா?
[Wednesday 2026-09-02 16:00]

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் வந்தாலும் மங்காத்தா என்பது ஒரு கல்ட் க்ளாசிக் ஆக இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மங்காத்தா ரீ-ரிலிஸ் ஆன போது கூட ரூ. 20 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது மங்காத்தா பார்ட் 2 எப்போது வரும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இன்று வரை அதற்காக அப்டேட் அஜித் சொன்னால் மட்டுமே உண்டு என்ற நிலை ஆகிவிட்டது.


ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
[Wednesday 2026-09-02 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸை சுற்றி சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு என பலரும் நடித்திருந்தனர்.


மமிதா பைஜு படைத்த பிரம்மாண்ட சாதனை!
[Wednesday 2026-09-02 16:00]

மமிதா பைஜு இந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாகிவிட்டார். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இந்நிலையில் மமிதாவிற்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வேண்டுதல் வைக்கும் அளவிற்கு மமிதவின் புகழ் வளர்ந்துள்ளது.


பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் பிரம்மாண்ட சம்பளம்!
[Wednesday 2026-09-02 07:00]

ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் அவர் சம்பளம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பிக் பாஸ் 19 தொகுத்து வழங்க அவர் 300 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.


பிக் பாஸ் போட்டியாளராக வரும் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!
[Wednesday 2026-09-02 07:00]

பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். பல முக்கிய சீரியல் நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.


18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-09-01 16:00]

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை. அப்படியொரு வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர்.


இரண்டு வாரங்கள் கடந்தும் வெற்றி நடை போட்டு வரும் 'மொத ராத்திரி'!
[Tuesday 2026-09-01 16:00]

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான 'மொத ராத்திரி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்த திரைப்படம் 'மொத ராத்திரி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.


இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்ற 'மார்வெல்': மீண்டு வந்த கதை!
[Tuesday 2026-09-01 16:00]

மார்வெல் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்று அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மார்வெல் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். கடைசியாக வெளியான ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகளவில் $2.2 பில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகிறது.


அதல பாதாளத்தில் டாக்சிக் பட வசூல்!
[Tuesday 2026-09-01 07:00]

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படம் வந்த நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் முதல் சில தினங்களுக்கு நல்ல வசூலை டாக்சிக் பெற்று வந்தது. முதல் நாளில் இந்தியா முழுக்க 120 கோடி ரூபாய் வரை டாக்சிக் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா