Untitled Document
May 12, 2024 [GMT]
போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது! - கோபாலகிருஷ்ண காந்தி Top News
[Saturday 2016-01-09 09:00]

மஹிந்த ராஜபக்‌ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன என்று தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி.


அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்! - சம்பந்தன்
[Saturday 2016-01-09 08:00]

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி! - மஹிந்த ராஜபக்‌ஷ
[Saturday 2016-01-09 08:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது என்றும், ஓய்வுபெறுமாறு சிலர் வலியுறுத்துகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. தலதா மாளிகைக்குச் சென்றிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ வழிபாடு முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க ஐ.நா தயார்! - இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி
[Saturday 2016-01-09 08:00]

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார்.


மோசடிகள் குறித்து கேள்வி கேட்கவேயில்லை! - என்கிறார் கோத்தபாய
[Saturday 2016-01-09 08:00]

பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அடிக்கடி அழைக்கப்படுகின்ற போதும் மோசடி தொடர்பில் இன்னும் தன்னிடம் விசாரணை செய்யப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. நேற்றும் பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்ட போதும் ரக்ன லங்கா நிதி மோசடி தொடர்பில் எதுவும் கேட்கப்படவில்லை.


விக்னேஸ்வரனுக்குத் தைரியம் கொடுத்திருக்கிறது நல்லாட்சி அரசு! - விமல் வீரவன்ச
[Saturday 2016-01-09 08:00]

இராணுவத்தினரை வடிகானை சுத்தம் செய்யக் கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒராண்டு பூர்த்தி அடைக்கின்ற நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


ஹிருணிகா இன்று கைது செய்யப்படுவார்? - சட்டமா அதிபர் பரிந்துரை
[Saturday 2016-01-09 08:00]

ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


இன்று அரசியலமைப்பு சபையாக மாறுகிறது பாராளுமன்றம்!
[Saturday 2016-01-09 08:00]

முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. முழுநாள் விவாதத்தின் பின்னர் இந்த பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சரத் பொன்சேகாவைப் பழிவாங்கினோம்! - ஒப்புக்கொள்கிறார் பசில்
[Saturday 2016-01-09 08:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் சரத் பொன்சேகாவை மாத்திரமே தாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கியுள்ளோம் என்று பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் ஒருவருட பூரத்தியை முன்னிட்டு பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தனது புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போன மைத்திரி! Top News
[Saturday 2016-01-09 08:00]

புகைப்படக் கட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போனேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.


தன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மைத்திரி! Top News
[Friday 2016-01-08 19:00]

கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்த போது பொலன்னறுவையில் வைத்து தன்னை கொலை செய்ய முயன்றவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார். முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான சிவராஜா ஜெனிவன் என்ற குறித்த நபர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.


அமைச்சர் ராஜிதவும் ஆட்களைக் கடத்தியவர் தான்! - என்கிறார் கோத்தபாய
[Friday 2016-01-08 19:00]

தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி காலத்தில் முகமூடி அணிந்த தலையாட்டிகள் எந்த வாகனத்தில் வந்தனர்?. கறுப்பு வாகனங்களிலா, வெள்ளை வாகனங்களிலா? தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினாரே.. அந்த காலத்தில் நான் இராணுவத்தில் இருந்தேன்.


மைத்திரிக்கு பான் கீ மூன் வாழ்த்து!
[Friday 2016-01-08 19:00]

நாட்டின் அரசியல் மாற்றத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர், பான் கீ மூன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை!
[Friday 2016-01-08 19:00]

தமிழ் மக்கள் பேரவை தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது.


தேவையான நேரத்தில் சரியான முடிவை எடுக்கப் பின்நிற்கமாட்டேன்! - மைத்திரி
[Friday 2016-01-08 19:00]

வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும். ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.


மைத்திரி ஆட்சியின் ஒரு வருட நிறைவு - வடக்கு கிழக்கிலும் விசேட நிகழ்வுகள்! Top News
[Friday 2016-01-08 19:00]

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஊடாக மைத்திரிபால சிறிசேன ஆட்சி உருவாக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு மரநடுகை நிகழ்வு மற்றும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது.


திருக்கோவில் மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிக்கின! Top News
[Friday 2016-01-08 19:00]

அம்பாறை - திருக்கோவில் மயானத்தில் இன்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திருக்கோவில் மயானப் பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இரு கைக்குண்டுகள், இரு மோட்டார் குண்டுகள், இரு மிதிவெடிகள், மூன்று மகசீன் மற்றும் இருபத்தைந்து துப்பாக்கி ரவைகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளன.


99.4 வீதி நிதியை செலவிட்டது வடமாகாண சுகாதார அமைச்சு!
[Friday 2016-01-08 19:00]

வட மாகாண சுகாதார அமைச்சுக்கு கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் 99.4 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளது என்று, வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வட மாகாண சுகாதார அமைச்சின் நிதி செலவீனங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


புலனாய்வு தகவல்களை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்புக்கு ஊடகங்கள் உதவக்கூடாது! - இராணுவப் பேச்சாளர்
[Friday 2016-01-08 19:00]

ஐ.எஸ் அமைப்பு குறித்து புலனாய்வாளர்கள் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அந்த விசாரணைகளைப் பாதிக்கச் செய்யலாம் என்பதுடன் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சுதாகரித்துக் கொள்ளவும் கூடும் என்று எச்சரித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர.


எமது ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது! - ரணில்
[Friday 2016-01-08 19:00]

வட,கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கைநழுவ விடமாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசின் ஒரு வருடப் பூர்த்தி நிகழ்விலேயே இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


31 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய பாலத்தடிச்சேனை மக்கள்! - வெளியேறுகிறது இராணுவம். Top News
[Friday 2016-01-08 19:00]

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலத்தடிச்சேனையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில் மீள்குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 வருடங்களின் பின்னர் அப்பகுதியில் தமிழ் மக்கள் மீள்குடியேறுகின்றனர். 1985ஆம் ஆண்டு போர் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.


புதிய அரசியலமைப்பில் சுயாட்சி அதிகாரங்கள் இடம்பெறாது!
[Friday 2016-01-08 07:00]

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் சுயாட்சி அதிகாரங்கள் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்படாது என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தல், சுயாட்சி அதிகாரங்களை வழங்குதல் ஆகிய திருத்தங்களை உள்ளடக்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி!
[Friday 2016-01-08 07:00]

தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணியில் 984 ஏக்கர் காணியை விடுவித்து 2050 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்-


கோத்தபாயவிடம் நேற்றும் விசாரணை!
[Friday 2016-01-08 07:00]

ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பாரிய ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்தார்.


மகிந்த ஆ்ட்சியை கவிழ்த்தது அமெரிக்காவும், இந்தியாவும் தான்! - பசில் குற்றச்சாட்டு
[Friday 2016-01-08 07:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டு வருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும்! - பிரதமர் ரணில் அழைப்பு
[Friday 2016-01-08 07:00]

புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு தெற்கு பகுதிகளின் அபிவிருத்திக்கு தமது முதலீடுகளை மேற்கொள்ள பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.


சிங்க லேயை வழிநடத்தும் மங்களவின் முன்னாள் செயலாளர்!
[Friday 2016-01-08 07:00]

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் செயலாளர் ஒருவரே சிங்க லே என்ற அமைப்பினை வழிநடத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிங்க லே அமைப்பு பற்றி புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்


வடக்கின் நிலைமைகள் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி!
[Friday 2016-01-08 07:00]

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா