Untitled Document
June 22, 2026 [GMT]
 
ஜேர்மனியில் பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன்!
[Friday 2023-08-25 19:00]

ஜேர்மனியின் ஹார்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவரை நேரில் பார்த்துள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜேர்மன் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபர் குடியிருந்து வருவதாக நம்பப்படுகிறது. அந்த மர்ம மனிதரின் புகைப்படத்தை இரு மலையேறும் பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.


கண்களுக்கு தண்ணீர் தெரியாத விசித்திர நதி!
[Sunday 2023-08-20 07:00]

நதி என்றால் நிறைய தண்ணீர் ஓடும். நடுவில் அழகான மணல் திட்டுகள் இருக்கும். ஆனால், ரஷ்யாவில் உள்ள ஒரு நதியில் அப்படி எதுவும் இல்லை. தண்ணீரின் தடயமே தெரியவில்லை. அப்படியென்றால் அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை என்றுதானே அர்த்தம்.. மழைக்காலங்களில் மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறீர்களா..? ஆனால் அப்படி இல்லை. இந்த ஆற்றில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கற்கள் பெரிய பாறைகள். அதனால்தான் இது 'ஸ்டோன் ரிவர்' அல்லது ஸ்டோன் ரன் என்று அழைக்கப்படுகிறது.


16 வயது சிறுவனை காதலித்து கரம்பிடித்த 41 வயது பெண்!
[Monday 2023-08-14 06:00]

இந்தோனேசியாவில் தோழியின் 16 வயது மகனை 41 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த 41 வயதான மரியானா என்ற பெண், 16 வயதுடைய கெவின் என்ற சிறுவனுடன் சிறு வயது முதலே பழகி வந்துள்ளார்.


நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி!
[Wednesday 2023-08-09 06:00]

அமெரிக்காவில் புற்று நோயால் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமி தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் எம்மா எட்வர்ட் என்ற 10 வயது சிறுமி லுகேமியாவால் இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” என்ற தன்னுடைய அன்பான நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Sunday 2023-08-06 08:00]

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள்!
[Monday 2023-07-31 18:00]

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில வாரங்களுக்கு முன்பு ராட்சத உலோகப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள் ஆகும்.


அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு!
[Wednesday 2023-07-26 06:00]

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்.. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பார்க்க ஆசிபாபாத் காடுகளுக்குச் செல்ல வேண்டும். இயற்கையின் அழகை ரசிக்க விரும்புவோருக்கு இந்த இடம் சிறந்த தேர்வாகும்.


83 வயது மூதாட்டியை கரம்பிடித்த 37 வயது நபர்!
[Tuesday 2023-07-25 19:00]

தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி இருக்கும் சிலருக்கு 10 வயது இடைவெளி இருக்கும். 46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு.


வயதாவதைத் தடுக்கும் புது வித மருந்து!
[Monday 2023-07-17 18:00]

அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர் இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது. இது மனித தோலின் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்ததாக கூறப்படுகிறது.


தங்க நிறத்தில் அபூர்வ ஆமை!
[Monday 2023-07-10 18:00]

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் ஆமை ஒன்று தங்க நிறத்தில் இருப்பதால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, ஆமைகள் ஆலிவ்-பச்சை, பச்சை அல்லது சிவப்பு பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பல வகையான ஆமை இனங்கள் பரந்த அளவிலான வண்ணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் தங்க நிறத்தில் உள்ள இந்த ஆமை அபூர்வம் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


துர்நாற்றமடிக்கும் நதியைத் திருமணம் செய்த இளம்பெண்!
[Saturday 2023-07-08 18:00]

பிரித்தானிய இளம்பெண் ஒருவர், துர்நாற்றம் அடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலைச் சேர்ந்த மேகன் ட்ரம்ப் (27)என்னும் இளம்பெண், துர்நாற்றமடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.


தென்கொரிய மக்களுக்கு ஒரே இரவில் 1 வயது குறைந்த சம்பவம்!
[Friday 2023-07-07 19:00]

தென்கொரியாவில் புதிய சட்டத்தின் மூலம் மக்களுக்கு ஒரே இரவில் ஒரு வயது குறைந்துள்ளது. தென் கொரிய நாட்டில் வயதை கணக்கிடும் முறை வித்தியாசமானது. அங்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே வயது கணக்கிடப்படும்.


வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்ற பசு!
[Tuesday 2023-06-27 18:00]

இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு. திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தீப ஆராதனையின் போது நாட்டு பசுக்களில் இருந்து பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும். இதற்கு 500 பசுக்கள் தேவைப்படும் நிலையில், 200 உயர் ரகத்தை சேர்ந்த நாட்டு பசுக்கள் உள்ளன.


இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த 36 வயது இளைஞர்!
[Saturday 2023-06-24 06:00]

விவசாயி ஒருவர் 36 ஆண்டுகளாக கர்பமாக இருந்த விசித்திரமான செய்தி இது. நாக்பூரைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதைவிட அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், பிறப்பிலிருந்தே அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது.


இணையத்தில் வைரலாகும் உருண்டை வடிவ முட்டை!
[Tuesday 2023-06-20 18:00]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. ஆஸ்திரேலியா- வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார்.


எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகள் கண்டுபிடிப்பு!
[Monday 2023-06-12 18:00]

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களை அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தார்கள்.


தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய பாச மகன்!
[Saturday 2023-06-10 16:00]

தன்னுடைய அம்மா இறந்து விட்டதால் அவரை ஞாபகப்படுத்தும் வகையில் மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு ஆலயம் கட்டிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியா - திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அப்துல் காதர்- ஜெய்லானி பீவி. இவர்கள் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் தந்தை காதர் உயிரிழந்துள்ளார்.


தனிமையில் இருந்த முதலை கர்ப்பம்; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
[Thursday 2023-06-08 19:00]

அமெரிக்காவில் முதலை ஒன்று தானாக கர்ப்பம் அடைந்துள்ள தகவல் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டுவந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது.


சிங்கப்பூரில் உண்மையாகவே நடத்தப்பட்ட Squid Game போட்டி: தமிழகத்தை சேந்தவர் வெற்றி!
[Friday 2023-06-02 06:00]

சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம் போன்ற ஒரு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். தென் கொரிய தொடரான ​​ஸ்க்விட் கேம் (Squid Game) பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Netflix இல் வெளியான பிறகு, இந்தத் தொடர் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


உருளைக்கிழங்கு சீவலால் சாதனை படைத்த இலங்கை!
[Thursday 2023-06-01 17:00]

இலங்கையின் முதலாவது, உருளைக்கிழங்கு சீவல் (Potato Chips) தயாரிப்பு தொழிற்சாலை பெரும் வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. ரூ. 100 மில்லியன் செலவில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமானது, உருளைக்கிழங்கை பெறுமதி மிக்க பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதே என அமைச்சர் தெரிவித்தார்.


டிப்ளமோ பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!
[Saturday 2023-05-27 18:00]

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.


பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழ ரகம்!
[Monday 2023-05-22 18:00]

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான ஊர்ப்புற மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் திட்டமிட்டார் உபேந்திரா சிங். இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்தார்.


ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி!
[Saturday 2023-05-20 17:00]

பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டாகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால் புது புது அப்டேட்டுகளை அந்த நிறுவனம் வழங்கிக்கொண்டு வருகிறது.


பிறந்த குழந்தையின் உடலில் மூன்று பெற்றோரின் DNA!
[Wednesday 2023-05-10 18:00]

பொதுவாக, பிள்ளைகளின் உடலில் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் DNA மட்டுமே இருக்கும். ஆனால், பிரித்தானியாவில் முதன்முறையாக மூன்று பேருடைய DNAவுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. மனித உடல், பல செல்களால் ஆனது, அந்த செல்களுக்குள் பல நுண்ணிய உள்ளுறுப்புகள் உள்ளன, அவற்றில் ஒன்று மைட்டோகாண்ட்ரியா. உணவை ஆற்றலாக மாற்றும் பணியை இந்த மைட்டோகாண்ட்ரியா செய்கிறது.


ஸ்பெயினில் ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்!
[Sunday 2023-04-30 17:00]

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை ஸ்பெயினின் பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.


அமெரிக்காவில் நிர்வாண உணவு விருந்து!
[Friday 2023-04-28 18:00]

அமெரிக்கா - நியூயார்க்கில் ஆடை ஏதுமில்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவும் மூச்சு பயிற்சியும் கலந்த அனுபவத்தை தர ஒரு குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது, சற்று வித்தியாசமாக இருந்தாலும் அபூர்வமான அனுபவத்தை தரும் ஒன்றாக இருப்பதாக அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு!
[Wednesday 2023-04-26 19:00]

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது.


24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை!
[Friday 2023-04-21 17:00]

தெலுங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அங்கு உள்ள கோரட்லா எனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆன் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ஒவ்வொரு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களை கொண்டு பிறந்துள்ளது. இந்த குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் அரிய நிகழ்வு!
[Wednesday 2023-04-19 19:00]

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறதாக கூறப்படும் நிலையில் இந்த அரிய நிகழ்வானது அவுஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. ஆனால் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.


பூனை குட்டியை ஈன்ற ஆண் பூனை: வியப்பில் மருத்துவ உலகம்!
[Friday 2023-04-14 18:00]

திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அணில் பிஸ்வாஸ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட 'மோகி' எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பூனைக்குட்டியை ஈன்றது. அந்த பூனையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள மக்கள் அனில் பிஸ்வாஸின் வீட்டிற்கு திரண்டு கண்டு ரசித்து வருகின்றனர்.

Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா