Untitled Document
October 23, 2026 [GMT]
 
விக்ரம் வீடியோவால் வந்த சர்ச்சை: அரிய வகை குரங்கு பறிமுதல்!
[Wednesday 2026-08-19 07:00]

விக்ரம் சமீபத்தில் ஒரு அரிய வகை குரங்கு உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது வைரல் ஆக பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அவரது சம்மந்தி வீட்டுக்கு சென்றபோது எடுத்த வீடியோ தான் அது என சொல்லப்பட்டது. அது பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


காய்கறி வியாபாரம் செய்யும் நடிகர் விமல்!
[Wednesday 2026-08-19 07:00]

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர். அவர் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் பேட்டிகளில் அவர் பதில் அளிக்கும் விதமும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகும்.


ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி!
[Tuesday 2026-08-18 16:00]

தமிழ் சினிமா 30 வருடங்களுக்கு மேலாக கொண்டாடிய ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான். ஜனநாயகன் படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரைப் பற்றிய காட்சிகள் கண்டிப்பாக இனி வரும் புதுப்படங்களில் இடம்பெறும். அந்த அளவிற்கு மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக உள்ளார்.


"எந்த மனைவியும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்" - நடிகர் யாஷ்!
[Tuesday 2026-08-18 16:00]

நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்துள்ளதை பார்க்கும்போது, அதை என் மனைவி முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நடிகர் யாஷ் கூறியுள்ளார். கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் யாஷ். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் டாக்சிக்.


ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்!
[Tuesday 2026-08-18 16:00]

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கி ஆட்சியை பிடித்து இன்று முதலமைச்சராக 100 நாட்களை கடந்துள்ள விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.


சூர்யா கெரியரில் புது சாதனை!
[Tuesday 2026-08-18 07:00]

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல வசூல் வருகிறது.


வெளியான இசையமைப்பாளர் அனிருத்-காவ்யா மாறன் திருமண தேதி!
[Tuesday 2026-08-18 07:00]

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத புதிய படங்களே இல்லை என்பது போல் இப்போதெல்லாம் அனிருத் இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் பட ரிலீஸ் இல்லை என்று ஆகிவிட்டது. கடைசியாக அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ்-வாமிகா கபி ஜோடியாக நடித்த டிசி திரைப்படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் நடிப்பு, இயக்கம், கதையை தாண்டி அனிருத் இசையில் படத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.


"11 குழந்தைகளை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை" - அனுபமா பரமேஸ்வரன்!
[Monday 2026-08-17 17:00]

மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஓட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் இவர் தமிழில் கொடி, டிராகன், பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிக்கண்டுள்ளார். அவர் நடித்த 3 படங்களில் இரண்டு படங்கள் மெகா ஹிட் தான்.


எல்லை இல்லா வசூல் வேட்டையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!
[Monday 2026-08-17 17:00]

கடந்த சில மாதங்களில் வெளியான ஹாலிவுட் படங்களான தி ஓடிசி, ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு படங்களுமே மக்களால் கொண்டாடப்பட்ட தெறிக்கும் வசூல் வேட்டை நடந்துள்ளது. கடந்த ஜலை 30ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே.


அஜித் தான் சிறந்த கணவர்: திரிஷா!
[Monday 2026-08-17 17:00]

அஜித் இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர் டேவில் படம் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இப்படத்தை அவரே சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் அஜித் நடிகை திரிஷாவுடன் ஜி, கிரீடம், மங்காத்தா, விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.


இலங்கையில் முதன்முறையாக இந்தியத் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
[Monday 2026-08-17 07:00]

இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் ஆஃப் ராவண்” இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது. இந்தியத் தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் தமிழகத்திற்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.


"வெற்றி தோல்வியை தாண்டி இது தான் முக்கியம்" - மகன் பற்றி பதிவிட்ட ஷாலினி!
[Monday 2026-08-17 07:00]

நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வந்தாலும் அடுத்து தன் மனைவி ஷாலினி தயாரிப்பில் படம் நடிக்க போகிறார். அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித் - ஷாலினியின் மகன் ஆத்விக் அஜித் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். அவரது அணி ஜெயித்த நிலையில் ஷாலினி மகிழ்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.


விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-08-16 17:00]

சூர்யா நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி கடந்த 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.


9 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-08-16 17:00]

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிசி திரைப்படம், 9 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன் - அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.


மகுடம் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-08-16 17:00]

விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுநாள்வரை ஹீரோவாக பட்டையை கிளப்பி வந்த விஷால், முதல்முறையாக இயக்குநராக களமிறங்கியுள்ள திரைப்படம் மகுடம். இப்படத்தில் அவருடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் விஷால் பிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


சூர்யா கெரியரில் புது சாதனை!
[Sunday 2026-08-16 05:00]

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வருகிறது இந்த படம். அமெரிக்காவில் தெலுங்கு தமிழ் மக்களை இந்த படம் வெகுவாக கவர்ந்து இருப்பதால் அங்கே வசூல் சாதனை படைத்து வருகிறது.


"கர்நாடகாவை விட்டு விரட்டிவிடுவோம்" - யாஷை தாக்கிய நடிகை!
[Sunday 2026-08-16 05:00]

யாஷ் நடித்து இருக்கும் டாக்சிக் படத்தின் டீஸர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் வரும் காட்சிகள் தான். இந்த படத்திற்கு தற்போது சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வருகிறது.


நடிகர் நாகர்ஜுனாவுக்கு இப்படி ஒரு பயமா?
[Saturday 2026-08-15 07:00]

நடிகர் நாகர்ஜுனா தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது. நாகர்ஜுனா சமீபத்தில் நடந்த சைபர் க்ரைம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் சைபர் க்ரைமால் பாதிக்கப்பட்டது பற்றி கூறினார்.


புது பிஸ்னஸ் தொடங்கிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்!
[Saturday 2026-08-15 07:00]

நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் மூலமாக தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பல படங்களில் அவர் குணசித்திர ரோல்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் ஷோ அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இருப்பினும் அந்த ஷோவுக்கு பிறகும் அவருக்கு பெரிய அளவில் படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்ன படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அவர்.


அமெரிக்காவை அதிர வைத்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ப்ரீமியர் வசூல்!
[Friday 2026-08-14 16:00]

சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் டீச்ண்ட் ஆன விமர்சனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்கா ப்ரீமியர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ப்ரீமியர் மட்டுமே 3 லட்சம் டாலர் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.


விஜய்யின் ஜனநாயகன் தமிழ்நாடு ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா?
[Friday 2026-08-14 16:00]

ஜனநாயகன் தளபதி விஜய் நடிப்பில், இல்லை முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம். இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது எல்லோரும் அறிந்த்தே. இதனால் இந்த படத்திற்கு வசூல் பெரியளவில் அடி வாங்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், எல்லோர் கணிப்பையும் பொய்யாக்கி இந்த படம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்த சூர்யா!
[Friday 2026-08-14 16:00]

சூர்யா இன்று இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் கருப்பு படம் வெளிவந்து மெகா ஹிட் ஆனது. இதனால் சூர்யா மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளிவந்து அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


"எனக்கு அப்படி தோன்றினால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்" - அனிருத் அதிரடி!
[Friday 2026-08-14 07:00]

தமிழ் சினிமாவில் தெறிக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்து மக்களால் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் தான் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் அனிருத்தும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். தற்போது அனிருத், பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் கிங், நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2, தர்மன், அல்லு அர்ஜன்-லோகேஷ் கனகராஜ் படம், நானியின் பாரடைஸ், Ak 64 என 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றி வருகிறார்.


சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்!
[Friday 2026-08-14 07:00]

மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயம் தான் தொலைக்காட்சி. சன், விஜய், ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். சன் டிவி என்றால் சீரியலுக்கும், விஜய் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்களும் பேமஸாக உள்ளது. சாதாரண நாட்களில் எப்போதும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வரும்.


காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா!
[Thursday 2026-08-13 16:00]

காதல் முறிவு குறித்தும், காதலரால் தான் அனுபவித்த துன்புறுத்தல்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிம்மதியை அடைய பயனற்ற பாதையை கைவிட வேண்டியிருக்கும் எனவும், இனி தனது வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கிறேன் எனவும், வாழ்க்கையை கொண்டாடுவோம் என்றும் பதிவிட்டு இருந்தார்.


ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த அஜித்!
[Thursday 2026-08-13 16:00]

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் ஷங்கர் கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் படம் கொடுக்க தடுமாறி வருகிறார், அடுத்து வேள்பாரி பிரமாண்ட படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்க, முதலில் ஒரு ஆக்‌ஷன் படம் எடுத்து மீண்டும் தான் இடத்தை பிடித்துகொண்டு பிறகு வேல்பாரி எடுக்கலாம் என நினைத்த இவர் ஒரு சில நடிகர்களிடம் பேசி வருகிறாராம்.


நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா?
[Thursday 2026-08-13 16:00]

டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.


ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-08-13 09:00]

விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்தது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


உலகளவில் மிகப்பெரிய முன்பதிவு வசூல் செய்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்!
[Thursday 2026-08-13 09:00]

சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படத்தின் ட்ரைலர் வந்த நாளிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகளவில் நல்ல முன்பதிவு நடந்து வருகிறதாம், அதிலும் வெளிநாடுகளில் இப்படம் ரூ 4 கோடி வரை முன் பதிவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.


அஜித் படத்தில் நடிக்க ஆசைபட்ட விஜய்!
[Wednesday 2026-08-12 16:00]

அஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கார் ரேஸில் முத்திரை பதித்து வருகிறார். அஜித், விஜய் மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்பு போது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததனர், பிறகு அஜித் பிரியாணி செய்து போட்டார், விஜய் ஒரு வாட்ச் கிப்ட் செய்தார், இப்படி இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா