Untitled Document
April 25, 2024 [GMT]
போதைப் பொருளுக்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!
[Tuesday 2024-04-16 05:00]

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


பிரபாகரனுக்கு பின்னர் தமிழர்கள் தமது தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை!
[Monday 2024-04-15 16:00]

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பிலுள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


24 மணித்தியாலங்களில் 10 பேர் விபத்துக்களில் பலி!
[Monday 2024-04-15 16:00]

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கச்சதீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை!
[Monday 2024-04-15 16:00]

கச்சதீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.


அனைத்து தீர்மானங்களும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்!
[Monday 2024-04-15 16:00]

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்மானமாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


சாவகச்சேரி விபத்தில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம்!
[Monday 2024-04-15 16:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.


பிரான்சில் இருந்து யாழ். வந்த பெண் கொரோனா தொற்றால் மரணம்!
[Monday 2024-04-15 16:00]

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


நாவாந்துறை குழு மோதலில் இரு வாகனங்கள் தீக்கிரை!
[Monday 2024-04-15 16:00]

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.


எகிறியது கோழி இறைச்சி விலை!
[Monday 2024-04-15 16:00]

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


மாமடுவில் யானை தாக்கி ஒருவர் காயம்!
[Monday 2024-04-15 16:00]

வவுனியா, மாமடு பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது இளைஞன் கைது!
[Monday 2024-04-15 15:00]

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞன் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர் .


தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை!- என்கிறார் சிறீதரன்.
[Monday 2024-04-15 04:00]

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்! Top News
[Monday 2024-04-15 04:00]

சித்திரை புதுவருடத்தினமான நேற்று வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


புத்தாண்டில் சோகம் - புசல்லாவ விபத்தில் சுற்றுலாவிகள் நால்வர் மரணம்!
[Monday 2024-04-15 04:00]

இறம்பொடை - கொழும்பு பிரதான வீதியில் எல்பொடைக்கும், புஸ்ஸலாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை வான் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர்.


ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழர்கள் விலகி இருக்க வேண்டும்!
[Monday 2024-04-15 04:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் விலகி இருக்க வேண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.


தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள்!
[Monday 2024-04-15 04:00]

தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.


கல்முனையில் கறுப்புச் சித்திரை போராட்டம்! Top News
[Monday 2024-04-15 04:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் போராட்டம் கறுப்பு சித்திரை என்ற பெயருடன் நேற்று முன்னெடுக்கப்பட்டது.


யாழ். ஆசிரியை வயிற்றோட்டத்தினால் மரணம்!
[Monday 2024-04-15 04:00]

யாழ்ப்பாணத்தில் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி கல்பனா (37 வயது) என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2024-04-15 04:00]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடனேந்திரன் காலமானார்!
[Monday 2024-04-15 04:00]

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் (கஜன்) நேற்று காலமானார். உடல்நலமின்மை காரணமாக இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாரையோ வெல்ல வைக்க முயற்சிக்கிறார் கஜேந்திரகுமார்!
[Monday 2024-04-15 04:00]

இலங்கையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்ப்பாளரினை தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார்.


சித்திரைப் புத்தாண்டிலாவது பேதங்களைக் களைந்து ஒன்றுபடுவோம்! - அழைக்கிறார் சி.வி.கே.
[Sunday 2024-04-14 06:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாம், சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது பேதங்களைக் களைந்து நபர்களாகவோ, கூட்டாகவோ, அணிகளாகவோ நின்று பேசுவதைத் தவிர்த்துக் குறிப்பாக அணிகள் என்ற நிலையைத் தவிர்த்து கட்சி என்ற ஒரு பொதுச் சிந்தனையில் வந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாகச் செயற்படுவோம் என்று சபதம் எடுக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளில் யாவரும் ஈடுபட வேண்டும் என்றும் வினயமாகக் கேட்டுக்கொள்வதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சீ.வீ.கே.சிவஞானம் இதர கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
[Sunday 2024-04-14 05:00]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புத்தாண்டு பாதுகாப்பில் 15 ஆயிரம் படையினர், பொலிசார்!
[Sunday 2024-04-14 05:00]

புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


குரோதி வருடம் பிறந்தது!
[Sunday 2024-04-14 05:00]

மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த நேற்றிரவு உதயமானது. சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது.


அரிசி இறக்குமதிக்கு அனுமதி இல்லை!
[Sunday 2024-04-14 05:00]

சுற்றுலா ஹோட்டல்களின் தேவைக்காக பாசுமதி அரிசியைத் தவிர அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் தகுதிகளை மக்களுக்கு காட்ட வேண்டும்!
[Sunday 2024-04-14 05:00]

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும் தங்களின் வெளிப்படையான தகுதிகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


பண்டிகைக் காலத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு!
[Sunday 2024-04-14 05:00]

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா