Untitled Document
October 23, 2026 [GMT]
 
இந்தியாவில் 'ஸ்பைடர்மேன்' இதுவரை செய்துள்ள வசூல்!
[Thursday 2026-08-06 16:00]

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியானது. மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார்.


ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
[Thursday 2026-08-06 16:00]

சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் ஜனநாயகன் திரைப்படம் 15 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கி, இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சராகி உள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவிருக்க வேண்டியது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியிட முடியாமல் போனது.


சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து பெறுகிறாரா?
[Thursday 2026-08-06 07:00]

சன் தொலைக்காட்சியில் சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் கயல். இந்த தொடரில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. 6 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் எப்போது முடியும் என கேட்கும் ரசிகர்களும் சிலர் உள்ளார்கள்.


சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: எச்சரித்த நடிகை மிருணாள் தாகூர்!
[Thursday 2026-08-06 07:00]

கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகள் இதனை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
[Wednesday 2026-08-05 16:00]

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இதில், லியோ மற்றும் கூலி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.


6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-08-05 16:00]

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. Shang-Chi and the Legend of the Ten Rings திரைப்படத்தின் மூலம் மார்வெல் யூனிவெர்சில் இணைந்தவர் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். இப்படத்தை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் எடுக்கப்பட்ட Spider-Man: Brand New Day திரைப்படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.


தான் படித்த பள்ளிக்காக நடிகர் தனுஷ் சொந்த செலவில் செய்துள்ள விஷயம்!
[Wednesday 2026-08-05 16:00]

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். கடைசியாக தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் பல நலத்திட்ட உதவிகளை செய்து அந்நிகழ்ச்சியில் பேசிய விஷயம் மிகவும் வைரலாகி வந்தது. அவர் பேசியதை வைத்து தனுஷின் அடுத்த டார்க்கெட் அரசியல் என்றெல்லாம் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தனுஷ் தனது மகன்களுடன் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்திருந்தார், அந்த புகைப்படங்களும் வெளியாகின.


கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் மரணம்!
[Wednesday 2026-08-05 07:00]

நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ரசிகர்கள் அதிகம் பாரட்டும் ஒன்றாகும். தற்போது பிரதீப் ராவத் திடீரென மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.


ஜாதியில் என்ன பெருமை: நடிகை மீனா காட்டமாக போட்ட பதிவு!
[Wednesday 2026-08-05 07:00]

80களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மீனா. அதற்குப் பிறகு 90களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். தற்போது மீனாவுக்கு 49 வயதாகிறது. அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்!
[Tuesday 2026-08-04 16:00]

வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம். லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-08-04 16:00]

13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


வரலாற்று சிறப்புமிக்க அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த சாய் பல்லவி!
[Tuesday 2026-08-04 16:00]

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார். தனக்கென்று தனி இடத்தையும் உருவாக்கினார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


அரசன் பட ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா!
[Tuesday 2026-08-04 07:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் அரசன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வட சென்னை கதாபாத்திரங்களும் இதில் வரும் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். நடிகை ஆண்ட்ரியா சந்திரா ரோலில் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.


ஷாலினி அஜித் தயாரிக்க நடிகர் அஜித் நடிக்கும் 64வது படம்!
[Tuesday 2026-08-04 07:00]

கடந்த வருடம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அடுத்தடுத்து அஜித்தின் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விடாமுயற்சி திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் குட் பேட் அக்லி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் மாஸாக ஓடியது. கதை கதை, அஜித்தின் மாஸ், பாடல்கள் என எல்லாமே பக்காவாக அமைய கடந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.


Item பாடலுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷிற்கு சம்பளம் இவ்வளவா?
[Monday 2026-08-03 16:00]

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கான கதைகளும் இப்போது அதிகம் வருகின்றன. பெண்களை மையப்படுத்திய கதைகளில் முன்பெல்லாம் சிலதே வந்தது, ஆனால் இப்போதெல்லாம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறுகிறது. நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, சமந்தா என பல நடிகைகள் நாயகி மையப்படுத்திய கதைகளில் நடித்து சாதித்துள்ளனர்.


4 நாட்களில் உலகளவில் ஸ்பைடர் மேன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-08-03 16:00]

சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஸ்பைடர் மேன், ஸ்பைடர் மேன், ஸ்பைடர் மேன் - எங்கு திரும்பினாலும் இந்த வார்த்தை தான் சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திரைக்கு வந்த ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்தது.


34 வருடங்களை கடந்த நடிகர் அஜித்!
[Monday 2026-08-03 16:00]

தமிழ் சினிமாவில் கடந்த 34 ஆண்டுகளாக நம்மை மகிழ வைத்த நடிகர் அஜித் குமாரின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது.


ஜெயிலர் 2-ல் நடித்தது ஏன்? - விஜய் சேதுபதி பதில்!
[Monday 2026-08-03 07:00]

நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால், அது அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் நான் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்துள்ளார்.


"சிவகார்த்திகேயன் மிகவும் ஒழுக்கமான நடிகர்" - நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!
[Monday 2026-08-03 07:00]

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன் மிஸ்டர் பச்சன், கிங்டம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.


சூது கவ்வும் படத்தில் பணியாற்றிய அஜித்: ரகசியத்தை போட்டுடைத்த கருணாகரன்!
[Sunday 2026-08-02 07:00]

நடிகர் அஜித் குமார் நடிப்பதை தாண்டி மேலும் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் என லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். தற்போது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நடிகர் கருணாகரன் பேட்டியில் கூறி இருக்கிறார்.


"எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்" - ஆர்த்தியின் அம்மா!
[Sunday 2026-08-02 07:00]

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்ந்து பரப்பரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என கேட்ட நிலையில், நீதிமன்றம் மாதம் 3 லட்சம் ரூபாய் ரவி மோகன் தர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது. இது பற்றி ஆர்த்தியின் தயார் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.


த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
[Sunday 2026-08-02 07:00]

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர். 43 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களை நடத்து வருகிறார். மேலும் அவர் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதால் சமீப காலமாக நெட்டிசன்களிடம் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.


காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை மிர்னாலினி ரவி!
[Sunday 2026-08-02 07:00]

மிர்னாலினி ரவி டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்ற தளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆகி, அந்த புகழை கொண்டு சினிமாவில் நடிக்க வந்தவர். சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ என பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.


10,000 கோடி வசூல் சாதனை படைக்குமா 'தி ஒடிசி'?
[Sunday 2026-08-02 07:00]

2026-ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' - இந்தியாவில் சென்சேஷனல் சாதனை!
[Saturday 2026-08-01 15:00]

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தது. இதனால் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் கண்டிப்பாக டாப் 5-ல் இடம்பெரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


9 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-08-01 15:00]

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் பல தடைகளை தாண்டி விஜய் முதலமைச்சரான பிறகு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.


நடிகை கயாடு லோஹர் வாங்கும் சம்பளம்!
[Saturday 2026-08-01 15:00]

கன்னடத்தில் வெளியான முகில்பேட் (Mugilpete) எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். பத்தொன்பதாம் நூற்றாண்டு (Pathonpatham Noottandu), அல்லூரி, இ பிரேம் யு, ஒரு ஜாதி ஜாதகம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் எப்போது தமிழில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் திரைப்படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய்!
[Saturday 2026-08-01 07:00]

நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கத்தில் சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்தப்படம் பற்றி அளித்த பேட்டியில் ஜேசன் அப்பா விஜய் பற்றி ஒரு விஷயம் பேசி இருக்கிறார்.


திடீரென விஜய்யின் ஜனநாயகன் பட காட்சிகள் திரையரங்கில் ரத்து!
[Saturday 2026-08-01 07:00]

பல போராட்டங்களுக்கு பிறகு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜுலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. பொங்கலுக்கு வர வேண்டிய படம் ஆனால் விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் ரிலீஸ் நாளையே பொங்கலாக கொண்டாடினார்கள். எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே என பலர் நடித்த இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார்.


8 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்!
[Friday 2026-07-31 16:00]

விஜய்யின் கடைசிப் படம் என்று நினைக்கும் போது பலர் அழுதுள்ளனர். விஜய்யே கூட 69வது படம் தான் தனது கடைசிப்படம் என எழுதும் போது கஷ்டப்பட்டதாக கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவரைப் போல விஜய் ரசிகர்கள் அவர் இனி நடிக்க மாட்டார் என்பதை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எல்லா விஷயத்திலும் போராடி வரும் விஜய்க்கு அவரது கடைசிப்படமும் வெளியாவதில் பெரிய போராட்டமாக அமைந்துவிட்டது.

 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா