Untitled Document
June 22, 2026 [GMT]
 
மீண்டும் திறக்கப்பட்ட மதுபான கடைகள்: பட்டாசு வெடித்து கொண்டாடிய குடிமகன்கள்!
[Monday 2020-05-04 17:00]

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் கர்நாடகம் முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மது கிடைக்காத விரக்தியில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இது ஒருபுறம் இருக்க மதுக்கடை உரிமையாளர்களே, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறி வந்தன. மது கிடைக்காமல் திண்டாடிய மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர். அதுபோல் கர்நாடகத்தில் தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு வந்தது. இதுதவிர கள்ளச்சாராயம் விற்பனையும் படுஜோராக நடந்து வந்தது.


பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த சிறுவன்!
[Saturday 2020-05-02 17:00]

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு அனுப்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிறுவனை அழைத்துக் கொண்டு டியூஷன் ஆசிரியை வீட்டிற்கு சென்று ஊரடங்கை மீறி டியூஷன் எடுக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.


இங்கிலாந்தை அச்சுறுத்தி வரும் மர்ம நபர்!
[Friday 2020-05-01 08:00]

இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரின் கெல்ஸ்டன் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே தலை முதல் கால் வரை உடலை முழுமையாக மறைக்கும் விதமாக நீண்ட ‘தொளதொள’ கருப்பு நிற அங்கி, தொப்பி, பூட்சுடன் ஒரு மர்ம மனிதர் நடமாடி வருகிறார். ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வீடுகளுக்குள் வாரக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் நார்விச் நகர மக்கள் இதைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோவிட்-19 தொற்று வந்ததையிட்டு மகிழும் 13 பிள்ளைகளின் தந்தை!
[Monday 2020-04-27 18:00]

ஹான் குடும்பம், ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய குடும்பம் என்ற விருதைப் பெற்ற ஒன்று. றோய், எம்மா தம்பதிகளுக்கு 13 பிள்ளைகள். அவற்றில் 10 குழந்தைகள் தற்போது வீட்டில் வசிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக றோயிற்கு கோவிட்-19 நோய் பிடித்துவிட்டது. தற்போது அவர் சுய தனிமையில் வசிக்கிறார்.


விசித்திர நோயால் அவதிப்படும் பிரித்தானிய தாயார் - நாளொன்றுக்கு 50 முறை கழிவறையை நாடும் அவலம்!
[Monday 2020-04-27 08:00]

பிரித்தானிய தாயார் ஒருவர் விசித்திர நோயால் நாளுக்கு 50 முறை கழிவறையை நாடிய நிலையில் 10 வாரத்தில் 26 கிலோ எடையை இழந்து மரணத்தின் விளிம்புக்கு சென்று மீண்டுள்ளார். வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் குடியிருக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயது Trudi Stonard என்பவர் அதிர்ஷ்டம் காரணமாகவே உயிருடன் இருக்கிறார். அவருக்கு பெருங்குடல் மற்றும் மலக்குடலின் அழற்சியை ஏற்படுத்தும் விசித்திர நோயிருப்பது கண்டறியப்பட்டதாலையே அவர் பிழைத்துள்ளார். வெறும் 10 வாரத்தில் அவரது நிலை கவலைக்கிடமாக மாறியதை அடுத்து, மருத்துவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவிட்டு, அவரது குடல் பகுதியை நீக்கும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.


கோவிட்-19: லண்டன் இளைஞனின் வியக்க வைக்கும் செயல்!
[Saturday 2020-04-25 17:00]

லண்டனை சேர்ந்த இளைஞன் கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களை பாராட்டும் விதத்திலும் அது தொடர்பில் நிவாரண நிதிக்காகவும் தொடர்ந்து 24 மணி நேரம் கைத்தட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் ஒவ்வொரு வியாழன் அன்றும் இரவு 8 மணிக்கு மக்கள் எல்லோரும் சில நிமிடங்கள் கைத்தட்டி கொரோனாவுக்கு எதிராக போராடுகிறவர்கள், இந்த இக்காட்டான நேரத்தில் உதவுபவர்களுக்கு நன்றி கூறியும் பாராட்டு தெரிவித்தும் வருகிறார்கள்.


56 வருடங்கள் கழித்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி!
[Thursday 2020-04-23 17:00]

நைஜீரியாவில் 68 வயதுடைய மூதாட்டி ஒருவர், இரட்டை குழந்தைகள், ஒரு பையன் மற்றும் ஒரு பெண் பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த தம்பதி Noah Adenuga(77)-Margaret Adenuga(68). இவர்கள் இருவருக்கும் கடந்த 1974-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் IVF(கருத்தரிப்பு) முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த முயற்சி மூன்று முறை தோல்வியடைந்த நிலையில், அந்த தம்பதி இறுதியாக இப்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அதில் ஒரு குழந்தை ஆண் மற்றும் ஒரு குழந்தை பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரத்தில் சிக்கிய பெண் சிறுத்தை! Top News
[Sunday 2020-04-19 08:00]

மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தையொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் பொலிஸார் ஊடாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.


நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் தாக்கும் கொரோனா - வெளியான அதிர்ச்சி தகவல்!
[Saturday 2020-04-18 08:00]

உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது. இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.


அமெரிக்காவில் இறுதிச்சடங்கில் நிர்வாணமாக நின்ற நபர் - காரணம் என்ன?
[Friday 2020-04-17 08:00]

அமெரிக்காவில் இறுதிச்சடங்கு கூடத்துக்குள் நுழைந்த நபர் திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். Pennsylvania-வில் உள்ள இறுதிச்சடங்கு கூடத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு கையில் மதுபாட்டிலுடன் நுழைந்த ஒருவர் திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாண நிலையில் நின்றார்.


பிறந்தவுடன் நீல நிறமாக மாறிய குழந்தை: மருத்துவர் எடுத்த அதிரடி முடிவு!
[Tuesday 2020-04-14 17:00]

இந்தியாவில் பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய நிலையில் எதிர்பாராத திருப்பமாக குழந்தையை காப்பாற்ற பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றிய மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மும்பையின் அலிபாக் பகுதியில் உள்ள வாஜே நர்ஸிங் ஹோமில் சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 2.9 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சையனோசிஸ் என்ற உடல் நீல நிறமாக மாறும் பிரச்சனையும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாஜே மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லை.


கொரோனாவிலிருந்து மீண்ட 97 வயது மூதாட்டி!
[Tuesday 2020-04-14 09:00]

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நோக்கி செல்கிறது. இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.


கொரோனா சிகிச்சைக்காக 34 லட்சம் மாத்திரைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கவாழ் இந்தியர்!
[Thursday 2020-04-09 17:00]

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக், சிந்து படேல் ஆகியோருக்கு சொந்தமான ‘அம்னீல் பார்மசூட்டிக்கல்ஸ்’ மருந்து உற்பத்தி நிறுவனம், 34 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.


ஒரு கொரோனா நோயாளியினால் அதிகபட்சம் 406 பேருக்கு நோய் தொற்றை பரப்ப முடியும்!
[Wednesday 2020-04-08 08:00]

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களில் குறைந்தது அந்த நோயை 406 பேருக்குப் பரப்ப முடியும் என மத்திய சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊரடங்கிற்குப் பின்னர் அது தொடர்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னரும் தொடரலாம் எனவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் விலங்கு!
[Monday 2020-04-06 08:00]

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 336,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


மாலையில் மட்டும் இறக்கும் காகங்கள்: அதிர்ச்சியில் கிராம மக்கள்!
[Saturday 2020-04-04 17:00]

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடர்ந்து 4 நாட்களாக காகங்கள் திடீரென இறப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பன்னியூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.


கொரோனாவை விரட்ட தனது உயிரை பணையம் வைக்கும் செவிலியர்!
[Friday 2020-04-03 17:00]

கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் பீதியாகும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தன்னை பணியமர்த்துமாறு ஆண் செவிலியர் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிஷ்க் யாதவ் என்ற ஆண் செவிலியர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர கால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மருத்துவ கண்காணிப்பாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவசர கால சிகிச்சை பிரிவில் தாம் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பதாகவும், எந்த ஒரு அசாதார சூழலையும் எதிர்கொள்ளும் திறன் தன்னிடம் உள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள் தகவல்!
[Wednesday 2020-04-01 17:00]

தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று எச்சரித்ததாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (ஜமா) வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் எம்ஐடியின் இணை பேராசிரியரும் திரவ இயக்கவியலில் நிபுணருமான லிடியா பவுரவுபியாவால் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆறு அடி (2 மீட்டர்) சமூக தூரமாக சுகாதார நிபுணர்கள் திருத்த வேண்டும் என்று லிடியா பவுரவுபியா கூறினார்.


102 வயதிலும் கோவிட்டை விரட்டிக் காட்டிய பாட்டி!
[Tuesday 2020-03-31 18:00]

கடந்த மார்ச் 6ஆம் நாள் இருதயப் பாதிப்புடன் 102 வயது நிரம்பிய பாட்டி ஒருவர் இத்தாலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா நோய்த் தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதனால் அது குறித்த சோதனைக்கு அவர் ஆட்பட, அவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடுமையான அறிகுறிகள் வெளிப்படாத நிலையில், அவர் எவ்வித சிகிச்சையும் இன்றி அவ்வாறே பேணப்பட்டார். அவரது நோய் எதிர்ப்பு சக்தியே போராடி அவரை நோய்த் தாக்கத்தில் இருந்து விடுவித்திருக்கிறது. ஈற்றில் மார்ச் 26ஆம் நாள் கடந்த வியாழன் அவர் வீடு திரும்பியுள்ளார்.


ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு!.. Top News
[Sunday 2020-03-22 07:00]

யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய தினம் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த ஒருவரால் போதனை நடத்தப்பட்டது.அதன் பின்னர் அவர் ஒரு கொரோனா தொற்றாளர் என இனங்காணப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.


கொரோனா எளிதில் தாக்கக்கூடிய ரத்தவகை இதுதான்!
[Wednesday 2020-03-18 17:00]

சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனாவின் தாக்கம் குறித்து இத்தாலியிலிருந்து வந்த கடிதம்!
[Tuesday 2020-03-17 08:00]

அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும். நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இங்கு விட்ட தவறுகளிலிருந்தும் அவற்றின் விளைவுகளிலிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் வீதிகளில் இறங்கத் தடை! காவல்துறையினர் தொடர்ந்து நடந்துகொண்டு, வீட்டிற்கு வெளியே வரும் யாரையும் கைது செய்கிறார்கள். எல்லாம் மூடப்பட்டுள்ளது!... வணிகம், மால்கள், கடைகள், இயக்கம் இல்லாத அனைத்து தெருக்களும். உலக முடிவின் உணர்வை எமக்கு தருகிறது!!


இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர்!
[Saturday 2020-03-14 17:00]

நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் வருகிற 9ம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுவதால் ஏராளமான மக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.


வெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி! Top News
[Saturday 2020-03-14 08:00]

வெனிசூலா நாட்டின் லாரா மாகாணம் கியூபிராடா அரிபா நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பன்றி சமீபத்தில் குட்டி ஈன்றது. அந்த பன்றிக்குட்டி தற்போது வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது. அதற்கு காரணம் அந்த பன்றிக்குட்டியின் முகம் பார்க்க அப்படியே மனிதனின் முகம் போல இருப்பதுதான். அதிலும் குறிப்பாக பன்றிக்குட்டியின் முகம் குழந்தையின் முகம் போல இருக்கிறது.


இலங்கை தாக்குதலில் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்:
[Friday 2020-03-13 19:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய தனியார் நில உரிமையாளரின் மூன்று பிள்ளைகள் உயிரிழந்தமை சர்வதேச ரீதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


விண்வெளியில் கீரைகளை வளர்த்து நாசா சாதனை!
[Wednesday 2020-03-11 08:00]

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா. பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களின் உணாவாக உட்கொள்ளுவார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


கொரோனாவின் உண்மை தோற்றம்: வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்! Top News
[Saturday 2020-03-07 08:00]

புதிய கொரோனா வைரஸின் 'உண்மையான தோற்றத்தை' காட்டும் முதல் படங்களை அதிநவீன நுண்ணோக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள தொற்று நோய்களுக்கான ஷென்சென் தேசிய மருத்துவ மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து COVID-19 வைரஸின் உண்மை தோற்றத்தை கண்டுபிடித்துள்ளனர். வைரஸின் விகாரத்தை செயலிழக்க, நிபுணர்கள் உறைந்த எலக்ட்ரான் நுண்ணோக்கி பகுப்பாய்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் படங்களை கைப்பற்றியுள்ளனர்.


கனடாவில் ஊடக மன்றமா? - ஊழல் மன்றமா?? ஊடக மன்றத்துக்குள் ஊழல்? என ஊரே சிரிக்குதாம். Top News Top News
[Friday 2020-03-06 20:00]

கனடாவில் ஊடக மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களில் அதனுள் நடைபெறும் முறைகேடுகள் குளறுபடிகளை பற்றி அண்மையில் கனடாவிலுள்ள பல சமூக ஊடகவியலாளர்கள் பொதுவெளிக்கு பல விடயங்களை தமது அதிருப்திகளாக வெளிப்படுத்தியுள்ளனர். நாம் ஒரு பொதுவான சமூக ஊடகம் என்றவகையிலும் கனடாவில் உள்ள தமிழர்களோடு கடந்த 13 வருடங்களாக இனைய ஊடகமாக செயல்பட்டு வருவதனாலும் பல ஊடகங்கள் கேட்டுக் கொண்டமைக்கு அமையவும் கீழ்வரும் செய்திகளை மக்களோடு பகிர்வதற்கு கருத்து சுதந்திர அடிப்படியில் உடன்பாட்டுள்ளோம்.


40 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்ட புத்தகம்!
[Friday 2020-03-06 17:00]

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்த நோயை பற்றி ஒரு எழுத்தாளர் 1981ல் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இவரது பெயர் டீன் கூன்ட்ஸ். அந்த புத்தகத்தின் பெயர் தி ஐஸ் ஆப் டார்க்னஸ். இது ஒரு திரில்லர் கதை. கிறிஸ்டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி ஒரு முகாமுக்கு செல்கிறார். அங்கு போன ஒரே மாதத்தில் மகன் இறந்துவிடுகிறார். இந்த தகவல் கிறிஸ்டினாவுக்கு சொல்லப்படுகிறது. இதை அவரால் தாங்கவே முடியவில்லை. மகனின் இழப்பையும் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், ஒரு வருடத்திற்கு பிறகு மகனுக்கு அந்த முகாமில் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அப்படி முயற்சி செய்யும்போதுதான், தன் மகன் டேனி சாகவில்லை. உயிருடன் ஒரு மிலிட்டரி கேம்பில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்கிறார்.


அமெரிக்காவில் விடைத்தாளில் வினோத கோரிக்கை வைத்த மாணவன்! Top News
[Monday 2020-03-02 17:00]

அமெரிக்காவில் பள்ளிச்சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த அந்த மாணவன், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஐந்தினை, அது மிகவும் தேவைப்படும் வேறு மாணவனுக்கு வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தான்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா