Untitled Document
June 22, 2026 [GMT]
 
கேரளாவில் புதிதாக உருவாகியிருக்கும் கொரோனா தேவி ஆலயம்!
[Saturday 2020-06-13 17:00]

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர். வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது.


கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தட்டிச்சென்ற பெண்!
[Friday 2020-06-12 17:00]

கனடாவில் லொட்டரியில் $55 மில்லியன் பரிசை வென்றுள்ள பெண் நாட்டில் லொட்டரி டிராவில் ஏழு வெற்றி எண்களையும் அடித்த ஒரே பங்கேற்பாளார் என்ற பெருமையை பெற்றுள்ளார். Yellowknife-ஐ சேர்ந்த Laura Tutcho என்ற பெண்ணே இந்த பெரும் பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி ஆவார். இதன்மூலம் அவருக்கு இரண்டு பெருமைகள் கிடைத்துள்ளது. அதாவது கனடாவில் லொட்டரி டிராவில் ஏழு வெற்றி எண்களையும் அடித்த ஒரே பங்கேற்பாளார் Laura தான்.


திருட சென்ற வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட கொள்ளையர்கள்!
[Friday 2020-06-12 08:00]
குமரி மாவட்டம் தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், நாகர்கோவிலில் உள்ள கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்குள் சமையலறை கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கணவன்- மனைவி இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டில் பல்வேறு இடங்களில் நகை, பணம் இருக்குமா? என்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் என்ன செய்வது என்று யோசித்துள்ளனர். அப்போது கொள்ளையர்களுக்கு பசி எடுத்ததாக தெரிகிறது.


தனது மொத்த சொத்துக்களையும் யானைகளின் பெயரில் எழுதி வைத்த நபர்!
[Thursday 2020-06-11 08:00]

இந்தியாவில் தனது சொத்துக்களை யானைகளுக்கு எழுதி வைத்த நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் யானைகளுக்காக அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் தான் செல்லமாக வளர்க்கும் மோதி மற்றும் ராணி என்ற யானைகளுக்காக தனது சொத்தான நிலத்தை அவற்றின் பெயரில் எழுதி வைக்கிறார். இதனால், யானைகள் கோடீஸ்வரர்களாக மாறப்போகின்றன. கடந்த சில நாட்களாக யானைகள் மீதான் தாக்குதல் குறித்து சோகக் கதைகளை நாம் கேட்டு வருகின்றோம்.


8 முறை லொட்டரியில் பரிசை வென்ற அமெரிக்க அதிர்ஷ்டசாலி!
[Wednesday 2020-06-10 17:00]

அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் எட்டு முறை உச்ச பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Dale நகரை சேர்ந்தவர் கேரி பீர்பாய்ண்ட். லொட்டரி சீட்டுகள் வாங்குவதை அதிகளவில் பழக்கமாக இவர் கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இந்த பரிசை அவர் ஏழு முறை வென்றுள்ளார்.


இங்கிலாந்தில் ருசிகரம்: அறுவைசிகிட்சையின் போது செல்பி எடுத்துக்கொண்ட நோயாளி!
[Monday 2020-06-08 17:00]

இங்கிலாந்தில் மூளைக்கட்டிக்கான அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே நோயாளி செல்பி எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் மர்பி(வயது 54) என்ற நபர் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்வதென மருத்துவர்கள் முடிவெடுத்தனர், இதன்படி ஹல் றொயல் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


என் கர்ப்பத்துக்கு கடவுள் தான் காரணம்: அதிர்ச்சியில் ஆழ்த்திய 14 வயது சிறுமி!
[Sunday 2020-06-07 18:00]

தாய்லாந்தில் 14 வயது சிறுமி கர்ப்பமான நிலையில் கடவுள் தான் என்னை கர்ப்பமாக்கினார் என அவர் கூறியது சிறுமியின் தாயார் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாய்லாந்தின் Buriram மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி திடீரென இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சிறுமியிடம் கேட்டதற்கு, கடவுள் தான் தன்னை கர்ப்பமாக்கினார் என கூற அவரின் தாய் மற்றும் மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.


ஒரே இரவில் கோடீஸ்வரரான கனடிய நபர்!
[Friday 2020-06-05 17:00]

கனடாவில் இரவு தூங்க செல்லும் முன்னர் தான் வாங்கிய லொட்டரி சீட்டுகள் குறித்து ஞாபகம் வந்த நபர் அதை பார்த்த போது தனக்கு $25 மில்லியன் பரிசு விழுந்ததை உறுதி செய்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் Ronald ‘Ron’ Cumiskey. இவர் சில தினங்களுக்கு முன்னர் இரவு உணவு சாப்பிட்டு விட்டு விளக்குகளை அணைத்து தூங்க சென்றார்.


அன்னாசிபழத்தில் வெடியை வைத்து ஊட்டிய அரக்கர்கள்: நின்றபடி உயிரை விட்ட கர்ப்பிணி யானை!
[Wednesday 2020-06-03 16:00]

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விவரிக்கையில், அந்த யானைக்கு சுமார் 14- 15 வயது இருக்கும், உயிருக்கு போராடிய கடைசி மூன்று நாட்களிலும் வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை.


பிரேசிலில் ருசிகரம்: கொரோனாவால் உயிர்பிழைத்த குழந்தை!
[Tuesday 2020-06-02 17:00]

பிரேசிலில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பிரேசிலில் பிறந்து சில நாட்களேயான டாம் என்ற ஆண் குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது. இதனை புரோ கார்டியாகோ மருத்துவமனை உறுதி செய்தததும், குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்தனர்.


தனது ஆன்மாவை விற்க முயலும் கனடிய இளம்பெண்!
[Sunday 2020-05-31 17:00]

கனடாவை சேர்ந்த பிரபல பாடகி கிளாரி எலிஸ் பவுச்சர், ஓன்லைன் நுண்கலை கண்காட்சியான "செல்லிங் அவுட்" (Selling out) இல் தனது ஆன்மாவை போன்ற தன் கலையை விற்பனை செய்யவுள்ளார். தொழில் ரீதியாக கிரிம்ஸ் என அழைக்கப்படும் கிளாரி கூறுகையில், இதை வாங்குபவர் எனது ஆத்மாவின் ஒரு சதவீதத்தைப் பெறுவார்.


கொரோனா பீதி: தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள் - உருக்கமான பதிவு!
[Saturday 2020-05-30 17:00]

தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை அடுத்த கிசான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. 80 வயதான இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மராட்டிய மாநிலம் சோலாப்பூர் சென்றார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால், 80 வயதான பாட்டி அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார். உறவினர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.


வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு! Top News
[Friday 2020-05-29 08:00]

வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்விலே, குறித்த பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கின்போது பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன், சானிட்டைசர்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!
[Wednesday 2020-05-27 17:00]

கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர்.


76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ்ந்து வந்த சாமியார்: விஞ்ஞான உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!
[Wednesday 2020-05-27 17:00]

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி (90). இவர் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன் என்ற கோயில் அருகே சிறிய குகை போன்ற ஆசிரமத்தை அமைத்தார். இவர் பெண்களை போல புடவை, நகைகள் அணிந்து வந்ததால் மக்கள் அவரை ‘மாதாஜி’ என அழைத்து வந்தனர். சாது பிரகலாத் ஜனி அம்மனின் அருள் காரணமாக 76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.


சீனாவில் இறந்துபோன தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய்: மனதை உருக்கும் பதிவு!
[Tuesday 2020-05-26 08:00]

சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையில் உரிமையாளர் திரும்ப வருவதும் எதிர்பார்த்து 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாயை தற்போது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். வுஹான் மருத்துவமனை ஊழியர்களால் தற்போது Xiao Bao என பெயரிடப்பட்டுள்ள 7 வயது கலப்பின நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் அதன் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.


இலங்கையில் படித்த, இந்தியாவின் கடைசியாக மூடிசூட்டப்பட்ட அரசர் திடீர் மரணம்!
[Monday 2020-05-25 17:00]

இந்தியாவின் கடைசியாக முடிசூட்டப்பட்ட அரசரும், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தாருமான முருகதாஸ் தீர்த்தபதி தனது 89வது வயதில் மரணமடைந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன். சேர, சோழ, பாண்டியர்களுக்கு இணையான பெருமை இதற்கு உண்டு. 1100ம் ஆண்டில் உருவான இந்த ஜமீனின் 31வது மன்னராக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி.


அமெரிக்காவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நாய்!
[Thursday 2020-05-21 17:00]

அமெரிக்காவின் விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இந்த வருடத்திற்கான பட்டமளிப்பு விழாவை சிறப்புடன் நடத்தியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், லேபரடார் ரெட்ரீவர் வகையை சேர்ந்த மூஸ் என பெயரிடப்பட்ட 8 வயது கொண்ட நாய் ஒன்றுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.


ரஷ்யாவில் கொரோனா வார்டில் நீச்சல் உடையில் வலம் வந்த செவிலியர்!
[Thursday 2020-05-21 08:00]

ரஷிய நாட்டையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அங்கு தாமதமாகவும், மெதுவாகவும் பரவத் தொடங்கிய அந்த வைரஸ், இப்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,900-ஐ தாண்டி இருக்கிறது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் நர்ஸ் பணிபுரிந்து வருகிறார். இப்போது ரஷியாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.


பிரான்சில் கொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி!
[Tuesday 2020-05-19 17:00]

பிரான்சில் 103 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார். Hélène François என்ற அந்த பெண்மணியை மருத்துவர்களும் செவிலியர்களும் கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். Hélène மூன்று மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நான் மிகவும் வலிமையானவள், நான் குணமடைய வேண்டும் என்று விரும்பினேன், கொரோனா வந்தது, சென்றது, கடவுளுக்கு நன்றி என்கிறார் Hélène.


ஒரே நாளில் கோடீஸ்வரரான கனடிய நபர்!
[Sunday 2020-05-17 17:00]

கனடாவில் லொட்டரியில் $1 மில்லியன் பரிசை வென்ற நபர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். Calgary நகரில் வசிப்பவர் Nazar Yousif. இவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. முதலில் இதை நம்பாத இவர் 10 முறை தனக்கு பரிசு விழுந்ததா என செல்போன் செயலியில் பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளார்.


அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டியை கட்டியணைக்க சிறுமி செய்த செயல்!
[Sunday 2020-05-17 08:00]

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியான Paige Okray என்பவரின் பாட்டியும், தாத்தாவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்: மாறுபட்ட டி.என்.ஏ - குழப்பத்தில் தந்தை!
[Friday 2020-05-15 17:00]

சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும். அடையாளம் வெளியிடாத பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தடயவியல் அடையாள மைய டி.என்.ஏ ஆய்வாளர் கூறி உள்ளார். தனது இரட்டை குழந்தைகளின் சோதனை முடிவுகளைப் பெற்றபோது அந்த நபர் திகைத்துப் போனார். ஏன் என்றால் இரட்டை குழந்தைகளில் ஒன்றின் டின்.என்.ஏ மாறுபட்டு உள்ளது அது வேறு தந்தைக்கு பிறந்ததை காட்டுகிறது. இது அவரது மனைவியும் அவரைத் தவிர வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டார் என்பதைக் குறிக்கிறது என்று சீன ஊடக அறிக்கை.


கொரோனாவிலிருந்து மீண்ட 113 வயது மூதாட்டி!
[Thursday 2020-05-14 08:00]

ஸ்பெயின் நாட்டின் ஓலட் நகரில் உள்ள முதியோர் இல்லமொன்றில் தங்கி இருப்பவர், மரியா பிரன்யாஸ். 113 வயதான இந்தப் பாட்டி கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அண்மையில் இவர் முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


சகோதரி மீது பொலிஸில் புகாரளித்த 8 வயது சிறுவன்!
[Thursday 2020-05-14 08:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தன்னை விளையாட்டுக்குச் சேர்க்காத சகோதரி உள்ளிட்ட ஐந்து சிறுமிகளைக் கைது செய்ய வேண்டும் என 8 வயதுச் சிறுவன் பொலிசாரை நாடிய சம்பவம் நடந்துள்ளது. கோழிக்கோடு சிட்டி கஸபா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உமர் நிதார். புதிய பாலம் அருகில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகச் சென்ற காவல் அதிகாரிகளிடம் சிறுவன் உமர் நிதார் ஒரு புகார் மனு அளித்தான்.


புதைக்கப்படும் தருவாயில் கையசைத்த சடலம் - திகிலூட்டும் காட்சி! Top News
[Wednesday 2020-05-13 17:00]

இந்தோனேஷியாவில் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் இருந்த சடலம் திடீரென கையசைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி திகிலைக் கிளப்பியுள்ளது! இந்தோனேஷியாவின் Manado நகரில் இறந்த ஒருவரை புதைப்பதற்காக அவரது உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்கின்றனர். அந்த சவப்பெட்டியில், இறந்தவரின் முகத்தைப் பார்க்கும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டிருந்தது.


அமெரிக்க இளைஞனுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்: பின்னர் நடந்த சம்பவம்!
[Sunday 2020-05-10 08:00]

அமெரிக்காவில் கீழே கிடந்த சுமார் 135,000 டொலர் பணத்தை, இளைஞன் ஒருவன் நேர்மையாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்த சம்பவம், குடும்பத்தினரை பெருமையடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் New Mexico-வின் Albuquerque-ஐ சேர்ந்தவர் Jose Nuñez Romaniz. 19 வயது இளைஞனான இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தன்னுடைய தாத்தாவிற்கு ஷு வாங்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய முயன்றுள்ளார். இதனால் அதற்கான பணத்தை ஏ.டி.எம் ஒன்றில் டெபாசிட் செய்வதற்காக Wells Fargo வங்கி கிளையின் அருகே இருக்கும் ஏ.டி.எம்மில் பணம் போட்ட போது, அங்கே எதிர்பாரதவிதமாக பிளாஸ்டிக் பை ஒன்று கிழே கிடப்பதைக் கண்டுள்ளார்.


சீனாவில் தாயை உயிருடன் புதைத்த மகன்: 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஆச்சரியம்!
[Saturday 2020-05-09 08:00]

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் 79 வயது மூதாட்டி வாங். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவரை அவரது மகன் மா (வயது 58) கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மா, தனது தாயை சக்கர நாற்காலியில் அமரவைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றார். அதன் பிறகு மா, மட்டும் தனியாக வீட்டுக்கு திரும்பினார். இது பற்றி மாவின் மனைவி ஜாங் அவரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை.


அமெரிக்காவில் தாயிடம் சண்டை போட்டுவிட்டு காரை எடுத்து சென்ற 5 வயது சிறுவன்!
[Wednesday 2020-05-06 17:00]

5 வயது சிறுவன் ஒருவன் கார் ஒன்று வாங்க தாயிடம் சண்டைபோடுக்கொண்டு புறப்பட்ட சம்பவம் லாஸ்ஏஞ்சலில் நடந்துள்ளது. உத்தா நெடுஞ்சாலையில், கார் ஒன்று முறையற்ற வகையில் வந்து கொண்டிருந்ததை பொலிசார் கவனித்துள்ளனர். உடனே அதை நிறுத்த முற்பட்ட பொலிசார், அதன் சாரதியை கண்டு நடுங்கி போகினர். அந்த சாரதியிடம் வயது என்ன என்று கேட்டதற்கு அவர், வயது 5என்று தெரிவித்துள்ளார்.


மர்ம மனிதரால் பேசும் திறனை இழந்த இளம்பெண்!
[Tuesday 2020-05-05 08:00]

கேரளாவில் இளம் பெண் நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற போது முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்த நிலையில் அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்துள்ளார். கோழிக்கோட்டை சேர்ந்தவர் அஞ்சு ஷோபிஷ் (27). இவர் அங்குள்ள Chethukadavu Rajiv Gandhi காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் அஞ்சு தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டு கழிப்பறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று அஞ்சு பார்த்தார்.

 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா