Untitled Document
February 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்!
[Monday 2017-02-20 17:00]

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் கன்சர்வெடிவ் கட்சி வேட்பாளர் பிரான்சியஸ் பிலனுக்கும் மற்றும் வலது சாரி வேட்பாளரான மெரைன் லிபென்னுக்கு எதிராக பாரிசில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரான்சில் வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.இதில் வேட்பாளர்களாக இருக்கும் பிரான்சியஸ் பிலன் மற்றும் மெரின் லிபென் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று கூறி பிரான்சின் பாரிஸ் மற்றும் சில பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதில் போராட்டக்காரர்கள் பலரும் இருவருக்கும் எதிராக குரல் கொடுத்தனர்.


சர்வதேச விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட ஏலியன்ஸ்!
[Monday 2017-02-20 17:00]

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நாசா வெளியிட்டிருந்த வீடியோவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழும் போது நாசா திடீரென வீடியோவை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றுகிறது.


மனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும்: - பில்கேட்ஸ்
[Monday 2017-02-20 14:00]

ரோபோ’ எனப்படும் எந்திர மனிதன் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ‘ரோபோ’க்களால் திருடப்படுகிறது. மனிதர்களை வைத்து வேலை வாங்கும் போது அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே நிறுவன உரிமையாளர்கள் ‘ரோபோ’க்களை பயன்படுத்துகின்றன. இதனால் மனிதர்களின் பணிகள் பறிக்கப்படுகின்றன.எனவே, பணியில் அமர்த்தப்படும் ‘ரோபோ’க்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவன அதிபரும், உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.


ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 2 லட்சத்து 43 ஆயிரம் விலைக்கு ஏலம்!
[Monday 2017-02-20 14:00]

அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது.இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை.நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 ஆம் ஆண்டு பெர்லினின் பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


அதிகரிக்கும் சர்வதேச ஆயுத விற்பனை: - எட்டு சதவீதத்தால் அதிகரிப்பு
[Monday 2017-02-20 14:00]

பனிப்போர் காலம் முடிவுற்ற பின்னர் நடைபெற்றிருக்கும் சர்வதேச ஆயுத விற்பனையில், எப்போதும் இல்லாததை விட இப்போது ஆயுத விற்பனை அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை தெரிவிக்கிறது.2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியை, இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது.இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது.


கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: - தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்து
[Monday 2017-02-20 11:00]

சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடல் வழியே உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளையும் உருவாக்கி உள்ளது.இந்த தென்சீனக்கடலில் எங்களுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் கூறி வருகின்றன.சீனாவின் மேலாதிக்க நிலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.அதே நேரத்தில், தென்சீனக்கடல் விவகாரத்தில் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாகக்கூறி, அந்த நாட்டுக்கு கடந்த 15-ந் தேதி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.


வலிமையின் மூலமாக அமைதியை பின்தொடர்வோம்: - டிரம்ப்
[Monday 2017-02-20 07:00]

புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் போன்ற பிரமாண்ட கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஒரு மாத காலத்தில் தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நியாயப்படுத்தி தனக்கே உரித்தான பாணியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் குட்டி டிரம்ப் மீம்கள்!
[Monday 2017-02-20 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அவரே அளித்த பதில் அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.தற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர். அவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும்பாலான படங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.


விளையாட்டு பயிலும் மாணவியிடம் பாலியல் உறவு கொண்ட இளம் ஆசிரியை: - நேர்ந்த விபரீதம்
[Monday 2017-02-20 07:00]

அமெரிக்காவில் தன்னிடம் விளையாட்டு பயிலும் மாணவியிடம் பாலியல் உறவு வைத்து கொண்ட ஆசிரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் Alabama மாநிலத்தை சேர்ந்தவர் Willyncia Joy Harper (22) இவர் கைப்பந்து கற்று தரும் விளையாட்டு ஆசிரியையாக அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவர் படித்து வருகிறார். அந்த மாணவி Willynciaவிடம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.Willyncia அடிக்கடி அந்த மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம்.


தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்: - நடந்தது என்ன?
[Monday 2017-02-20 07:00]

கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. சந்தேகம் நேர்ந்ததும், ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்!
[Sunday 2017-02-19 18:00]

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. எனவே, அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இருந்தும் அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கியது. இருந்தும் அவர் உயிர் பிழைத்தார். இது ஒரு அதிசய நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான் உயிர் பிழைப்பேன் என கருதவில்லை.


விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை!
[Sunday 2017-02-19 18:00]

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப்பட்டுள்ளன.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டார். தற்போது அது சிறந்த முறையில் விளைந்துள்ளது.


பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக பீரோவில் மறைத்து வைத்திருந்த நபர்!
[Sunday 2017-02-19 18:00]

பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரி பீரோவில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போய் விட்டார். அவர் வீட்டார் பொலிசிடம் புகார் அளித்தும் Victoria பற்றிய விவரங்கள் தெரியாமலே இருந்து வந்தது.இந்நிலையில் போன மாதம் ஒரு வீட்டில் பயங்கர துர்நாற்றம் வாடை வருவதாகவும் உடனே வருமாறும் பொலிசாருக்கு தகவல் வந்தது.


பொதுவெளியில் மெலேனியாவை அசிங்கப்படுத்திய டொனால்டு டிரம்ப்!
[Sunday 2017-02-19 15:00]

விமானத்தில் இறங்கிய டொனால்டு டிரம்ப் மனைவி மெலேனியாவுக்கு காத்திருக்காமல் தனியே காரில் ஏறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் Florida மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தற்போது தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.அவருடன் அவர் மனைவி மெலேனியாவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று இருவரும் விமானத்தின் படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மெலோனியாவுக்கு காத்திருக்காமல் டிரம்ப் வேகமாக படியிலிருந்து இறங்கி அங்கு நின்றிந்த காரில் ஏறி கொண்டார்.பின்னால் வந்த மெலேனியா அதன் பின்னர் காரில் ஏறினார்.


பாரீஸ் நகரில் பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
[Sunday 2017-02-19 15:00]

இனவெறி தாக்குதல் நடத்தும் பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற மிக பெரிய போராட்டத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இந்த மாத தொடக்கத்தில் Theo (22) என்னும் கருப்பினத்தை சேர்ந்த இளைஞன் பொலிசாரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நபர், தற்போது Theo மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட பொலிசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது


ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு பிரித்தானியாவில் நிரத்திர வதிவிட உத்தவாதம் மறுப்பு!
[Sunday 2017-02-19 11:00]

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வதிவிடம் கிடைப்பது தொடர்பான உத்தரவாதம் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தாரிடம் மருத்துவ காப்பீடு இல்லை என்பதை காரணம் காட்டியே குறித்த நிரந்தர வதிவித உத்தரவாதம் மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நிரந்திர வதிவிட உத்தவாதம் மறுக்கப்பட்ட மற்றுமொரு ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஒருவர் கருத்து தெரிவித்த போது, அவர் தனது 13 ஆவது வயதில் இருந்து பிரித்தானியாவில் வசித்து வந்த போதிலும் நிரந்த வதிவிடம் குறித்த உத்தரவாதம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உரையாற்ற தலாய் லாமாவுக்கு அழைப்பு: - சீன மாணவர்கள் எதிர்ப்பு
[Sunday 2017-02-19 09:00]

அமெரிக்க பல்கலை ஒன்றில் பேச திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு சீன மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தன் கட்டுப்பாட்டில் உள்ள நாடு திபெத் என்று சீனா கூறி வருகிறது. திபெத்தைச் சேர்ந்த புத்தமத தலைவர் தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் அடைந்து வசித்து வருகிறார். தர்மசாலாவில் தங்கியுள்ள இவருக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளது. பல்கலையில் நடைபெற உள்ள ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் உலக பொறுப்பும் மனிதகுல சேவையும் என்ற தலைப்பில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள சீன மாணவர் அமைப்புகள் தலாய் லாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாராட்டிய டிரம்ப்: - அப்படி என்ன செய்தார்?
[Sunday 2017-02-19 08:00]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலி சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலி அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.அவரை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக நியமித்துள்ளார். அமெரிக்க சரித்திரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கேபினட் மந்திரி அந்தஸ்தில் பதவி பெற்றிருப்பது இதுவே முதல் முறை, இது ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.இந்த நிலையில் தெற்கு கரோலினாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரம்ப் நிக்கி ஹாலியை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.


இரண்டு ஆண்டுகளாக பனிப்பாறைகளில் சிக்கிய சரக்கு கப்பல்: - போராடும் மீட்பு குழு
[Sunday 2017-02-19 08:00]

ரஷ்யா அருகே 2 ஆண்டுகளாக பனிப்பாறைகளில் சிக்கியுள்ள கம்போடியா சரக்கு கப்பலை மீட்க பெருந்திரளான மீட்பு குழு ஒன்று களமிறங்கியுள்ளது.ரஷ்யா அருகே Amur Bay பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பனியால் சூழப்பட்டு சிக்கியுள்ள கம்போடியா நாட்டு சரக்கு கப்பலை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழு ஒன்று அதிரடியாக களமிறங்கியுள்ளது.கப்பலின் பாதி பாகம் கடலுக்குள் மூழ்கிய நிலையில் காணப்படும் அந்த கப்பலின் உள்ளே சூழ்ந்திருந்த கடல் வெள்ளத்தை மொத்தமாக வெளியேற்றும் நடவடிக்கையில் முதற் கட்டமாக அவர்கள களமிறங்கியுள்ளனர்.குறித்த கப்பலானது உறைபனியால் சிக்குண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கொள்ளையர் கப்பலின் பாகங்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், நெருப்பிட்டு சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.


மனைவியை ஏன் பார்க்கிறாய்? - பொதுஇடத்தில் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிய கணவர்
[Sunday 2017-02-19 08:00]

மெக்சிகோவில் கணவர் ஒருவர் தன் மனைவியை ஏன் பார்க்கிறாய் என்று கூறி, அருகில் இருந்த நபரை அந்த இடத்திலே சுட்டுத்தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் மர்ப நபர் ஒருவர், திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன் அருகில் பேசிக்கொண்டிருந்த நபரை சுட்டுத்தள்ளிவிட்டு சாதரணமாக நடந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ அந்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இச்சம்பவம் மெக்சிகோவின் Chimalhuacán பகுதியில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் காபி நிறத்தில் டீ-சர்ட் அணிந்த நபருக்கும், அவர் அருகே இருந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


அமெரிக்க மக்களே ஊடகங்கள் தான் உங்கள் எதிரி: - டிரம்ப்பின் புதிய அதிரடி
[Sunday 2017-02-19 08:00]

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் ஊடகங்கள் தனக்கு மட்டும் எதிரி இல்லை என்றும் உங்களுக்கும் அவர்கள் தான் எதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.ஊடகங்கள் பொய் தகவல்களை தருவதாக ஜனாதிபதி டிரம்ப் ஊடகங்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் செய்தியாளர்கள் அனைவரும் அவரது செய்தியை சேகரிப்பதைப் புறகணித்து வெளியேறினர்.ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ள டிரம்ப், ஊடகங்கள் தனக்கு மட்டும் எதிரியல்ல என்றும், அவை அமெரிக்க மக்களுக்கே எதிரி என டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே ஊடகங்களைப் பகைத்துக் கொள்ளும் டிரம்ப் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கருத்துத் தெரிவித்துள்ளார்.


கழிவறையில் சிறைக்கைதிகளின் வெட்ககேடான செயல்: - பிரித்தானிய சிறையில் அரங்கேறிய கொடூரம்
[Sunday 2017-02-19 08:00]

பிரித்தானியாவில் ஆண்கள் சிறையில் இரு சிறைக்கைதிகள் ஒருவரை ஒருவர் மல்யுத்த வீரர்கள் போல் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் வெர்சஷ்டர் பகுதியின் டார்டிபிக்கி கிராமத்தில் HMP ஹெல்வெல் என்ற ஆண்கள் சிறைச்சாலை உள்ளது.இங்கு இரண்டு சிறைக்கைதிகள் அங்குள்ள கழிவறையில் மல்யுத்த வீரர்கள் போன்று ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். அதில் குறித்த நபர் கையில் துணி சுற்றிகொண்டு மற்றொரு நபரை குத்துவது மற்றும் தூக்கி அடிப்பது போன்று அந்த சம்பவம் நடந்துள்ளது.இதைக் கண்ட அங்கிருந்த சக கைதிகள் தடுக்கவில்லை என்றும் அவர்கள் ரசித்து உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குறித்த நபர்கள் சண்டை போட்டதை, அங்கிருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார்.


அமெரிக்காவில் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் வேறு நபரிடம் முகம் தானம் பெற்ற இளைஞர்!
[Saturday 2017-02-18 17:00]

அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது.


கடலுக்கு அடியில் ஷிலாண்டியா என்ற புதிய கண்டம் கண்டுபிடிப்பு!
[Saturday 2017-02-18 17:00]

உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என 6 கண்டங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.இது தென்பசிபிக் கடலுக்கு அடியில் உள்ளது. அதாவது தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டத்துக்கு ‘ஷிலாண்டியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அண்டை கண்டமான ஆஸ்தி ரேலியாவின் மூன்றில் 2 மடங்கு அளவு கொண்டது.அதாவது 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஷிலாண்டியா கண்டம் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கிறது. அதன் அளவு 94 சதவீதம் என கணக் கிடப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்தை போன்று 3 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.


ஜேர்மனியில் இணைய தொடர்புள்ள டிஜிட்டல் பொம்மைகளுக்கு தடை!
[Saturday 2017-02-18 17:00]

ஜேர்மனியில் சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் இணைய தொடர்புள்ள டிஜிட்டல் பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜேர்மனி நாட்டில் My Friend Cayla என்னும் பொம்மை சிறுவர், சிறுமிகளிடம் மிக பிரபலமாகும்.இந்த பொம்மை மூலமாக ஏதாவது கேள்வி கேட்டால் அது இணைய உதவியுடன் ஆப்ஸ் உடன் இணைத்து கொண்டு கேள்விக்கான பதிலை சொல்லும்.


ஊடகங்களை போலி என கூறிய டிரம்ப்: - விமர்சிக்கும் மக்கள்
[Saturday 2017-02-18 16:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தற்போது ஊடகங்களை போலி ஊடகங்கள் என கடுமையாக சாடியுள்ளார்.புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற போது அந்த நாட்டு ஊடகங்களும் சரி, வெளிநாட்டு ஊடகங்களும் சரி பராக் ஒபாமாவையே பெரிதுப்படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடி பதிவொன்றினை பகிர்ந்துள்ளார்.பொய் பேசி நிருபரிடம் அசிங்கப்பட்ட டொனால்டு டிரம்ப்!


காஸ் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து:- பிரான்சில் சம்பவம்
[Saturday 2017-02-18 16:00]

பிரான்சின் தென்கிழக்கில் அமைந்துள்ள Vaucluseல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் Vaucluseல் கேஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட தனி கிடங்கு உள்ளது.அந்த கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.அங்கு வெடித்த பிரம்மாண்ட சத்தம் அங்கிருந்து பத்து மைல் தூரம் வரை கேட்டுள்ளது.இதனால் அந்த பகுதியை சுற்றியிருந்த மக்கள் பெரும் பீதிக்கு ஆளானார்கள்.


டொனால்டு டிரம்பின் பலமான தடை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்: - மக்கள் அச்சம்
[Saturday 2017-02-18 16:00]

7 இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு பலமான தடை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடனேயே சிரியா, ஈரான் உட்பட ஏழு இஸ்லாமிய நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்கு நுழைய அதிரடி தடை விதித்தார்.டிரம்பின் இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிகரமான தடை விதித்தது. இதை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் டிரம்ப் இது குறித்து வாஷிங்டனில் அளித்த பேட்டியில், 7 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கும் வகையில் அடுத்த வாரம் புதிய ஆணை பிறப்பிக்கப்படும்.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
AIRCOMPLUS2014-02-10-14
Elankeeran-debt-solution-25-06-2016
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா