Untitled Document
June 22, 2026 [GMT]
 
6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்!
[Sunday 2020-03-01 17:00]

மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10 மணியளவில் ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் அந்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் ஆர்.பி. கோயல் தெரிவித்துள்ளார்.


குழந்தைகளை மறந்துவிட்டு வெறும் காரில் பள்ளிக்கூடத்துக்கு சென்ற தாய்!
[Friday 2020-02-28 08:00]

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தைகளை தினமும் அவர்களின் பள்ளிக்கூடத்திற்கு காரில் அழைத்து செல்வது வழக்கம். இது போலவே, சமீபத்தில் அவர் வழக்கம் போல் காரை எடுத்து கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வெகு தூரம் சென்ற பிறகு, காரில் தன் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகுதான் பிள்ளைகளை மறந்து வீட்டிலேயே விட்டு வெறும் காரை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.


ஒன்பது வயது மகனுக்கு மின்னளுத்தியால் சூடு வைத்த தாய்: காத்தான்குடியில் சம்பவம்!
[Tuesday 2020-02-25 18:00]

காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தந்தை, மகன்!
[Monday 2020-02-24 17:00]

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அப்பாவும், மகனும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வதே வழக்கம். அதேபோல் அந்த கிராமத்தில் உள்ள ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர், 30 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் உள்ளார். மகன் ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்த்து வந்துள்ளார். அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.


50 ஆண்டுகளில் முதன்முறையாக காட்டில் கண்டறியப்பட்ட அரியவகை வானவில் பாம்பு!
[Sunday 2020-02-23 18:00]

அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது.


தன்னை பாகுபலியாக சித்தரிக்கும் காணொளியை டிவிட்டரில் பகிர்ந்த டிரம்ப்! Top News
[Sunday 2020-02-23 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வருவதுதான் இப்போது உலகத்தின் தலைப்பு செய்தி. குஜராத்தின் அகமதாபாத் நகரத்திற்கு வரும் டிரம்ப், மொடேரா அரங்கத்தில் நடைபெறும் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதா? இருநாட்டு தலைவர்களும் விவாதிக்கும் முக்கிய விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு வருமா என்று பல ஆய்வாளர்களும் விவாதித்துக் கொண்டிருக்க, அதிபர் டிரம்ப் பாகுபலி காணொளி ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார்.


கொரானாவுக்கு பயந்து இப்படியா பயணிப்பது? - விமானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.
[Sunday 2020-02-23 08:00]

கொரானா வைரசுக்கு பயந்து உடல் முழுவதையும் பிளாஸ்டிக் பையால் சுற்றிக் கொண்டு விமானத்தில் பயணித்த 2 பேர் வலைதளங்களில் சூப்பர்ஹிட் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய விமானத்தில் காணப்பட்ட இந்த விநோத பாதுகாப்பு கவச காட்சி பலரின் கவனம் பெற்றுள்ளது.


பிறந்தவுடனேயே உலகளவில் பிரபலமான குழந்தை!
[Saturday 2020-02-22 17:00]

நாம் பயணம் செய்யும் பஸ்ஸிலோ,ரெயிலிலோ அல்லது அலுவலகத்திலோ ஸ்மார்ட் போனை பார்த்தபடி, யாராவது திடீரென ஒருவர் உரக்க சிரித்தால் அது எல்லாம் மீம்ஸ் படுத்தும் பாடு. ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் பலர் இன்னும் பைத்தியம் ஆகாமல் இருப்பதற்கு சிரிக்க சிந்திக்க வைக்கும் மீம்சுகளும் ஒரு காரணம். இப்போது முதல் முறையாக பிறந்த குழந்தை ஒன்று பிறந்தவுடனேயே மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி வைரலாகி உள்ளது. பிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்து பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைளதளங்களில் வைரலாகி உள்ளது.


47 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த சகோதரிகள் - உருக்கமான பதிவு!
[Saturday 2020-02-22 16:00]

கம்போடியாவில் 1970களில் 'க்மெய்ர் ரூஷ்' சர்வாதிகார ஆட்சியின்போது இறந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வந்த இரு சகோதரிகள் 47 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்துள்ளனர். 'க்மெய்ர் ரூஷ்' என்பது போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வழங்கப்படும் பெயராகும். இதில் ஒருவருக்கு (பன் சென்) 98 வயதும் மற்றொருவருக்கு (பன் சியா) 101 வயதும் ஆகிறது. அதே போல 98 வயதாகும் மூதாட்டி பன் சென், இறந்துவிட்டதாக நினைத்திருந்த 92 வயதாகும் தனது இளைய சகோதரருடனும் ஒன்று சேர்ந்துள்ளார். 1979இல் தனது கணவரை இழந்தபின், கம்போடிய தலைநகரில் குப்பைகளை சேகரித்து வாழ்ந்து வந்த பன் சென் கம்போடியா சில்ட்ரன்ஸ் ஃபண்ட் எனும் தொண்டு நிறுவனம் மூலம் அவரது சொந்த கிராமத்தில் உள்ள அந்த மூதாட்டியின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.


கொரோனா அச்சம்: வேடிக்கையில் முடிந்த திருமண நிகழ்வு!
[Saturday 2020-02-22 08:00]

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக திருமணம் செய்து கொண்ட 220 ஜோடி மணமக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பயந்து முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.


2700 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் யானை மாரா!
[Friday 2020-02-21 08:00]

அர்ஜண்டினாவின் பியூனஸ் ஐரஸ் ((Buenos Aires)) நகருக்கு குட்பை சொல்லி சுமார் 2700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரேசில் நகரான சாப்படாவுக்கு ( Chapada dos Guimarães in Brazil) பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது 54 வயதான யானை மாரா. முன்னதாக இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற இந்த யானை பல சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல ஊர்களை சுற்றி வந்து தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.


பிச்சை எடுத்து சேர்த்த 8 லட்சம் ரூபாயை கோவில் கட்ட கொடுத்த முதியவர்..!
[Monday 2020-02-17 17:00]

ஏழு வருடங்களாக பிச்சை எடுத்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் "யாதி ரெட்டி" எனும் 73 வயது முதியவர். ரிக்ஷா ஓட்டுநரான இவர் முதுமையினால் உடல் ஒத்துழைக்காததால் ரிக்ஷா ஓட்டும் தொழிலை விட்டு ஒரு கோவிலின் அருகே கடந்த ஏழு வருடங்களாக பிச்சை எடுத்து வந்தார். இவ்வாறு பிச்சை எடுப்பதின் மூலம் வந்த பணமான 8 லட்சம் ரூபாயை அதே கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். மேலும் தான் நன்கொடை வழங்கிய பின்னர் தன்னுடைய வருமானம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.


நூதன புகாரளித்த சிறுவன்: நெகிழ வைத்த போலீஸ்!
[Friday 2020-02-14 17:00]

காவலர்கள் என்றாலே காக்கி உடையும், கடுகடுக்கும் பேச்சும் தான் நமக்கு நினைவு வரும். முக்கியமான சில புகார்களை கூட வாங்காமல் காவலர்கள், மக்களை அலைக்கழிக்கும் சம்பவங்கள் ஏராளம். ஆனால் ஒரு சிறுவன் அளித்த புகாரை அலட்சியப்படுத்தாமல், அதன் மீது நடவடிக்கை எடுத்த போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் Pazhayannur என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு உள்ள காவல் நிலையத்திற்கு அண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை காவலர்கள் எடுத்து பேசிய போது, எதிர் முனையில் சிறுவனின் குரல் கேட்டது. என்ன, ஏது என்று போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது பேசிய சிறுவன் தனது கால்பந்து தொலைந்து விட்டதாகவும், அதை எப்படியாவது கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் சோக குரலில் கேட்டுள்ளான். பந்து காணாமல் போனதெற்கெல்லாம் நம்மிடம் புகார் அளிக்கிறானே சிறுவன் என்று நினைக்காமல், மேற்கொண்டு அவனிடம் விசாரித்துள்ளனர் காவலர்கள்.


1 குழந்தைக்கு 28 அம்மாக்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!
[Thursday 2020-02-13 17:00]

சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை, பல வாரங்களாக பிரிந்திருந்த 2 வயது குழந்தை, அதன் தாயார், உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, ஒப்படைக்கப்பட்டது. தனது குழந்தைக்கு, 28 அம்மாக்கள் இருப்பதாக, அந்த குழந்தையை பத்திரமாக கவனித்துக் கொண்ட 28 செவிலியர்களுக்கும், குழந்தையின் தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். குவாண்டாங் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள ஒரு குடும்பத்தில், 2 வயது ஆண் குழந்தையைத் தவிர, மற்ற அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.


குப்பைகளை சுத்தம் செய்யும் ஸ்பைடர் மேன்!
[Wednesday 2020-02-12 17:00]

ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்க திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளின் மனதிலும் இடம் பிடித்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் பல பாகங்கள் வெளிவந்தன. அதேசமயம் ஸ்பைடர் மேன் உடையும் உலக அளவில் பிரபலமானது. இந்நிலையில், இந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்யும் நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான பரேபேரைச் சேர்ந்தவர் ரூடி ஹர்டானோ. இவர் அப்பகுதியில் உள்ள பிரபல கஃபே ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இயற்கை ஆர்வலரான இவர் ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து அப்பகுதியில் உள்ள பிளாஸ்டி குப்பைகளை சுத்தம் செய்து வருகிறார். இது அனைவரையும் சற்றே யோசிக்கவும், வியக்கவும் வைத்தது.


விண்வெளிக்கு அப்பால் இருந்து வந்த மர்மமான ரேடியோ அலைகள்!
[Wednesday 2020-02-12 17:00]

விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஃஎப்.ஆர்.பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் இதிலிருந்து பரவியதா?!..
[Monday 2020-02-10 18:00]

சீனாவின் வூகான் நகரில் புதிதாக படையெடுத்து உலகையை உலுக்கி வரும் கொரோனா புதிய வைரஸாக இருந்தாலும் இதன் பெயர் 2017 -ம் ஆண்டு வெளிவந்த ”ஆஸ்டரிக்ஸ்” காமிக் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயராகும். 2017- ம் ஆண்டு வெளிவந்த ஆஸ்டரிக்ஸ் என்னும் ஃப்ரெஞ்ச் காமிக் தொடரில் வரும் வில்லன் பெயர் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் இதன் பெயர் மிகவும் பழக்கப்பட்ட பெயராகும். ஆஸ்ட்ரிக்ஸ் சீரிசின் 37- வது பதிப்பான ”ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் சேரியட் ரேஸ்” என்ற தொடரில் வரும் முகமுடி வில்லன் இத்தாலியில் ரோமானிய மக்களுக்கு எதிராக சேரியட் ரேசில் போராடுபவர்.


பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள் இவர்கள்: Top News
[Thursday 2020-02-06 18:00]

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்… குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும் இடம் என பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.


அதிக விஷமுள்ள பாம்பை விழுங்கிய தவளை!
[Thursday 2020-02-06 17:00]

எவ்வளவு பெரிய பலசாலியானாலும் பாம்பை கண்டால் அலறியடித்து ஓடுவார்கள். தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் உணவாக உட்கொள்வது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியா நாட்டில் பெண்ணின் தோட்டத்தில் பாம்பு ஒன்றை தவளை உணவாக விழுங்கியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே பகுதியில், பாம்புகளை மீட்டு அதனை பாதுகாப்பான சூழலில் விட்டு விடும் பணியில் ஜேமீ சேப்பல் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசி வழியே அழைப்பு விடுத்து உள்ளார். அதில் தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் பாம்பு ஒன்று உள்ளது என அவர் கூறியுள்ளார். இதனால் அதனை பிடிப்பதற்காக சேப்பல் கிளம்பி சென்றுள்ளார். இதனிடையே, அந்த பெண் மீண்டும் சேப்பலுக்கு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, தவளை ஒன்று அதனை சாப்பிட்டு கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.


4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 105 வயது மூதாட்டி!
[Thursday 2020-02-06 08:00]

கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். வயது முதுமை காரணமாக தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்ட பகீரதி அம்மா, சூழ்நிலையியல், கணிதம் மற்றும் மலையாளம் ஆகிய 3 பாட தேர்வு எழுதுவதற்கு 3 நாட்களை எடுத்துக்கொண்டதாக எழுத்தறிவு இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒற்றை கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி!
[Tuesday 2020-02-04 17:00]

தாய்லாந்தில் மினியன் கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி சுற்றுவட்டார மக்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. அந்நாட்டின் சச்சோயெங்சாவோ மாகாணத்தில்(Chachoengsao) சோம்ஜாய் ஃபும்மான் (Somjai Phummaman) என்ற அரசு ஊழியர் வளக்கும் நாய், கடந்த ஞாயிற்றுகிழமை 2 குட்டிகளை ஈன்றது.


என் வீட்டைக் காணவில்லை - விவசாயி நூதன புகார்!
[Saturday 2020-01-25 08:00]

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தனது வீட்டைக் காணவில்லை என விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபிலர்மலை ஒன்றியம் இருகூர் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் காங்க்ரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கினர். இதனைத் தொடர்ந்து வீடு அமைப்பதற்கான அடிப்படை பணிகளை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இதனையடுத்து கான்கிரீட் வீடு அமைப்பதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை முருகேசன் மேற்கொண்டார். ஆங்காங்கே கடன் வாங்கி, அஸ்திவாரத்தை போட்டு முடித்தவர் வீடு கட்டுவதற்கான நிதி வரும் எனக் காத்திருந்தார். ஒரு மாதம் மூன்று மாதமாகி, மூன்று மாதம் என்பது 3 ஆண்டுகளாகி, கடந்த 9 ஆண்டுகளாக நீடிக்கிறது முருகேசனின் அந்தக் காத்திருப்பு.


800 வகையான உணவுகளை தயாரித்து அசத்தும் எந்திர சமையல்காரர்!
[Friday 2020-01-24 08:00]

மதுரையில் ரோபோ செப் (Robo chef) எனும் பெயரில் 800 வகையான உணவுகளை தயாரிக்கும் ரோபோவை மென்பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். சமையலறையில் பெண்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இண்டக்ஷன் ஸ்டவ் என பல்வேறு கருவிகள் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப அறிமுகமாகி கொண்டு தான் வருக்கின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ளது ரோபோ செப். மதுரையை சேர்ந்த மென்பொறியாளர் சரவணன் சுந்தரமூர்த்தி என்பவர், ஒரு குழுவை உருவாக்கி கடந்த 6 ஆண்டுகளாக முயற்சித்து இதனை உருவாக்கி உள்ளார். சிக்கன் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, சாதம், சாம்பர், ரசம், பால்பாயசம் உள்ளிட்ட உணவுகள் மட்டுமில்லாமல், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து உணவுகளையும் இந்த ரோபோ சமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


190 செ.மீ நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து இளம்பெண் கின்னஸ் சாதனை! Top News
[Wednesday 2020-01-22 17:00]

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 190 சென்டி மீட்டர் நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆரவள்ளி மாவட்டம் (Aravalli district) மொசடாவை (modasa) சேர்ந்த அவரின் பெயர் நிலான்சி படேல் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு 170.5 சென்டி மீட்டர் நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து, டீன் ஏஜ் வயது பெண்களில் அதிக நீளத்துக்கு தலைமுடியை வளர்த்தவர் என்று கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.


மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி!
[Wednesday 2020-01-22 08:00]

ராஜஸ்தானில் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள நிமோடியா என்ற கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. பிறக்கும்போதே அந்தக் குட்டி நீண்ட காதுகளுடன் இருந்தது.


கனடாவில் தனி நபர் ஒருவர் 860 டொலர்கள் பெறுமதியான உணவை வீண் விரயம் செய்கிறார்.
[Tuesday 2020-01-21 18:00]

தனி நபர் ஒருவர், 860 டொலர்கள் பெறுமதியான உணவை சராசரியாக ஆண்டொன்றுக்கு வீண் விரயம் செய்வதாக ஒண்டாரியோ கழிவு முகாமைத்துவ கழகம் தெரிவித்துள்ளது. கனடாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் கிட்டத்தட்ட அரைவாசி, இவ்வாறு வீணாக்கப்படுகிறது.


பனிக்கட்டிகளால் ஆன கார் சிற்பம்!
[Tuesday 2020-01-21 17:00]

ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பனிக்கட்டிகளை பயன்படுத்தி உருவாக்கியுள்ள கார் உருவம் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. ஸ்ரீநகரில் கார்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வரும் சுபைர் அகமது என்ற இளைஞர் தான் இந்த பனிச்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.


இலங்கையில் உலக சாதனை முயற்சியாக அதிக இரட்டையர்கள் கூடிய நிகழ்வு!
[Tuesday 2020-01-21 08:00]

இலங்கையில் அதிக இரட்டையர்கள் கூடி உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தலைநகர் கொழும்புவில் உள்ள வெளிப்புற விளையாட்டு மைதானத்தில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இரட்டையர்கள், மூவர்கள் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்றவர்களை எண்ணும் பணி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், எண்ணிக்கையையும் அதற்கான ஆவணங்களையும் கின்னஸ் அமைப்பிடம் சமர்ப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்டனர்.


மாதம் ரூ.1.50 லட்சத்திற்கான வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி!
[Monday 2020-01-20 17:00]

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். சிலரது தொடக்கம் அமர்க்களமாக தெரிகிறது. சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ளது பாண்டேஸ்வரம் கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ரேகா ராமு வெற்றி பெற்றார். இவர் சாப்ட்வேர் துறையில் கைநிறைய சம்பாதித்து வந்தவர். அதேபோல் இவரது கணவரும் சாப்ட்வேர் துறையில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வாங்கியவர். இருவரும் அந்த வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். ரேகா ராமுவின் மாமனார் குடும்பம் அரசியல் செல்வாக்கு பெற்ற குடும்பம். அந்த பின்புலத்தில் ரேகா எளிதில் வெற்றியும் பெற்றார்.


கேரளாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக நீளமான கேக்! Top News
[Sunday 2020-01-19 08:00]

உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகம் கின்னஸ் ஆகும். ஓவியம், நடனம், விளையாட்டு, சாகசம் போன்ற பல்வேறு துறைகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீளமான கேக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. கேரளா பேக்கரிகள் சங்கம் சார்பில் திருச்சூர் நகரில் நடந்த விழாவில் இந்த கேக் செய்யப்பட்டது. சுமார் 1,500 பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சமையல்காரர்கள், 12,000 கிலோ சர்க்கரை மற்றும் மாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 4 மணிநேரம் செலவழித்து இதை தயாரித்தனர்.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா