Untitled Document
June 22, 2026 [GMT]
 
அமெரிக்காவில் 61 வயது மூதாட்டியை கரம்பிடித்த 24 வயது இளைஞன்!
[Sunday 2022-07-03 18:00]

அமெரிக்காவில் 61 வயது பெண்ணிற்கும், 24 வயது இளைஞனுக்கும் திருமணம் நடந்த நிலையில் குழந்தை தொடர்பில் தம்பதி முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Quran McCain (24) என்பவரும் McGregor (61) என்ற பெண்ணும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் தங்கள் கனவு குழந்தையை பெற்று கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


மக்களிடையே பிரபலமாகும் கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்'!
[Friday 2022-07-01 16:00]

சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்' மதுபான பிரியர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து 'நியூவாட்டர்' என்ற பெயரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


எலுமிச்சை பழத்தால் கோடீஸ்வரியான அமெரிக்க இளம்பெண்!
[Thursday 2022-06-30 16:00]

எலுமிச்சை பழங்களால் 17 வயது பெண் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 17 வயது மிகைலா உல்மர்(Mikaila Ulmer). இவரின் சொத்து மதிப்பு 5 மில்லியன் டொலர்கள் (ரூ 1,81,35,67,500.00) வரை இருக்கும். இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மீ அண்ட் தி பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக மிகைலா உல்மர்(Mikaila Ulmer) உள்ளார்.


13 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஒற்றை மீன்!
[Wednesday 2022-06-29 08:00]

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூரிலுள்ள திகா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 55 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான டெலிய போலா மீன் 13 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களில் பல வகைகள் உண்டு, பெரும்பாலும் மீன்கள் புரதச் சத்து மிகுந்த உணவு ஆகும், உணவுக்காக பிடிக்கப்படும் மீன்கள் ஒருபுறம் என்றால் மருந்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மீன்களும் தனி ரகம்.


பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவர இனம்!
[Sunday 2022-06-26 17:00]

உத்தரகாண்ட் மாநில வனத்துறை மேற்கு இமயமலைப் பகுதியில் அரிய வகை தாவரத்தை கண்டுபிடித்துள்ளது. மேற்கு இமயமலைப் பகுதியில் முதன்முறையாக 'யூட்ரிகுலேரியா பர்செல்லாட்டா' என்ற தாவர இனம் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதே போல, இதுவரை வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 20 தாவர இனங்கள் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.


மணமகள் தேவை: சுவரொட்டியால் பிரபலமான இளைஞர்!
[Thursday 2022-06-23 18:00]

தமிழகத்தின் மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு நடந்துள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த சுதர்சன்-சந்திரா தம்பதியின் மகன் ஜெகன். 27 வயது பட்டதாரி இளைஞரான இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், விரைவில் திருமணம் ஆக ஜெகன் நூதனமுறையை கையில் எடுத்துள்ளார்.


முன்னணி நிறுவனத்தின் பானத்திற்கு அடிமையான பிரித்தானிய நபர்!
[Sunday 2022-06-19 19:00]

பிரித்தானியாவில் பெப்சிக்கு அடிமையான ஒருவர், 20 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 கேன்கள் குடித்ததாக கூறுகிறார். பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடித் தொழிலாளி ஒருவர், 20 ஆண்டுகளாக தினமும் 30 கேன்கள் பெப்சியைப் பருகியதாகவும், இதனால் ஓர் ஆண்டுக்கு 8,500 அமெரிக்க டொலர் செலவழித்ததாகவும், ஹிப்னோதெரபிக்கு பிறகு தனது பழக்கத்தை உதறித்தள்ளியதாகக் கூறினார். 41 வயதான ஆண்டி க்யூரி (Andy Currie) தினமும் காலையில் ஒரு லிட்டரும், மேலும் நாள் ஒன்றுக்கு 9 லிட்டரும் பெப்சி குடித்துள்ளார்.


45 ஆண்டுகளாக உணவின்றி வாழ்ந்து வரும் வினோத மனிதர்!
[Saturday 2022-06-18 16:00]

45 ஆண்டுகளா உணவு சாப்பிடாமல் உயிருடன் வாழும் நபர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிஅருகே கட்டையாண்டிபட்டியை சேர்ந்தவர் நல்லு (வயது 80). இவரது மனைவி அழகி. இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இதில் சின்னகருப்பி என்ற மகள் இறந்து விட்டார். நல்லு சுமார் 50 ஆண்டு காலமாக வேகுப்பட்டியில் உள்ள ஒரு நகரத்தாரின் இல்லத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார்.


செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த புகைப்படத்தால் அதிர்ந்து போன விஞ்ஞானிகள்! Top News
[Friday 2022-06-17 16:00]

செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய பாம்புத்தலைப் போன்ற உருவம் தென்பட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பால்வெளியின் அழகான மற்றும் சிவப்பு கிரகம் செவ்வாய் கிரகமாகும். தொலைவிலிருந்து அதை பார்க்கும் போது அதன் ஜொலிக்கும் சிவப்பு நிறம் காண்போரை சிலிர்க்க வைக்கும் அளவு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.


650 வருடங்களுக்கு பின் கடலில் இருந்து வெளிவந்த பிரம்மாண்ட நகரம்!
[Wednesday 2022-06-15 18:00]

இங்கிலாந்தில் 650 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப்போன நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பண்டைய இங்கிலாந்தின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று ராவென்சர் ஆட். கோட்டை, துறைமுகம் என செழுமையாக இருந்த இந்நகரம் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக 1362 ஆம் ஆண்டு மூழ்கிப்போனது. இந்நகரம், மீன்பிடி படகுகள் மற்றும் சரக்கு கப்பல்களின் ஓய்விடமாகவும் இருந்திருக்கிறது.


அமெரிக்க பெண்ணுக்கு 2 முறை அடித்த பேரதிர்ஷ்டம்!
[Monday 2022-06-13 16:00]

கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பதுபோல அமெரிக்க பெண் ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக லாட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு விழுந்து உள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் ஸ்பிரிங் வேலி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பெண் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி) உச்சபட்ச பரிசு தொகை கிடைத்திருக்கிறது.


ஆயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி: பிரித்தனிய விஞ்ஞானி அசத்தல்!
[Thursday 2022-06-09 16:00]

வாழ்நாள் முழுவதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் அணுக்கழிவு மூலம் வைர பேட்டரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கான இந்த பேட்டரிகள் ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும்.


மறைந்த கணவரின் மறுபிறவி என நம்பி நாகப்பாம்புடன் வாழ்ந்து வந்த பெண்மணி!
[Tuesday 2022-06-07 18:00]

இந்தியா மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மானஷா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் சரவல்லா மவுனேஷ் கம்பாரா இறந்துவிட்டார்.


கனேடிய நபருக்கு எதிர்பாராத நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-06-06 18:00]

கடந்த சனிக்கிழமையன்று இடமடபெற்ற லோட்டோ 6-49 ஜாக்பாட்டில் ஒன்ராறியோ நபர் ஒருவர் $6 மில்லியனை வெற்றி பெற்று பேரதிஸ்டத்தை பெற்றுள்ளார். இருப்பினும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட $1 மில்லியன் பரிசை ப்ரேரிஸில் உள்ள ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், ஜூன் 8 அன்று நடக்கவிருக்கும் அடுத்த லோட்டோ 6-49 டிராவிற்கான ஜாக்பாட் $5 மில்லியனாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இறந்த தந்தையை உயிருடன் கொண்டுவந்த குடும்பத்தார்!
[Friday 2022-06-03 18:00]

தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார்.


தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இந்திய இளம்பெண்!
[Friday 2022-06-03 06:00]

இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார். க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை என்று யாரும் இல்லை.


'பிண நீரை' விற்று பணம் சம்பாதிக்கும் வினோத பெண்!
[Saturday 2022-05-28 16:00]

அமெரிக்காவில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட ஏரிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்று அழுக்கான போத்தல் நீரை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில், லாஸ் வேகாஸின் மீட் (Mead) ஏரியின் கரையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு கடைக்காரர் அப்பகுதியால் உருவாக்கப்பட்ட புதிய ஆர்வத்திலிருந்து லாபம் ஈட்ட ஒரு தனித்துவமான வழியைக் கண்டுபிடித்துள்ளார்.


76 வயது மூதாட்டியை கரம்பிடிக்கும் 19 வயது சிறுவன்!
[Friday 2022-05-27 17:00]

19 வயது சிறுவனுக்கு 76 வயது ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளமை நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் திருமணம் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என அந்த சிறுவன் கூறியிருக்கிறான். 19 வயதான கியூசெப் டி'அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.


நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்!
[Thursday 2022-05-26 16:00]

கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்கு ஜாக்கி என்று பெயரிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.


83 வயதில் ஆபாசப்பட நட்சத்திரமாக மாறிய பாதிரியார்!
[Wednesday 2022-05-25 17:00]

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு, 83 வயதில் ஆபாச திரைப்பட நட்சத்திரமாக மாறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாதிரியார் நார்ம் செல்ஃப் (Norm Self) சமீபத்தில் தனது முதல் அடல்ட் திரைப்படத்தில் நடுத்துள்ளார். மேலும், அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்று விவரித்துள்ளார். தகவல்களின்படி, நார்ம் செல்ஃப் முன்பு போதகராகப் பணியாற்றினார், ஆனால் பல தசாப்தங்களுக்கு முன்பு விலகினார். பின்னர் அவர் வயது வந்தோருக்கான திரைப்படத் துறையில் நுழைந்தபோது அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை உணர்ந்தார்.


உலக நாடுகளை மிரள வைத்த இலங்கை தற்காப்பு கலை!
[Tuesday 2022-05-24 16:00]

அங்கம்பொர என்பது இலங்கைக்கே உரித்தான ஒரு தற்காப்புக்கலை. இந்த பெயர் உலகில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும் இந்த தற்காப்புக் கலையின் தனித்துவத்தின் காரணமாக, இப்போது பலர் அதைப் பற்றி அறியத் தொடங்குகிறார்கள். கிராமப்புறங்களில் மறைந்திருந்த அங்கம்பொர கலை படிப்படியாக வெளிவரும் காலம் தான் இது.


ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலத்தில் விற்கப்பட்ட கார்! Top News
[Saturday 2022-05-21 16:00]

உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலத்திற்க்கு சென்று விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் இன்றைய நவீன காலக்கடத்தில் பல பொருட்கள் வந்தாலுமே பழைய பொருட்களுக்கு எப்பவுமே மவுசு இருக்கதான் செய்கிறது. அதனால் தான் பழைய ஓவியங்கள், பொருட்கள், உபகரணங்கள் என பலவும் ஏலத்தில் பலரால் அதிகமான விலைக்கு வாங்கப்படுகிறது.


ஓட்டை குடையின் விலை 1.2 லட்ச ரூபாய்: அப்படி என்ன சிறப்பு?
[Friday 2022-05-20 16:00]

ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.


திகதியை சொன்னால் கிழமையை சொல்லும் சிறுவன்!
[Tuesday 2022-05-17 16:00]

வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் - சங்கீத பிரியா தம்பதியரின் மகன் ரக்ஷன். 5 வயது மட்டுமே நிரம்பிய இவ்விறுவனிடம் ஏதேனும் ஒரு தேதியை குறிப்பிட்டு கேட்டால், அந்த தேதி என்ன கிழமையில் வருகிறது என்பதை சரியாக கூறுகிறான்.


தங்களுக்கு தாங்களே தீவைத்து கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி!
[Friday 2022-05-13 16:00]

ஹாலிவுட்ன் ஜோடி கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர். இவர்கள் இருவரும் ஸ்டண்ட் கலைஞர்கள். இருவரும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் காதலில் விழுந்தனர். இவர்கள் தங்கள்திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி உள்ளனர்.


சேனைக்கிழங்கில் பூத்த வினோத பூ! Top News
[Monday 2022-05-09 17:00]

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வடகாட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தோட்டத்தில் விளைந்த சேனைக்கிழங்குகளை அறுவடை செய்து வீட்டில் பதப்படுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதிசயிக்கும் வகையில் சேனை கிழங்கிலிருந்து, ஒரு அடி உயரத்தில் அழகான தோற்றத்தில் ஒற்றைப்பூ பூத்துள்ளது.


21 வருடங்களாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்துவந்த நபர்!
[Friday 2022-05-06 16:00]

தாய்லாந்தில் காதல் மனைவியின் சடலத்தை 72 வயதான முதியவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் செய்துள்ள சம்பவம் ஒறு பதிவாகியுள்ளது. தற்போது, மனைவியின் சாம்பலை வீட்டிலேயே வைத்து, அவரது பெயரில் அறப்பணி செய்துவருகிறார் சார்ன் ஜன்வாட்சாக்கல் (Mr Charn) எனும் காதல் கணவர்.


தங்க நிறத்தில் மாறவிருக்கும் ஈபிள் கோபுரம்!
[Thursday 2022-05-05 16:00]

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி, பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம் தங்க நிறமாக மாற உள்ளது. 1907இல் தங்க நிறத்தில் ஜொலித்த இரும்புப் பெண் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்திற்கு பல முறை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. முதலில் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட அக்கோபுரம், இப்போது ஒலிம்பிக் போட்டிகளையொட்டி ஒலிம்பிக் மெடல்களை பிரதிபலிக்கும் வகையில் பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாற உள்ளது.


விண்வெளியில் மற்றுமொரு பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
[Tuesday 2022-05-03 16:00]

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. பூமியை போல சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா என்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


தனது சிறுநீரை குடித்து உயிர் வாழும் வினோத நபர்!
[Tuesday 2022-05-03 08:00]

தினமும் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழும் இளைஞர் பற்றி பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின், ஹாம்ப்ஷயர் பகுதியில் வசிப்பவர் ஹாரி மட்டாடின்(34). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அவருடைய சிறுநீரை குடித்து வருகிறார். அதற்கு காரணமாக அவர் கூறியது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.

Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா