Untitled Document
October 23, 2026 [GMT]
 
அமெரிக்கா முன்பதிவில் வெளுத்து வாங்கும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்!
[Wednesday 2026-08-12 16:00]

அமெரிக்கா தற்போது இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மிக முக்கியமான இடமாக உள்ளது. அதிலும் தெலுங்கு படங்களுக்கு அமெரிக்காவிலும் தமிழ் படங்களுக்கு கனடாவிலும் மிகப்பெரிய மார்கெட் உருவாகி உள்ளது. இந்த இரண்டு நாடுகளை சேர்ந்து நார்த் அமெரிக்கா வசூல் என கூறுவார்கள். அந்த வகையில் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தை இயக்கியது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, அதனால் தெலுங்கு பக்கமும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.


மலையாள சினிமாவில் கால் பதித்த நடிகை ருக்மிணி!
[Wednesday 2026-08-12 16:00]

ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி வாகை சூடியது. இதை தொடர்ந்து மதராஸி, ஏஸ் என பல படங்களில் தொடர்ந்து நடித்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் நடித்த இவர் அடுத்து மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.


வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்!
[Wednesday 2026-08-12 16:00]

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் DC. திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இப்படத்திற்காக அலை மோதுகிறது, அதற்கு முக்கிய காரணம் பட கதை, நடிகர்களை தாண்டி இமாலய வெற்றிக்கு அனிருத்தின் இசை என்பது எல்லோரும் கூறும் முக்கிய விஷயமாக உள்ளது.


இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள்!
[Wednesday 2026-08-12 16:00]

ஹாலிவுட் படங்களுக்கு என இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவை இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்தியாவில் ஜுராஸிக் பார்க் படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தது. அவர் போட்ட விதை இன்று மிகப்பெரிய மரமாக வளர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இன்று வசூல் அறுவடை இங்கு நடந்து வருகிறது. இதில் குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்தியாவில் நம்ம ஊர் மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக வசூல் ஓப்பனிங் வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் வந்த ஸ்பைடர்மேன் படமே ஒரு சான்று, சரி இந்தியாவில் தற்போது வரை அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்...இதோ..


ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்!
[Tuesday 2026-08-11 16:00]

விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தின் 19 நாள் தமிழ்நாடு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதமே இப்படம் வெளியாகியிருக்க வேண்டிய நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்களுக்கு பின் வெளியானது.


ஸ்பைடர்-மேன் பாக்ஸ் ஆபிஸ்: இந்தியாவில் 12 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-08-11 16:00]

ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 12 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே. கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியான இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.


விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வசூல்!
[Tuesday 2026-08-11 16:00]

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ முதல் முறையாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


விஜய் ரூட்டை அப்படியே பின்பற்றும் தனுஷ்!
[Tuesday 2026-08-11 07:00]

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அரசியலில் ஜெயித்த பிறகு மற்ற பல நடிகர்களும் அரசியல் கனவு காண தொடங்கியிருக்கின்றனர். ராகவா லாரன்ஸ், விஷால், தனுஷ் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனக்கு விஜய் பார்த்து பொறாமை இல்லை, நான் வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆகி இருப்பேன் என ரஜினியும் பேட்டி கொடுத்தார்.


பிக் பாஸ் ஷோவில் வரும் பெரிய மாற்றம்!
[Tuesday 2026-08-11 07:00]

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் இந்த ஷோ நடைபெற்ற வருகிறது. விரைவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் பிக் பாஸ் ஷோவை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை!
[Monday 2026-08-10 16:00]

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது. ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Pregnancy Kit வாங்கி வர சொல்லியுள்ளார். அந்த நேரம் பழனி கதிரை கிட்டுடன் காண அவர்களே கதிர்-ராஜி இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இரு வீட்டினருக்கும் கூறிவிட்டார்கள். அதைக்கேட்டதும் இரு குடும்பமும் செம சந்தோஷப்பட்டார்கள், அதே வேகத்தில் ராஜியை மருத்துவமனை அழைத்து சென்றார்கள். அங்கு மருத்துவர் ராஜி கர்ப்பமாக இல்லை என கூறியதும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.


11 நாள் முடிவில் இந்தியாவில் "ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே" செய்துள்ள வசூல்!
[Monday 2026-08-10 16:00]

ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் செய்யுமா என கேட்கும் சிலருக்கு இதற்கு முன் வெளியான ஹாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனே சாட்சி. அப்படி பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் அண்மையில் வெளியாகி இருந்தது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜுலை 30ம் தேதி இப்படம் இந்தியாவில் வெளியானது.


18 நாள் முடிவில் தமிழகத்தில் இதுவரை ஜனநாயகன் படம் செய்த வசூல்!
[Monday 2026-08-10 16:00]

விஜய், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இயக்குனர் மகன் என்ற அடையாளத்துடன் களமிறங்கினாலும் ஏகப்பட்ட அவமானங்கள், தோல்விகளை சந்தித்து அதனால் துவண்டு போகாமல் போராடி பெரிய இடத்தை பிடித்தவர். எல்லா சினிமா ரசிகர்களின் வாழ்க்கையில் விஜய் என்பவர் மறக்க முடியாத ஒரு பிரபலமாக இருக்கிறார், ஆனால் இனி அவர் நடிக்கப்போவதில்லை, ஜனநாயகன் படத்தோடு தனது சினிமா வாழ்க்கையை முடித்துவிட்டார்.


ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏஆர் அமீனின் கார் விபத்தில் சிக்கியது!
[Monday 2026-08-10 07:00]

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. ஏ.ஆர்.அமீன், அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த கார், எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அனைவரும் தப்பினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். குழந்தையிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீனுக்கு, 2015ஆம் ஆண்டு ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா யா சல்லி வசல்லிம் எனும் பாடல் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.


நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்!
[Monday 2026-08-10 07:00]

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகையிடம் ரெட் கார்ப்பெட்டில் பெண் ரசிகை ஒருவர் எல்லைமீறி உதட்டில் முத்தமிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை நிகிதா ராவல் நிகழ்ச்சிக்கு வந்தபோது போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ரசிகை ஒருவர் அங்கே வந்து அவரிடம் பேசினார்.


தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகை கியாரா அத்வானி!
[Sunday 2026-08-09 17:00]

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி, தமிழில் என்ட்ரி தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எஸ். தோனி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இதை தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், ஷெர்ஷா, Bhool Bhulaiyaa 2, கேம் ஜேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இன்று இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெய்ஸ்வாலுடன் காதலா? - நடிகை மிருணாள் தாகூர் விளக்கம்!
[Sunday 2026-08-09 17:00]

நடிகை மிருணாள் தாகூர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிக்கிறாரா என பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூர் குறித்து தொடர்ந்து பல விதமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், பிரபல நடிகர் தனுஷை மிருணாள் தாகூர் காதலிக்கிறார் என கூறப்பட்டது. இது தொடர்பாக பல செய்திகள் ஊடகங்கள் மத்தியில் வெளிவந்தன. பின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்!
[Sunday 2026-08-09 17:00]

இந்திய திரையுலகில் தற்போது அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட நடிகைகளின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க. திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பளம், அவர்களுடைய வீட்டின் மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.


"ப்ரோமோஷனுக்கு வராதது இதனால் தான்" - டாக்சிக் பட விழாவில் பேசிய நயன்தாரா!
[Sunday 2026-08-09 08:00]

நடிகை நயன்தாரா வழக்கமாக அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். அதை அவர் இத்தனை ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நிலையில் தற்போது யாஷ் உடன் அவர் நடித்த டாக்சிக் படத்திற்காக மாற்றிக்கொண்டிருக்கிறார். நேற்று நடந்த டாக்சிக் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாராவும் வந்திருந்தார்.


எல்லைமீறிய கூட்டம்: ஹிப் ஹாப் ஆதி நிகழ்ச்சி ரத்து!
[Sunday 2026-08-09 08:00]

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் தற்போது ஹீரோ ஆக படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு அவரே இசையமைப்பதால் பாடல்களும் ஹிட் ஆகின்றன. அவர் தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் நடித்திருக்கும் நிலையில், அது விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.


மாதவனின் GDN படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்!
[Saturday 2026-08-08 16:00]

நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் ஜிடிஎன். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவனுடன், சத்யராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தியாவின் எடிசன் என கொண்டாடப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிடி நாயுடு பற்றி பலரும் அறிந்திராத பல தகவல்களை படக்குழு படத்தில் வைத்திருந்தார்கள்.


DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!
[Saturday 2026-08-08 16:00]

தமிழ் சினிமாவில் மக்கள் கவனிக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் அவர் சினிமா அறிமுகமான முதல் படம், அதன்பின் கைதி, மாஸ்டர் விக்ரம், லியோ, கூலி என தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வந்தார். அடுத்தடுத்து படங்கள் இயக்குவார் என்று பார்த்தால் அப்படியே நடிப்பில் களமிறங்கினார்.


எல்லையே இல்லா வசூல் வேட்டையில் ஜனநாயகன்!
[Saturday 2026-08-08 16:00]

எச்.வினோத், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படங்களை இயக்கி கவனம் பெற்றவருக்கு நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அட்டகாசமான கதையை இயக்கியிருந்தார். விஜய் அரசியல் களமிறங்கிய நேரத்தில் இந்த படம் வெளியாக வேண்டும் என படக்குழு செம பிளானுடன் வேலை செய்ய கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் பட ரிலீஸ் பொங்கலுக்கு பதில் ஜுலை 23ம் தேதி வெளியாகி இருந்தது.


பிக் பாஸ் 10 லோகோவுடன் வந்த புது ப்ரோமோ! Top News
[Saturday 2026-08-08 05:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் பத்தாவது சீசன் தொடங்க இருக்கும் இடையில் அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. மறுபுறம் சாதாரண பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கிறது.


"அது நடந்தால் ரஜினி உடனே ரூ.1 கோடி கொடுப்பார்" - லதா ரஜினிகாந்த்!
[Saturday 2026-08-08 05:00]

நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய விஷயத்தை கூறி இருக்கிறார். நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். '2002லேயே ரஜினி நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அதை உங்கள் இயக்கம் மூலம் தர வாய்ப்பு இருக்கிறதா.. அதற்காக உங்கள் இயக்கம் வலியுறுத்துமா?' என கேட்கப்பட்டது.


முடிவுக்கு வந்தது முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு!
[Friday 2026-08-07 16:00]

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்து கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்தார்.


டிசி: திரை விமர்சனம்!
[Friday 2026-08-07 16:00]

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி, சஞ்சனா நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள 'டிசி' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க. தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்), தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார், இது மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. இந்த சமயத்தில் போலீஸ் ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது.


"ஸ்பைடர்மேன் பிரான்ட் நியூ டே" - இந்தியாவில் எவ்வளவு வசூல்?
[Friday 2026-08-07 16:00]

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன் உள்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. நோ வே ஹோம் படத்திற்கு பிறகு பீட்டர் பார்க்கரின் புதிய வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக கடந்த ஜுலை 30ம் தேதி வெளியானது. ஸ்பைடர் மேன் படத்திற்கு எப்போதுமே இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும், இந்த படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


கவின் - நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா?
[Friday 2026-08-07 07:00]

கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.


ரீஎன்ட்ரி கொடுத்த கெனிஷா: ரவி மோகன் விவாகரத்து வழக்குக்கு நடுவில் போட்ட பதிவு!
[Friday 2026-08-07 07:00]

நடிகர் ரவி மோகனின் விவாகரத்து வழக்கு சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கேட்க, நீதிமன்றம் 3 லட்சம் ருபாய் மட்டுமே ஜீவனாம்சமாக தர உத்தரவிட்டுள்ளது. மகன்களில் பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றை ரவி மோகன் தான் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியிருப்பதாக ஆர்த்தியின் அம்மா பேட்டி கொடுத்தார்.


சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்!
[Thursday 2026-08-06 16:00]

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான ஜெயிலர், சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி சரோஃப் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா