Untitled Document
June 22, 2026 [GMT]
 
ரூ.25 கோடிக்கு விற்கப்படும் அதிசய பாம்பு!
[Monday 2025-08-04 16:00]

பாம்புகளில் ஒரு இனம் ரூ.25 கோடிக்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வனவிலங்கு நிபுணர் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிய கட்டுக்கதைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தூண்டும் வகையில் வதந்திகளும் உள்ளதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிலும் சில நாடுகளில் இருக்கும் அரியவகை உயிரினங்களை கடத்திச் சென்று கள்ளசந்தையில் விற்பனை செய்யும் செய்கிறார்கள்.


மருத்துவ உலகின் ஆச்சர்யம்: 30 ஆண்டுகளாக உறைந்திருந்த கருவில் இருந்து இரட்டைக் குழந்தைகள்!
[Friday 2025-08-01 17:00]

அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அதி-குளிரூட்டப்பட்ட நிலையில் உறைந்திருந்த கருவில் இருந்து, தற்போது ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் பிறந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளன. அமெரிக்காவின் ஒரேగాன் மாகாணத்தைச் சேர்ந்த ரேச்சல் மற்றும் பிலிப் ரிட்ஜ்வே தம்பதியினருக்கு, அக்டோபர் 31, 2022 அன்று லிடியா (Lydia) மற்றும் டிமோத்தி (Timothy )எனப் பெயரிடப்பட்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.


உலகில் யாருக்குமே இல்லாத ரத்த வகை: பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்!
[Thursday 2025-07-31 16:00]

பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 48 ரத்த வகைகள் உள்ளது. இதில் சில ரத்த வகைகள் மற்றும் உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும். மற்ற ரத்த வகைகள் அரிதாக சிலருக்கே இருக்கும். 48 வது ரத்த வகை, பிரான்ஸின் பாரிஸை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள ரத்த வகை இந்நிலையில், தற்போது இந்தியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் யாருக்குமே இல்லாத புதிய ரத்த வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


"10 திருமணம், 350 துணைவியர்" - யார் இந்த இந்திய மன்னர்?
[Tuesday 2025-07-29 16:00]

இந்தியா ஒரு காலத்தில் மகாராஜாக்களால் ஆளப்பட்டது. இந்த மன்னர்கள் பெரும்பாலும் அவர்களது வீரம், ராஜதந்திரம் மற்றும் போர்த்திறன் ஆகியவற்றிற்காக கொண்டாடப்பட்டனர். ஆனால், அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், நேர்த்தியான அரண்மனைகளும் மக்களின் மனதைக் கவர்ந்தன. இவர்களில், பாட்டியாலாவின் முன்னாள் சுதேச அரசின் மகாராஜா பூபிந்தர் சிங், தனது தனித்துவமான வாழ்க்கைக்காக தனித்து நிற்கிறார்.


மனித மலத்தை பில்லியன் டொலருக்கு வாங்கும் மைக்ரோசாப்ட்!
[Friday 2025-07-25 07:00]

மைக்ரோசாப்ட் நிறுவனம், மனித மலம், உரம் மற்றும் விவசாயக் கழிவுகளை 1.7 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ14,025 கோடி) விலைக்கு வாங்க உள்ளது. இது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட வால்ட் டீப்(Vaulted Deep) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் 12 ஆண்டுகளுக்கு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். மைக்ரோசாப்ட், உலகளவில் கார்பன் தடத்தை குறைப்பதை இலக்காக வைத்துள்ளது. ஏனெனில் அதன் AI செயல்பாடுகள் ஆற்றல் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வை கணிசமாக அதிகரிக்கின்றன.


இரட்டை குழந்தைகளுக்கு திருமணம்: பெற்றோரின் மூட நம்பிக்கை!
[Monday 2025-07-07 16:00]

தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.


2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும்!
[Sunday 2025-06-29 16:00]

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை மண்டை ஓட்டின் அடிப்படையாக வைத்து, பிரித்தானிய பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே, தமிழ்ச் சமூகம், படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக விளங்கியதை, கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிறுவியது.


உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு!
[Wednesday 2025-06-18 19:00]

உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், சீன விஞ்ஞானிகள் 3600°C வெப்பத்தை தாங்கும் ஒரு பொருளை உருவாக்கியுள்ளனர். இதுவரையில் அமெரிக்காவின் F-35 மற்றும் பிரான்சின் Rafale போர் விமானங்கள் உலகின் சிறந்தவையாகக் கருதப்பட்டாலும், இப்போது சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய வகை செராமிக் பொருள் அவற்றை மிஞ்சும் வகையில் இருப்பது உலக நாடுகளையே மிறள வைத்துள்ளது.


இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற பெண்!
[Tuesday 2025-06-10 17:00]

கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


பச்சோந்திகளை போல நிறத்தை மாற்றும் பாம்பு பற்றி தெரியுமா?
[Friday 2025-06-06 18:00]

பாம்புகளில் ஒரு இனத்தை சேர்ந்த பாம்புகள் தங்கள் சுய தேவைக்காக தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளுமாம் இதை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம். பாம்புகள் இயற்கையில் பலவகை உள்ளது. இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதம் பெறும். இவை ஒரு ஊர்வன. நமக்கு தெரிந்த பாம்பு இனங்கள் எல்லாமே விஷமுள்ளவையாக தான் தெரியும்.


ஹொட்டல் அறைகளில் ஏன் கடிகாரம் வைக்கப்படுவதில்லை?
[Thursday 2025-05-29 18:00]

பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணம் பல பேருக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய காலத்தில் மொபைல் போனை பயன்படுத்துவதால் நமக்கு நேரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.


இணையம் இல்லாத கிராமம் இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
[Tuesday 2025-05-27 18:00]

இந்த அழகான கிராமத்தில் இணையம் இல்லை, இன்ஸ்டாகிராம் இல்லை, டிஜிட்டல் பணம் செலுத்துதல் இல்லை. உலகிலேயே மலிவான இணையம் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் 900 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்கள் உள்ளனர். ஆனால் இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் இணையம் இல்லாத ஒரு தொலைதூர கிராமம் உள்ளது.


15 நாட்களுக்கு பெண்களை மனைவியாக வாடகைக்கு விடும் நாடு எது தெரியுமா?
[Saturday 2025-05-24 16:00]

பெண்களை 15 நாட்களுக்கு இன்னொருவருக்கு மனைவியாக கொடுக்கின்றனர். இந்த விசித்திரமான நாடு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது உலகில் மொத்தமாக 195 நாடுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் ஒவ்வொரு பழக்கவழக்கம் உள்ளது. இதில் விநோத பழக்க வழக்கத்தில் முன்வரமாக இருப்பது இந்தோனேசியா தான். இந்த நாட்டில் எங்கும் இல்லாத ஒரு விசித்திரமான பழக்கம் காணப்படுகின்றது.


தான் வளர்த்த நாய்கள் மூலம் பேசும் மறைந்த ராணி எலிசபெத் - ஆவியை உணரும் இளவரசி!
[Sunday 2025-05-18 18:00]

மறைந்த ராணி எலிசபெத் தான் வளர்த்த நாய்கள் மூலம் பேசுவதாக பிரித்தானிய அரச குடும்பம் தெரிவித்துள்ளது. மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் தான் ஆசையாக வளர்த்த நாய்கள் மூலமாக தொடர்பு கொள்வதாக, அவரது மருமகளும் இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவியுமான சாரா பெர்குசன் கூறியுள்ளர். 65 வயதான யார்க் இளவரசி சாரா, லண்டனில் நடைபெற்ற Creative Women Platform Forum மாநாட்டில் இந்த வியப்பூட்டும் கருத்தை தெரிவித்தார்.


ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் கிராமம் - இந்தியாவில் எங்கு உள்ளது?
[Friday 2025-05-16 19:00]

அசாமின் கோக்ரபாரா வட்டத்தில் உள்ள நல்பாரி மாவட்டத்தில் பர்தனாரா என்கிற தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பர்தனாரா கிராமத்தில், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வருகிறது என்பது ஆச்சரியமான விடயம். தனிமைப்படுத்தப்பட்ட கிராமமான பர்தனாராவில், பிமல் தேகா என்பவரின் குடும்பம் மட்டுமே வசித்து வருகிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் குடும்பத் தலைவரான தேகா, தனது குடும்பத்தினருடன் ஒரு தற்காலிக குடியிருப்பில் இருக்கிறார்.


வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்!
[Friday 2025-04-25 18:00]

ஹிம்பா கலாச்சாரத்தை சேர்ந்த பெண்கள் வாழ்நாட்களில் குளிப்பதை தவிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக அவர்கள் வேறு ஏதோ செய்து தங்களை நறுமணத்துடன் வைத்துள்ளளார்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஹிம்பா பெண்கள் மிகவும் அழகான ஆப்பிரிக்க பெண்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரு வசீகர அழகுடன் தென்படுவார்கள். இவர்களின் தலைமுடி மற்றும் தோலில் ஒரு விசித்திரமான சிவப்பு காவி பேஸ்ட்டை பயன்படுத்துவார்கள். இந்த பேஸ்ட் காவி, வெண்ணெய் கொழுப்பு மற்றும் நறுமணம் கொண்ட மூலிகைகள் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும்.


10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு!
[Sunday 2025-04-20 16:00]

99 மில்லியன், அதாவது கிட்டத்தட்ட 10 கோடி ஆண்டுகள் பழமையான சிறிய டைனோசர் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய கால உயிரியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், விஞ்ஞானிகள் மியான்மரில் கண்டுபிடித்த ஒரு டைனோசர் போன்ற சிறிய தலையை 99 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் படிமத்தில் முழுமையாக பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.


AI மூலம் பிறந்த உலகின் முதல் குழந்தை!
[Saturday 2025-04-19 17:00]

செயற்கை நுண்ணறிவு தொழினுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை மெக்சிக்கோவில் பிறந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையமொன்றில் , AI மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின் மூலம் செலுத்தி வெற்றிகரமாக கருவுறச்செய்து, அந்த கருவுற்ற முட்டையை ஒரு 40 வயதான பெண்மணி ஒருவரின் கருப்பையினுள் பொருத்தி, குழந்தையை வளரச் செய்து கடந்த மார்ச் மாதம் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.


உயிரிழந்த தாத்தாவின் சாம்பலை சாப்பிட்ட சிறுவன்: தாயார் அதிர்ச்சி!
[Saturday 2025-04-05 17:00]

பிரிட்டனில் ஒரு வயதுச் சிறுவன் தவறுதலாகத் தமது உயிரிழந்த தாத்தாவின் சாம்பலைச் சாப்பிட்டதாக பிரிட்டன் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) நடந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சிறுவன் வீட்டின் வரவேற்பறையில் விளையாடிக்கொண்டிருந்தான். அவனது தாயார் துணிகளை வைப்பதற்கு மாடியில் உள்ள அறைக்குச் சென்றார். கீழே வந்து பார்த்த தாயாருக்கு அதிர்ச்சி காந்திருந்துள்ளது.


சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
[Saturday 2025-03-29 18:00]

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்!
[Monday 2025-03-24 18:00]

இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.


கனமழையால் செந்நிறமாக மாறிய தீவு!
[Saturday 2025-03-15 16:00]

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் பாய்ந்தோடும் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் கடலும் செந்நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மரணத்தில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்!
[Thursday 2025-03-13 19:00]

அவுஸ்திரேலியாவில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் மருத்துவர்கள் மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.


ரூ.65 கோடிக்கு கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற பிரித்தானிய மாணவி!
[Thursday 2025-03-13 06:00]

பிரித்தானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ.65 கோடிக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி லாரா (Laura), தனது கன்னித்தன்மையை £1.7 மில்லியனுக்கு ( இலங்கை பணமதிப்பில் ரூ.65 கோடி) விற்ற சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் இவ்விபரீதமான ஏலத்தில் மிக உயர்ந்த தொகையை வழங்கி அதைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆறு கிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை!
[Tuesday 2025-03-11 19:00]

அமெரிக்காவின் அலபாமாவில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் எடையைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த குழந்தையின் எடை 6 கிலோவை விட சற்று அதிகம் இருந்ததுதான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்ணின் பெயர் பமீலா மெய்ன். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், பர்மிங்காம் (Birmingham) பகுதியில் வசித்து வருகிறார்.


20 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்!
[Wednesday 2025-03-05 18:00]

20 மனைவிகளுடன் ஒருவர் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தான்சானியாவில் தான் அந்த அதிசய மனிதர் வாழ்ந்துவருகின்றார். அதிலும் தனது 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறாராம் இந்த மனிதர். எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர்.


18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்!
[Wednesday 2025-02-26 06:00]

பிரித்தானியாவின் பிளென்ஹெய்ம் அரண்மனையில் தங்க கழிப்பறை திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்க கழிப்பறை துணிகரமாக திருடப்பட்ட அதிர்ச்சிகரமான தருணத்தை சமீபத்தில் வெளியான பாதுகாப்பு கேமரா காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.


100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் மீண்டும் வந்த அதிசயம்!
[Tuesday 2025-02-18 16:00]

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் தற்போது மீண்டும் வந்துள்ள அதிசயம் பிரேசிலில் நடந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து வரும் நிலையில், மனிதர்களாலும் பல உயிரினங்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றது.


உலகிலேயே விலை உயர்ந்த ரோஜா இதுதான்!
[Thursday 2025-02-13 19:00]

பொதுவாகவே காதலர் தினம் என்று வந்துவிட்டால் ரோஜா தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பும் மலர் என்ற பெருமையையும் இது பெருகின்றது. உண்மையில் ரோஜா மலரின் வாசனைக்கு ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் ஒரு ரோஜாவைின் விலைக்கு ஒரு பெரிய ஆடம்பர மாளிகையே வாங்கிவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?


தங்கத்தில் பூட்டு: ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சரியமான பொருள்!
[Friday 2025-01-31 06:00]

ஜேர்மனியில் பழமையான ரோமன் தங்க பூட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா பகுதியில் 2023-ஆம் ஆண்டு ஒரு உலோகம் தேடுபவர் கண்டுபிடித்த ஒரு முக்கிய ரோமன் காலப்பண்பு தான் இந்த தங்க பூட்டு. வெஸ்ட்பாலியா-லிப்பே பிராந்திய சங்கம் (LWL) இந்த கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியது.

Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா