Untitled Document
June 23, 2026 [GMT]
 
பிரித்தானிய கடற்கரையில் சடலமாக கிடந்த 15 அடி நீளமுள்ள மர்ம மிருகம்! Top News
[Sunday 2020-08-02 08:00]

பிரித்தானியாவில் சுமார் 15 அடி நீளமுள்ள ராட்சத கடல் மிருகம் போன்று இருக்கும் உயிரினத்தின் புகைப்பத்தைக் கண்டு பலரும் திகைத்து போயுள்ளனர். பிரித்தானியாவின் Merseyside கடற்கரையில் கடந்த புதன் கிழமை, குறித்த கடல் மிருகம் காணப்பட்டது. இது பார்ப்பதற்கே மிகவும் வினோதமாக உள்ளது. 15 அடி நீளம் கொண்ட இந்த உயிரினம் மீது மற்றொரு உயிரினம் இணைக்கப்பட்டுள்ளதைப் போன்று தெரிகிறது. அது குட்டியின் தொப்புள் கொடியாக இருக்கலாம் அல்லது குட்டியை பெற்றெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


33 வருடங்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த முதியவர்!
[Friday 2020-07-31 08:00]

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.


ரூ.47 ஆயிரத்திற்கு ஏலத்தில் விலை போன அதிசய மீன்!
[Saturday 2020-07-25 17:00]

பொதுவாக மீன் என்றால் அசைவப்பிரியர்களுக்கு அலாதி பிரியம் என்றே கூறலாம். ஆம் மட்டன், சிக்கன் கறிகளை விட கடல் உணவுகளையே அசைவப் பிரியவர்கள் அதிகமாக விரும்புகின்றனர். இங்கு ஒரே ஒரு மீனை ஏலம் எடுப்பதற்கு கூட்டம் திரண்டதோடு, அதனை 47 ஆயிரத்திற்கு இறுதியில் ஏலம் எடுத்துள்ளனர்.


கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி!
[Saturday 2020-07-25 07:00]

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி கிராமத்தை சேர்ந்த 101 வயது மூதாட்டியான ஹல்லம்மா என்பவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஏழு நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி உள்ளார் என்பது உறுதியானது.


முதலில் விமானத்தை பயன்படுத்தியது ராவணன்தான்: இலங்கை அரசு!
[Sunday 2020-07-19 17:00]

ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராமர் ராணவனுடன் சண்டையிட்டு சீதையை மீட்பதாக புராணம் கூறுகிறது. இலங்கை அரசு ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார். அவர்தான் உலகின் முதல் விமானி என்று கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.


மனித உதடு மற்றும் பல்லை கொண்டிருக்கும் அதிசய மீன்!
[Sunday 2020-07-19 17:00]

மனிதனின் பல் மற்றும் உதடு போன்று இருக்கும் மீனின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அப்படி ஒரு மீன் உண்மையிலே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுலை மாதம் 2-ஆம் திகதி மலேசியாவை சேர்ந்த @raff_nasir என்ற இணையவாசி, தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், மனிதனின் உதடு மற்றும் பல் இருக்கும் மீனின் புகைபடத்தை பதிவிட்டு, இதன் உதடுகள் என்னுடையதை விட வெப்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்களை வியப்பில் ஆழ்த்திய வைரம் பதித்த முகக்கவசம்!
[Saturday 2020-07-11 17:00]

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம். ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்ய இளைஞன் கொடுத்த வரதட்சணையால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்! Top News
[Friday 2020-07-10 17:00]

இந்தோனேசியாவில் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக மணமகன் கொடுத்த பொருள் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நடத்தும் திருமணத்தில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுப்பது. அப்படி Iwan Firman Wahyudi என்ற சாதாரண பணியில் உள்ள ஏழை இளைஞனுக்கும், Helmi Susanti என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.


தடைகளை தாண்டி பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்!
[Thursday 2020-07-09 17:00]

பெண் கருத்தடை சாதனத்தை மீறி கருத்தரித்த ஒரு பெண்ணிற்கு வடக்கு வியட்நாமில் உள்ள ஹைபோங் சர்வதேச மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தையின் கையில் அவரது தாயின் கருத்தடை சாதனமும் இருந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவர் மகப்பேறியல் நிபுணர் டிரான் வியட் பூங் ஆச்சர்யம் அடைந்து, குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை அப்படியே புகைப்படம் எடுத்துள்ளார்.


பரோட்டாவில் முககவசம்: உணவகத்தில் நிரம்பி வழியும் மக்கள் - எங்கு தெரியுமா?..
[Wednesday 2020-07-08 08:00]

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. அப்படி இந்தியாவிலும் அதிகமாக பரவி வரும் வேலையில், விழிப்புணர்வுடன் இருக்க அரசு பல கோரிக்கைகளை அன்றாடம் எழுப்பி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுரையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுக்காக பிரபல தனியார் உணவகம் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது.


$100,000 பரிசு விழுந்த லொட்டரி சீட்டை கிழித்தெறிந்த கனடிய பெண்: பின்னர் நடந்த சம்பவம்!
[Tuesday 2020-07-07 17:00]

கனடாவில் 86 வயது பெண்ணுக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ள நிலையில் அதன் சுவாரசிய பின்னணி குறித்து தெரியவந்துள்ளது. Brantford நகரை சேர்ந்தவர் Elizabeth Hardwicke (86). இவர் LOTTO 6/49 மற்றும் LOTTO MAX ஆகிய இரண்டு வகையான லொட்டரி டிக்கெட்கள் வாங்கினார். இந்த லொட்டரி டிக்கெட்களுக்கு பரிசு விழுந்ததா என மளிகை கடைக்கு சென்று பார்த்த போது LOTTO MAX டிக்கெட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்து கொண்டார்.


நைஜீரியாவில் திடீர் கோடீஸ்வரரான 4 மாத குழந்தை!
[Monday 2020-07-06 17:00]

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். நைஜீரியா லவுராய்கிஜி என்ற பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்தார்.


முகநூல் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க்கை கோடீஸ்வரனாக மாற்றும் இலங்கையர்கள்!
[Monday 2020-07-06 08:00]

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை வேட்பாளர்களினால் பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரச்சார நடவடிக்கை காரணமாக பாரிய அளவு பணம் வெளிநாட்டுகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார். சமூக ஊடகம் தொடர்பில் விழிப்புணர்வின்றி வேட்பாளர்கள் செயற்படுவதன் காரணமாக இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தென் ஆப்பிரிக்க நாடுகளில் உலா வரும் நாய் முகத்துடன் உள்ள வவ்வால்!
[Saturday 2020-07-04 17:00]

நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். "இதுவரை பல வித்தியாசமான வவ்வால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன்பறந்து கொண்டிருக்கிறது ” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


கனடிய பெண்ணுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
[Saturday 2020-07-04 17:00]

கனடாவில் பல்பொருள் மளிகை கடையில் லொட்டரி சீட்டுகள் வாங்கிய பெண்ணுக்கு $150,000 பரிசு விழுந்துள்ளது. ஒன்றாறியோவை சேர்ந்தவர் ஹீத்தர் பேக்மேன். இவர் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் ஹீத்தர் சமீபத்தில் பல்பொருள் மளிகை கடைக்கு சென்று அங்கு விற்கபட்ட பொருட்களை வாங்கியதோடு அதே இடத்தில் விற்பனை செய்யப்பட்ட லொட்டரி சீட்டுகளையும் வாங்கினார்.


இந்தியாவில் தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் நபர்!
[Saturday 2020-07-04 16:00]

இந்தியாவில் நபர் ஒருவர் தங்க மாஸ்குடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.


உலகில் தற்போது அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த பூனை மரணம்!
[Saturday 2020-07-04 08:00]

இங்கிலாந்து நாட்டின் எக்ஸ்டர் நகரை சேர்ந்தவர் மைக்கில் ஹெரிட்டேஜ். தற்போது 52 வயது நிரம்பிய இவருக்கு 1988 ஆம் ஆண்டு தனது 20-வது வயது பிறந்த நாளின் போது அவரது நண்பர் பூனைக்குட்டி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். ரூபில் என பெயர் வைத்து அந்த ஆண் ஹெரிட்டேஜ் வளர்த்து வந்துள்ளார். மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த செல்லப்பிராணி ரூபிலுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 31 வயது பிறந்துள்ளது.


முற்றிலும் தங்கத்தாலான விடுதி: எங்கு தெரியுமா?.. Top News
[Friday 2020-07-03 18:00]

கைப்பிடி முதல் கழிவறை வரை முழுவதும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஹொட்டல் ஒன்று வியட்நாம் தலைநகரில் திறக்கப்பட்டுள்ளது. வியட்நாம் தலைநகரான Hanoiயில் திறக்கப்பட்டுள்ள அந்த ஹொட்டலுக்கு The Dolce Hanoi Golden Lake ஹொட்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது. தங்க டைல்ஸ் பதித்த இந்த ஹொட்டலைக் கட்டி முடிக்க 11 ஆண்டுகள் பிடித்துள்ள நிலையில், உலகிலேயே இப்படி தங்கத்தால் இழைக்கப்பட்ட முதல் ஹொட்டல் இதுதான் என கருதப்படுகிறது.


அவுஸ்திரேலியாவில் 8,500 வருடங்களுக்கு முன் நீருக்கு அடியில் வாழ்ந்த பழங்குடிகளின் இடம் கண்டுபிடிப்பு!
[Friday 2020-07-03 08:00]

ஆஸ்திரேலிய நாட்டில் மேற்கு கடலோரத்தில் 8,500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் வாழ்ந்ததாக கருதப்படக்கூடிய இடங்கள், தண்ணீருக்கு அடியில் 14 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகில் மற்றொரு இடத்தில் 2 மீட்டர் ஆழத்தில் பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிற கல் கருவிகளையும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த இரு இடங்களும் இன்னும் பழமையானதாக கூட இருக்க வாய்ப்பு உண்டு என்று புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


மெக்சிகோவில் பெய்த கொரோனா மழை: அதிர்ச்சியில் மக்கள்!
[Tuesday 2020-06-30 18:00]

கொரோனா வைரஸ் வடிவிலான ஆலங்கட்டி மழை மெக்சிகோவில் பெய்து நகர மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோவின் நியூவோ லியோன் மாநிலத்தில் உள்ள நகராட்சி மான்டிமோரெலோஸில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதில் விழுந்த பனிகட்டியின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன அந்த படங்கள் பனிக்கட்டி கூர்முனைகளால் வடிவமைக்கப்பட்ட பெரிய ஆலங்கட்டி கற்களைப்போல் உள்ளதை காட்டுகின்றன, இது கொரோனா வைரஸ் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது.


பூமியை விட பெரிதான கரும்புள்ளிகள் சூரியனில் கண்டுபிடிப்பு!
[Saturday 2020-06-27 17:00]

சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் துணை பொது இயக்குனர் டாக்டர் இலியாஸ் பெரினினி கூறியதாவது: சூரியனில் கருப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கருப்பான நிறத்தில் உள்ள புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களை காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது. உதாரணமாக, கருப்பு புள்ளியை சுற்றி உள்ள இடத்தில் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால், புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம்.


கொரோனாவிலிருந்து மீண்ட 114 வயது முதியவர்!
[Saturday 2020-06-27 08:00]

கொரோனா வைரஸ் தொற்று முதியவர்களைத்தான் அதிகமாக தாக்குகிறது, முதியவர்களைத்தான் பெருமளவில் பலி கொள்கிறது. ஆனால் அதிலும் சில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சதம் அடித்து 114 வயதான அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்ற மனிதர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார். இவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலைநகர் அடீஸ் அபாபா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்கக்கப்பட்டார்.


மிகவும் விலையுயர்ந்த ஈவியன் குடிநீரை தண்ணீர் தொட்டியில் நிரப்பிய அமீரக கோடீஸ்வரர்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
[Tuesday 2020-06-23 08:00]

லண்டனில் உள்ள 60 மில்லியன் பவுண்டுகள் பெறுமதி கொண்ட மாளிகையின் தண்ணீர் தொட்டியில் அமீரக கோடீஸ்வரர் ஒருவர் ஈவியன் குடிநீரை நிரப்பிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் என்பவரே தண்ணீர் தொட்டியில் உயர் ரக ஈவியன் குடிநீரை நிரப்பியவர். இதற்காக ஈவியன் குடிநீர் போத்தல்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து பிரசவித்த தாயார்: நெகிழ்ச்சி சம்பவம்!
[Sunday 2020-06-21 17:00]

பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி ஜெசிகா. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து ஜெசிகா radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது.


சூரிய கிரகணத்தின் போது தமிழக கிராமங்களில் நடந்த அபூர்வ நிகழ்வு! Top News
[Sunday 2020-06-21 17:00]

உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பூமி, சூரியன், நிலவு ஆகியன நேர்க்கோட்டில் வருவதுதான் சூரிய கிரகணம். ஆபூர்வமான சூரிய கிரகணமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று இந்தியாவில் காலை 9.58 மணிக்கு துவங்கியது. சுமார் 6 மணி நேரம் இந்த நிகழ்வு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தல்!
[Sunday 2020-06-21 08:00]

ஜூன் 21-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது. அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.


காதலுடன் வீட்டில் இருந்த கனடிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Friday 2020-06-19 17:00]

கனடாவில் இளம்பெண்ணுக்கு லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்துள்ள நிலையில் மகிழ்ச்சியுடன் அது குறித்து அவர் பேசியுள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் விக்டோரியா நகரை சேர்ந்தவர் லவுரா ரம்ஸ்டன். இளம்பெண்ணான இவர் தனது காதலனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த போது Set for Life என்ற சுரண்டல் லொட்டரி டிக்கெட்டை வாங்கி விளையாட முடிவு செய்தார்.


கனடாவில் கொட்டித்தீர்த்த விசித்திர மழை!
[Thursday 2020-06-18 17:00]

கனடாவின் பல பகுதிகள் சூறாவளி, புயல், மழை என பல்வேறு வானிலைகளை அனுபவித்த நிலையில், கால்கரி பகுதியை கல் மழை அல்லது ஆலங்கட்டி மழை தாக்கியுள்ளது. டென்னிஸ் பந்து அளவிலான பனிக்கட்டி உருண்டைகள் வானிலிருந்து வீழ்ந்ததில் கார்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. ஐந்தாவது வார்டின் கவுன்சிலரான George Chahal கூறும்போது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களில் சேதமடையாத கார் ஒன்றுகூட இல்லை எனலாம் என்கிறார்.


பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்: ஆய்வில் தகவல்!
[Wednesday 2020-06-17 17:00]

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர்.


இந்தோனேசியாவில் வளர்ப்பு மகனை திருமணம் செய்துகொண்ட 65 வயது பெண்!
[Sunday 2020-06-14 18:00]

இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகனை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார். Mbah ஏற்கனவே மூன்று இளம்பெண்களை தனது மகள்களாக தத்தெடுத்துள்ளார். இந்த சூழலில் வளர்ப்பு மகன் Ardi-ஐ Mbah சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து Mbah கூறுகையில், எனக்கு முதலில் Ardi-ஐ திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா