Untitled Document
May 5, 2024 [GMT]
பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேப்டன் டாம் மூர் வீடு விற்பனை!
[Friday 2024-04-26 06:00]

மீன் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான கேப்டன் டாம் மூர் வசித்த வீடு சுமார் £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் நடைபயிற்சி மூலம் நிதி திரட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த கேப்டன் Tom Moore, வசித்த வீடு £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

மீன் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான கேப்டன் டாம் மூர் வசித்த வீடு சுமார் £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் நடைபயிற்சி மூலம் நிதி திரட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த கேப்டன் Tom Moore, வசித்த வீடு £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

  

இங்கிலாந்தின் பெட்ஃபோர்டுஷயர்(Bedfordshire), மார்ஸ்டன் மோரேடைன்(Marston Moretaine) என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த வீடு, கேப்டன் டாம் தனது தோட்டத்தில் 100 சுற்றுக்கள் நடந்து கிட்டத்தட்ட £39 மில்லியன் நிதி திரட்டியதற்கு சாட்சியாக இருந்தது.

தி மிரர் செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஏழு படுக்கையறை கொண்ட வீட்டில், வளாகத்தை சுற்றி மீன்கள் நிறைந்த அகழி அமைந்துள்ளது, இது வீட்டிற்கு தனித்துவமான அழகை சேர்க்கிறது.

மேலும் சுவாரஸ்யமாக, இந்த விற்பனை பட்டியலில் கேப்டன் டாமின் சிலையும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது வீட்டின் சுவர்களில் பொதிந்துள்ள வரலாற்றின் நினைவூட்டலாக இருக்கும்.

இருப்பினும், இந்த விற்பனை சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. கேப்டன் டாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனுமதியின்றி கட்டப்பட்ட ஸ்பா கட்டிடம் முன்னதாக இதே வளாகத்தில் இருந்தது.

கேப்டன் டாமின் பெயரை சுய லாபத்திற்காக குடும்பத்தினர் பயன்படுத்தியதாக எழுந்த கேள்விகளை தொடர்ந்து, 2024 பிப்ரவரியில் அந்த ஸ்பா கட்டிடம் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் கைதான மூன்று இந்தியர்கள்: பிரதமர் ட்ரூடோ வெளியிட்ட தகவல்!
[Sunday 2024-05-05 18:00]

இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுகொல்லப்பட்டார். கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



அமெரிக்காவிடம் உத்தரவாதம் கேட்கும் ஹமாஸ் படைகள்!
[Sunday 2024-05-05 18:00]

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எகிப்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவிடம் ஹமாஸ் அதிகாரிகள் ஒரே ஒரு உத்தரவாதம் அளிக்கக் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையானது எகிப்தின் கெய்ரோவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



பிரித்தானிய உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி!
[Sunday 2024-05-05 18:00]

பிரித்தானியாவில் அண்மையில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



அவுஸ்திரேலியாவில் 16 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுகொன்ற பொலிஸார்!
[Sunday 2024-05-05 18:00]

அவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.



மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் மாயமான இடத்தில் உடல்கள்!
[Sunday 2024-05-05 07:00]

மெக்ஸிகோவில் அவுஸ்திரேலிய, அமெரிக்க சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை தேடும் அதே பகுதியின் பாஜா கலிபோர்னியாவில்(Baja California) அதிகாரிகள் மூன்று உடல்களைக் கண்டெடுத்தனர்.



லண்டன் மேயர் தேர்தல்: 3 வது முறையாக சாதிக் கான் வெற்றி!
[Sunday 2024-05-05 07:00]

லண்டன் மேயர் தேர்தலில் மூன்றாவது முறையாக சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தேசிய பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ்களை விட தொழிற்கட்சி வேட்பாளர்கள் பலத்த ஆளுமைகளை காட்டி வருகின்றனர்.



உக்ரைனின் 3 பகுதிகளில் திடீர் தாக்குதல்: குறிவைத்து அடித்த ரஷ்யா!
[Sunday 2024-05-05 07:00]

உக்ரைனில் ரஷ்ய நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு, வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்ததாக பிராந்திய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.



அமெரிக்காவில் நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி: 380 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Saturday 2024-05-04 17:00]

அமெரிக்காவில் மறுவாழ்வு மையங்களில் முதியோர்களுக்கு அளவுக்கு அதிகமாக இன்சூலின் கொடுத்து தாதியொருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ 5க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.



பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப மற்றொரு நாடு திட்டம்!
[Saturday 2024-05-04 17:00]

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது. சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.



கனடாவில் இரு தமிழர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Saturday 2024-05-04 17:00]

கனடாவில்(Canada) முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்களின் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, சந்தேக நபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.



சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள்!
[Saturday 2024-05-04 17:00]

2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது. அதே சமயம் சுவிட்சர்லாந்தில் இது 50% அதிகரித்து 89 திட்டங்களாக உள்ளது என்று ஆலோசனை நிறுவனம் EY தெரிவித்துள்ளது.



14 கோடி மைல் தூரத்தில் இருந்து லேசர் சிக்னல்: நாசா சொன்ன மகிழ்ச்சியான தகவல்!
[Saturday 2024-05-04 07:00]

நாசா, விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து லேசர் சிக்னலை வெற்றிகரமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது டி.எஸ்.ஓ.சி (Deep Space Optical Communication) என்ற புதிய தொழில்நுட்பத்தின் சாதனை ஆகும். சைக் விண்கலம்) 2023 ஆம் ஆண்டு அக்டோபரில், சைக் 16 என்ற சிறுகோளை ஆய்வு செய்ய நாசா சைக் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.



கனடாவில் சீக்கியர் தலைவர் கொலை வழக்கு: திடீர் திருப்பமாக 3 பேர் கைது!
[Saturday 2024-05-04 07:00]

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளரின் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்பீர் சிங் நிஜ்ஜருடன் தொடர்புடைய கொலை வழக்கில் மூன்று நபர்களை கனடா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பிரித்தானிய சிறுவன் கொலை வழக்கு: பதின்ம வயதினர் குற்றவாளி என தீர்ப்பு!
[Saturday 2024-05-04 07:00]

பிரித்தானியாவில் இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக்(Alfie Lewis) கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



நோர்வேயில் சிறந்த விருதை வென்ற இலங்கையின் முதல் தமிழ் பெண்!
[Friday 2024-05-03 18:00]

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான விருதை வழங்கியிருக்கிறது. “ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது.



கனடாவில் சந்தேக நபரை துரத்திய பொலிசாரால் நான்கு உயிர்கள் பலி!
[Friday 2024-05-03 18:00]

கனடாவில், மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அதனால் ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பலியான சம்பவத்தில், பலியானவர்கள் பேரக்குழந்தையைப் பார்க்க கனடா சென்ற இந்திய தம்பதியர் என்றும், அவர்கள் பார்க்கச் சென்ற அந்தக் குழந்தையும் விபத்தில் பலியாகிவிட்டதாகவும், அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.



பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து!
[Friday 2024-05-03 18:00]

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், 30 ஆண்டுகளில், முதன்முறையாக மோசமான முடிவுகளை சந்தித்துள்ளது பிரதமர் ரிஷி சார்ந்த, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி. 1995க்குப் பிறகு கன்சர்வேட்டி கட்சி இப்படி ஒரு தோல்வியை இப்போதுதான் சந்திக்கிறது. தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறிவந்த நிலையிலும், ரிஷியை பதவிலியிருந்து அகற்ற அக்கட்சியினர் மிகவும் தயக்கம் காட்டிவந்தனர், வருகின்றனர்.



கனடாவில் ஏதிலி அந்தஸ்து கோருவோரின் கவனத்திற்கு...!
[Friday 2024-05-03 18:00]

கனடாவில் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கனடடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது.



டான்பாஸில் தாக்குதல் தீவிரம்: அடுத்த கிராமத்தை பிடித்த ரஷ்யா!
[Friday 2024-05-03 06:00]

ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் இன்னொரு கிராமத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரைனில் உள்ள பேர்டிச்சி(Berdychi) கிராமத்தை தனது படைகள் கைப்பற்றியதாக வியாழக்கிழமை அறிவித்தது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யா சமீபத்தில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளதன் தொடர்ச்சியாக இது இருக்கிறது.



உடை விதிமீறல்: சவுதி பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டு சிறை!
[Friday 2024-05-03 06:00]

சவுதி அரேபியாவின் மனஹெல் அல்-ஓடாய்பி என்ற பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் 29 வயதான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும், செயற்பாட்டாளருமான மனஹெல் அல்-ஓடாய்பி(Al-Otaibi), பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது மற்றும் அதிகாரிகளால் "மோசமானது" என்று கருதப்படும் வகையில் உடை அணிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா