Untitled Document
October 23, 2026 [GMT]
 
'தி ஒடிசி' திரைப்படத்தின் வசூல் வேட்டை: பாக்ஸ் ஆபிஸில் சாதனை!
[Sunday 2026-07-19 17:00]

உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன், இவரது இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் 'தி ஒடிசி'. இப்படத்தில் டாம் ஹொலண்ட், Matt Damon, Anne Hathaway, ஜென்டயா ஆகியோர் நடித்துள்ளனர்.


ஜோதிகா நடித்த படத்திற்கு தேசிய விருது!
[Sunday 2026-07-19 06:00]

நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் கூறப்பட்டது. அவர் நடித்த ஹிந்தி படத்திற்க்கு தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம்: அறிவித்த பிரபல தியேட்டர்!
[Sunday 2026-07-19 06:00]

விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். படம் ஏற்க்கனவே இணையத்தில் லீக் ஆனது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் பல காட்சிகளை இணைத்து, மாற்றங்கள் செய்து இருப்பதாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.


கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்: ராக்கா படத்திற்காக எடுத்த ரிஸ்க்!
[Saturday 2026-07-18 07:00]

நடிகை தீபிகா படுகோன் இந்திய அளவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்து அட்லீயின் ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் நடித்து வருகிறார். தீபிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.


இந்தியர்கள் அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ்!
[Saturday 2026-07-18 07:00]

இந்த வருடம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஓடிடி ரிலீஸ்கள் முழு லிஸ்ட். டிவியை விட தற்போது ஓடிடியில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பார்ப்பது தான் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் வாரம் தோறும் ரசிகர்களை கவர, படங்கள் வரிசைகட்டி வருகின்றன. மேலும் மாற்ற நிகழ்ச்சிகளையும் ஓடிடி மூலமாக மக்கள் பார்க்கிறார்கள். அந்த வரிசையில் இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட டாப் நிகழ்ச்சிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.


மாதவனின் ஜிடி நாயுடு பயோபிக் ரிலீஸ் தேதி!
[Saturday 2026-07-18 07:00]

ராக்கெட்ரி படத்திற்கு பிறகு மாதவன் அடுத்து நடிக்கும் ஜிடி நாயுடு பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். படத்தின் ட்ரைலர் அதிகம் வரவேற்பை பெற்றதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.


"இனிமேல் அப்படி நடிக்க முடியாது" - பிரித்விராஜ்!
[Saturday 2026-07-18 07:00]

நடிகர் பிரித்விராஜ் மலையாளம் மட்டுமின்றி தமிழில் பல படங்கள் நடித்தவர். அவர் தனது காலில் 3 ஸ்க்ரூ பொருத்தப்பட்டு இருப்பதால் இனி ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என கூறி இருக்கிறார். பிரித்விராஜ் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கிலும் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அவர் வில்லனாகவும் பல படங்களில் மிரட்டலான நடிப்பை கொடுத்து வருகிறார்.


ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்!
[Saturday 2026-07-18 07:00]

2026 ஜனவரி மாதமே ரசிகர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய படம் ஜனநாயகன். ரிலிஸிற்கு எல்லாம் தயாரான நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற தாமதமானதால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அந்த பட வேலைகளுக்கு இடையில் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கி அதற்காக கடினமாக உழைக்க இப்போது ஆட்சியை பிடித்து சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!
[Friday 2026-07-17 16:00]

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கருணாஸ், ரம்யா கிருஷ்ணன், காளி வெங்கட், லிஸ்ஸி ஆன்டனி, சாரா, மோக்ஷா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


The Odyssey திரை விமர்சனம்!
[Friday 2026-07-17 16:00]

கிறிஸ்டோபர் நோலன் இந்த பெயருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ப்ராண்ட் உள்ளது, படம் என்னமோ நான் நோலன் படம் பார்க்கிறேன் என்ற அளவிற்கு பல கோடி ரசிகர்களை கொண்ட நோலன் முதன் முறையாக ஒரு வராலாற்று கதையை கையில் எடுக்க, எப்போதும் போல் அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம். 3000 வருடத்திற்கு முன்பு நடந்ததாக எழுதப்பட்ட கிரேக்க நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த ஒடிசி என்ன கதை என்றால் 10 வருடங்களாக நடந்த ட்ரோஜர் வார் பிறகு ஒடிசி(மேட் டேமன்) தன் குழுவுடன் தங்களுடைய நாட்டிற்கு திரும்புகிறார்.


அன்பே டயானா திரை விமர்சனம்!
[Friday 2026-07-17 16:00]

ஜமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பாரி இளவழகன், இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் அன்பே டயானா. எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. சென்னை பெரம்பூரில் வாழ்ந்து வரும் பாரி இளவழகன், அங்கே வசிக்கும் ஆங்கிலோ இந்தியனான ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதல் காதலித்து வருகிறார்.


விஜய்யின் ஜனநாயகன் எத்தனை ஆயிரம் திரையில் வெளியாகிறது தெரியுமா?
[Friday 2026-07-17 07:00]

அடுத்த வாரம் இந்த நேரம் தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகிறது, 2026 பொங்கலுக்கு இந்த கொண்டாட்டம் இருந்திருக்க வேண்டும் ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆனது. ஆனால் பரவாயில்லை தளபதி விஜய் படம் எப்போது ரிலீஸானும் திருவிழா தான். பொங்கலுக்கு வந்திருந்தால் தளபதி விஜய், ஆனால் இப்போது முதலமைச்சர் விஜய்யின் படமாக நீண்ட நாட்களாக எப்போது ரிலீஸ் எப்போது ரிலீஸ் என ரசிகர்களால் கேட்கப்பட்ட ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகிறது.


படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா!
[Friday 2026-07-17 07:00]

முன்னணி நடிகையாக, நம்பர் 1 நாயகியாக சில வருடங்களுக்கு முன்பு கலக்கிக் கொண்டு வந்தவர் நடிகை சமந்தா. எப்போது மயோசிடிஸ் நோய் தாக்கம் அதிகமானதோ அப்போதே படங்கள் நடிப்பதில் கொஞ்சம் பிரேக் எடுத்த வண்ணம் இருந்தார். கடந்த வருடம் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்துகொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார்.


தமிழ் நடிகர்களின் முதல் ரூ. 200 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்!
[Thursday 2026-07-16 15:00]

தமிழ் சினிமாவில் இதுவரை பல வசூல் சாதனைகளை படைத்த திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும் கூட ரூ. 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே தமிழ் சினிமாவிற்கு உள்ளது. கூலி இந்த ரூ. 1000 கோடி வசூல் சாதனையை செய்யும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. ஆனால், தற்போது ஜெயிலர் 2 கண்டிப்பாக ரூ. 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவிற்கு பெற்று தரும் என உறுதியாக நம்பப்படுகிறது. அது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


அன்பே டயானா திரைப்படம் எப்படி உள்ளது?
[Thursday 2026-07-16 15:00]

ஜமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்தான் அன்பே டயானா. இப்படத்தில் இளம் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.


முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
[Thursday 2026-07-16 15:00]

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ஜனநாயகன். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தடைபட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது. இதன்பின், படம் இணையத்தில் லீக் ஆனது கடும் வருத்தத்தை திரையுலகிற்கே ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒருவழியாக அனைத்து தடைகளையும் தாண்டி ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


"தளபதி வந்தா தள்ளிபோய் தானே ஆகணும்" - ஜி.வி.பிரகாஷ் எடுத்த முடிவு!
[Thursday 2026-07-16 07:00]

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் ஏற்கனவே லீக் ஆகி இருந்தாலும், ரசிகர்கள் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்!
[Thursday 2026-07-16 07:00]

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர். அந்த புகைப்படங்களும் தினமும் இணையத்தில் வந்து வைரல் ஆகின்றன.


12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-07-15 14:00]

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, ராட்சசன், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.


முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் செய்து வரும் வசூல்!
[Wednesday 2026-07-15 14:00]

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் தற்போது ஜனநாயகன் ரிலீஸ் உறுதியாகியுள்ளது.


ரஜினியின் 173வது படத்தில் இணைய இருக்கும் பிரபல இளம் நடிகை!
[Wednesday 2026-07-15 14:00]

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் பெயர் சமீபத்தில் வெளியானது. தர்மன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் கலந்த கதையாக உருவாக படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இந்த படம் ரஜினியின் படையப்பா மற்றும் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படங்களின் கலவையாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.


ஜனநாயகன் Uncut version வருகிறது!
[Wednesday 2026-07-15 07:00]

விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இந்தமாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் பல கட் கொடுத்து அதன் பின் A சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது.


வருகிறது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2'!
[Wednesday 2026-07-15 07:00]

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. SK கெரியரில் இன்னும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது. கிராமத்து பின்னணியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அந்த படத்தை இயக்குனர் எடுத்திருப்பார்.


புதிய வசூல் சாதனை படைத்த ‘மைக்கேல்’!
[Tuesday 2026-07-14 16:00]

நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqua இயக்கியிருந்தார். ஹீரோவாக ஜாஃபர் ஜாக்சன் நடிக்க ஜான் லோகன் இப்படத்திற்கு திரைக்கதை வடிவமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.


ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
[Tuesday 2026-07-14 16:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், மிர்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 15-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-07-14 16:00]

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அதர்வா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சுதாகர், பகத் பாசில் டிராவிட், தமன், நிஹாரிகா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


விஜய் படத்தின் FDFS காட்சி டிக்கெட் வாங்க சொன்ன அஜித்: ஆச்சர்யம் ஆன தயாரிப்பாளர்!
[Tuesday 2026-07-14 07:00]

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டியாளர்களாக எல்லோரும் கருதினாலும், அவர்கள் நட்புடன் தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில் அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது. அஜித் சொன்ன ஒரு விஷயத்தை பற்றி ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார்.


நடிகை பிரிகிடா சகா நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Tuesday 2026-07-14 07:00]

நடிகை பிரிகிடா சகா வெப் சீரிஸில் பவி டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆனவர். அந்த ரோல் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது. அதனை தொடர்த்து அவர் பல படங்களிலும் முக்கிய ரோல்களில் நடித்தார்.


புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்!
[Monday 2026-07-13 16:00]

90ஸ் கிட்ஸ் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று ஜுராசிக் பார்க். 1993-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகனாக 'டாக்டர் ஆலன் கிராண்ட்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சாம் நீல். இவர் ஆங்கிலத்தில் வெளிவந்த Possession, Bicentennial Man, ஜுராசிக் பார்க் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும், ஜுராசிக் பார்க் படம் தான் இவரை பார்க்கும் போதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.


3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-07-13 16:00]

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அகில். இவர் மூத்த நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் ஆவார். இவர் தெலுங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த 'அகில்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ஹெலோ, Mr. மஜுனு, Most Eligible Bachelor, ஏஜென்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு பிளாக்பஸ்டராக அமையவில்லை.

Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா