Untitled Document
June 22, 2026 [GMT]
 
இரவில் நீல நிறத்தில் ஜொலிக்கும் மாயாஜால கடற்கரைகள்!
[Friday 2025-12-12 16:00]

பொதுவாகவே சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் கடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்தநேரமும் ஓயாத அலைகளின் சத்தம்,அந்த சத்தத்தையும் மீறி கிடைக்கும் மன அமைதி என கடலை பற்றி சொல்லும் அத்தனையும் கூட கவிதையாகிப்போகும் என்றால் மிகையாகாது. இயற்கையின் பிரமாண்டத்தை பறைசாற்றும் கடல் ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பல்வேறு மர்மங்களின் இருப்பிடமாகவும் திகழ்கின்றது. இருப்பினும் இதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இரவில் ஒளி வீசும் கடற்கரைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா?

உலகத்தில் கருப்பு நிற பால் தரும் விலங்கு எது?
[Thursday 2026-05-28 16:00]

பொதுவாக பெரும்பாலான விலங்குகள் வெள்ளை நிறத்தில் தான் பால் கொடுக்கும். ஆனால் உலகத்தில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்குமாம். இயற்கையில் பல அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த வகையில் உலகத்தில் ஒரு விலங்குகிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் தான் பால் வரும். இதை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும்.


தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டு பழமையான ராட்சத டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2026-05-15 17:00]

சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் இனத்தின் எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். “நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைனோசர் இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல்!
[Monday 2026-05-11 17:00]

மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல் ஒன்று துறைசார் நிபுணர்களை வியப்பிலாழ்த்தியுள்ளது. இந்த மாணிக்ககல், பல தசாப்தங்களில் மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கற்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, மியான்மரின் புகழ்பெற்ற இரத்தினக்கற்கள் நிறைந்த மோகோக் பகுதியை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பிரித்தானியாவின் 250 பேர்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றில் ஹன்டாவைரஸ் பாதிப்பு!
[Friday 2026-05-08 16:00]

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, 250 பேர்களைக் குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவான 'டிரிஸ்டன் டா குன்ஹா'வில், மூன்றாவது பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இரண்டு பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. தற்போது மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 24 அன்று, ஏழு பிரித்தானியர்கள் எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறங்கியுள்ளனர்.


உயிர் பலி வாங்கும் பேய் பங்களா: பொலிசார் கண்டுபிடித்த உண்மை!
[Thursday 2026-04-30 16:00]

அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின. அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது. அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன. அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.


107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கனடியர்!
[Wednesday 2026-04-29 17:00]

கனடாவின் மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம், கனடாவின் மிக வயதான மனிதர்களில் ஒருவரான இவான் வின்னிச்சுக் திகழ்கின்றார். செவ்வாய்க்கிழமை அன்று மிசிசாகாவில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவான் தனது 107-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.


வரலாற்றில் முதல்முறை: நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை நேரடியாக பார்த்த மனிதர்கள்!
[Sunday 2026-04-05 18:00]

நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர். 54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.


யுரேனியத்தை செறிவூட்டும் "சென்ட்ரிபியூஜ்" தொழில்நுட்பத்தின் ரகசியங்கள் இதோ!
[Thursday 2026-03-26 07:00]

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அணுக்கரு பிளவு ஏற்படக்கூடிய U-235 என்ற ஐசோடோப் வெறும் 0.7% மட்டுமே உள்ளது. ஆனால், அணுமின் நிலையங்களுக்கு 3% முதல் 5% வரையிலும், அணு குண்டுகள் தயாரிக்க 90% வரையிலும் இந்த U-235 தேவைப்படுகிறது. இந்தச் செறிவை அதிகரிப்பதே 'செறிவூட்டல்' ஆகும். இதற்கு 'கேஸ் சென்ட்ரிபியூஜ்' (Gas Centrifuge) முறை பயன்படுத்தப்படுகிறது. முதலில், திட நிலையில் உள்ள யுரேனியம் 'யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு' (UF6) என்ற வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயு, மிக அதிவேகமாகச் சுழலக்கூடிய சென்ட்ரிபியூஜ் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது.


2 தலை, 1 இதயம்: ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2026-03-24 17:00]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கடலுக்கு அடியில் வாழும் பேய் மீன்!
[Thursday 2026-02-26 16:00]

கடலில் வாழும் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு கொண்ட மீன் பற்றி பதிவில் பார்க்கலாம். இந்த உலகத்தில் பல அதிஷயங்கள் உள்ளது. அது ஒவ்வொன்றும் நாம் கேட்கும் போது பார்க்கும் போது இப்படியும் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கும். அதிலும் கடல்வாழ் உயிரினங்களை எல்லோருக்கும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ஒரு விருப்பமும் ஆர்வமும் இருக்கும். கடல் வாழ் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளது.


கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி!
[Tuesday 2026-02-17 16:00]

சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் நடந்துள்ளது.இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.


எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர்!
[Monday 2026-02-16 15:00]

எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர் பொறிக்கபட்டுள்ளது. எகிப்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளதென்பது பலருக்கும் தெரிந்த விடயம். அதில் மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிசர்லாந்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட்!
[Wednesday 2026-02-04 16:00]

இந்தியாவில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. உலகளவில் கார் மட்டுமல்லாது, தனித்துவமான அல்லது விருப்பமான எண் கொண்ட காரின் நம்பர் பிளேட்டையும் வாங்க பெரும் தொகையை சிலர் செலவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு, 'HR 88 B 8888' என்ற நம்பர் பிளேட் ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற பெருமையை பெற்றது.


நிலவில் அமைய உள்ள ஹொட்டல்!
[Thursday 2026-01-15 17:00]

2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் மீண்டும் நிலவிற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்காவின் நாசா, 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பிய நிலையில், அதன் பின்னர் தற்போது வரை மனிதர்கள் சென்றதில்லை. 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், 2030 ஆம் ஆண்டில் சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதை இலக்காக வைத்து செயலாற்றி வருகிறது.


உலகில் மரணமே இல்லாத இடம் எங்குள்ளது தெரியுமா?
[Monday 2026-01-12 19:00]

உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணி காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்டு. இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன.


பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்!
[Thursday 2025-12-25 06:00]

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர்.


உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்ட ஒரே ஒரு கோவில்!
[Tuesday 2025-12-16 16:00]

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளதால் இந்தியா ஆன்மீக பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்களும், அவர்களுக்கென அதிகமாகக் கோவில்களும் உள்ளன. இதில் சில தனித்துவமான கோவில்கள் உள்ளது, அங்கு வித்தியாசமான பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. அந்தவகையில், உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்டுள்ள ஏலியன் கோவில் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதும் பலருக்கும் தெரியாது.


ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!
[Friday 2025-11-21 07:00]

ஆஸ்திரியாவைச் சேர்ந்த கலைஞரின் ஓவியம் ஒன்று அமெரிக்காவில் ரூ.2000 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சோதேபிஸ் ஏல நிறுவனம் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டது. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 6 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு ஓவியத்தை வாங்க போட்டியிட்டனர்.


62 வருடங்கள் தூங்காமல் உயிர்வாழும் விவசாயி!
[Sunday 2025-11-09 18:00]

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் உடற்பயிற்ச்சி எந்தளவு முக்கியமோ அதே அளவு சிறந்த தூக்கமும் இன்றியமையாதது. நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்பத்தும் என்பது அனைவதும் அறிந்ததே.


1150 அடி உயரத்தில் கால்பந்து போட்டி: 2034ல் உலகிற்கு காத்திருக்கும் அதிசயம்!
[Tuesday 2025-10-28 15:00]

48 அணிகள் பங்கேற்கும் 23 ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதனையடுத்து அடுத்த உலக கிண்ணத் தொடர் 2034 இல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாவில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும்.


பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு!
[Wednesday 2025-10-22 16:00]

பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வெப்பநிலை அதிகரிப்பே அதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்!உலகிலேயே அண்டார்டிக் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய இரண்டு நாடுகள்தான் பூச்சிகளே இல்லாத நாடு என அறியப்படுகின்றன. இந்நிலையில், ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சீனாவில் முதுகுவலி போக தவளைகளை விழுங்கிய மூதாட்டி!
[Thursday 2025-10-09 16:00]

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இந்நிலையில் தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார்.


கின்னஸ் உலக சாதனை படைத்த கனடிய காளை!
[Friday 2025-09-26 16:00]

கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது. வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை தற்போது கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் உலகின் உயரமான காளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றான ‘பீஃப்’, அதற்கு மாறாக தனது உரிமையாளரான ஜாஸ்மின் என்ட்ஸ் அவர்களால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது.


900 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டுக்கு உருவம் கொடுத்த விஞ்ஞானிகள்!
[Wednesday 2025-09-17 16:00]

900 ஆண்டுகள் பழமையான பெண்னின் மண்டை ஓட்டுக்கு விஞ்ஞானிகள் உருவம் கொடுத்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.


நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!
[Tuesday 2025-09-02 16:00]

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரைச் சேர்ந்த ரோன் ஸ்வேடன் என்பவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒரு சில மாத காலமாக குறித்த நபர், கடுமையான இருமலுடன் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்துள்ளார்.


மனித குலத்திற்கு ஆபத்து: 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள்!
[Monday 2025-08-18 16:00]

கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.


உலகின் முதல் மனித உருவ ரோபோ கடை: பட்டையை கிளப்பும் சீனா!
[Thursday 2025-08-14 17:00]

சீனாவில் உலகின் முதல் பிரத்யேக மனித உருவ ரோபோ கடையாக "ரோபோ மால்" திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மால் வாடிக்கையாளர்களுக்கு 40 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிராண்டுகளின் ரோபோக்கள், செல்லப்பிராணிகள், இயந்திரங்களை ஆராயவும் வாங்கவும் வாய்ப்பளிக்கிறது. சீனாவில் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்த கடையின் ஒரு பகுதி ஷோரூம், ஒரு பகுதி டீலர்ஷிப் மற்றும் ஒரு பகுதி கண்காட்சியாகும் பிரிக்கப்படுள்ளது.


ஆஸ்திரேலியாவில் அச்சத்தை ஏற்படுத்திய எலி: நாயின் அளவு பெரிது!
[Thursday 2025-08-07 16:00]

ஆஸ்திரேலியாவின் யோர்க்ஷயரில் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அங்குள்ள மக்களிடையே பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சுமார் 55 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த எலி அசாதாரணமானது அல்ல என வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.


400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!
[Wednesday 2025-08-06 16:00]

குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதற்கு நான் அதிபர் என தனக்கு தானே அறிவித்துக்கொண்ட 20 வயது ஆஸ்திரேலியா இளைஞன் இணையதளத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞன், குரோஷியா விற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படதாக நிலத்தை வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து அதன் அதிபர் நான் தான் தனக்கு தானே அறிவித்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா