Untitled Document
October 23, 2026 [GMT]
 
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி!
[Tuesday 2026-07-07 16:00]

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய். இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என இப்போது அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பொறுப்பேற்று நிறைய மாற்றங்கள் நிகழ்த்தி வருகிறார். இதற்கு இடையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகும் சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK!
[Tuesday 2026-07-07 07:00]

இப்போது உள்ள இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் நடித்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தும் படங்களை கொடுத்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகி இருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு, கௌரி கிஷன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


அஜித்தை நடிக்க வாருங்கள் என அழைக்கும் பிரபல நடிகர்!
[Tuesday 2026-07-07 07:00]

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்கள் சிலர் அதிகம் கொண்டாடப்படுவார்கள். அப்படி 90ஸ் மக்களால் ரசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட நடிகர்களான அஜித்-விஜய் இப்போது வரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக, ரசிகர்கள் கூட்டத்தை திரையரங்கிற்கு அழைத்து வரும் டாப் நடிகர்களாக உள்ளார்கள். ஜனநாயகன் படத்தோடு விஜய் தனது சினிமா பயணத்தை நிறுத்திவிட்டார், மக்களுக்கான பணி செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிறைய நல்ல நல்ல மாற்றங்கள் நடந்து வருவதாக மக்கள் கூறி வருகின்றனர்.


ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா?
[Monday 2026-07-06 16:00]

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது. பின்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதன்பின், வழக்கை வாபஸ் பெற்றாலும், 2026 தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் சம்பந்தமான படங்கள் வெளிவராது என கூறப்பட்டது. இதனால் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பின் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


மாகாபா ஆனந்துக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம்: விஜய் டிவி பிரபலம் சொன்ன விஷயம்!
[Monday 2026-07-06 16:00]

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பயணத்தை தொடங்கி, பின் 'அது இது எது' மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கும் விதமும், போட்டியாளர்களுடன் செய்யும் நகைச்சுவைகளும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றன. அதுவும் பிரியங்காவோடு இவர் இணைந்து செய்யும் நகைச்சுவை எல்லாம் வேற லெவலில் இருக்கும்.


பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ!
[Monday 2026-07-06 16:00]

இளம் ஹீரோவாக பட்டையை கிளப்பி வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஆம், PR SHOW என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும், அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
[Monday 2026-07-06 07:00]

ஜனநாயகன், ஜெயிலர் 2, டிசி, தர்மன், அரசன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும், வரும் நவம்பர் 12-ம் தேதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


நடிகை த்ரிஷாவின் அப்பா எப்படி இறந்தார் தெரியுமா?
[Monday 2026-07-06 07:00]

நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர். 43 வயதாகும் த்ரிஷா தற்போதும் ஹீரோயினாக படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. த்ரிஷாவின் அம்மா உமா-வை எல்லோருக்கும் தெரியும். அவர் தான் த்ரிஷா உடன் தொடர்ந்து படப்பிடிப்பு தளங்கள், விழாக்கள் ஆகியவற்றும் உடன் செல்கிறார்.


லைகா குடும்ப திருமணத்தில் தனியாக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்!
[Sunday 2026-07-05 18:00]

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கும் முதல் படம் சிக்மா என்ற படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படம் வரும் ஜூலை 31ம் தேதி எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.


61 வயதில் அமீர் கான் மூன்றாம் திருமணம்!
[Sunday 2026-07-05 18:00]

61 வயதான பாலிவுட் நடிகர் அமீர்கான், 47 வயதான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தான் கௌரி உடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாக முன்பே அமீர் கான் கூறி இருந்த நிலையில் தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.


கட்டா குஸ்தி 2: ஐஸ்வர்யா லட்சுமியின் இன்னொரு அசத்தல் வெற்றி!
[Sunday 2026-07-05 18:00]

கட்டா குஸ்தி2 திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் கதை, திரைக்கதை, நகைச்சுவை உணர்வு என பல அம்சங்கள் பேசப்பட்டாலும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நிற்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் ஏற்று நடித்திருக்கும் "கீர்த்தி" என்ற கதாபாத்திரம் இல்லாமல் இந்தப் படம் முழுமையடையாது என்று சொல்லும் அளவுக்கு, அந்தக் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. கீர்த்தி என்பது வெறும் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல, இந்த ஃபிரான்சைஸின் மையப் புள்ளிகளில் ஒன்றாக மாறியிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.


பிளாஸ்ட் படத்தின் இறுதி வசூலை அறிவித்த தயாரிப்பாளர்!
[Sunday 2026-07-05 07:00]

அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பிளாஸ்ட். அந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Baby Do Die Do திரை விமர்சனம்!
[Sunday 2026-07-05 07:00]

ஹுமா குரேஷியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள Baby Do Die Do இந்தி கிரைம் த்ரில்லர் திரைப்படம் இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. மும்பையில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு ஹோட்டலில் நுழையும் இரட்டை சகோதாரிகள், முகமுடி அணிந்த நபர் ஒருவரை கொலை செய்வதை பார்க்கின்றனர். அதனை கொலைகாரன் கவனிக்கும்போது ஒரு சிறுமி மட்டுமே தென்பட அவளை விரட்டுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சகோதரிகள் வேறு வேறு அறைகளில் பிரிய, கொலைகாரனால் ஒரு சிறுமி கொல்லப்படுகிறாள். எஞ்சியிருக்கும் பேபி என்ற சிறுமிக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது.


கீர்த்தி சுரேஷ் அடுத்த படம் பற்றி தீயாக பரவிய வதந்தி!
[Saturday 2026-07-04 18:00]

வெங்கடேஷ் மற்றும் ரந்தாமூரி கல்யாண் ராம் ஆகியோர் நடிக்கும் Venky Anil 5 புதிய தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளார். அனில் ரவிபுடி இந்தத் படத்தை இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இந்தப் படத்தின் பூஜை நடந்து முடிந்தது.


அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: எங்கே, எப்போது?
[Saturday 2026-07-04 18:00]

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அனிருத். இன்றைய கால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப மிகவும் துள்ளலான பாடல்கள் கொடுத்து கலக்கி வருபவர். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அனிருத் இசை தான் என உள்ளது. படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி இசைக் கக்சேரிகளை படு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.


முதல் நாளில் தெறிக்கும் வசூல் வேட்டையில் கட்டா குஸ்தி 2!
[Saturday 2026-07-04 18:00]

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், ஜாரா, காளி வெங்கட், முனிஷ்காந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (ஜுலை 3ம் தேதி) வெளியான படம் கட்டா குஸ்தி 2. விஷ்ணு விஷால் நடிப்பில் இதற்கு முன் வெளியான லால் சலாம் திரைப்படம், ஆரியன் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தது. தற்போது விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகம் இப்போது வெளியாகியுள்ளது.


Dark திரை விமர்சனம்!
[Saturday 2026-07-04 04:00]

கல்யான் ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி, அர்ச்சனா நேத்ரன், நட்டி நடிப்பிப் திரில்லர் ஜானர் ரசிகர்களை குறிவைத்து வந்துள்ள இந்த டார்க் வந்த நோக்கம் நிறைவேறியதா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே பாக்யராஜ் குடியிருக்கும் வீட்டில் இருக்கும் 3 இளைஞர்களில் ஒரு இளைஞர் இரண்டு பேரை கொன்றுவிட்டு, அவரும் நெருப்பு வைத்து எரித்துக்கொள்கிறார். அதை தொடர்ந்து பாக்யராஜும் அந்த வீட்டில் குடியிருக்க வந்த படத்தின் நாயகன் அஜய்-ம் அதே வீட்டில் இறந்துள்ளனர்.


கட்டா குஸ்தி 2nd ரவுண்டு: திரை விமர்சனம்!
[Saturday 2026-07-04 04:00]

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பின் கட்டா குஸ்தி 2nd ரவுண்டு திரைப்படம் வெளியாகியுள்ளது. மக்களின் மனதை வென்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை பார்க்கலாம், வாங்க.


அருவருப்பான கேள்வி: கடும் கோபமான நடிகை ஸ்ருதி ஹாசன்!
[Friday 2026-07-03 18:00]

நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவர் அடிக்கடி வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் இன்று ஏர்போர்ட்டில் இருக்கும்போது ஃபிரீ டைமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் பதில் அளித்தார்.


வில்லனாக நடிக்க வந்த பிரபல சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்!
[Friday 2026-07-03 18:00]

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களிலும், படங்களிலும் நடிப்பது புதிய விஷயம் அல்ல. பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடித்து இருக்கின்றனர். தற்போது அந்த லிஸ்டில் பிரபல சிஎஸ்கே வீரரும் இணைந்து இருக்கிறார்.


ஒரே மாதத்தில் இறந்த பாக்யராஜ்-பாரதிராஜாவுக்காக நடக்கப்போகும் ஸ்பெஷல் விஷயம்!
[Friday 2026-07-03 18:00]

தமிழ் சினிமாவில் 80, 90களில் தரமான படங்கள் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே என தனது கம்பீரமான குரலில் மக்களை கவர்ந்தவர் இப்போது நம்முடன் இல்லை. உடல்நலக் குறைவால் வீடு-மருத்துவமனை என இருந்தவர் கடந்த ஜுன் 10ம் தேதி உயிரிழந்தார்.


திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!
[Friday 2026-07-03 07:00]

விஷ்ணு விஷால் தற்போது திரிஷா பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை த்ரிஷா தற்போது வைத்திருக்கும் நாய் தனது வீட்டில் இருக்கும் டெட்டி என்ற நாயின் குட்டி தான் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார். அது poodle என்ற ரக நாய் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.


மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Friday 2026-07-03 07:00]

நடிகை மாளவிகா மோகனன் தாராள கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் நடிப்பில் இந்த வருடம் வந்திருந்த பிரபாஸின் ராஜா சாப் படத்தில் அவர் உச்சகட்ட கிளாமராக தோன்றி இருந்தார். தற்போது சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அவர்.


சட்டவிரோதமாக வெளியான ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?
[Thursday 2026-07-02 16:00]

இந்த 2026ம் வருடம் மட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகியிருந்தால் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க வைத்திருக்கும். விஜய்யின் ரசிகர்கள் கடந்த வருடம் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடந்ததையே பெரிய அளவில் கொண்டாடினார்கள். பட ரிலீஸை அதைவிட கோலாகலமாக செம மாஸ் கொண்டாட்டங்களோடு படத்தை வரவேற்க தயாராக இருந்தனர்.


சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம்: இயக்குனர் இவர்தானா?
[Thursday 2026-07-02 16:00]

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். தைரியம், துணிச்சல், எந்த விஷயமாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம், ஆளுமை, அன்பு, இரக்க குணம் கொண்டவர் என இப்படி நிறைய விஷயங்கள் கூறலாம். விஜயகாந்த் அவர்களை பற்றி அவர் இருக்கும் போது இல்லாமல் மறைந்த பிறகு நிறைய நல்ல நல்ல விஷயங்களை அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.


ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்!
[Thursday 2026-07-02 16:00]

ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில் கெத்தாக உட்கார்ந்துள்ளார். சினிமாவில் இருந்து விஜய் விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது முதலமைச்சராக அவரை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.


பிளாஸ்ட் பட இயக்குனரின் அடுத்த படம்!
[Thursday 2026-07-02 07:00]

சமீபத்தில் ரிலீஸ் ஆகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த படம் பிளாஸ்ட். ஓடிடி-யில் வெளியான நிலையில் அதிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிளாஸ்ட் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே ராஜ் அடுத்து பல முக்கிய ஹீரோக்கள் உடன் இணைய பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வர தொடங்கி இருக்கிறது.


50 வயதில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்!
[Thursday 2026-07-02 07:00]

சென்னை 28, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அரவிந்த் ஆகாஷ். அவர் விஜய்யின் GOAT படத்திலும் நடித்து இருந்தார். வெங்கட் பிரபு படங்களில் அவரை தவறாமல் பார்க்க முடியும். மேலும் சில படங்களிலும் அவர் குணச்சித்திர ரோல்களில் நடித்து இருக்கிறார்.


கே.பாக்யராஜை தகனம் செய்யும் நேரத்தில் பூர்ணிமா கேட்ட கேள்வி: பகிர்ந்த பார்த்திபன்!
[Wednesday 2026-07-01 15:00]

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜுன் மாதம் சோகத்தின் உச்சமாக அமைந்துவிட்டது. காரணம் சினிமாவில் முக்கிய பங்கு பகித்த குரு, சிஷ்யன் ஒரே மாதத்தில் இறந்துவிட்டார்கள். மகன் இறப்பில் இருந்து மனமுடைந்து போன பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவால் வீடு, மருத்துவமனை என இருந்து கடைசியில் ஜுன் 10ம் தேதி உயிரிழந்தார். இப்போது ஜுன் 27ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-07-01 15:00]

இயக்குநர் சசி இயக்கத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் நூறு சாமி. இப்படத்தில் நடிகை ஸ்வாசிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் இணைந்து விஜய் ஆண்டனி, அஜய், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா