Untitled Document
April 29, 2024 [GMT]
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு! - எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்தது Top News
[Saturday 2018-07-14 18:00]

யாழ்ப்பாணத்தில், இன்று காணாமற் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த, காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பத்துக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமல் போனோர் அலுவலகம், ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு மண்டபத்திற்கு வெளியேயும், உள்ளேயும், போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.


ஆவா குழுவினருக்கு தமிழ்ப் படங்களே முன்மாதிரி! - நிலைமை ஒன்றும் மோசமில்லை என்கிறார் அமைச்சர்
[Saturday 2018-07-14 18:00]

தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார.


எல்லையை மீறினால் விக்கி மீது சட்டம் பாயும்! - எச்சரிக்கிறார் அஜித் பெரேரா
[Saturday 2018-07-14 18:00]

இராணுவத்தினர் கோருகின்ற தகவல்களை அரச அதிகாரிகள் தனது அனுமதியின்றி வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, மின்சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


கிளிநொச்சியில் குழந்தை பெற்ற தாய்மார்களின் விபரங்களை திரட்டுவது தேசிய பாதுகாப்புக்காம்!
[Saturday 2018-07-14 18:00]

தேசிய பாதுகாப்புக்காகவே, கிளிநொச்சியில் புதிதாக குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களின் தகவல்களை இராணுவத்தினர் திரட்டி வருவதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


நீர்மூழ்கிகளால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! - பிரதமர் ரணில் எச்சரிக்கை
[Saturday 2018-07-14 18:00]

நீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு கடல் பாதுபாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அலுகோசு பதவியே கோத்தாவுக்குப் பொருத்தம்! - என்கிறார் பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த
[Saturday 2018-07-14 18:00]

சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே பொருத்தமானவர் என்று பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.


இத்தாலிக்குப் புறப்பட்டுச் சென்றார் ஜனாதிபதி!
[Saturday 2018-07-14 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 11.45 மணிக்கு இத்தாலிக்குப் பயணமானார். ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6வது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காகவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன், 20 பிரதிநிதிகளும் பயணித்துள்ளனர் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


போலி நாணயத்தாள்களுடன் மாட்டினார் கடற்படைச் சிப்பாய்!
[Saturday 2018-07-14 18:00]

மதவாச்சி, பூனாவ பகுதியில் மூன்று, போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்த போது, கடை உரிமையாரால் அந்த நாணயத்தாள்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு மதவாச்சி பொலிஸாருக்கு அறிவித்தார்.


இன்று 500 ஆவது நாளாகத் தொடர்ந்த கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்! Top News
[Saturday 2018-07-14 18:00]

இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு மக்கள் நடத்தி வரும், போராட்டம் இன்று 500 ஆவது நாளாக தொடர்ந்தது. இதனை முன்னிட்டு கவனவீர்ப்பு நடவடிக்கை ஒன்றில் அவர்கள் ஈடுபட்டனர்.


வவுனியாவில் காட்டுத் தீ - 10 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்! Top News
[Saturday 2018-07-14 18:00]

வவுனியா -குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி இன்று பகல் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது இன்று மதியம் 1 மணியளவில் காட்டில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


விக்னேஸ்வரனிடம் தகவல்பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு கிடையாதாம்!
[Saturday 2018-07-14 18:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு கிடையாது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.


அனந்தியும் கோருகிறார் மரணதண்டனை! - அரசின் முடிவுக்கு வரவேற்பு
[Saturday 2018-07-14 18:00]

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4000ஏக்கர் காணிகள் இராணுவப் பிடியில்! - 99 வீதம் தனியார் காணிகளே
[Saturday 2018-07-14 09:00]

யாழ். மாவட்டத்தில் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் பிடியில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய தனியார்கள் காணிகளின் அறிக்கை வெளியிடும் ஊடகவியாளர்கள் சந்திப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் -


மரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானம் - ஜெனிவாவில் இலங்கைக்கு சிக்கல்!
[Saturday 2018-07-14 09:00]

மரண தண்டனை நிறைவேற்ற இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. மரண தண்டனையை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நடந்த ஜெனிவா மாநாட்டில் வாக்குறுதியளித்திருந்தது.


மாகாணசபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும்! - சம்பந்தன் Top News
[Saturday 2018-07-14 09:00]

ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக பிளவடையாத நாட்டிற்குள் நாம் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவிடம் தெரிவித்துள்ளார்.


ஆளுனர், விக்கி, அனந்தி, சிவநேசனுக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்!
[Saturday 2018-07-14 09:00]

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடனடியாக மீளக் கையளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் நீதிமன்றை அவமதித்ததாக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்களான க.சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.


விக்னேஸ்வரனுடன் இணையப் போகிறாராம் விஜயகலா! - சிங்கள ஊடகம் கூறுகிறது
[Saturday 2018-07-14 09:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாகவுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை?
[Saturday 2018-07-14 09:00]

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.


படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற 3 அகதிகள் மண்டபத்தில் கைது!
[Saturday 2018-07-14 09:00]

தமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். போரின் காரணமாக தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று அகதிகள் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்றனர். அவர்களை மண்டபம் பொலிஸார் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மரணதண்டனைக் குற்றவாளிகளின் பட்டியல் இன்று சமர்ப்பிக்கப்படும்!
[Saturday 2018-07-14 09:00]

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் இன்று நீதித்துறை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.


மரணதண்டனை கடுமையாக எதிர்க்கிறார் மங்கள!
[Saturday 2018-07-14 09:00]

போதைப்பொருள் குற்றங்களில் தொடர்ந்தும் ஈடுபடும்- ஏற்கனவே மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு மரண தண்டனையை நிறைவேற்றும் யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாக எதிர்த்துள்ளார்.


போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகளை கொண்டு வர வேண்டும்! - தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன் Top News
[Friday 2018-07-13 18:00]

இலங்கை வந்துள்ள தாய்லாந்துப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை, கொழும்பில் இன்று ​சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நீண்டகால உறவை எடுத்துக்காட்டிய சம்பந்தன், கடந்த காலங்களில், தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு, தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.


குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு! - அமைச்சர், பொலிஸ்மா அதிபரிடம் முதலமைச்சர் குற்றச்சாட்டு Top News
[Friday 2018-07-13 18:00]

வடக்கில் பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என்று, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாகவு எடுத்துக் கூறியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அந்தக் குற்றச்சாட்டை பொலிஸ் மா அதிபரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.


திருக்குறளை முன்னிறுத்தி பதவியேற்றார் விஜய் தணிகாசலம்! Top News
[Friday 2018-07-13 18:00]

கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.


விஜயகலாவின் உரையை சிங்களத்தில் மொழிபெயர்க்குமாறு நீதிவான் உத்தரவு!
[Friday 2018-07-13 18:00]

விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையை, சிங்களத்தில் ​மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திசாநாயக்க, அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி உரையைப் பதிவுசெய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதிவான் உத்தரவிட்டார்.


கோத்தாவின் 'வியத் கம' பாசிசவாத மேடை! - டிலான் பெரேரா
[Friday 2018-07-13 18:00]

கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான வியத் மக அமைப்பு, பாசிசவாத கருத்துக்களை வெளியிடுவோரின் மேடை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். வியத் மக மேடையில் உரையாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் கவனமாக இருக்குமாறும் கோத்தபாய ராஜபக்சவுக்கு, டிலான் பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.


வடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு
[Friday 2018-07-13 18:00]

(ரொறொண்டோ) இலங்கையின் வடமாகாணம் எங்கும் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அண்மிக்கும் நோயாளிகளுக்கு நீண்டகால வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கனடிய தமிழர் பேரவை நிதி சேர் நடை ஒன்றை ஓழுங்கு செய்துள்ளது. பேரவையின் 10 வது வருடாந்த நிகழ்வான இது எதிர்வரும் செப்டம்பர் 09, 2018 அன்று ஸ்காபரோ தொம்ப்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது.


லண்டனில் தமிழ் இளைஞன் கொலை!
[Friday 2018-07-13 18:00]

லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை அவரது, 22 வயதுடைய நண்பரே கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா