Untitled Document
April 20, 2024 [GMT]
நிரந்தரக் குடியுரிமை விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தும் கனடா!
[Thursday 2024-04-04 18:00]

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது . கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை: கடும் நெருக்கடியில் பிரித்தானிய பிரதமர்!
[Thursday 2024-04-04 06:00]

பிரித்தானியர்கள் உட்பட 7 தொண்டு நிறுவன ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்துவதற்கான அரசியல் நெருக்கடியை பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளார். மூன்று முக்கிய பிரித்தானிய எதிர்க்கட்சிகள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.


வெறும் 150 ஆசனங்கள்: பேரிழப்பை சந்திக்கவிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி!
[Thursday 2024-04-04 06:00]

இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பேரிழப்பை எதிர்கொள்ளும் என்றே கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


உலகம் எப்போது அழியும்? - பாபா வங்காவின் கணிப்பு!
[Thursday 2024-04-04 06:00]

பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பின்படியே 2024 ல் உலக அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு உட்பட பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ள பாபா வங்கா, 2024 தொடர்பிலும் தமது கணிப்பினை பதிவு செய்துள்ளார்.


பெண்கள் தனியாகப் பயணிக்க சிறந்த நாடு; முதலிடம் யாருக்கு தெரியுமா?
[Wednesday 2024-04-03 18:00]

2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு சிறந்த நாடிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் தற்போது பெண்கள் அனைவரும் தனியாக பயணிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் பாதுகாப்பு கருதி தனியாக பயணிப்பதில் அச்சம் ஏற்படுகிறது.


கருத்தடை சாதனங்களை இலவசமாக்க உள்ள கனடா அரசு!
[Wednesday 2024-04-03 18:00]

கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது, கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.


பிரித்தானியாவில் சுகாதார தலைமையகத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய சார்பு மருத்துவ ஊழியர்கள்!
[Wednesday 2024-04-03 18:00]

லண்டனில் உள்ள NHS இங்கிலாந்து தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரகர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Palantir-க்கு 330 மில்லியன் பவுண்டு ஒப்பந்தத்தை NHS இங்கிலாந்து வழங்கியது.


ரொறன்ரோவில் அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்!
[Wednesday 2024-04-03 18:00]

கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


கட்டண உயர்வு இல்லை: துபாய் பாடசாலைகள் குழு அறிவிப்பு!
[Wednesday 2024-04-03 06:00]

துபாய் கல்வித்துறை கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ள நிலையிலும், புதிய கல்வியாண்டில் கட்டண உயர்வு இருக்காது என்றே துபாய் பாடசாலைகள் குழு அறிவித்துள்ளது. துபாய் கல்வித்துறையான KHDA செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 5.2 சதவிகிதம் வரையில் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருந்தது. 2024 மற்றும் 2025 கல்வியாண்டில் அமுலுக்கு கொண்டுவரவும் அனுமதி அளிக்கப்பட்டது.


கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய பின்னணி!
[Wednesday 2024-04-03 06:00]

லண்டன் மருத்துவமனையில் இருந்து ஆவணங்கள் கசிந்த நிலையிலேயே வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் உடல் நிலை தொடர்பில் சுமார் ஒருவார காலம் பல்வேறு கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், மார்ச் 22ம் திகதி காணொளி ஊடாக தமது புற்றுநோய் பாதிப்பு குறித்து அவர் வெளிப்படையாக அறிவித்தார்.


லண்டனை அடுத்து ஜேர்மனிக்கு கடும் மிரட்டல் விடுக்கும் தென் ஆப்பிரிக்க நாடு!
[Wednesday 2024-04-03 06:00]

அரசியல் மோதல் காரணமாக 20,000 யானைகளை ஜேர்மனிக்கு அனுப்பப்போவதாக போட்ஸ்வானா ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார். பெருமைக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகள் இருக்க வேண்டும் என்று ஜேர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பரிந்துரைத்தது.


ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை!
[Tuesday 2024-04-02 18:00]

ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் ரொறன்ரோவில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.


பின்லாந்தில் பாடசாலை வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்!
[Tuesday 2024-04-02 18:00]

பின்லாந்து நாட்டில் உள்ள வான்டா நகரில் மிகவும் பிரபலமான வீர்டோலா பாடசாலை வளாகத்திற்குள் 12 வயது சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளன.


வெளிநாடொன்றில் வெப்ப காலநிலையால் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!
[Tuesday 2024-04-02 18:00]

பிலிப்பைன்ஸில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரபடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.


கனடா பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: விரைவில் அமுல்!
[Tuesday 2024-04-02 18:00]

கனடாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளது. நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.


"பின்வாங்கும் பிரித்தானியாவுக்காக வெட்கப்படுகிறேன்" - முன்னாள் உள்துறை செயலாளர் ஆவேசம்!
[Tuesday 2024-04-02 06:00]

பிரித்தானியாவில் யூத-விரோதத்தின் எழுச்சி குறித்து வெட்கப்படுவதாக முன்னாள் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த ஆண்டு நவம்பரில் போர்நிறுத்த தினத்தின்போது, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை கையாள்வது தொடர்பாக நடந்த போராட்டத்தை தொடர்ந்து, உள்துறை செயலாளர் பதவில் சுயெல்லா பிரேவர்மேன் நீக்கப்பட்டார்.


உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடம் யாருக்கு தெரியுமா?
[Tuesday 2024-04-02 06:00]

2024யில் மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய உள்ளன. இந்த குழுவானது உலகின் பொருளாதாரத்தில் முன்னேறிய 7 நாடுகளை கொண்டதாகும். இவற்றில் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை WHR (World Happiness Report) கணக்கிட்டுள்ளது.


வெளிநாடொன்றில் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயதான பாதிரியார்!
[Tuesday 2024-04-02 06:00]

63 வயது பாதிரியார் 12 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கானா நாட்டில் மிகவும் பிரபலமான பாதரியாரான Nuumo Borketey Laweh Tsuru XXXIII-வின் பாரம்பரிய திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அது பின்னடைவையும் விமர்சனத்தையும் தூண்டியது.


இளவரசர் ஹரிக்கு சவால் விடும் ட்ரம்ப்!
[Monday 2024-04-01 18:00]

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய இளவரசர் ஹரியை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார். 2020ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசரான ஹரியும் அவரது மனைவியான மேகனும், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்னும் பொறுப்பிலிருந்து விலகி அமெரிக்காவில் குடியமர்ந்தார்கள். அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், ஹரி மேகனுடைய பாதுகாப்புக்கு அமெரிக்க அரசாங்கம் நிதி வழங்காது என்று கூறியிருந்தார்.


ஜேர்மனியில் சட்டப்பூர்வமான கஞ்சா விற்பனை: நன்மைகள், தீமைகள் என்ன?
[Monday 2024-04-01 18:00]

ஜேர்மனியில் கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பதற்கான சமீபத்திய ஒப்புதலால் ஜேர்மனியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் அதிகபட்சமாக 25 கிராம் கஞ்சா வைத்திருப்பதையும், வீட்டில் மூன்று செடிகள் வரை வளர்ப்பதையும் அனுமதிக்கிறது. இது நாட்டின் போதைப்பொருள் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.


மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் கனடிய பொலிஸார்!
[Monday 2024-04-01 18:00]

வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.


பிரான்ஸில் 9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு!
[Monday 2024-04-01 18:00]

பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Alpes-de-haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும் மலையடிவார கிராமத்துக்கு சுற்றுலா சென்ற சிறுவனே காணாமல் போயிருந்தான்.


இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்!
[Monday 2024-04-01 06:00]

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டத்தில் (30.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் வீதிகளில் இறங்கிய போராட்டக்காரர்கள் காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலகுமாறும், பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்: தேர்தல் கருத்துக்கணிப்பு கூறுவதென்ன?
[Monday 2024-04-01 06:00]

பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பில், ஆளுங்கட்சியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரித்தானியாவில் ஈஸ்டர் வார இறுதியில் மர்ம முறையில் இறந்துகிடந்த பெண்!
[Monday 2024-04-01 06:00]

இங்கிலாந்தில் 48 பெண்ணொருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பர்மிங்காமில் உள்ள டைல் கிராஸ் பகுதியில், 48 வயதான பெண்ணொருவர் தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். ஈஸ்டர் வார இறுதியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. அன்றைய தினமே 49 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


கனடாவில் திடீரென அதிகரித்துள்ள நோய்தொற்று!
[Sunday 2024-03-31 17:00]

கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தன.


ஹமாஸ்-இஸ்ரேல் போர்: மயக்க மருந்து இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட 14 வயது சிறுமி!
[Sunday 2024-03-31 17:00]

காசா போர் பாதிப்பில் சிக்கிய 14 வயது சிறுமி, மயக்க மருந்து இல்லாமல் இரு கால்களையும் துண்டித்த கொடுமைக்கு பிறகு சிகாகோவில் சிகிச்சை பெற்று வருகிறார். காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இத்தாலியில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
[Sunday 2024-03-31 17:00]

இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா