Untitled Document
March 29, 2024 [GMT]
கோத்தா ஜனாதிபதியானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்! - மேர்வின் சில்வா
[Wednesday 2018-06-13 09:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


கதிர்காமத்தில் விஹாரையில் துப்பாக்கிச் சூடு - இரு பிக்குகள் படுகாயம்!
[Wednesday 2018-06-13 09:00]

கதிர்காமம், கிரிவெ​​ஹேர ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்க கொபவக தம்மிந்த தேரர் மீதும் மற்றொரு ​தேரரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம், நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


விக்கி, சிவாஜிக்கு கன்னத்தில் அறை! - சரத் வீரசேகர
[Wednesday 2018-06-13 09:00]

சிவில் பாதுகாப்புப் படையின் கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழங்கிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


அரசைக் கண்டித்து இன்று நல்லூரில் போராட்டம்!
[Wednesday 2018-06-13 09:00]

மத விவ


ஞானசார தேரருக்கு நாளை தண்டனை அறிவிப்பு!
[Wednesday 2018-06-13 09:00]

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என கடந்த 24 ஆம் திகதி ஹோமாகாம நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை நாளை வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளார்.


பதவி விலகத் தயார்! - சுஜீவ சேனசிங்க
[Wednesday 2018-06-13 09:00]

சபாநாயகர் கோரும் பட்சத்தில், பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.


தீக்காயமடைந்த இளம் பெண் மரணம்! - கணவன் மீது சந்தேகம்
[Wednesday 2018-06-13 09:00]

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தேராவில், விசுவமடுவைச் சேர்ந்த 23 வயதான மயூரன் துளசி என்ற இளம் பெண்ணே உயிரிழந்தவராவார். தீக்காயமடைந்த நிலையில் துளசி தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார அமைச்சு! - அரசுக்குள் வெடித்தது அடுத்து பிரச்சினை
[Tuesday 2018-06-12 18:00]

காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மண்டையோட்டுக்குள் உலோகத் துண்டு!
[Tuesday 2018-06-12 18:00]

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டையோட்டினூள் இருந்து உலோகத் துண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த உலோகப் பொருளை ஆய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, இந்த அகழ்வுப் பணிகளை விரிவுபடுத்துமாறும் பணித்துள்ளார்.


இரு இராஜாங்க அமைச்சர்கள், 5 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு! Top News
[Tuesday 2018-06-12 18:00]

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதியமைச்சர்களும், இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.


முதலமைச்சர் ஏற்க மறுத்த பணத்தை தவராசா வீட்டின் முன்பாக வீசியெறிந்த மாணவர்கள்! Top News
[Tuesday 2018-06-12 18:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை, அவரது வீட்டின் முன்னால் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் மற்றொரு ஆயுதக் குழு? - புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை
[Tuesday 2018-06-12 18:00]

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


மீனவர் பிரச்சினை வடக்கு - தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம்! - அமைச்சரவையில் மனோ
[Tuesday 2018-06-12 18:00]

வடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு - தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் எடுத்து கூறினார்.


வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் - தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!
[Tuesday 2018-06-12 18:00]

வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாவதால், அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


மாவையை அவமானப்படுத்தியதற்காக மன்னிப்புக் கோரிய கடற்றொழிலாளர் சம்மேளனம்!
[Tuesday 2018-06-12 18:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதற்காக பகிரங்க மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட கடத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.


விபத்தில் படுகாயமுற்ற இளைஞன் மரணம்!
[Tuesday 2018-06-12 18:00]

விபத்


தாயகம் திரும்பிய அகதிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் அதிபர்கள்!
[Tuesday 2018-06-12 18:00]

போர்க்காலத்தில் பாதுகாப்பு கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து,சென்று, மீண்டும் வடக்கில், குடியமர்ந்த மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிங்கள மீனவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்துள்ளனர்! - கடற்தொழில் உதவிப் பணிப்பாளர்
[Tuesday 2018-06-12 18:00]

யாழ்.மாவட்டத்தில் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு வெளி மாவட்ட மீனவர்களுக்கு 5 கடற்தொழிலாளர் சங்கங்களும் தனிநபர்களும் பணம் பெற்றுக் கொண்டு அனுமதிக் கடிதம் வழங்கியுள்ளனர். அந்த ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.


வழிக்கு வந்தனர் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள்!
[Tuesday 2018-06-12 18:00]

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியை அடுத்து நாளை முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடம் மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.


இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது! - சிவாஜிலிங்கம் காட்டம்
[Tuesday 2018-06-12 09:00]

விஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை! - டிலான் பெரேரா
[Tuesday 2018-06-12 09:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொள்ள அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களில் எவரும் தயாரில்லையென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


திருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்!
[Tuesday 2018-06-12 09:00]

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காதல் பிரச்சினையால் இரண்டு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒன்டாரியோ ஏரியில் தவறி விழுந்த ஈழத்தமிழ் இளைஞன் மாயம்! Top News
[Tuesday 2018-06-12 09:00]

கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே படகில் இருந்து ஒன்டாரியோ ஏரியில் விழுந்த ஈழத் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கனேடிய நேரப்படி ஞாயிறு இரவு 9.42 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மைத்திரி களமிறங்கினால் ஆதரவு இல்லை! - பீரிஸ்
[Tuesday 2018-06-12 09:00]

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக களமிறங்கினால், அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பு, பொது ஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கனவில் மிதக்கும் கோத்தா முஸ்லிம்கள் முன் நடிக்கிறார்! -முஜீபுர் ரஹ்மான்
[Tuesday 2018-06-12 09:00]

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை எவராலும் மறைக்க முடியாது என்றும் எதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாவதற்கு கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோல நடித்து வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியுடன் சந்திப்பு இல்லை! - மறுக்கிறார் கோத்தா
[Tuesday 2018-06-12 09:00]

அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் தம்மை இன்று சந்திப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி முறையை நீக்கினால் பெரும் பிரச்சினை! - விஜயதாச ராஜபக்ச
[Tuesday 2018-06-12 09:00]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசமைப்பின் 20வது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள் உருவாகலாம் என உயர்கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


செய்தியை மறுக்கிறது ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
[Tuesday 2018-06-12 09:00]

லண்டனில் வசிக்கும், இணையத்தளம் ஒன்றின் ஆசிரியரை கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்கு திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியதாக வெளியாகிய செய்தி பொய்யானது என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா