Untitled Document
April 24, 2024 [GMT]
"சவால்களுக்கு தயாராகி வருகிறோம்" - ஈரான் எச்சரிக்கைக்கு நெதன்யாகுவின் பதில்!
[Friday 2024-04-12 18:00]

தூதரக தாக்குதல் குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்த நிலையில், இஸ்ரேல் எச்சரிக்கையுடன் இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் துணை தூதரகத்தின் 2 தளபதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்தபோது, இஸ்ரேல் அச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.


9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனியில் உணவுப்பொருட்கள் விலை குறைந்தது!
[Friday 2024-04-12 18:00]

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின், முதன்முறையாக ஜேர்மனியில் பணவீக்கம் குறைந்துள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனியில் உணவுப்பொருட்கள் விலை குறைந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது, உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையில் எதிரொலித்துள்ளது.


கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையை குறைத்த கனடா!
[Friday 2024-04-12 18:00]

கனடா, இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது கடந்த ஆண்டு இந்தியா 41 கனேடிய தூதரக அலுவலர்களை வெளியேற்றியதன் தொடர்ச்சியான நடவடிக்கை என கருதப்படுகிறது.


மேற்கு ஆப்பிரிக்காவில் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படும் குஷ் ரக போதைப்பொருள்!
[Friday 2024-04-12 18:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த குஷ் போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!
[Friday 2024-04-12 06:00]

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று ஜேர்மன் விமான நிறுவனம் லுஃப்தான்சா அறிவித்துள்ளது. ஈரானில் இருந்தும் ஈரானுக்குள்ளும் சனிக்கிழமை வரையில் விமான சேவைகளை முன்னெடுப்பதில்லை என்றே லுஃப்தான்சா அறிவித்துள்ளது.


பிரித்தானியாவில் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் அம்பலமான உண்மை!
[Friday 2024-04-12 06:00]

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தந்தையர் தினத்தில் கார் விபத்தில் சிக்கி தந்தையும் மகளும் மரணமடைந்த விவகாரத்தில், அதில் ஒன்று தற்கொலை என அம்பலமாகியுள்ளது. பிரித்தானியாவில் லிங்கன்ஷயர் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த மிக மோசமான சாலை விபத்தில் சிக்கி 35 வயதான ஆஷ்லே ஹென்றி மற்றும் அவரது 2 வயது மகள் ஒரியா ஆகியோர் மரணமடைந்தனர்.


அமெரிக்க உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை: தயார் நிலையில் இஸ்ரேல்!
[Friday 2024-04-12 06:00]

இஸ்ரேலுக்கு தண்டனை உறுதி என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறை தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் ஈரானின் துணைத் தூதரகம் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது. தொடர்புடைய தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.


காதலியுடன் சேர்ந்து பெற்ற மகள் உடலில் பாதரசத்தை செலுத்திய ஜேர்மானியர்!
[Thursday 2024-04-11 16:00]

மனைவி விட்டு விட்டுச் சென்ற ஆத்திரத்தில், மகள் உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திய ஜேர்மானியர் ஒருவருக்கும் அவரது காதலிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியிலுள்ள Springe என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு 30 வயது நபர், ஒரு வயதே ஆன தனது மகள் உடலில், ஊசி மூலம் பாதரசத்தை ஏற்றியுள்ளார்.


போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லவுள்ள 6000 இந்திய தொழிலாளர்கள்!
[Thursday 2024-04-11 16:00]

ஹமாஸுடனான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 6 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேல் செல்லவுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் (Israel – Hamas War) ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. போரினால் காஸா பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்தனர். தங்குவதற்கு வீடு, உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.


மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்கள்!
[Thursday 2024-04-11 16:00]

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.


கனடாவின் உள்விவகாரங்களில் தலையிட்டதாக சீனா மீது குற்றச்சாட்டு!
[Thursday 2024-04-11 16:00]

இந்தியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, பின்னர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது. தற்போது சீனா மீதும் கனடா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கனடாவின் உளவுத்துறை ஏஜன்சி, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சாட்டியிருந்தது.


போருக்கு தயாராக வேண்டிய நேரம்: கிம் ஜோங் அறிவிப்பு!
[Thursday 2024-04-11 08:00]

வட கொரியாவை சுற்றியுள்ள நிலையற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, முன்னெப்போதையும் விட தற்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். நாட்டின் முதன்மையான ராணுவப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டுள்ள கிம் போர் தொடர்பில் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆயுதங்களை பெருக்குவதில் கிம் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.


இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம் நீதிபதியிடம் ஒப்படைப்பு!
[Thursday 2024-04-11 08:00]

அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் பிரித்தானிய இளவரசர் ஹரி போராடி வருகிறார்.


ஹமாஸ் தலைவருக்கு பேரிடியான சம்பவம்!
[Thursday 2024-04-11 08:00]

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில், பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவும் ஹனியேவின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். ஹனியேவின் மூன்று மகன்கள் பயணித்த கார் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.


பிரித்தானிய பணத்தாள்களில் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம்!
[Wednesday 2024-04-10 18:00]

பிரித்தானியாவில் ஜனநாயக அமைப்பு வேரூன்றியிருந்தாலும், அரச மரபுகள் தொடர்கின்றன. சில முறைகள் இன்னும் தொடர்கின்றன. இதுவரை பிரித்தானிய கரன்சி நோட்டுகளில் (Bank Of England) இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) படத்தின் உருவப்படம் காணாமல் போனது தெரிந்ததே. 1960-முதல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படத்துடன் கரன்சி நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆனால் முதன்முறையாக அந்த நோட்டுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


"ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தலை விரைவுபடுத்தவேண்டும்" - உள்துறை அமைச்சர் விருப்பம்!
[Wednesday 2024-04-10 18:00]

குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் (Nancy Faeser).


சுவிஸில் நீதி கிடைக்காததால் மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாடிய பெண்கள்!
[Wednesday 2024-04-10 18:00]

சுவிஸ் நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காததால், மனித உரிமைகள் ஆணையத்தை நாடிய சுவிட்சர்லாந்தில் வாழும் பெண்கள் நான்கு பேருக்கு ஆதரவாக அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புவி வெப்பமயமாதல், தங்கள் வாழ்க்கைச்சூழல் மற்றும் உடல் நலன் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் சுவிஸ் நீதிமன்றத்தில் நான்கு பெண்கள் வழக்குத் தொடர, அவர்களுக்கு அங்கு தோல்வியே கிடைத்தது.


கனடாவில் பரபரப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மாயம்!
[Wednesday 2024-04-10 18:00]

கனேடிய மாகாணமொன்றில் வாழ்ந்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் மாயமாகியுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கனடாவின் மத்திய ஆல்பர்ட்டாவில் வாழ்ந்துவந்த Winnie (39)என்னும் பெண்ணும் அவரது பிள்ளைகளான Liliane (24), Debra (18), Israel (15), Samuel (14) மற்றும் Gabriel (13) ஆகியோரே மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்கள்.


அவுஸ்திரேலியா, கனடாவை அடுத்து விசா கட்டுப்பாடுகளை அறிவித்த நாடு!
[Wednesday 2024-04-10 06:00]

அவுஸ்திரேலியா, கனடா நாடுகளை அடுத்து நியூசிலாந்தும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக நாட்டில் வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான தேவைகளை அதிகரித்துள்ளது. இதனால் நியூசிலாந்தில் வேலை தேடும் இந்தியர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றே நம்பப்படுகிறது.


இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை: பிரித்தானிய அமைச்சர் உறுதி!
[Wednesday 2024-04-10 06:00]

பிரித்தானிய நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை முன்னெடுப்பதை தடுக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். காஸா மீது கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்கும் உரிமங்களை ரத்து செய்ய பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.


பாடசாலையில் சிறுவனின் கொடுஞ்செயல்: பெற்றோருக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்!
[Wednesday 2024-04-10 06:00]

அமெரிக்காவில் மிச்சிகன் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனின் பெற்றோருக்கு தலா 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் மரணமடைந்தனர். அமெரிக்காவில் முதல் முறையாக, மகன் செய்த குற்றத்திற்கு பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் இந்திய வம்சாவளி நபர் சுட்டுக்கொலை!
[Tuesday 2024-04-09 18:00]

இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எட்மண்டனில் (Edmonton) உள்ள குருநானக் சீக்கிய கோவில் தலைவர் மற்றும் பொறியாளர் பூட்டா சிங் கில். இந்திய வம்சாவளியான இவர், அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள்: ஜேர்மனியில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்!
[Tuesday 2024-04-09 18:00]

ஜேர்மனியில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு ஆதரவாக, சில பெண் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், சிலையின் சில பகுதிகள் மட்டும், அதாவது, அந்த பெண் சிலையின் மார்பகங்கள் மட்டும் பளிச்சென காணப்படுகின்றன. அதற்குக் காரணம், அந்த சிலைகளின் அந்தக் குறிப்பிட்ட இடங்கள் மட்டும் மனிதர்களால் அதிகம் தொடப்பட்டுள்ளன.


பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் கனடியர்கள்!
[Tuesday 2024-04-09 18:00]

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


ரஷ்யாவின் அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!
[Tuesday 2024-04-09 18:00]

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது குறி வைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐ.நா.அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.


பிரான்ஸில் 15 வயது பள்ளி மாணவன் கொலை!
[Tuesday 2024-04-09 06:00]

பிரான்சில் 15 வயது பள்ளி மாணவன் ஷாம்செடின் கொலை வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்சில் 15 வயது பள்ளி மாணவன் ஷாம்செடின்(Shamseddine) டீன் ஏஜ் இளைஞர்கள் கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது பள்ளி மாணவன் ஷாம்செடின்(Shamseddine) கொலை வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கனடாவில் மருத்துவ சாதனங்கள் மீது விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
[Tuesday 2024-04-09 06:00]

கனடாவில் சில வகையான மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கனடா சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை பறித்தது யார்? - நடிகை எலிசபெத் ஹர்லி கொடுத்த விளக்கம்!
[Tuesday 2024-04-09 06:00]

இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை நடிகையான எலிசபெத் ஹர்லி பறித்ததாக பரவி வந்த வதந்தியை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். இளவரசர் ஹாரி தனது சுயசரிதையான "ஸ்பெர்" (Spare) புத்தகத்தில் தனது இளவயது காதல் அனுபவத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில், குளோசெஸ்டர்ஷைர்(Gloucestershire) கிராமப்புறத்தில் ஒரு மூத்த பெண்ணுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு மற்றும் உறவு குறித்து அவர் விவரித்திருந்தார். ஆனால், அந்த பெண்ணின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா