Untitled Document
March 28, 2024 [GMT]
திருப்பி அடிக்கும் உக்ரைன்: கதிகலங்கும் ரஷ்யா!
[Wednesday 2024-03-06 18:00]

ரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.


ரொரன்றோவில் ரயில் மோதி சிறுவர்கள் இருவர் பலி!
[Wednesday 2024-03-06 18:00]

கனேடிய நகரமான ரொரன்றோவில், ரயில் மோதி பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. ரொரன்றோவில், திங்கட்கிழமை இரவு 10.05 மணிக்கு, பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் மீது ரயில் மோதியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்.


இராணுவ பட்ஜெட்டை உயர்த்திய சீனா!
[Wednesday 2024-03-06 18:00]

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்து வரும் நாடு சீனா. இந்த நிலையில், சீனாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கு ஆயுதம்: சிக்கலை எதிர்கொள்ளும் கனடா!
[Wednesday 2024-03-06 06:00]

காஸா மீதான தாக்குதல் நீடித்துவரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களை கனடா ஏற்றுமதி செய்துள்ளதாக குறிப்பிட்டு கனேடிய சட்டத்தரணிகள் குழு கனடாவின் உலகளாவிய விவகார அமைச்சின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த ஆயுதங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் பயன்படுத்தப்படலாம் என்றும் வாதிட்டுள்ளனர்.


இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்!
[Wednesday 2024-03-06 06:00]

பிரித்தானியாவில் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் Trooping of the Colour நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டன் பார்வையாளராக கலந்துகொள்வார் என்ற தகவலை ரணுவம் அதன் இணைய பக்கத்தில் இருந்து நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஐரோப்பாவின் டெஸ்லா தொழிற்சாலையை தீக்கிரையாக்கிய குழு!
[Wednesday 2024-03-06 06:00]

பெர்லின் நகரில் டெஸ்லா தொழிற்சாலைக்கு தீ வைத்துள்ள மர்ம அடிப்படைவாத குழு ஒன்று எலோன் மஸ்க் மீது போர் பிரகடனம் செய்துள்ளது. ஜேர்மனியில் Vulkan குழு என பரவலாக அறியப்படும் இந்த அராஜகவாதிகள், டெஸ்லா தொழிற்சாலைக்கு நெருப்பு வைத்துவிட்டு, எந்த டெஸ்லாவும் பாதுகாப்பானது அல்ல என்று அறிவித்துள்ளனர்.


கனடாவில் மத்திய வகுப்பு குடும்பங்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
[Tuesday 2024-03-05 17:00]

கனடாவில் மத்திய வகுப்பு குடும்பங்களுக்கு நலன்களை வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது.


ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்: ஐ.நா குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-05 17:00]

இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது. அதோடு பாலஸ்தீன பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.


அமெரிக்காவில் பயங்கரமாக விமான விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
[Tuesday 2024-03-05 17:00]

அமெரிக்கா - டென்னசி மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகே சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் நெடுஞ்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.


மாகாணம் ஒன்றின் முடிவை மீறி கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் எடுத்துள்ள முடிவு!
[Tuesday 2024-03-05 17:00]

தொடர்ந்து புலம்பெயர்தலுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்த கனேடிய புலம்பெயர்தல் அமைச்சருக்கு, திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. மாகாணமொன்றின் முடிவையும் மீறி, அம்மாகாண முடிவுக்கு எதிராக, புலம்பெயர்தலுக்கு ஆதரவாக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் அவர்! கனேடிய மாகாணமான கியூபெக், தனக்கென விதிகள் வகுத்துக்கொள்வது வழக்கம் என்பதை, பலரும் அறிந்திருக்கலாம்.


வெளிநாடொன்றில் கால்களை நக்கவிட்டு நிதி சேகரிப்பு: காணொளியால் அதிர்ச்சி!
[Monday 2024-03-04 18:00]

அமெரிக்கா பாடசாலை ஒன்றில் போட்டி என்ற பெயரில், மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள் சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில், டீர் கிரீக் என்ற பள்ளி ஒன்று, ஒரு வார கால நிதி திரட்டும் சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


சுவிஸில் எழுந்துள்ள புதிய பிரச்சனை!
[Monday 2024-03-04 18:00]

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுவிஸ் மாகாணங்களில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு விதமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.


கறுப்பின வாக்காளர்களை இலக்குவைக்கும் டிரம்பின் ஆதரவாளர்கள்!
[Monday 2024-03-04 18:00]

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலி வீடியோக்கள் மற்றும் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.


கனடாவில் கடும் குளிரால் புகலிடக்கோரிக்கையாளருக்கு நேர்ந்த நிலை!
[Monday 2024-03-04 18:00]

கனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் திரண்டார்கள். கென்யா நாட்டவரான Delphina Ngigi (46) என்ற பெண், கனடாவில் கால் வைத்து மூன்று நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஹைதி நாட்டில் சிறைக்குள் புகுந்து 4,000 கைதிகளை விடுவித்த ஆயுததாரிகள்!
[Monday 2024-03-04 06:00]

ஹைதி நாட்டில் முக்கிய சிறைச்சாலைக்குள் புகுந்து ஆயுததாரிகள் குழு ஒன்று 4,000 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021ல் ஜனாதிபதி Jovenel Moïse கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களே தற்போது ஆயுத குழு ஒன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பெண்களின் முடிவால் மொத்தமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தென் கொரியா!
[Monday 2024-03-04 06:00]

உலகின் முதல் சுயமாக இழைக்கப்பட்டுள்ள இனப்படுகொலையால் தென் கொரியா மொத்தமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் சரிவடையும் பிறப்பு விகிதம் காரணமாக 2750ல் தென் கொரிய நாட்டில் மக்களே இல்லாமல் போவார்கள் என்றும் கூறப்படுகிறது. 2022 ஐ விட கடந்த ஆண்டு 19,000 குறைவான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இது 7.7 சதவீதம் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் இசையால் நோயாளிகளை கவரும் ஈழத் தமிழ் மருத்துவர்!
[Sunday 2024-03-03 16:00]

கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருகின்றார். ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றார்.


பிரித்தானியாவில் மறைந்திருந்த 2ம் உலகப் போர் கால ரகசிய சுரங்கம்!
[Sunday 2024-03-03 16:00]

பிரித்தானிய பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டாம் உலகப் போர் கால குண்டு தங்குமிடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள கென்ட்(Kent) மாகாணத்தின் ஃபோக்ஸ்டோன்(Folkestone) அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ரெபேக்கா ஹாப்சன்(Rebecca Hobson) என்ற பெண்மணி, தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் இரண்டாம் உலகப் போர் கால குண்டு தங்குமிடம்(World War II-era bomb shelter) ஒன்றை கண்டுபிடித்து அதிசயித்தார்.


கனடாவில் முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோருக்கு அதிர்ச்சி செய்தி!
[Sunday 2024-03-03 16:00]

கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!
[Sunday 2024-03-03 16:00]

பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் இன்று 33வது பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார். பல்வேறு கலவர சம்பவங்களுக்கு இடையே பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை வென்றன.


புற்றுநோயுடன் போராடும் மன்னர் சார்லஸ்: சுற்றுலாவுக்கு புறப்பட தயாராகும் கமிலா!
[Sunday 2024-03-03 06:00]

சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் தங்களின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருக்க, ராணியார் கமிலா சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ராணியார் கமிலாவே மொத்த பணிகளையும் முன்னெடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் 76 வயதான கமிலா விடுமுறைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர்!
[Sunday 2024-03-03 06:00]

தற்போதைய தாய்லாந்து மன்னரின் வாரிசு ஒருவர் வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், நாட்டின் எதிர்கால மன்னராகும் வாய்ப்பை இழக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து மன்னரின் பிரிந்து சென்ற மகனான 42 வயது Vacharaesorn Vivacharawongse என்பவர் அமெரிக்கரான Elisa Garafano என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.


பற்றியெரியும் மத்திய கிழக்கு: செங்கடலில் மூழ்கும் பிரித்தானிய சரக்கு கப்பல்!
[Sunday 2024-03-03 06:00]

ஈரானிய ஆதரவு ஹவுதிகளால் தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் Khor Fakkan பகுதியில் இருந்து பல்கேரியாவின் வர்ணா பகுதிக்கு புறப்பட்டு சென்ற Rubymar சரக்கு கப்பலானது ஏமன் கடற்பகுதியில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.


ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய நபர் பிரைன் மல்ரோனி!
[Saturday 2024-03-02 19:00]

நேற்று முன் தினம் வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவரது இறப்பு என ஈழத்மிழர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.


அமெரிக்காவில் கடும் பனிப்புயல் உருவாகும் அபாயம்!
[Saturday 2024-03-02 19:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் கடும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யோஸ்மைட் தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பூமியை குளிர்விக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
[Saturday 2024-03-02 19:00]

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் அந்நாட்டு தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டல நீராவியைக் குறைப்பதன் மூலம் வெப்பமயமாதல் கிரகத்தை குளிர்விக்க விஞ்ஞானிகள் புதிய முறையை கொண்டு வருகிறார்கள். பூமியின் பசுமை இல்ல விளைவில் நீர் ஆவியாதல் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.


பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவு மக்கள்!
[Saturday 2024-03-02 19:00]

ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார்.


சுவிஸ் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்!
[Saturday 2024-03-02 07:00]

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார். மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில் முதல் தலைமை ஊழியராக (Chef de cabin) M/C EU முன்னேறி சான்றிதழுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா