Untitled Document
September 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இணைய தளத்தில் வைரலாகும் பூனம் பாண்டேயின் படம்!
[Sunday 2017-09-24 16:00]

இணைய தளங்களில் கவர்ச்சி ஸ்டில்களை ஹீரோயின்கள் வெளியிடுவது தினசரி நடக்கிறது. தற்போது சற்று முன்னேறிச் சென்று தனி ஆப் தொடங்கி இருக்கிறார் நடிகை பூனம் பாண்டே. இதை பதிவிறக்கம் செய்துகொண்டால் தனது பிரத்யேக கவர்ச்சி போஸ்களை பார்க்கலாம் என்று தனது ரசிகர்களை உசுப்பி கல்லா கட்டத் தொடங்கியிருக்கிறார். இந்தியா ஜெயித்தால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சில வருடங்களுக்கு முன் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த பூனம். அறிவித்தபடி செய்யவில்லை.


பிரபல இயக்குனரை கைது செய்ய கோர்ட் உத்தரவு!
[Sunday 2017-09-24 16:00]

சூர்யா நடித்த ரத்த சரித்திரம் மற்றும் ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களை இயக்கியிருப்பவர் ராம் கோபால் வர்மா. யாரும் தொட தயங்கும் கதைகளை கையாள்வதுடன், ரஜினி முதல் பல்வேறு நடிகர், நடிகைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது இவருக்கு வாடிக்கை. தெலுங்கில் வங்கவீட்டி ராதாகிருஷ்ணா என்ற அரசியல்வாதியின் கதையை வங்கவீட்டி பெயரில் திரைப்படமாக்கி உள்ளார் வர்மா. 1988ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது ராதாகிருஷ்ணா கொலை செய்யப்பட்டார்.


பெரியம்மா ஆகிறார் காஜல் அகர்வால்!
[Sunday 2017-09-24 16:00]

நடிகைகள் காஜல் அகர்வால், நிஷா அகர்வால் அக்கா, தங்கைகள். காஜலுக்கு திருமணம் முடிவதற்கு முன்பே நிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. சினிமாவில் ஹீரோயினாக நடித்த அதிர்ஷ்டத்தை சோதித்தார் நிஷா. ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒன்றிரண்டு படங்களுடன் நடிப்பை ஏறக்கட்டிவைத்துவிட்டு தொழில் அதிபர் கரணுடன் காதலில் விழுந்தார். 2013ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது.


மயானத்தில் பணி புரியும் ஊழியராக நடிக்கும் நடிகை!
[Sunday 2017-09-24 16:00]

மயான (சுடுகாடு) ஊழியர் வேடம் என்றால் பிதாமகன் படம்தான் ஞாபகத்துக்கு வரும். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் வந்த அரிச்சந்திரா படத்திலும் சிவாஜி மயான ஊழியர் வேடம் ஏற்றிருப்பார். தற்போது நடிகை ஒருவர் மயான ஊழியராக நடிக்கும் கதை ‘ஆறடி’ என்ற பெயரில் உருவாகிறது. இதுபற்றி பட இயக்குனர் ஜே.சந்தோஷ்குமார் கூறும்போது,‘இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறையிலும் சாதனை படைக்கிறார்கள். அவர்கள் பார்த்திராத வேலை மயான ஊழியர் வேலைதான்.


தமிழ் ஹீரோயினுக்கு கிராம பெண்கள் விருந்து!
[Sunday 2017-09-24 16:00]

தமிழ் பெண்கள் நடிக்க வராததால் மலையாள, இந்தி நடிகைகள் கோலிவுட்டில் கோடிகளை அள்ளிக்கொண்டிருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பெண்களே ஹீரோயினாகி இருக்கின்றனர். அந்த வரிசையில் ‘பள்ளி பருவத்திலே’ படத்தில் தஞ்சையை சேர்ந்த ெவண்பா ஹீரோயினாக நடிக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் ஆம்லாபட்டு கிராமத்தில் இலுப்பை தோப்பு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.


முத்தக் காட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த பியா!
[Saturday 2017-09-23 17:00]

அபியும் அனுவும் படத்தில், டோவினோ தாமஸ் ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். படத்தில் ஒரு முத்தக் காட்சி இருக்கிறது. இதுபற்றி இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி கூறுகையில், ‘திரையில் அழகான, ஆழமான காதல் கதையைப் பார்த்து நாளாகிவிட்டது. இதையறிந்த நானும், என் குழுவும் இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம்.


தனது வாழ்க்கையைப் படமாக்குவதா? - ஐஸ்வர்யாவுக்கு நோ சொன்ன மாரியப்பன்
[Saturday 2017-09-23 17:00]

எஸ்.எம்.செந்தில் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், திரு.வி.க பூங்கா. இதன் டீசர் வெளியீட்டு விழாவில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் படம் எடுப்பதாக கூறியிருந்தார். அது குறித்து மாரியப்பனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மாரியப்பன், ‘என் வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து பேசினார்கள்.


100 பெர்சென்ட் காதல் படத்திலிருந்து விலகிய லாவண்யா மீது இயக்குனர் புகார்!
[Saturday 2017-09-23 17:00]

100 பெர்சென்ட் காதல் படத்திலிருந்து திடீரென விலகியதால் லாவண்யா திரிபாதி மீது பிலிம் சேம்பரில் இயக்குனர் புகார் அளித்துள்ளார். தெலுங்கில் வெளியான 100 பெர்சென்ட் லவ் படம், தமிழில் 100 பெர்சென்ட் காதல் என்ற பெயரில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க லாவண்யா திரிபாதி ஒப்பந்தமானார்.


ஏன் நடிகைகள் பட விழாக்களை தவிர்க்கிறார்கள்?
[Saturday 2017-09-23 16:00]

படத்தில் நடிப்பதற்காகதான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆடியோ ரிலீஸ், பிரெஸ்மீட் மற்றும் புரமோஷன் நிகழ்வுகளும் சமீபகாலமாக தயாரிப்பாளர்களால் பிசினஸ் செய்யப்பட்டு வருமானத்துக்குரிய நிகழ்வுகளாக மாறிவருகின்றன. அப்படியிருக்கையில் அதிலெல்லாம் ஓசியில் பங்கேற்பதா என்று நடிகைகள் போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
[Saturday 2017-09-23 16:00]

நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரே நாளில் இருபது பாடல்களெல்லாம் பாடியதுண்டு. அவருடைய முதல் பாடல் என்று ‘அடிமைப்பெண்’ (1969) படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்பார்கள்.


செக்ஸ் விவகாரத்தில் நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா? - கங்கனா ரணாவத்
[Friday 2017-09-22 19:00]

செக்ஸ் விவகாரத்தில் நடிகர்களுக்கு ஒரு நியாயம், நடிகைகளுக்கு வேறு நியாயமா? என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தி நடிகை கங்கனா ரணாவத் திரை உலகில் உள்ள ஆணாதிக்கம் பற்றி இப்படி கூறுகிறார்....


மெர்சல் படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை!
[Friday 2017-09-22 19:00]

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தை விளம்பர செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


தேவைப்படும் போது களம் இறங்குவேன்: - ரஜினிகாந்த் அறிவிப்பு
[Friday 2017-09-22 17:00]

தூய்மை இந்தியா திட்டத்தில் பிரதமர் மோடிக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களை சந்தித்தார்.அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார். ‘போருக்கு தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார்.


தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!
[Friday 2017-09-22 17:00]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகி சக்கை போடுபோட்டு வரும் நிலையில், தமிழ் ராக்கர்ஸால் `மெர்சல்' படக்குழுவுக்கு சோதனை ஒன்று கிளம்பியிருக்கிறது.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்தது.


தன்னைத்தானே புகைப்படம் எடுத்து ரசித்த சமந்தா!
[Thursday 2017-09-21 18:00]

காஞ்சிபுரம் போனோமா பட்டு சேலை வாங்கினோமா என்றுதான் இத்தனை காலம் திருமண வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. அந்த பாணி கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக் கொண்டிருக்கிறது. சாஸ்திரத்துக்கு ஒன்றோ இரண்டோ பட்டு சேலை வாங்கி விட்டு புதுப் புது டிசைன்களில் திருமண உடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இதற்காக ஸ்பெஷலிஸ்ட்கள் உள்ளனர். சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது.


நானே டப்பிங் பேசுகிறேன்: - அசத்திய சாய் பல்லவி
[Thursday 2017-09-21 16:00]

தமிழுக்கு வருவாரா, மாட்டாரா என்று, ரசிகர்களை ஏங்க வைத்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் பிரேமம், தெலுங்கில் ஃபிதா படங்கள் ஹிட்டான பிறகு அவரது மார்க்கெட் எகிறிவிட்டது. தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர், நானே டப்பிங் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.


போதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான ஜெய்!
[Thursday 2017-09-21 16:00]

நடிகர் ஜெய் ஓட்டிய கார் சென்னை அடையாறு பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த ஜெய் மற்றும் பிரேம்ஜி இருவரும் காயமின்றி தப்பினர். கார் சேதமடைந்துள்ளது. ஜெய் நிதானம் இன்றி இருந்ததால் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ரூ500 அபராதம் வசூலித்த பின் ஜெய்யை போலீசார் விடுவித்தனர்.


சன்னி லியோன் பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு!
[Thursday 2017-09-21 16:00]

திரைப்படங்களில் ஏதாவது ஒரு வசனமோ, பாடல் வரியோ மத உணர்வுகளை பாதிப்பதாக இருந்தால் உடனே அதற்கு எதிர்ப்பு குரல் எழுகிறது. இதனால் இயக்குனர்கள் சற்று எச்சரிக்கையாகவே வசனம், பாடல்களை கையாள்கின்றனர். சில ஹீரோயின்கள் விளம்பர படங்களில் நடிக்கும்போது இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதுபோல் தெரியவில்லை.


மலைவாழ் மக்களின் வலியை பேசுகிற படம்!
[Thursday 2017-09-21 16:00]

புதுமுக இயக்குனர் பிரதாப் முரளி இயக்கி உள்ள படம் திட்டிவாசல். மாஸ்டர் மகேந்திரன், கன்னட நடிகர் சின்னி வினோத், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா ஆகியோருடன் நாசர் நடித்துள்ளார். ‘திட்டிவாசல் என்றால் பெரிய சிறை கதவின் நடுவே உள்ள சிறிய கதவை குறிக்கும். அந்த கதவுக்குள் சென்ற மலைவாழ் மக்களின் வலியை பேசுகிற படம்.


ஓடவும் முடியலை… ஒளியவும் முடியலை…: - ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் தல அஜித்.!
[Wednesday 2017-09-20 19:00]

வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் வசிக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்ஸெப்ட். தமிழ்நாட்டு மக்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்ததாலோ என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைப்போலவே வெளியுலக தொடர்புகளே இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஒருவரைப்பற்றிச் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.


ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்த லட்சுமிராயின் வீடியோ!
[Wednesday 2017-09-20 17:00]

லட்சுமிராய் நடித்து ஜுலி 2 படத்தின் ட்ரெய்லரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிராய். இதை தொடர்ந்து வாமணன், முத்திரை, மங்காத்தா, காஞ்சனா என பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முதன் முறையாக தீபக் ஷிவ்தாசனி தயாரித்து, இயக்கியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2 நடித்துள்ளார்.


குருஷேத்ரா படத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்!
[Wednesday 2017-09-20 17:00]

கன்னட திரையுலகில் சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் தர்ஷனின் 50-வது படமாக குருஷேத்ரா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மகாபாரத கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம், கன்னட திரையுலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகி வருகிறதாம். தர்ஷ்ன் இந்த படத்தில் துரியோதனனாக நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன் கர்ணனாக நடிக்கிறார்.


உங்களுடைய மோசமான விமர்சனங்களை நான் அழிக்க மாட்டேன்: - காயத்ரி ரகுராம்
[Wednesday 2017-09-20 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அநாகரீக பேச்சிற்காக சர்ச்சையில் சிக்குபவர் என்றால் அது காயத்ரியாகத் தான் இருக்கும். சக போட்டியாளரான ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார். அடுத்தது பரணி வெளியேற்றப்பட்ட போது பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என்று ஓவியாவிடம் வரிந்து கட்டி சண்டைபோட்டார்.


விஜய் நடித்த மெர்சல் பட இடைவேளையில் டிக் டிக் டிக்!
[Wednesday 2017-09-20 17:00]

மிருதன்' படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இவர் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து டிக் டிக் டிக் என்ற விண்வெளி ஆராய்ச்சி படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் முதல் விண்வெளிப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அசிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.


பார்ட்டியை பிஜி தீவில் முடித்த வெங்கட் பிரபு!
[Wednesday 2017-09-20 17:00]

சென்னை 28' 2-ம் பாகத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிஜி தீவுகளில் நிறைவடைந்துள்ளது. 57 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்த படத்தில் ஜெய், சிவா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவு பெற்றதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது படக்குழு.


சிங்கத்தை கொஞ்சிய நடிகை: - கலாய்த்த ரசிகர்கள்
[Wednesday 2017-09-20 07:00]

கரப்பான்பூச்சியை கண்டாலே பல ஹீரோயின்கள் அம்மா இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொள்வதுண்டு. கரப்பான் பூச்சிக்கே இப்படியென்றால் சிங்கத்தின் குகைக்குள் செல்ல வேண்டுமென்றால் தலை சுற்றி விழுந்துவிடுவார்கள். தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் நடித்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் தென் ஆப்ரிக்கா சென்றார். அங்கே மிருகங்களை அவை வாழும் காட்டுக்குள்ளேயே சென்று நேரில் பார்க்கும் சுற்றுலா பிரபலம். அப்படித்தான் ப்ரீத்தியும் மிருகங்களை பார்க்க காட்டுக்குள் சுற்றுலா சென்றார்.


யார் டோனி? - லட்சுமிராய் பதிலால் பரபரப்பு
[Tuesday 2017-09-19 15:00]

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் டோனி உலக அளவில் பிரபலமாகி பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமானது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் டோனி. அப்போது அந்த அணியின் தூதராக இருந்தார் நடிகை லட்சுமி ராய். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சில இடங்களில் அவர்களை ஜோடியாக பார்க்க முடிந்தது. டோனி, லட்சுமிராய் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. திடீரென்று அவர்கள் பிரிந்தனர். அதற்கான காரணம் தெரியவில்லை.


எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள்: - ரியா சென்னை கண்டித்த நடிகர்
[Tuesday 2017-09-19 15:00]

‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் நடிகரிடம் கண்டிப்பை பெற்றார்.சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டவர் இந்தி நடிகை ரியாசென்.‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ என்ற வெப் தொடரில் நிஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கிறார்.

Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா