Untitled Document
May 15, 2024 [GMT]
விளையாடிய போது கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் பலி!
[Wednesday 2018-08-01 08:00]

கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம் பிரதேசத்தில் நேற்று 13 வயது சிறுவன், விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் கழுத்தில் கயிறு இறுகி பலியானார். மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்தவரான, குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி தங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மன்னார் புதைகுழியில் இதுவரை 60 இற்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு!
[Tuesday 2018-07-31 18:00]

மன்னார் 'சதொச' வளாகத்தில் இன்று 44ஆவது நாளாகவும் மனித எலும்புக் கூடுகளை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றன. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குற்றஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் அவலம்!
[Tuesday 2018-07-31 18:00]

சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்படும் அவலநிலை உள்ளதாக, முன்னாள் அரசியல் கைதியான இ. இராமநாதன் தெரிவித்துள்ளார்.


வைரலாகப் பரவும் 'வாள்ப்பாணம்'!
[Tuesday 2018-07-31 18:00]

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில், வரையப்பட்ட


யாழ். மாநகர சபையில் அனந்திக்கு ஆதரவாக வரிந்து கட்டிய ஈபிடிபி, சுதந்திரக் கட்சி!
[Tuesday 2018-07-31 18:00]

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாதால், ஈபிடிபி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வை இன்று புறக்கணித்தனர்.


சண்டிலிப்பாயில் வாள்களுடன் அட்டகாசம் செய்த ஐவர் கைது!
[Tuesday 2018-07-31 18:00]

சண்


ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!
[Tuesday 2018-07-31 18:00]

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மீண்டும் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரக காரியாலயத்திற்கு கட்டிடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


ஆட்சிக் கவிழ்ப்புக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறது கூட்டு எதிரணி!
[Tuesday 2018-07-31 18:00]

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தை நாளை மறுதினம் கொழும்பு நகரில் ஆரம்பிக்கவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. பொரளையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான, கலாநிதி பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதனை கூட்டாக தெரிவித்தனர்.


யாழ். மாநகர சபையில் பிரதி மேயரால் எழுந்த சர்ச்சை!
[Tuesday 2018-07-31 18:00]

யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயரைக் கட்டி வைத்து, அடிக்க முடியாது என்று யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபை அமர்வு, மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற விவாதம் ஒன்றில், எதிர்க்கட்சி உறுப்பினர் மணிவண்ணனை, விகிதாசார உறுப்பினர் என, பிரதி மேயர் விளித்தார்.


தெற்கிலுள்ள சுதந்திரம் வடக்கில் இல்லை - ஒப்புக் கொண்டார் நீதியமைச்சர்!
[Tuesday 2018-07-31 18:00]

தெற்கில் காணப்படுகின்ற சுதந்திரத்தை, வடக்கில் வாழ்கின்ற மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள,தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின், வடமாகாணத்துக்கான அலுவலகம், நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Tuesday 2018-07-31 18:00]

தாண்டிக்குளம் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருக்கு இன்று பிற்பகல் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு முன்பாக நின்ற கைதடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து 1 கிலோ 652 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.


சாலையில் புலிகளின் சீருடை, கனரக துப்பாக்கி ரவைகள் மீட்பு! - வலைஞர்மடம் அகழ்வுப் பணி ஒத்திவைப்பு Top News
[Tuesday 2018-07-31 18:00]

முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில், இன்று முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளன.


மன்னாரில் பொறியியலாளரைத் துன்புறுத்திய ஜப்பானியர்களுக்கு நீதிமன்றம் பிணை!
[Tuesday 2018-07-31 18:00]

மன்னாரில், ஜப்பான் நாட்டு நிறுவனத்தில் பொறியியலாளராக கடமையாற்றி வரும் ஒருவரை துன்புறுத்திய ஜப்பான் நாட்டுப் பிரஜைகள் இருவரை மன்னார் நீதிமன்ற நீதிவான் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.


முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசுக் கட்சியே முன்னிறுத்தும்! - என்கிறார் சிவிகே
[Tuesday 2018-07-31 07:00]

தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த முடிவு!
[Tuesday 2018-07-31 07:00]

வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கவும், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


வாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்!
[Tuesday 2018-07-31 07:00]

தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற முன்னாள் போராளி திடீரென மரணமான சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக நேற்று வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.


வடக்கில் புலிகளின் கை ஓங்குகிறதாம்! - ரோஹித அபே
[Tuesday 2018-07-31 07:00]

யாழ். கோட்டைப் பிர


நாளை மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டம்! - இழுபறியில் மாகாணசபைத் தேர்தல்
[Tuesday 2018-07-31 07:00]

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக, ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.


பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழுவினர்! Top News
[Tuesday 2018-07-31 07:00]

கொக்குவிலில் நேற்று பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றனர். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.


மனோவின் நல்லிணக்க அமைச்சின் வடக்கு மாகாண நிலையம் திறப்பு! Top News
[Tuesday 2018-07-31 07:00]

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர்கள் மனோ கணேசன், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்கலந்து கொண்டனர்.


11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கு - இரு கடற்படையினருக்குப் பிணை!
[Tuesday 2018-07-31 07:00]

2008 - 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி சென்று கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல்நீதிமன்றம் இவர்களை நேற்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.


விஜயகலா மீதான நடவடிக்கைக்கு சட்டமா அதிபரின் பிரதிநிதி நியமனம்!
[Tuesday 2018-07-31 07:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் சட்டமா அதிபரினால் நிமியக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுங்க அதிகாரிகளைத் தாக்கிய குவைத் தம்பதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தடை!
[Tuesday 2018-07-31 07:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 5 பேரை தாக்கிய, குவைத் தம்பதியினர் நாட்டிலிருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் சஜிந்திர ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விசாரணைகள் முடியும் வரை குறித்த இருவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்ட நீதிவான், குறித்த உத்தரவின் பிரதியை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.


ஜனாதிபதியின் கூட்டத்தைப் புறக்கணித்தார் விக்னேஸ்வரன்!
[Monday 2018-07-30 19:00]

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார். இது குறித்து இரண்டு கடிதங்கள் மூலம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறிவித்திருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


மன்னார் புதைகுழியில் தாய்- குழந்தையின் எலும்பு எச்சங்கள்! Top News
[Monday 2018-07-30 19:00]

மன்னார் 'சதொச' வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வின் போது, இன்று தாய் ஒருவரினதும், பச்சிளம் குழந்தை ஒன்றினதும், மனித எச்சங்கள் அருககே மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று காலை 43 வது நாளாக இடம்பெற்றன.


முச்சக்கர வண்டி மீது பேருந்து மோதி மாணவன் பலி! - 8 மாணவர்கள் காயம்! Top News
[Monday 2018-07-30 19:00]

வவுனியா - புதூர் பகுதியில் இன்று மதியம் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பேருந்து மோதிய விபத்தில் மாணவன் ஒருவர் பலியானார். 8 மாணவர்கள் படுகாயமடைந்தள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து, முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.


கருணாநிதி நலம் பெற ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து!
[Monday 2018-07-30 19:00]

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்தனுப்பிய கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினர்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? - சங்கக்கார மறுப்பு
[Monday 2018-07-30 19:00]

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார போட்டியிட உள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்காக சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில், அண்மையில் வெளிவந்த ஆங்கில பத்திரிகைச் செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த கருத்துக்கு சங்கக்கார பதிலளித்துள்ளார்.

NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா