Untitled Document
October 23, 2026 [GMT]
 
தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!
[Thursday 2026-10-22 16:00]

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் கிருஷ்ணராஜ். இவர் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவர். 'பொற்காலம்' திரைப்படத்தில் வந்த உலகளவில் மிகவும் பிரபலமான 'தஞ்சாவூரு மண்ண எடுத்து' பாடலை பாடியது இவர்தான். மேலும், இசையமைப்பாளர் தேவாவின் இசையில் 'நலம் நலமறிய ஆவல்', வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளிரிக்கா', காத்தடிக்குது மற்றும் சூரரை போற்று படத்தில் 'நாலு நிமிஷம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார்.

புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் ஜேசன் சஞ்சய்!
[Friday 2026-10-23 07:00]

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது. தனது 69வது படத்துடன் நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதில் ஜெயித்து இப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.


கார் வாங்கியது ஒரு குத்தமா? - விமர்சனங்களுக்கு மமிதா பைஜு பதிலடி!
[Friday 2026-10-23 07:00]

தமிழ், மலையாள என இரண்டு மொழி ரசிகர்களும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மமிதா பைஜு. பிரேமலு, சூப்பர் சரண்யா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் சமீபத்தில் நிவின் பாலி ஜோடியாக பெத்லஹேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்தார். இப்படம் மலையாளத்தில் செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.


சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் கதை இதுதானா?
[Thursday 2026-10-22 16:00]

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மலையாளத்தில் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஆவேசம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.


'ஜெயிலர் 2-வில் முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது' - ஜாபர்!
[Thursday 2026-10-22 16:00]

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு, இந்நிலையை ஜெயிலர் 2 தற்போது வரை ரூ 580 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.


'திருமணம் செய்ய 100 முறை கெஞ்சினார்' - விஜய் பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
[Thursday 2026-10-22 07:00]

டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்துகொண்டனர்.


ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
[Thursday 2026-10-22 07:00]

ஜெயிலர் 2, நடிகர் ரஜினி நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் மாஸாக வெளியாகி இருந்தது. ரஜினி படம் என்றால் சும்மாவா, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரையரங்கில் ஆஜர் ஆனது, முதல் நாள் முதல் காட்சியே பல பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார்கள். படத்தின் கதை, நெல்சன் இயக்கம், அனிருத் இசை என ஒட்டுமொத்தமாக படத்திற்கு கைகொடுக்க பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வருகிறது.


எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்! Top News
[Wednesday 2026-10-21 16:00]

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து இயக்கி, நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசப்பட்டது. அப்படத்தை தொடர்ந்து கடந்த வருடம் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது, ஆனால் இந்த புதிய படத்தை சுந்தர்.சி அவர்கள் இயக்க நயன்தாரா, ரெஜினா என பலர் நடிக்க உருவாவதாக அறிவிக்கப்பட்டது.


முன்பதிவிலேயே பல கோடி வசூலித்த ராமாயணா திரைப்படம்!
[Wednesday 2026-10-21 16:00]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள திரைப்படம் ராமாயணா. 2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இதேபோல் ராவணன் வேடத்தில் யஷும், லட்சுமணனாக ரவி துபேயும், ஹனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.


வெளிநாட்டில் திடீரென நிறுத்தப்பட்ட ரஜினியின் ஜெயிலர் 2 காட்சிகள்!
[Wednesday 2026-10-21 16:00]

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கும். அப்படி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியானது நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம். முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயிலர் 2 படத்திற்கு பட்டய கிளப்பும் விமர்சனங்கள் வந்துள்ளன.


அனிருத் - காவ்யா திருமணம்: நெருங்கிய உறவினர்கள் ஆகும் ரஜினி - மு.க.ஸ்டாலின்!
[Wednesday 2026-10-21 07:00]

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி நிறுவனத்தின் வாரிசு காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. கிரீஸ் நாட்டில் திருமணம், அதை தொடர்ந்து சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. அதற்காக முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களை சென்று கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன்.


அரசியலில் நுழைவதற்கு தனுஷின் அடுத்த ஸ்டெப்!
[Wednesday 2026-10-21 07:00]

நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மேலும் பல நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனுஷ், விஷால் தொடங்கி பல முக்கிய நடிகர்களின் பெயர்களும் இதில் அடங்கும். நடிகர் தனுஷ் அவருடைய ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக பெயர் மாற்றி அரசியல் என்ட்ரிக்கான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்.


வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-10-20 17:00]

வட இந்தியாவில் ஜெயிலர் 2 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


ரணபாலி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-10-20 17:00]

ரணபாலி திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், சமீபத்தில் வெளிவந்த ரணபாலி திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.


பல கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ள நடிகர் வடிவேலு!
[Tuesday 2026-10-20 17:00]

நடிகர் வடிவேலு கட்டியுள்ள புதிய வீட்டின் மதிப்பு மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த திறமையான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.


வசூலை குவிக்கும் ஜெயிலர் 2!
[Tuesday 2026-10-20 08:00]

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் தற்போது ஜெயிலர் 2 படத்தை கொண்டாடி வருகிறார்கள். நெல்சன் இயக்கத்தில் இந்த படம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் நல்ல வசூலும் வந்து கொண்டிருக்கிறது.


இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ!
[Tuesday 2026-10-20 08:00]

ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் உலா வருகிறது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 உலகளவில் அமோக வரவேற்பை பெற்று இதுவரை ரூ. 425 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரூ. 750 கோடிக்கும் மேல் மொத்தமாக வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.


திங்கட்கிழமை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலித்ததா ஜெயிலர் 2?
[Monday 2026-10-19 15:00]

ஜெயிலர் 2 கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகிவிட்டது. கடந்த அக்டோபர் 15ம் தேதி ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இப்படம் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை எடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் நெல்சன் திலீப்குமார்.


தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இலங்கையில் இருந்து உலகளவில் வெளியிடப்பட்ட இரங்கல் பாடல்!
[Monday 2026-10-19 15:00]

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவைத் தொடர்ந்து, கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் பாடலொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். “நல்லவருக்கு நல்லவர… இனி நாம் பார்க்க முடியாது…” என்ற உருக்கமான வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடல், தேவாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரத்தையும், தமிழ் இசையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பின் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல்
[Monday 2026-10-19 15:00]

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று என்பதையும் தெரிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் டைகர் ஷெராப். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜுஹு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தனது காரில் கிளம்பியபோது, திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு!
[Monday 2026-10-19 07:00]

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.// இந்த தாக்குதலில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தோஷ் மற்றும் அங்கிருந்த மற்றொரு நபர் பலத்த காயமடைந்தனர்.


வட அமெரிக்காவில் ஜெயிலர் 2 இதுவரை செய்துள்ள வசூல்!
[Monday 2026-10-19 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வட அமெரிக்காவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவை தாண்டி இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. நெல்சன் - ரஜினி கூட்டணியில் உருவான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி கொண்டாடி வருகிறார்கள்.


எலிமினேட் செய்யப்பட்ட சாந்தினி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்!
[Sunday 2026-10-18 07:00]

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு விறுவிறுப்பின் உச்சமாக பிக்பாஸ் 10வது சீசன் செல்கிறது. இன்றைய எபிசோடின் முதல் புரொமோவில், விஜய் சேதுபதி டைமண்ட் விளையாட்டு பற்றி பேசியிருந்தார். அடுத்து வந்த புரொமோவில், நடிகர் விமல் கலந்துகொண்டு போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசியிருந்தார்.


இசையமைப்பாளர் தேவா இறப்பதற்கு முன் நடந்தது என்ன?
[Sunday 2026-10-18 07:00]

தமிழ் சினிமாவில் 80, 90களில் ரசிகர்கள் ரசித்த கலைஞர்கள் பலரின் இறப்பு செய்தி மக்களை மிகவும் வாட்டி வருகிறது. அப்படி தான் இன்று தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனிசை தென்றல் தேவா அவர்கள் இன்று நம்முடன் இல்லை, அவரது இறப்பு செய்தி கேட்டு பிரபலங்களும் மிகுந்த ஷாக்கில் உள்ளனர். செய்தி வெளியானது முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-10-17 17:00]

ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 15-ஆம் தேதி வெளியானது.


முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்!
[Saturday 2026-10-17 17:00]

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாள் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஒரு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் அப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதும் முக்கியம்.


பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்!
[Saturday 2026-10-17 17:00]

பிரபல இசையமைப்பாளர் தேவா(76) காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேலான மொழிகளில் இசையமைத்துள்ளார். குறிப்பாக கானா பாடாலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கானா பாடலைத் தவிர்த்து மெலடி, குத்துப் பாடல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைலிலும் கலக்கினார். இதனால் தேனிசைத் தென்றல் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டு மாட்டுக்கார மன்னார் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர்.


உறுதியான காவ்யா மாறன் - அனிருத் திருமணம்: அழைப்பிதழ் கொடுக்க தொடங்கிய கலாநிதி மாறன்!
[Saturday 2026-10-17 07:00]

சன் டிவி குழுமம் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் நடக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ல் சென்னையில் நடக்கவுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் உறுதியாகி இருக்கிறது.


மூக்குத்தி அம்மன் 2 படத்தை வாங்கிய நிறுவனம்!
[Saturday 2026-10-17 07:00]

வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றாலே போட்டி போட்டுக் கொண்டு பல முக்கிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும். அந்த வரிசையில் இந்த வருடம் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி படமும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.


வெளிநாட்டில் ஜெயிலர் 2 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது?
[Friday 2026-10-16 16:00]

ஜெயிலர் 2 திரைப்படம் வெளிநாடுகளில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க. புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, அந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ளவே அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா