Untitled Document
October 23, 2026 [GMT]
 
இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை!
[Saturday 2026-07-25 07:00]

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் எமோஷ்னலாக வருகின்றனர். அதனால் படம் நல்ல வசூலை முதல் நாளில் இருந்தே குவித்து வருகிறது.


ஜனநாயகன் படத்தால் நேர்ந்த ஏமாற்றம்: கதறி அழும் பிரபல நடிகை!
[Saturday 2026-07-25 07:00]

நடிகர் விஜய் படங்கள் பாதி பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரது கடைசிப்படமான ஜனநாயகன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அந்த படமும் பிரச்சனையை எதிர்க்கொண்டு தான் வெளியாகியுள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைத்திருந்தால் பொங்கல் கொண்டாட்டமாக இருந்திருக்கும், இப்போது மட்டும் என்ன ஜனநாயகன் ரிலீஸ் நாளை திருவிழாவாக ரசிகர்கள் ஆக்கிவிட்டனர்.


கேரளா மற்றும் ஆந்திராவிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன்!
[Friday 2026-07-24 16:00]

விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் எப்படியோ தணிக்கை சான்றிதழ் பெற்று எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட்டது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. அரசியலில் விஜய் என்ட்ரி கொடுத்த நிலையில் இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவானதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.


7 நாள் முடிவில் The Odyssey செய்துள்ள வசூல்!
[Friday 2026-07-24 16:00]

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கவனிக்கும் ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 17ம் தேதி வெளியான திரைப்படம் தான் தி ஓடிசி. கிரேக்க காவியம் ஓமரின் கவிதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளது, படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவால் எடுக்கப்பட்டிருக்கிறது.


முதல்நாளில் உலகளவில் தரமான வசூல் வேட்டை செய்துள்ள ஜனநாயகன்!
[Friday 2026-07-24 16:00]

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். படத்தின் கதை, இயக்குனர், இசை, இதில் நடித்த நடிகர்கள் என அனைத்தையும் தாண்டி மக்கள் படத்தை காண நினைத்தது ஒரே ஒரு விஷயம் தான், விஜய். திரையில் இத்தனை வருடம் பார்த்து ரசித்த ஒரு நாயகன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பது எல்லோருக்கும் வருத்தம் தான்.


ஜனநாயகன் முதல் நாள் சாதனை வசூல்!
[Friday 2026-07-24 07:00]

ஜனநாயகன் படம் மிகப்பெரிய அளவில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பதால், கடைசி முறையாக தளபதியின் FDFS காட்சியை பார்க்க ரசிகர்கள் எமோஷ்னலாக வந்திருந்தனர். ஜனநாயகன் படம் முதல் நாளில் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன தமிழ் படம் என்கிற சாதனையை படைத்து இருக்கிறது.


நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்காக நடிகர் சூர்யா எடுத்த முடிவு!
[Friday 2026-07-24 07:00]

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை எதிர்த்து டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது. அமைதியாக போராடி வந்த மாணவர்களை டெல்லி போலீசார் தடியடி அடித்தும், கண்ணீர் புகை வீசியும் தாக்கிய சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. அமைதியாக நேர்மையான விஷயத்திற்காக போராடிய மாணவர்களை எப்படி அடிக்கலாம், இது தவறு என மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்!
[Thursday 2026-07-23 16:00]

தமிழ் சினிமாவின் ஈடு இனையில்லா கமர்ஷியல் நாயகனாக திகழ்ந்த மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்போதும் போல் மக்களை கவர்ந்தாரா? பார்ப்போம். கௌதம் மேனன் மகள் மமிதா பைஜு, சிறு வயதிலேயே அம்மா இறப்பை கண்டு பயந்து சுபாவம் உள்ளவராக வளர்கிறார், ஜெய்லராக இருக்கும் கௌதம் மேனனுக்கு ஜெயிலில் இருக்கும் தளபதி விஜய் நட்பாகிறார்.


ஜனநாயகன் படத்தை காண வந்த நடிகை த்ரிஷா!
[Thursday 2026-07-23 16:00]

மாண்புமிகு மாணவன் படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் நடிப்பு பயணம் ஜனநாயகன் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. சினிமாவை தாண்டி பெரிய களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக மாஸாக வேலை செய்து வருகிறார். இந்த 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டிய ஜனநாயகன் படம் இன்று ஜுலை 23 மாஸாக வெளியாகியுள்ளது.


ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டிய நடிகர் விஜய்யின் ஜனநாயகன்!
[Thursday 2026-07-23 16:00]

ஒருவழியாக ரசிகர்கள் இத்தனை மாதம் காத்துக் கொண்டிருந்த நாள் வந்துவிட்டது. நடிகர் விஜய்யாக வர வேண்டிய படம் இப்போது மாஸாக கெத்தாக தமிழக முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் ஜனநாயகன் படம் ஜுலை 23 வெளியாகிவிட்டது. விஜய் படம் என்றால் சும்மாவா, அதுவும் அவரது கடைசிப்படம், திரையரங்குகள் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


நேரடியாக NEET போராட்டத்தில் குதித்த தமிழ் நடிகை!
[Thursday 2026-07-23 07:00]

நீட் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் 96 பட புகழ் நடிகை கௌரி கிஷன், நேரடியாகவே களத்தில் இறங்கி போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.


"ஜனநாயகனை போராடி வாங்கினேன்" - AGS அர்ச்சனா கல்பாத்தி!
[Thursday 2026-07-23 07:00]

ஜனநாயகன் படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்க்க வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தனது தியேட்டர்களுக்கு ஜனநாயகன் படத்தை கொண்டு வர போராடியதாக கூறி இருக்கிறார்.


Godzilla vs. Kong பட நடிகை விபத்தில் உயிரிழப்பு!
[Wednesday 2026-07-22 16:00]

சிறுவர்களை மிகவும் கவர்ந்த கோட்சில்லா விஎஸ் கோங்" (Godzilla vs. Kong) திரைப்படத் தொடரில் ஜியா (Jia) என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத நடிகை கெய்லி ஹட்டில் (Kaylee Hottle), தனது 18 வயதில் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், ஹாலிவுட் திரை உலகில் காதுகேளாத சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தியதற்காக ஹட்டில் பரவலாக அறியப்பட்டார்.


இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்!
[Wednesday 2026-07-22 16:00]

இந்த வாரம் சூப்பர் ஸ்பெஷல் வாரம், இந்த வாரம் காமெடி வாரம் என ஒவ்வொரு வாரமும் சன் டிவியில் ஒரு தலைப்பில் இருக்கக் கூடிய படங்களாக ஒளிபரப்புவார்கள். படங்களை தேர்வு செய்து அவர்கள் ஒளிபரப்பினாலும் சீரியல்களிலும் அப்படியே இருக்கும். ஒரு சீரியலில் கடத்தல் கதைக்களம் வந்தால் மற்ற சில சீரியல்களிலும் அதுபோன்ற கதைக்களம் செல்லும், இந்த மாதிரி பல முறை சன் டிவி சீரியல்களில் நடந்துள்ளது.


இந்திய படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை செய்யும் 'தி ஒடிசி'!
[Wednesday 2026-07-22 16:00]

ஒவ்வொரு மொழியிலும் ஒரு இயக்குனர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வார். அப்படி ஹாலிவுட்டில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படங்கள் இயக்கி மக்களின் பேவரெட் இயக்குனராக இருப்பவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவரது படங்களுக்கு ஹாலிவுட்டை தாண்டி மற்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெறும், இந்தியாவில் கூட அவர் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.


ஜனநாயகன் படத்தில் விஜய்யே இயக்கிய ஒரு காட்சி உள்ளது: எச்.வினோத் பேட்டி!
[Wednesday 2026-07-22 16:00]

ஜனநாயகன், தமிழ் சினிமா நாளை கொண்டாடி வரவேற்கப்போகும் ஒரு திரைப்படம். எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தியது. சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக போட்டியிட போகும் வேலையில் இந்த படம் வெளியானால் தேர்தல் சமயத்தில் சரியாக இருக்கும் என பக்கா பிளானோடு நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்து ரிலீஸ் தேதியையும் குறித்தார்.


ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கடைசி ஷாட் என்ன தெரியுமா?
[Wednesday 2026-07-22 07:00]

ஓரம் போ ஓரம் போ அண்ணன் வரார் வழிவிடு என ஒரே குஷியில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். இத்தனை நாள் வருமா வராதா என்ற ஏக்கத்திலேயே இருந்த ரசிகர்களுக்கு நாளை மறுநாள் ஒரே கொண்டாட்டம் தான். விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ஜுலை 23ம் தேதி அதிரடியாக களமிறங்க உள்ளது. நாளுக்கு நாள் படம் குறித்து நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் வெளியாகி வருகிறது, அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.


Record Break சாதனை செய்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன்!
[Wednesday 2026-07-22 07:00]

ஒரு காட்டில் சிங்கம் வருகிறது என்றால் மற்ற விலங்குகள் வழிவிட்டு தள்ளிப்போகும். அதேபோல் தான் இப்போது தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. 2026 பொங்கலுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம் தான் விஜய்யின் ஜனநாயகன், ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 6 மாதங்கள் போக இப்போது ஜுலை 23ம் தேதி அதிரடி மாஸாக படம் வெளியாக உள்ளது.


தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது: உடனடியாக CM விஜய் செய்த விஷயம்!
[Tuesday 2026-07-21 16:00]

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ராப் பாடகர்களில் ஒருவர் அறிவு. இவர் வாத்தி ரெய்டு, தளபதி கச்சேரி போன்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்திற்கான சித்தாந்த பாடலையும் அறிவு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நீட் தேர்விற்கு எதிராக சென்னை தலைமை செயலகத்திற்குள் புகுந்து கோஷங்களை எழுப்பிய பாடகர் அறிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


4 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-07-21 16:00]

2026-ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்!
[Tuesday 2026-07-21 16:00]

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து இன்று ஹீரோவாக மாறியுள்ளார் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சதீஷின் தந்தை காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை: ஹெச்.வினோத் பேட்டி!
[Tuesday 2026-07-21 07:00]

விஜய்யின் ஜனநாயகன் படம் பல மாத தடங்கலுக்கு பிறகு இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகிவிட்ட நிலையில் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது மேலும் பல காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


"100 கோடி கொடுத்தாலும் வர மாட்டேன்" - ஐஸ்வர்யா லட்சுமி!
[Tuesday 2026-07-21 07:00]

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த கட்டா குஸ்தி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு சமீபத்தில் கிடைத்து இருந்தது. குறிப்பாக ஐஸ்வர்யா லக்ஷ்மியின் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்திருந்தது. மற்ற ஹீரோயின்களை போல இல்லாமல் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது இல்லை. அவர் அனைத்து கணக்குகளையும் டெலீட் செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.


பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் 'தி ஒடிசி'!
[Monday 2026-07-20 16:00]

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படத்தின் கதையை நோலன் உருவாக்கியுள்ளார்.


நடிக்க வருவதற்கு முன்பு நடிகை சிம்ரன் இப்படியொரு வேலை செய்துள்ளாரா?
[Monday 2026-07-20 16:00]

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் சிம்ரன். ஒன்ஸ்மோர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நேருக்கு நேர், விஐபி என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தவர் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார். தமிழ் சினிமாவின் டாப் நாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.


தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்!
[Monday 2026-07-20 16:00]

ஜுலை மாதம் ஒரு திருவிழாவும் இல்லை என யோசித்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படி சொல்ல முடியாது. காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரிந்தது தான், நம்ம தளபதியும் முதலமைச்சருமான விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜுலை 23ம் தேதி படு மாஸாக கொண்டாட்டத்துடன் வெளியாக உள்ளது. அண்ணன் வரார் வழி விடு என இந்த வாரம் வெளியாக இருந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


கீர்த்தி சுரேஷ் யார் ரசிகை தெரியுமா?
[Monday 2026-07-20 07:00]

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. கீர்த்தி சுரேஷ் தற்போது ஏர்போர்ட் வந்தபோது அணிந்து வந்த டிசர்ட் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இருக்கிறது.


உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-07-20 07:00]

விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை என பல நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.


3வது தேசிய விருது: ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!
[Sunday 2026-07-19 17:00]

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!
[Sunday 2026-07-19 17:00]

பல தடைகளை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா