Untitled Document
May 5, 2024 [GMT]
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

  

நீதிபதி இளஞ்செழியன் மீது கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி இளஞ்செழியன் புதன்கிழமை நீதி மன்றில் தோன்றி, தனது சாட்சியங்களை பதிவு செய்தார்.

சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில் யாழ். - கண்டி வீதி வழியாக சென்று , கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன். காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன். எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார்.

நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் , மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார்.

அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது , சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.

நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 - 15 அடி இடைவெளி இருந்தது. துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் " மகே அம்மே " என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார்.

அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர் , என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார். அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது. பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில் , சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால் , எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும் என கூறினார்.

குறுக்கு விசாரணையின் போது , எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , " முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது , உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால் , ஏற்பட்ட முரணாலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றது, உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை" என குறிப்பிட்டதை , நீதிபதி மறுதலித்து " நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்தார்.

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து , நீதிபதி பலத்த பாதுகாப்புடன் , நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

அதேவேளை , சம்பவ தினத்தன்று , நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று , துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது , துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில் , நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால் சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை. என கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்று வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி! Top News
[Sunday 2024-05-05 18:00]

யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேலும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



சீன துணை அமைச்சர் பியகமவில் நடத்திய கருத்துக் கணிப்பு!
[Sunday 2024-05-05 18:00]

சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதை நேரடியாக கண்டறியும் நோக்கில் கருத்துக்கணிப்பு ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.



கோட்டா தொலைபேசியில் பேசியதை நிரூபிக்கத் தயார்! - பேராயர் அதிரடி.
[Sunday 2024-05-05 18:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



நாடு அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது!
[Sunday 2024-05-05 18:00]

கொழும்பில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தினமும் இந்த நாடு ஒட்டுமொத்தமாக வௌிநாடுகளுக்கு விற்கப்பட்டு முழுமையாக மக்கள் அடிமையாகி விடுவார்கள் போல இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பை உருவாக்க இணக்கம்!
[Sunday 2024-05-05 18:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.



தப்பியோடிய 9000 படையினர் பணிநீக்கம்!
[Sunday 2024-05-05 18:00]

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.



நாளை கபொத சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்!
[Sunday 2024-05-05 17:00]

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



தெல்லிப்பழையில் பெண்ணின் சடலம்! - மகனைக் காணவில்லை!
[Sunday 2024-05-05 17:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இலங்கைக்கு சோனார் பொருத்தப்பட்ட கப்பலை வழங்குகிறது ஜப்பான்!
[Sunday 2024-05-05 17:00]

நாட்டின் கடல்சார் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏனைய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்கும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.



வலையில் சிக்கிய மண்டையோடும் எலும்புகளும்!
[Sunday 2024-05-05 17:00]

மட்டக்களப்பு -சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.



சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
[Sunday 2024-05-05 06:00]

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.



நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு ஜப்பான் ஆதரவு!
[Sunday 2024-05-05 06:00]

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார்.



இலகு ரயில் திட்டத்துக்கு இலங்கை விருப்பம்!
[Sunday 2024-05-05 06:00]

இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



ரணில் பக்கம் சாய்ந்தார் லோகன் ரத்வத்தே!
[Sunday 2024-05-05 06:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர், லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இயன்றவரை ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.



இன்று மேலும் அதிகரிக்குமாம் வெப்பநிலை!
[Sunday 2024-05-05 06:00]

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



எதிர்கால திட்டங்கள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார் சஜித்!
[Sunday 2024-05-05 06:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.



இந்திய தேர்தலைப் பார்வையிட 10 பேர் குழு பயணம்!
[Sunday 2024-05-05 06:00]

இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலை (பொதுத்தேர்தல்) பார்வையிடுவதற்கான' சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டம்' இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 9 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில் இலங்கை சார்பில் 10 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.



உண்மைகள் வெளியானால் மொட்டு ஆட்சிக்கு வேட்டு!
[Sunday 2024-05-05 06:00]

என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இலங்கைத் தொழிலாளர்கள்!
[Sunday 2024-05-05 06:00]

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2 ஆயிரத்து 771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.



ரணில் - பசில் இன்று மீண்டும் சந்திப்பு!
[Saturday 2024-05-04 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா