Untitled Document
October 23, 2026 [GMT]
 
10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-07-13 16:00]

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான செல்லா அய்யாவு, இயக்கத்தில் அடுத்து வெளிவந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி. இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும், கட்டா குஸ்தி 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.


20 மொழிகளில் 48,000 பாடல்கள், 4 தேசிய விருது: எஸ். ஜானகி செய்த சாதனைகள்!
[Monday 2026-07-13 07:00]

ரசிகர்களால் கொண்டாடப்படும்பின்னணி பாடகிகளில் ஒருவர் எஸ். ஜானகி. இசை உலகில் ராணியாக திகழ்ந்து வந்த இவர் தனது 88 வயதில் காலமானார். பல தலைமுறைகளை கடந்து இவருடைய பாடல்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள நிலையில், இவருடைய மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.


நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு!
[Monday 2026-07-13 07:00]

நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் படம் அனந்தன் காடு கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. விமர்சனமும் சுமாரான லெவலில் தான் வந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆர்யா மீது ஹைதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கும் இந்த படம் தான் காரணம்.


மாபெரும் வசூல் சாதனை: "எங்கள் தங்கம்" குறித்து சமந்தா வெளியிட்ட அறிவிப்பு!
[Sunday 2026-07-12 18:00]

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் எங்கள் தங்கம். ஆக்ஷன் பேமிலி டிராமா கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. சோலோ ஹீரோயினாக சமந்தா கலக்கியிருந்த இப்படம் முதல் வாரத்திலேயே மாபெரும் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.


அனிருத் - காவ்யா மாறன் திருமணம் எங்கு, எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?
[Sunday 2026-07-12 18:00]

இசையமைப்பாளர் அனிருத்திற்கும், Sunrisers Hyderabad CEO காவ்யா மாறனுக்கும் திருமணம் என்கிற செய்தி தொடர்ந்து இணையத்தில் உலா வந்தது. ஒரு பக்கத்தில் இது வதந்தி என கூறி வந்த நிலையில், நடிகர் YG மகேந்திரன், அனிருத் - காவ்யா மாறன் திருமண செய்தி உண்மை என கூற, இவர்களுடைய கல்யாணம் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் இதுவரை அனிருத் தரப்பிலிருந்தோ அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்தோ எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.


'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது!
[Sunday 2026-07-12 18:00]

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் திவாகர். கஜினி படத்தில் வாட்டர்மெலன் வைத்து கொண்டு நடிகர் சூர்யா செய்த ஒரு செய்கையை இவர் செய்தது வைரலானது. இதனால், இவர் தனக்கு தானே 'வாட்டர்மெலன் ஸ்டார்' என பெயர் வைத்து கொண்டார். இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக திவாகர் பங்கேற்றார். 43 நாட்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இசை உலகிற்கு பேரிழப்பு: முதல்வர் விஜய் உருக்கம்!
[Sunday 2026-07-12 07:00]

பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, மைசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது மரணம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது. அவருக்கு பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


புகழ்பெற்ற பாடகி எஸ் ஜானகி காலமானார்!
[Sunday 2026-07-12 07:00]

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி (ஜானகி அம்மா) 88 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். மைசூரில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் குயில் (Nightingale of South India) என அழைக்கப்படும் ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களை தனது காந்தக் குரலால் ஈர்த்தவர்.


"பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்" - நடிகை சுவாசிகா!
[Saturday 2026-07-11 16:00]

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுவாசிகா. இதன்பின் மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய திரைப்படங்களில் நடித்து இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சுவாசிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உடன்பாடில்லாத ஆடை, காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கயாடு லோஹர்!
[Saturday 2026-07-11 16:00]

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் தமிழில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் நடித்த இதயம் முரளி திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. அடுத்ததாக Immortal, I'm Game, மஞ்சணத்தி, The Paradise, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.


தமிழ் சினிமா நடிகர்களின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்!
[Saturday 2026-07-11 16:00]

ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வசூல் விவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவதை தற்போது வழக்கமாக்கிவிட்டனர். அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, சமூக வலைத்தளங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் வசூல் பற்றி பேசி சண்டையே போடுவார்கள். அப்படி வசூல் என்பது படத்தின் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.


தொடங்கியது முன்பதிவு: ஜனநாயகன் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர்!
[Saturday 2026-07-11 07:00]

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் CBFC காலம் தாழ்த்திய நிலையில் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. தற்போது ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல கட் மற்றும் மியூட் உடன் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் சம்பாதிக்கும் தொகை!
[Saturday 2026-07-11 07:00]

நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை பெரிதும் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவரது டான்ஸ் பெரிய அளவில் ஹிட் ஆகிறது. மேலும் ஹிந்தியிலும் அவர் அறிமுகம் ஆவதால் அவரது கெரியர் இன்னும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாவில் மட்டும் ஸ்ரீலீலாவுக்கு 16.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்!
[Friday 2026-07-10 18:00]

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பு திறமைக்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஓம் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் டீஸர் வெளியான நிலையில் அது புஷ்பா படம் போல செம்மர கடத்தல் கதை தானா என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தனுஷ் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை அவரது அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்து இருக்கிறார்.


Evil Dead Burn: திரை விமர்சனம்!
[Friday 2026-07-10 18:00]

ஈவில் டெட் படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஈவில் டெட் பர்ன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களை தண்ணீரில் இருந்து வெளியே வந்த பெண் உருவம் கொடூரமாக கொல்கிறது. அதே சமயம் வில்லியம் மற்றும் ஆலிஸ் தம்பதிக்கு இடையே குழந்தை பெற்றுக்கொள்வதில் சண்டை ஏற்படுகிறது.


இதயம் முரளி திரை விமர்சனம்!
[Friday 2026-07-10 18:00]

தயாரிப்பாளரும், அறிமுக இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள இப்படம் எப்படி வந்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. படத்தின் தொடக்கத்திலேயே அதர்வாவின் திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன. அதர்வாவின் தாய் மாமன் நட்டி நட்ராஜ் திருமணத்திற்கான வேலைகளை எடுத்து செய்து வருகிறார். திருமணம் நாளை நடக்கவிருக்கும் நிலையில் மாப்பிள்ளை நண்பர்களுடன் வெளிநாட்டில் உள்ளார்.


ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்!
[Friday 2026-07-10 07:00]

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். செழியன் இயக்கிய Tolet என்ற படத்திற்காக தேசிய விருதை வென்றனர். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செழியன் திடீரென காலமானதாக வெளியாகியுள்ள செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் காலமானர்.


ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது!
[Friday 2026-07-10 07:00]

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் ஒருவழியாக ரிலீஸ் ஆவாகவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவராமல் இருந்தது. இறுதியாக சமீபத்தில் இப்படத்தை தனிக்குழு பார்த்து சான்றிதழை வழங்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.


தாய்க்கிழவி இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்!
[Thursday 2026-07-09 07:00]

ராதிகா நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வந்து பெரிய ஹிட் ஆன படம் தாய்க்கிழவி. சிவக்குமார் முருகேசன் அந்த படத்தை இயக்கி இருந்தார். சிவகார்திகேயன் தயாரித்து இருந்த அந்த படம் பெரிய வசூலை குவித்து பெரிய லாபத்தையும் அவருக்கு கொடுத்து இருந்தது.


நடிகை ஸ்வாதி பிரபல இயக்குனருடன் 2ம் திருமணம்!
[Thursday 2026-07-09 07:00]

சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி ரெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் ஸ்வாதி ரெட்டி பைலட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.


251 வைரம்: ஜான்வி கபூர் அணிந்த வாட்ச் விலை இத்தனை கோடியா?
[Thursday 2026-07-09 07:00]

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மகள் அன்ஷுலா கபூர் திருமண கொண்டாட்டம் பாலிவுட்டில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதற்கு காரணம் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்துகொண்டது தான். ஜான்வி கபூர் பட்டு சேலையில் மிகவும் அழகாக வந்திருந்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.


கருப்பு பட வெற்றி: சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?
[Thursday 2026-07-09 07:00]

நடிகர் சூர்யா, கருப்பு என்ற மாஸ் வெற்றிப்படத்தை சமீபத்தில் கொடுத்தவர். இப்படத்திற்கு பிறகு வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக தயாராகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா 47 படமும் தயாராகி வருகிறது. அடுத்ததாக இயக்குனர் த.செ.ஞானவேலுடன் சூர்யா தனது 48வது படத்தில் நடிக்கிறார், இப்படத்தை ஹொம்பாலே மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


பாக்கியராஜ்க்கு அஞ்சலி செலுத்தாத ஊர்வசி: அவரே கொடுத்த விளக்கம்!
[Thursday 2026-07-09 07:00]

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். இதற்கு பல பிரபலங்கள் வந்து நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தனர். முதலமைச்சர் விஜய்யும் வந்திருந்தார். ஆனால் நடிகை ஊர்வசி மட்டும் கலந்துகொள்ளவில்லை. இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இறக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். மேலும் பாக்கியராஜ் இறுதிசடங்கிற்கு பல பிரபலங்கள் அவரின் குடும்பத்துடன் உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் அறுதலாகவும் பலர் இருந்தனர். மேலும் பாக்கியராஜின் உடல் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


கோவில் குளத்தில் குளித்த நடிகை ஐஸ்வர்யா மேனன்!
[Wednesday 2026-07-08 07:00]

தமிழ்ப்படம் 2, நான் சிரித்தாள் போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். அவர் தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.


மமிதா பைஜூ எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Wednesday 2026-07-08 07:00]

நடிகை மமிதா பைஜூ தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அடுத்து அவர் விஜய் உடன் நடித்த ஜனநாயகன், சூர்யா உடன் நடித்த விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய படங்கள் வெளிவந்தால் மமிதாவின் கெரியர் இன்னும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


"கருமுட்டையை அதற்காக உறைய வைத்துள்ளேன்" - குழந்தை பெறுவது குறித்து கிரித்தி சனோன்!
[Wednesday 2026-07-08 07:00]

பாலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகள் பலர் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். சிலர் Surrogacy மூலம் குழந்தை பெறுகிறார்கள், இன்னும் சில வழிகளையும் பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஏன் தமிழ் சினிமாவில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாரா Surrogacy மூலம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயானார். தற்போது ஒரு நடிகை குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.


இரவு 3 மணிக்கு நிலம் வாங்கிய நடிகர் அமிதாப் பச்சன்: எத்தனை கோடிக்கு பாருங்க!
[Wednesday 2026-07-08 07:00]

நடிகர் அமிதாப் பச்சன் ஹிந்தி சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நபராக இருந்து வருகிறார். 83 வயதிலும் பிஸியாக அவர் படங்கள், விளம்பரங்கள், போன்றவற்றிலும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் அமிதாப் பச்சன் அயோத்தியில் ஒரு நிலம் வாங்கி இருந்தார். 15 கோடி ரூபாய்க்கு 15000 சதுரடி பிளாட் ஒன்றை அவர் வாங்கி இருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் 35 கோடி ரூபாய்க்கு 2.67 ஏக்கர் நிலத்தை அமிதாப் வாங்கி இருந்தார்.


தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!
[Wednesday 2026-07-08 07:00]

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ 'CMOTamilNadu' எக்ஸ் பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.


குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை: நடிகை பார்வதி பேட்டி!
[Tuesday 2026-07-07 16:00]

மலையாள சினிமாவில் ப்ருத்விராஜ், நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் I Nobody. இப்படம் வரும் ஜுலை 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பிஸியாக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.


"குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை" - சீரியல் நடிகை பரீனா ஆசாத்!
[Tuesday 2026-07-07 16:00]

பரீனா ஆசாத், தொகுப்பாளினியாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரையில் உள்ள டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் இருந்தது. இதில் மோசமான வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் பரீனா ஆசாத்.

Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா