Untitled Document
May 15, 2024 [GMT]
வடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு
[Friday 2018-07-13 18:00]

(ரொறொண்டோ) இலங்கையின் வடமாகாணம் எங்கும் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அண்மிக்கும் நோயாளிகளுக்கு நீண்டகால வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கனடிய தமிழர் பேரவை நிதி சேர் நடை ஒன்றை ஓழுங்கு செய்துள்ளது. பேரவையின் 10 வது வருடாந்த நிகழ்வான இது  எதிர்வரும் செப்டம்பர் 09, 2018 அன்று ஸ்காபரோ தொம்ப்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது.

(ரொறொண்டோ) இலங்கையின் வடமாகாணம் எங்கும் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அண்மிக்கும் நோயாளிகளுக்கு நீண்டகால வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கனடிய தமிழர் பேரவை நிதி சேர் நடை ஒன்றை ஓழுங்கு செய்துள்ளது. பேரவையின் 10 வது வருடாந்த நிகழ்வான இது எதிர்வரும் செப்டம்பர் 09, 2018 அன்று ஸ்காபரோ தொம்ப்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது.

  

வலித் தணிப்பு பராமரிப்பு என்பது முற்றிய நிலை நோயாளிகளுக்கு தனித்துவமான மருத்துவ மற்றும் செவிலிய பராமரிப்பு முறைகளை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறையாகும். 1.2 மில்லியன் மக்கள் வாழும் வட மாகாணத்தில் வருடாந்தம் 4,000 நோயாளிகளுக்கு வலித்தணிப்பு பராமரிப்பு சேவைகள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்ட வசமாக வட மாகாணத்தில் இச் சேவைகள் போதாதது மட்டுமல்ல வழங்கப்படும் சேவைகளை நோயாளிகள் பெற்றுக்கொள்ளவல்ல போக்கு வரத்து சேவைகள் இன்மையும் இடர் தருவதே. போரின் தாக்கத்தினால் குடும்ப - சமூக கட்டுமானங்கள் தகர்க்கப்பட்ட முதியோர், நோயுற்றோர், வலுவிழந்தோர் ஆகியவர்களைத் தனியே விட்டு விட்டு இளைய சமுதாயம் தேசம் கடந்து போனமையும் இந் நிலைமைக்குக் காரணமாகிறது.

தெல்லிப்பளை ட்ரெயில் புற்றுநோய் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்களின் கருத்துப்படி, அங்கு வலித் தணிப்பு மருந்துகளின் போதாமை மட்டுமல்ல அங்கு பணி புரியும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தகுந்த பயிற்சிகளும் தேவைப்படுகிறதென்பதும் தெரியவந்துள்ளது. " சிறந்த வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்த பயிற்சி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு போதாமையே நோயாளிகள் விரிவான சேவைகளைப் பெறமுடியாதிருப்பதற்கு காரணம், அதை மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம் " என்று வட மாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் மருத்துவர் மீரா செல்வக்கோன் கூறினார்.

2018 தமிழ்க் கனடிய நிதிசேர் நடையின் போது சேகரிக்கப்படும் பணம் யாழ்ப்பாணத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நடமாடும் சமூக மருத்துவ சேவையை விஸ்தரிப்பதற்குப் பயன்படுத்தப்படும். இந்த சேவை அலகில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு சுகாதார உதவியாளர் ஆகியோர் அடங்குவர். நோய் முற்றிய நிலையிலுள்ளோரது வீடுகளுக்குச் சென்று தேவையான மருத்துவ செவிலிய சேவைகளை வழங்குவதே இதன் கடமை. தற்போது இந்த சேவை அலகு யாழ் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளிலுள்ள புற்று நோயாளிகளைப் பராமரிக்கிறது. இந்த நிதிசேர்நடையின் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தின் மூலம் இச் சேவையை மேலும் நான்கு பிரிவுகளுக்கு விஸ்தரிக்க திடடமிடப்பட்டுள்ளது.

நடமாடும் பராமரிப்பு அலகினால் இதுவரை பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட இது இரு மடங்கிற்கும் மேலாகவே இருக்கும். இவ் விஸ்தரிப்பின் மூலம் முதல் தடவையாக புற்று நோயாளிகள் மட்டுமல்ல வலித் தணிப்பு தேவைப்படும் இதர நோயாளிகளும் மாற்றுத் திறனாளிகளும்கூடப் பயன் பெற முடியும். அத்தோடு, இந்நிதிசேர்நடை மூலம் சேகரிக்கப்படும் பணத்தின் ஒரு பகுதி வலித் தணிப்பு பற்றும் பராமரிப்பு மருந்து நிதியமொன்றை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். மருத்துத் தட்டுப்பாட்டினாலோ அல்லது அவற்றை வாங்குவதற்கு இயலாமை காரணமாகவோ அவதியுறும் நோயாளிகளுக்கு உதவிகளை வழங்க இந்த நிதியம் பயன்படும்.

" கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ்க் கனடியர் நிதிசேர்நடை, Canadian Heart & Stroke Foundation, the Centre for Addiction and Mental health மற்றும் சம்பூர் வீடமைப்புத் திட்டம் உட்பட பல முக்கிய சேவைகளுக்காக நிதி சேகரித்து வழங்கியுள்ளது எனவும் கனடாவில் வதியும் நண்பர்கள் மீண்டும் ஒரு தடவை முன் வந்து பங்களிப்பதன் மூலம் இப்படியான வெற்றிகரமான முயற்சிகளின் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் மக்களின் வாழ்வில் காத்திரமான மேம்பாடுகளை உருவாக்கலாம். வலித் தணிப்பு பராமரிப்பு என்பது எல்லோருக்குமானது. நாளை நாமே அச் சேவையயைப் பெறும் தேவையும் உருவாகலாம். எனவே நாம் இம் முயற்சியை ஆதரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் நாம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் !" எனக் கனடிய தமிழர் பேரவையின் தலைவர் மருத்துவர் வி. சாந்தகுமார் கூறினார். "

நிகழ்வு: 10 வது வருடாந்த தமிழ்க் கனடிய நிதிசேர்நடை

காலம்: ஞாயிறு, செப்டம்பர் 9

இடம்: தொம்ப்சன் பூங்கா, பிரிம்லி ரோட் / லோரன்ஸ் அவனியூ , ஸ்காபரோ

நேரம்: காலை 8:30 - பதிவு 9:00 நடை ஆரம்பம்

மேலதிக தகவல்கள் மற்றும் உறுதிப் படிவங்களுக்கு, http://tamilcanadianwalk.com/ என்ற இணைப்பின் மூலம் எமது இணையத் தளத்தை அணுகியோ அல்லது 416-240-0078 என்ற இலக்கத்தை அழைத்தோ பெற்றுக்கொள்ள முடியும்.

  
   Bookmark and Share Seithy.com



பொலிசுடன் சேர்ந்து சுகாதாரப் பரிசோதகர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடுக்க முயற்சி! Top News
[Wednesday 2024-05-15 04:00]

மட்டக்களப்பில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நேற்று விநியோகிக்கப்பட்டது.



நினைவேந்தல் உரிமையை நிராகரிக்கவே முடியாது!
[Wednesday 2024-05-15 04:00]

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலை தான் இலங்கையிலும் தமிழர்களுக்கு நடந்தது!
[Wednesday 2024-05-15 04:00]

பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நடந்தது, ஆனால் பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.



தமிழர்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் தனிஈழம் வெற்றி பெறும்!
[Wednesday 2024-05-15 04:00]

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.



பரவலாக நடைபெறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Wednesday 2024-05-15 04:00]

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் நேற்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.



யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்!
[Wednesday 2024-05-15 04:00]

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும்,காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்ய உத்தரவு!
[Wednesday 2024-05-15 04:00]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் முக்கிய தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



நெதன்யாகு பயங்கரவாதி! - சபையில் சீறிய டிலான்
[Wednesday 2024-05-15 04:00]

பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



போரில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை உள்ளது!
[Wednesday 2024-05-15 04:00]

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



ரணில் மீட்பர் அல்லர், பொருளாதார அடியாள்! - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-15 04:00]

ரணில் மீட்பர் அல்லர். அவர் ஒரு பொருளாதார அடியாள். உலக வங்கி, நாணய நிதியம் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் தாழ்பணியும் ஒரு சேவகராகவே அவர் செயற்பட்டுவருகின்றார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.



பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தடை! Top News
[Tuesday 2024-05-14 17:00]

அம்பாறை- பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! Top News
[Tuesday 2024-05-14 17:00]

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் காலை முதல் இடம்பெற்றது.



பொலீஸ் அராஜகத்திற்கு மௌன அங்கீகாரம்!
[Tuesday 2024-05-14 17:00]

திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து விற்பனை செய்த பெண்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டு கைதுசெய்யதுள்ளதை கண்டித்துள்ள புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக்கட்சி இச் சம்பவம் பற்றி ரணில்-ராஜபக்ச ஆட்சி கண்டும் காணாதது போன்று இருந்து வருவது தொடரும் பொலீஸ் அராஜகத் திற்கு மௌன அங்கீகாரம் வழங்குவதாகும் என தெரிவித்துள்ளது



சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும்!
[Tuesday 2024-05-14 17:00]

படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.



நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடியிருக்கிறது இலங்கை அரசு!
[Tuesday 2024-05-14 17:00]

தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது இலங்கை ஆட்சிப் பீடம். இது பெரும் துரதிஷ்டவசமானதாகும் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பெறுபேறுகள் வர முன்னரே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!
[Tuesday 2024-05-14 17:00]

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.



எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கத் தயார்!
[Tuesday 2024-05-14 17:00]

தமிழ்ப் பொதுவேட்பாளராக நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரச தலைவராக வருவதற்கு அரச தலைவர் வேட்பாளராக, எதிரணி சார்பான பொதுவேட்பாளராக, என்னைக் களமிறங்கச் சொன்னால் அது தொடர்பில் பரிசீலிக்கமுடியும் என அரச தலைவர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்! - இரு இளைஞர்கள் கைது.
[Tuesday 2024-05-14 17:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மா வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரை திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.



விஜயதாசவுக்கு எதிராக தடை கோரி வழக்கு!
[Tuesday 2024-05-14 17:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.



இணுவிலில் ஐஸ் ஆய்வுகூடம் சிக்கியது!
[Tuesday 2024-05-14 17:00]

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா