Untitled Document
February 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புலம்பெயர் தமிழர்களே! ஒத்துழைப்பு தாருங்கள்! - கேப்பாப்பிலவு மக்கள்!
[Monday 2017-02-20 11:00]

முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மக்கள் 2ம் முள்ளிவாய்க்கால் அவத்தையே இப்போதுஅனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 1ம் முள்ளிவாய்க்காலில் கிபிர் விமானங்களின்சத்தங்களும், செல் சத்தங்களும் நிறைந்து கிடந்தது. ஆனால் இப்போது அந்த சத்தங்கள்இல்லாமை ஒன்றே குறை, மற்றபடி முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான வாழ்க்கையே இப்போதும்வாழ்கின்றோம். மேற்கண்டவாறு கேப்பாபிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் கூறியுள்ளனர்.


பரவிப்பாஞ்சான் மக்களும் இன்று போராட்டத்தில் குதிக்கின்றனர்!
[Monday 2017-02-20 07:00]

கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி உரிமையாளர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.


கேப்பாப்பிலவு - அடுத்தடுத்து மாறிய விமானப்படையின் அறிவிப்பு பலகை! Top News
[Monday 2017-02-20 07:00]

கேப்பாப்புலவு- பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினரிடம் இருந்து தமது காணிகளை மீட்பதற்கு இன்று 21 ஆவது நாளாக போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், விமானப்படையினர் மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அறிவித்தல் பலகையை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில், “இது விமானப்படைக்குச் சொந்தமான காணியாகும். தேவையில்லாமல் உட்செல்லத்தடை. தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.


கீத் நொயர் கடத்தல்- சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரிக்கை!
[Monday 2017-02-20 07:00]

ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பான விசாரணைகளை, இறுதிவரை சுயாதீனமான முறையில் முன்னெடுக்க வேண்டும் என, சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இராணுவத்தைச் சேர்ந்த இராணுவ மேஜர் 5 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.இந்த சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கீத் நொயர் கடத்தலில் கோத்தபாயவுக்கு நேரடித் தொடர்பு!
[Monday 2017-02-20 07:00]

நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்ட கீத் நொயர் தொம்பே பிரதேசத்தின் உத்தியோகபூர்வமற்ற இராணுவ பாதுகாப்பு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


சுவிஸ் மாநில தேர்தலில் ஈழத் தமிழர் போட்டி!
[Monday 2017-02-20 07:00]

சுவிஸின் சொலத்தூர்ன் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் 12ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பில் சொலத்தூர்ன் மாநில OLTEN-GÖSGEN தொகுதியில் தொழிலதிபர் ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் போட்டியிடுகிறார். ஈழத் தமிழர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் ஏனைய வெளிநாட்டினருக்காகவும் நீண்ட காலமாக சோஷலிச ஜன நாயக கட்சியுடன் இணைந்து ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் குரல் கொடுத்து வருகிறார்.


30 ஆண்டு ஆயுதப் போராட்டத்தினால் பெறமுடியாத தீர்வை ஒரு வருடத்தில் பெற முடியுமா? - செல்வம் எம்.பி
[Monday 2017-02-20 07:00]

30 வருட ஆயுதப் போராட்டத்தில் முப்படையையும் கொண்ட நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. அப்படி இருக்கையில் ஒரு வருடத்தில் தீர்வு என்பதை எப்படி பெற முடியும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கவிஞர் எம். பரஞ்சோதி எழுதிய 'நாங்கள் விட்டில்கள் அல்ல' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.


மார்ச் 4ஆம் திகதி ஜனாதிபதி யாழ் செல்கிறார்!
[Monday 2017-02-20 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் 4ம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். இதன் போது அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.


சட்டத்தரணியை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தமை தவறு! - மஹிந்த
[Monday 2017-02-20 07:00]

முறையற்ற மேல் நீதிமன்ற நீதிபதி நியமனம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த ராமநாதன் கண்ணன் என்ற சட்டத்தரணி, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கு நீதிச் சேவை சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.


பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மேஜரை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியது அமெரிக்கா!
[Monday 2017-02-20 06:00]

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்துக்குப் பயிற்சிக்காகச் சென்ற அவர், அங்கு தங்கியிருந்த ஹொட்டலிலேயே, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.


புதுக்குடியிருப்பிலும், கேப்பாப்பிலவிலும் தொடரும் போராட்டம்! Top News
[Sunday 2017-02-19 18:00]

தமது காணிகளிலுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரியும் இதே கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதினேழாவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டம் கடந்த மூன்றாம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.


களுத்துறை படகு விபத்தில் 11 பேர் பலி! - தல யாத்திரை சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம் Top News
[Sunday 2017-02-19 18:00]

களுத்துறை, கட்டுக்குருந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகுவிபத்தில் மரணமான 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. களுத்துறையில் நடைபெறும் திருவிழா ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை 20 படகுகளில் மக்கள் பயணித்தனர். இந்த படகுகளில் ஒன்று கடலில் மூழ்கியுள்ள நிலையில், அதில் பயணித்த 11 பேர் பலியாகினர். மேலும் எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த எட்டு பேரும் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.


40 கைதிகள் பயன்படுத்தும் இரண்டு கழிப்பறைகள்! - விமல் வீரவன்சவின் சிறை வாழ்க்கை
[Sunday 2017-02-19 18:00]

தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் 40 கைதிகள் இருப்பதாகவும் இரண்டு கழிப்பறைகள் மாத்திரமே உள்ளதாகவும் விமல் வீரவன்ச சபாநாயகரிடம் கூறியுள்ளார்.


வடமாகாண பாடசாலை மாணவர்கள் நாளை ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டம்!
[Sunday 2017-02-19 18:00]

முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண பாடசாலைகளில் மாணவர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வடமாகாண பாடசாலைகளில் நாளை காலை 7.30 தொடக்கம் 8.30 மணிவரையில் மாணவர்களின் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.


கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக இணைய மூல கையெழுத்து போராட்டம்!
[Sunday 2017-02-19 18:00]

விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இணையவழி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துக்கள் பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.


நெற்றியில் காயத்துடன் முன்னாள் போராளி சடலமாக மீட்பு - கொலையா? Top News
[Sunday 2017-02-19 18:00]

வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 33 வயதான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு காணி பிரச்சினை - மீண்டும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை!
[Sunday 2017-02-19 18:00]

முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


ஒற்றையாட்சி தீர்வுக்காகவே முயற்சிக்கிறார் சம்பந்தன்! - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை
[Sunday 2017-02-19 18:00]

ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தைப் பலர் விமர்சிப்பது தற்காலத்துக்குப் பொருத்தமற்றது. மாறாகத் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப சம்பந்தன் ஐயாவுக்குப் பொருத்தமான கருத்துக்களையும் நடவடிக்கைகளையும்தான் மேற்கொண்டு வருகின்றார் என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.


கீத் நொயர் கடத்தல் - மேலும் இரு இராணுவத்தினர் கைது!
[Sunday 2017-02-19 18:00]

2008ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இரு இராணுவ வீரர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் - 4 பேர் காயம், 6 பேர் கைது!
[Sunday 2017-02-19 18:00]

யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வளலாயில் சாரதியை தாக்கி விட்டு முச்சக்கரவண்டி கடத்தல்!
[Sunday 2017-02-19 18:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு, வளலாய் பகுதியில் சாரதியை தாக்கி, விட்டு முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர்.


மொறக்கொட்டாஞ்சேனை மனித புதைகுழியில் நாளை ஆய்வு!
[Sunday 2017-02-19 09:00]

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கருகே மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தைச் சூழ நாளையும் நாளை மறுதினமும் மேலதிக ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இராணுவத்தின் இரகசிய சித்திரவதை முகாம் இரகசியங்கள் அம்பலம்!
[Sunday 2017-02-19 09:00]

கொழும்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட இரகசிய சித்திரவதை முகாம் பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலேயே இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.


ஜேர்மனியில் தமிழ்ப் பெண்ணை கொலை செய்தவர் சுவிசில் கைது!
[Sunday 2017-02-19 09:00]

ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


பாதுகாப்புச் செயலாளருக்கு சிங்கப்பூரில் சத்திரசிகிச்சை!
[Sunday 2017-02-19 09:00]

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.


மஹிந்தவின் பேச்சைக் கேட்டு புதிய கட்சியைத் தொடங்கிய கருணாவுக்குச் சிக்கல்!
[Sunday 2017-02-19 09:00]

புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை கருணா ஆரம்பித்திருந்தார். புதிய கட்சி தொடர்பில் கருணா வெளியிட்ட கருத்தினால், சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


கூட்டமைப்பை விட்டுத் தூக்கியெறிந்தாலும் பரவாயில்லை! - மட்டக்களப்பு எம்.பி ஆவேசம்
[Sunday 2017-02-19 09:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதால் கட்சியை விட்டு தூக்கி எறிந்தாலும் கவலையில்லை என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்து துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் திரு.க.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் புதிய பொலிஸ் படைப்பிரிவு களத்தில்! - சத்தமில்லாமல் ரோந்து Top News
[Sunday 2017-02-19 09:00]

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கு துவிச்சக்கர வண்டி பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் பிரிவு யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு இருபத்தி நான்கு மணிநேரமும் தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
AIRCOMPLUS2014-02-10-14
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா