Untitled Document
October 23, 2026 [GMT]
 
14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்!
[Friday 2026-07-31 16:00]

கிறிஸ்டோபர் நோலன், வித்தியாசமான கதைகளை புதிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி படங்கள் இயக்கி மக்களின் ஆசை இயக்குனராக வலம் வருபவர். இவர் அண்மையில் 70mm ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் தி ஒடிவி திரைப்பம் எடுத்துள்ளார்.


Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்!
[Friday 2026-07-31 16:00]

ஹாலிவுட் படங்களான ஹாரி பாட்டர், ஸ்பைடர் மேன், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்கள் போன்றவற்றிற்கு இந்திய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். சமீபத்தில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் தி ஓடிசி படத்திற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் 10 வரும் பிரபல சீரியல் நடிகை!
[Friday 2026-07-31 07:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கஇருக்கிறது. அதில் போட்டியாளராக வர போவது யார் என தற்போதே பல தகவல்கள் வர தொடங்கி விட்டது. சீரியல் நடிகை ஜனனி அசோக் பிக் பாஸ் வர பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு? - மருத்துவமனையில் அனுமதி!
[Friday 2026-07-31 07:00]

சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர். அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு நடைபெற்ற மேஜர் சர்ஜரிவாழ்க்கையையே மாற்றி விட்டது என கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.


ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!
[Thursday 2026-07-30 17:00]

தொழிலில் களமிறங்கி அசுர வளர்ச்சி பெற்ற தொழிலதிபர்களில் ஒருவர் தான் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.


பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல சீரியல் நடிகையா? - கசிந்த தகவல்!
[Thursday 2026-07-30 17:00]

கடந்த 2017ம் ஆண்டு தமிழக மக்களுக்கு என்ன நிகழ்ச்சி என்றே புரியாமல் துவங்கப்பட்டது தான் பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்க 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள முதல் சீசன் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மக்களுக்கு இந்த ஷோ குறித்து எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை, ஆனால் முடியும் நேரத்தில் இன்னும் சீசன் செல்லக்கூடாதா என ஏங்கிய ரசிகர்கள் உள்ளார்கள். முதல் சீசனை தொடர்ந்து அடுத்தடுத்து 9 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.


Spiderman: Brand New Day திரை விமர்சனம்!
[Thursday 2026-07-30 17:00]

ஸ்பைடர் மேன் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள, ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே படம் ரசிகர்களை கவர்ந்தா? பார்ப்போம். ஸ்பைடர் மேன் ஆன பீட்டர் பார்க்கர் தன்னை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உலகில் உள்ள எல்லா மக்களிடம் இருந்து மறைத்து புதிய வாழ்க்கையை தொடஙுகிறார், அப்படி இருக்கையில் எப்படியாவது தன் நண்பன், காதலி MJ-க்கு மட்டும் எப்படியாவது தன்னை பற்றிய நினைவுகளை கொண்டு வரவேண்டும் என போராடி வருகிறார்.


விஜய்யின் ஜனநாயகன் படத்தின் Deleted Scenes எப்போது வரும்? - இயக்குனர் பதில்!
[Thursday 2026-07-30 07:00]

இந்த வருடத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன். இத்தனை மாதம் காத்திருத்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆக லேட் ஆனது, தணிக்கை பிரச்சனை, மொத்த படமும் சமூக வலைதளங்களில் லீக் என இந்தப் படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது, ஆனாலும் ரசிகர்கள் எப்போதும் போல விஜய்யின் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.


"வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர்" - அய்யனார் துணை நடிகை வேதனை!
[Thursday 2026-07-30 07:00]

அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல். 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது உள்ள கதைக்களம் பொறுத்த வரை நிலா-சோழன் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் ஒன்று செய்ய அது கடைசியில் பிரச்சனையாக மாறிவிட்டது.


12 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-07-29 16:00]

ஹாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் 'தி ஒடிசி'.


'எளிதில் ஏமாந்து போவேன்' - நடிகை கயாடு லோஹர்!
[Wednesday 2026-07-29 16:00]

இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் கயாடு லோஹர். இவர் தமிழில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் வெளியானது. இதன்பின், இம்மார்ட்டல், மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், I'm Game, பாரடைஸ், தாரம் என பிறமொழி திரைப்படங்களும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா?
[Wednesday 2026-07-29 16:00]

தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்வது என்பது மாபெரும் சாதனையாகும். இதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்கள் செய்துள்ளார்கள். மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வெளிவந்த திரைப்படங்களும் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் எந்த நடிகர் அதிக முறை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.


ஒரு பாடலுக்கு ஆடும் கீர்த்தி சுரேஷ்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
[Wednesday 2026-07-29 07:00]

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். சமீபகாலமாக கிளாமர் ஆகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்க தொடங்கி இருக்கிறார்.


"கிராமத்தை தப்பா காட்டிட்டாங்க" - ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு!
[Wednesday 2026-07-29 07:00]

முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது ஜனநாயகன் படம். இது தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.


முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்!
[Tuesday 2026-07-28 15:00]

முதலமைச்சர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே!
[Tuesday 2026-07-28 15:00]

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. இதற்கு முன் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தது.


சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்!
[Tuesday 2026-07-28 15:00]

சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நடிகைகளில், அதிக சம்பளம் பெறும் டாப் 3 நடிகைகள் குறித்துத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த டாப் 3 பட்டியலில் முதலிடத்தில் யார் இருக்கிறார் என்று தெரியுமா? இதோ பாருங்க. சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் 'சிங்கப்பெண்ணே'. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மனிஷா மகேஷ். இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.


விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
[Monday 2026-07-27 16:00]

தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த், ஜெனிபர், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இன்று வரை விஜய்யின் டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக கில்லி உள்ளது. படத்தின் ஓப்பனிங் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை திரைக்கதை தீயாக இருக்கும். அதனால் தான் ரீ-ரிலீஸிலும் கூட வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.


விஜய்க்கு எமோஷ்னலான பதிவுடன் நன்றி சொன்ன அனிருத்!
[Monday 2026-07-27 16:00]

தமிழ் சினிமா இனிமேல் ஒரு சிறந்த நடிகரை மிஸ் செய்யப்போகிறது. 1984ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். அதன்பின் 5 படங்கள் சிறுவனாகவே நடிக்க 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக தனது முதல் படத்தில் நடித்துள்ளார், தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு ஆரம்பத்தில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை, மாறாக மோசமான விமர்சனங்கள் தான் வந்தது.


10 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-07-27 16:00]

உலக புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. 250 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமான தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


கையில் அறுவை சிகிச்சை: தமிழ்நாட்டுக்கு வந்த நடிகர் ராம் சரண்!
[Monday 2026-07-27 07:00]

நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் பெத்தி என்ற படத்தில் நடித்தபோது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது கையில் wrist cartilage tear ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவைக்கு ராம் சரண் குடும்பத்தின் வந்திருக்கிறார்.


ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த ஜனநாயகன் வசூல்!
[Monday 2026-07-27 07:00]

விஜய்யின் ஜனநாயகன் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விஜய்யின் முந்தைய படங்களில் சாதனை வசூலை இந்த படம் தொடவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வசூலை பெற்று வருகிறது. ஜனநாயகன் முழு படமும் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்ததும் வசூல் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


கூலியை முந்திய ஜனநாயகன்!
[Sunday 2026-07-26 19:00]

கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்பதிவில் சாதனை படைக்கும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'!
[Sunday 2026-07-26 19:00]

உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'பிராண்ட் நியூ டே' என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது. மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி!
[Sunday 2026-07-26 19:00]

கதாநாயகன் திரைப்படம் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என்கிற காலம் மலையேறிப்போய், கதாநாயகிகளின் திரைப்படங்களும் வசூல் வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என பல முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற திரைப்படங்களில் தொடர்ந்து கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.


சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினி!
[Sunday 2026-07-26 07:00]

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக தற்போதும் இருந்து வருகிறார். 75 வயதிலும் கைவசம் பல படங்கள் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் அவர். ரஜினி தற்போது அவரது சுயசரிதையை எழுதி வருவதாக கூறப்படுகிறது. கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டார் ஆக வளர்ந்தது, சினிமா அனுபவங்கள், பலருக்கும் தெரியாத பல விஷயங்கள் அவரது சுயர்சரிதை மூலமாக தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமி!
[Sunday 2026-07-26 07:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. அவரது பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தவை. தற்போது சீனு ராமசாமி x தளத்தில் பதிவிட்ட கருத்துக்காக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


படங்களில் நடிப்பதை தள்ளிவைக்கும் நடிகை ஸ்ரீலீலா!
[Saturday 2026-07-25 17:00]

கன்னடத்தில் வெளியான 'கிஸ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இதை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி தந்த இவர், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபலமானார். நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்குத்தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற 'கிஸ்ஸிக்' பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இந்திய அளவில் ரீச் ஆனது.


பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்!
[Saturday 2026-07-25 17:00]

விஜய் நடித்து ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வசூலை வாரிக்குவிக்கும். அதுவே அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி கடந்த 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம்தான் ஜனநாயகன். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எமோஷனலாக பார்த்தனர். இவ்வளவு வருடங்களாக திரையில் நம்மை மகிழ்வித்த ஒரு ஹீரோ இனி சினிமாவில் இல்லை என்பதே அவர்களுடைய எமோஷனுக்கு காரணமாக விளங்கியது.


"அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது" - நடிகை பூஜா ஹெக்டே!
[Saturday 2026-07-25 17:00]

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது ஜனநாயகன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கு முன் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா