Untitled Document
April 25, 2024 [GMT]
பொதுவேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை சிலர் குழப்ப முயற்சி!
[Saturday 2024-04-13 15:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ள நிலையில் அதனை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி ஒகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்!
[Saturday 2024-04-13 15:00]

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.


இருண்ட கண்டத்தின் “நம்பிக்கை ஒளி” Top News
[Saturday 2024-04-13 15:00]

“சிறீலங்கா அரசினால் தமிழர்கள் தங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சமாதனத்துடன் வளமாக வாழவேண்டும்”- யூன் 30.2009 இவ்வாறு நோபல் பரிசு பெற்றவரும் “நாசி” வதைமுகாமிலிருந்து தப்பியவருமான பேராசிரியர் எலைவைசல் (Professor Elie Wiesel) கூறியதை இத்தருணத்தில் நினைவுகூர்தல் சாலச் சிறப்பு.


ஜனாதிபதி ரணிலின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
[Saturday 2024-04-13 15:00]

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


ருவாண்டா இனவழிப்பிற்கும், தமிழ் இனவழிப்பிற்கும் சர்வதேச சக்திகளின் முரண்பட்ட நிலைப்பாடு
[Saturday 2024-04-13 15:00]

கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி ஆகும். 100 நாட்களில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும். மிதவாத Hutu இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.


யாழ். - சென்னை இடையே ஜூன் முதல் இன்டிகோ விமான சேவை!
[Saturday 2024-04-13 15:00]

யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையை இன்டிகோ நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.


மண்ணெண்ணெய் அடுப்பில் தீப்பற்றி படுகாயமடைந்த பெண் மரணம்!
[Saturday 2024-04-13 15:00]

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


பாரதிபுரத்தில் வீட்டின் மீது தாக்குதல்!
[Saturday 2024-04-13 14:00]

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர். நேற்றிரவு 11மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விருந்தில் துப்பாக்கி வேட்டு! - இருவர் காயம்.
[Saturday 2024-04-13 14:00]

ஹம்பேகமுவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


பொதுவேட்பாளரைத் தெரிவு செய்ய விக்கி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!
[Saturday 2024-04-13 05:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பூநகரி விபத்தில் ஒருவர் பலி!
[Saturday 2024-04-13 05:00]

கிளிநொச்சி - பூநகரி வாடியடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பாலத்துக்குக் கீழ் தேங்கியிருந்த நீரில் குளித்தவர் மரணம்!
[Saturday 2024-04-13 05:00]

முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.


பீரிஸ் மீது ஒழுங்காற்று நடவடிக்கை - பொதுஜன பெரமுன தீர்மானம்!
[Saturday 2024-04-13 05:00]

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.


ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு இல்லை!
[Saturday 2024-04-13 05:00]

புத்தாண்டையொட்டி இன்று விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில், கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் பெயர் இல்லையென தெரிவிக்கப்படுகிறது. அரச மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்


வடக்கு, கிழக்கில் இன்று மழை பெய்யும்!
[Saturday 2024-04-13 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


தேர்தல் முறை திருத்தத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
[Saturday 2024-04-13 05:00]

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது.


200 கிலோ போதைப்பொருளுடன் 2 படகுகள் சிக்கின!
[Saturday 2024-04-13 05:00]

ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் 02 பல நாள் மீன்பிடி படகுகள் இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


ரஷ்யாவில் கூலிப்படையினராக செயற்படும் இலங்கை இராணுவத்தினர்!
[Saturday 2024-04-13 05:00]

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய கூலிப்படைகளாக போரிடும் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் பெரும் அவதிகளை எதிர்நோக்கியுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது.


மொரவெவவில் புதையல் தோண்டிய 13பேர் கைது!
[Saturday 2024-04-13 05:00]

திருகோணமலை - மொரவெவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேரை சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த சிறிதரன் இணக்கம்!
[Friday 2024-04-12 16:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.


தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்!
[Friday 2024-04-12 16:00]

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக புகுந்த சிவசேனை!
[Friday 2024-04-12 16:00]

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.


ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக்கு ஆதரவு இல்லை - கைகழுவியது ஈபிடிபி!
[Friday 2024-04-12 16:00]

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நீண்ட நாட்களுக்குப் பின்னர் கொவிட் மரணம்!
[Friday 2024-04-12 16:00]

நீண்ட நாட்களுக்குப் பிறகு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது


டிப்பர் மோதி கல்வி அதிகாரி பலி!
[Friday 2024-04-12 16:00]

யாழ்ப்பாணத்தில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.


ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!- ஐக்கிய மக்கள் சக்தி சூளுரை.
[Friday 2024-04-12 16:00]

எதிர்வரும் தேர்தல்களில் ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


பரந்தனில் நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணின் சடலம்!
[Friday 2024-04-12 16:00]

கிளிநொச்சி-பெரிய பரந்தன் பகுதியில் இன்று நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சுதந்திரக் கட்சியை ஐதேகவுடன் இணைக்க அனுமதியோம்!
[Friday 2024-04-12 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது.அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்க இடமளிக்கப்படாது என சு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா