Untitled Document
June 22, 2026 [GMT]
 
அமெரிக்காவில் பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி!
[Friday 2020-01-17 17:00]

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக வகையைச் சார்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் இன்று காலை 8 குட்டிகளை ஈன்றது. அவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள்!
[Friday 2020-01-17 08:00]

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நடிகராகவும் தலைவராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்.... ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். வடக்கே இருந்து வந்த ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது அவரைப் போல நடிக்க முடியாது என ஒப்புக் கொண்டார்கள். சுறுசுறுப்பு, உற்சாகம், நடனம், சண்டைப் பயிற்சி, கொள்கை, ஏழைகள் மீது கருணை, தொழிலாளர்கள் மீது மரியாதை, தாய் மீதான பக்தி, நாட்டின் மீதும் மக்கள் மீதுமான ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திர வார்ப்புகள் மிக எளிதாக மக்களை வசீகரித்தன. பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்த எம்ஜிஆரின் திரைப்படங்கள் இன்றும் விரும்பி பார்க்கப்படுகின்றன.


ஆழ்கடலில் அபூர்வ இன பிராணிகள் கண்டுபிடிப்பு!
[Thursday 2020-01-16 17:00]

உயிரினங்களின் எலும்புகளையும் அதி விரைவாக தின்று செரிமானம் நடத்தும் திறன் படைத்த அபூர்வ இன பிராணிகள் ஆழ்கடலில் இருப்பதை ஆய்வு ஒன்றின் வாயிலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். தலா 36 கிலோ எடை உள்ள 3 முதலைகளின் செத்த உடல்களை மெக்சிகோ வளைகுடாவின் 2 கிலோ மீட்டர் ஆழமுள்ள கடற்மணற் பரப்பில் தக்க பாதுகாப்புடன் வைத்த ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆய்வு செய்ய 51 நாட்களுக்குப் பிறகு கேமரா பொருத்தப்பட்ட ரோபாட்டுகளை அனுப்பினர்.அவற்றின் மூலம் கிடைத்த காட்சிகள் அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.


ஜெர்மனியில் ஹிட்லரை போல உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை!
[Wednesday 2020-01-15 17:00]

ஜெர்மனியில் உள்ள ஆகஸ்டஸ்பர்க்கில் நடைபெற்ற வாகன திருவிழாவுக்கு, ஹிட்லரைப் போல உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை உருவாகியுள்ளது. கொடுங்கோல் ஆட்சி செய்த அடால்ப் ஹிட்லரைபோல உடையணிந்து வந்திருந்த அவரை, பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


750 கோடி ஆண்டுகள் பழமையான துகள்கள் புவியில் கண்டுபிடிப்பு!
[Tuesday 2020-01-14 16:00]

விண்கல் ஒன்றை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தைவிட பழமையான, புவியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான துகள்களைக் கண்டறிந்துள்ளனர். 1960களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமையானவை. சூரியனுடைய வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என்பதையும், புவியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த துகள்கள் நமது சூரியக் குடும்பத்தைவிட எவ்வளவு வயது முதிர்ந்தவை என்பது புரியும். இந்த துகள்கள் சூரிய குடும்பம் தோன்றும் முன் இருந்த நட்சத்திரங்களில் உருவானவை. முர்ஷிசன் விண்கல்லில் இருந்த சூரியனை விட பழமையான துகள்களில் சில (உள்படம்). முட்டை நெபுலா (படம்) போன்றதொரு நட்சத்திரத்தில் இருந்து இது வந்திருக்கலாம்.


800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை!
[Tuesday 2020-01-14 08:00]

ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு. இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘ என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். அவற்றில் ஒரு ஆண் ஆமை, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘டியாகோ‘ என்ற ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60.


நிலவை சுற்றிவர காதலியை தேடும் ஜப்பானிய கோடீஸ்வரர்!
[Monday 2020-01-13 17:00]

அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை சந்திரனுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ’பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017-ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. அவர்களின் கணக்குப்படி கடந்த வருடம் மனிதர்களை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று வரை மனிதர்களை அனுப்பவில்லை. ஆனால் தற்போது ''பிக் பால்கான் ஹெவி'' ராக்கெட் மூலம் மனிதர் ஒருவரை நிலவிற்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது. ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. யுசாகு மேசாவா 2023-ம் ஆண்டு நிலவுக்கு செல்ல உள்ளார்.


தொகுப்பாளர் இன்றி நடைபெறும் 92-வது ஆஸ்கார் விருது விழா!
[Sunday 2020-01-12 09:00]

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும். யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். ஆனால் கடந்த ஆண்டு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் நடந்ததால் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.


சிறிய ஆணியை வைத்து 930,000 யூரோக்கள் வரை இழப்பை ஏற்படுத்திய நபர்!
[Saturday 2020-01-11 17:00]

ஒரு சிறு ஆணியுடன் பிடிபட்ட ஒருவரால் 930,000 யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பவேரியாவில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் பல கார்கள் ஆணியால் கீறப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. சுமார் 642 கார்கள் வரை சேதப்படுத்தப்பட்டதால், 930,000 யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டது. யார் இதைச் செய்வது என்று கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறிவந்தனர். கடைசியில், ’paint scraper’ என்ற பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.


வழிதவறி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை கொன்று விருந்து வைத்த மக்கள்!
[Saturday 2020-01-11 17:00]

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திலிபரி கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்தது. இந்த சிறுத்தை ஏற்கனவே அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேரை தாக்கி இருந்தது. அடிக்கடி கிராமத்துக்குள் புகும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறியும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். இந்நிலையில் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் ஆவேசமடைந்த கிராம மக்கள் சிறுத்தையை பிடித்து அடித்துக்கொன்றனர்.


கணவர் பல்தேய்க்கவில்லை, குளிக்கவில்லை: விவாகரத்து கோரிய மனைவி!
[Saturday 2020-01-11 17:00]

பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவருடைய மனைவி சோனி தேவி (20). இவர்களுக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் சோனி தேவி, மாநில பெண்கள் கமிஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நானும் எனது கணவரும் விசாலி மாவட்டம் நாயகனோ கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக அவருடைய நடவடிக்கை சரியில்லை. அவர் 10 நாட்களுக்கும் மேலாக முகசவரம் செய்யவில்லை. தாடியுடன் இருக்கிறார். தினமும் பல் துலக்குவது இல்லை. குளிக்கவும் இல்லை. இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு குழந்தை இல்லை. சராசரி மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்வது இல்லை. இந்த காரணங்களால் என் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை. இதனால் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.


குழந்தைகளின் பசியை போக்க தலைமுடியை விற்ற பாசத் தாய்!
[Friday 2020-01-10 17:00]

தனது தலைமுடியை விற்று அதில் கிடைத்த பணத்தால் குழந்தைகளின் பசியை போக்கிய பெண்ணிற்கு, மாதாந்திர உதவிக்தொகை கிடைக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வீமனூரை சேர்ந்த செல்வம் என்பவர் தொடங்கிய செங்கல் சூளை நஷ்டம் அடைந்ததால், அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவர் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவரது மனைவி பிரேமா, செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார்.


இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் ஓநாய் சந்திர கிரகணம்!
[Thursday 2020-01-09 17:00]

சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணத்திற்கு நாசா ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என்ற பெயரைச் சூட்டியுள்ளது. இந்த கிரகண நிகழ்வை இந்தியா மட்டுமல்லாது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.


இங்கிலாந்தில் முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண்! Top News
[Thursday 2020-01-09 08:00]

இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். இதற்காக அவர் இதுவரை 8,000 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 56 ஆயிரம்) தொகையை செலவிட்டுள்ளார். லிசா ஆண்டர்சனுக்கு 5-வது குழந்தை பிறந்த பிறகே, அவருக்கு பவுடரை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை அவர் விரும்பி சாப்பிடுகிறார்.


துயரத்தில் முடிந்த வெளிநாட்டு கனவு: உயிரிழந்த சிவரஞ்சனின் துயரப் பயணம்!
[Wednesday 2020-01-08 20:00]

துருக்கியிலிருந்து கிறீஸ் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த வடமராட்சி இளைஞர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. மில்லடி, கல்வத்தை, கரவெட்டி, வடமராட்சி என்ற முகவரியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவரஞ்சன் (வயது 37) என்ற இளைஞர் வியாபார தொழில்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றார். இந்தியாவிலிருந்து புடைவை கொண்டுவந்து விற்பனை செய்வது உட்பட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். ஐந்து சகோரர்களை உடைய அவரின் தந்தையார் ஒரு விவசாயி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு செல்வதாக சிவரஞ்சன் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் சென்றதில் இருந்து இரண்டு முறை மட்டுமே உறவினர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள சிலருடைய ஏற்பாட்டிலேயே குறித்த வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் முகவர் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளார். சிவரஞ்சனின் தொடர்பு அற்றுப்போன நிலையில் அவரை தொடர்புடுத்தித் தருமாறு முகவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தொலைபேசி சமிக்ஞை இல்லாத பகுதிகளில் பயணிப்பதால் அவருடன் தொடர்புகொள்ளமுடியாது என்று முகவர் பதிலளித்துவந்திருக்கின்றார்.


அமெரிக்காவில் சோளத்தால் நிரப்பப்பட்ட தண்டவாளம்! Top News
[Wednesday 2020-01-08 18:00]

கனடா பசிபிக் ரெயில்வே அந்நாட்டின் ஆல்பெர்டா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் வழித்தடம் கனடாவிலிருந்து அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சிகாகோ, நியூயார்க் நகரங்களிலும் இந்த ரெயில் சேவை உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா- கனடா நாடுகளின் எல்லையையொட்டி அமைந்துள்ள அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள கிரிஸ்டல் நகரின் வழியே செல்லும் கனடா பசிபிக் ரெயில்வே வழித்தடத்தில் நேற்று சோளம் சிந்தப்பட்டு தண்டவாளம் முழுவதும் மூடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


வடமராட்சி நெல்லியடி இளைஞர் ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் வைத்து படுகொலை! Top News
[Wednesday 2020-01-08 09:00]

ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 3 ம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அழைத்து சென்ற மபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியீடப்பட்டுள்ளது. துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுகுள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு மலைகளை காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும் குடியோறிகளை ஆள் கடத்தல் மாபீயா குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும்.


உலகின் மிக விலையுயர்ந்த மது 'எசென்சியா 2008'!
[Wednesday 2020-01-08 08:00]

2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 தனதாக்கியுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தனித்துவ படைப்பான இந்த ஒயின் பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிறந்த அஸ்ஸா திராட்சைகளை சேகரித்து அவற்றை பாதாள அறையில் 10 ஆண்டுகளாக நொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இந்த எசென்சியா ஒயினில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளதாக ராயல் டோகாஜி ஒயின் ஆலையின் பொது மேலாளர் சோல்டன் கோவாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்காக நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ரூ.5 கோடி சேகரித்த அழகி!
[Tuesday 2020-01-07 18:00]

கைலன் வார்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா மாடல் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டாலர் அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். அவருக்கு இரண்டே நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் இது. ரூ.5 கோடி ஆகும். இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ட்வீட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன.


அமெரிக்காவில் ருசிகரம்: 1 வருட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்!
[Monday 2020-01-06 17:00]

பொதுவாக இரட்டை குழந்தைகள் சில நிமிட இடைவெளியில் பிறப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வருட இடைவெளியில், Dawn Gilliam என்ற பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததுள்ளார். என்ன ஒரு வருடமா என திகைப்பு வேண்டாம்.. ஆம்.. சமீபத்தில் பிறந்த புத்தாண்டு காரணமாக இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. st.vincent carmel என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் Dawn Gilliam. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறி இருந்ததால், உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


276 கிலோ எடையுள்ள மீனை ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்த உணவக அதிபர்! Top News
[Monday 2020-01-06 17:00]

ஜப்பானை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் 276 கிலோ எடை கொண்ட புளூபின் ட்யூனா மீனை சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். சுஷி சன்மாய் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வரும் கியோஷி கிமுரா என்பவர் தான், இவ்வளவு விலை கொடுத்து மீனை ஏலம் எடுத்தவர். அட்லாண்டிக் புளூபின் வகையை சேர்ந்த இந்த மீன் அதிகபட்சமாக 680 கிலோ எடை மற்றும் 10 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டதாகும்.


ஒரு குலை ஒரே காய் - அதிசய வாழை! Top News
[Sunday 2020-01-05 17:00]

மட்டக்களப்பு - ஓட்டமாவடி மஜ்மாநகர் வீட்டுத்தோட்டமொன்றில் வாழை மரம் ஒரே ஒரு காயுடன் குலை ஒன்றை ஈன்றுள்ளது, இரு வாரங்களுக்கு முன்னர் வாழையில் இருந்து சிறிய வாழைப்பூ ஒன்று வெளிப்பட்டிருந்தது.தற்போது அதில் பெரிய வடிவிலான ஒரே ஒரே வாழைக்காய் மாத்திரம் காய்த்துளளது. கோழிக்கோடு வாழை இனத்தைச் சேர்ந்த இந்த அதிசய வாழைமரத்தைப் பார்வையிட பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.


இந்தோனேசியாவில் மலர்ந்த உலகின் மிகப் பெரிய மலர் - விஞ்ஞானிகள் ஆய்வு! Top News Top News
[Sunday 2020-01-05 08:00]

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் காட்டுக்குள் ரப்லேசியா அர்னால்டி என்ற தாவரவியல் பெயர் கொண்ட அந்த காட்டுப்பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு ராட்சத தோற்றத்தில் உள்ள அந்த பூவே, இதுவரை பூத்த மலர்களில் மிகப்பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வகை மலர்கள் ஒட்டுண்ணி தாவர வகையைச் சேர்ந்தவை.

Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா