Untitled Document
May 6, 2024 [GMT]
பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி!
[Thursday 2019-05-23 17:00]

36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் புறநகர் செயிண்ட் கிளவுடில் அமைந்து உள்ள ரபேல் போர் விமான திட்ட அலுவலகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயற்சி செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் - தொழிலதிபர் கைது!
[Thursday 2019-05-23 07:00]

ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கும் 15 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுமிக்கு விமானத்தை இயக்க பயிற்சி அளிப்பதாக கூறி தனது சொந்த விமானத்தில் அவரை அழைத்து சென்றார். விமானத்தில் ஸ்டீபன் பிராட்லே மெல்லும், சிறுமியும் மட்டும் இருந்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஸ்டீபன் பிராட்லே மெல், விமானம் தானாக இயங்கும்படி செய்துவிட்டு சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்தார்.


போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய சீனா!
[Thursday 2019-05-23 07:00]

பல்வேறு புதிய மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஜே.எஃப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு முதல் முறையாக சீனா அனுப்பியுள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானங்கள் தயாரிப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி ஒற்றை என்ஜின் கொண்ட இலகு ரக ஜே.எஃப். 17 ரக போர் விமானங்களை தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது.


சீன நிறுவனங்களை திட்டமிட்டு தாக்கும் அமெரிக்கா!
[Thursday 2019-05-23 07:00]

கண்காணிப்பு வீடியோ கருவிகளை விற்பனை செய்து வரும் சீன நிறுவனம், அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு தடை விதிக்க டிரம்ப் அரசு பரிசிலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. ஏற்கனவே சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவேய், அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதற்கு கடந்த வாரம் டிரம்ப் அரசு தடை விதித்தது.


போயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு மனைவி வழக்கு!
[Thursday 2019-05-23 07:00]

எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். 5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.


சர்வதேச புக்கர் விருது பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர்!
[Wednesday 2019-05-22 17:00]

ஓமன் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஓமன் நாட்டை சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி (Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் (Celestial Bodies) என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதைப்பெற்ற முதல் அரபிக் எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல்-ஹத்தி பெற்றுள்ளார்.


உகாண்டாவில் புனித மருந்தென்ற பெயரில் 50000 பேருக்கு பினோலை வாயில் ஊற்றிய பாதிரியார் கைது!
[Wednesday 2019-05-22 17:00]

உகாண்டாவில் புனித மருந்து என்ற பெயரில் பினோலை (Pinol) பக்தர்களுக்கு குடிக்க கொடுத்த அமெரிக்க பாதிரியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெந்தேகொஸ்தே பாதிரியாரான ரொபர்ட் போல்ட்வின் என்பவர் உகாண்டாவில் மத பரப்புரையாளராகவும், பாதிரியாராகவும் பல வருடங்களாக பணிபுரிகிறார். இவர் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்து எனக் கூறி அவரவர் வயதுக்கேற்ப வகைவகையான இரசாயனப் பொருட்களை எடுத்து அவர்களுக்கு அருந்தக் கொடுத்துள்ளார்.


அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது - ஹூவாய் சிஇஓ!
[Wednesday 2019-05-22 17:00]

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையத்து இரு நாடுகளும் சில வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனாவின் புகழ்ப்பெற்ற ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இணைத்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் ஹூவாய் ஸ்மார்ட்போனுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. மேலும் கூகுள் பிளே வசதி, பாதுகாப்பு செயலி என அனைத்தையும் திரும்பப்பெறுவதாக கூறியது. இந்த திடீர் அறிவிப்பால், ஹூவாய் பயனாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் 90 நாட்களுக்கு இந்த தடையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


கனடாவின் தொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்!
[Wednesday 2019-05-22 17:00]

கனடாவின் தொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்கு வகித்துள்ளார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் நடைபெறும், வட அமெரிக்காவின் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு உரை ஆற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


சீனாவுக்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா, ஜப்பான், இலங்கை!
[Wednesday 2019-05-22 08:00]

இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இந்திய பெருங்கடலில் நடைபெறும் கடல்வழி வணிகத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் மிக பெரிய துறைமுகமான கொழும்பு துறைமுகத்தினை மேம்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைய உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் சில நாட்களில் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


சீனாவில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தல்!
[Wednesday 2019-05-22 08:00]

சீனாவில் பட்டப்பகலில் 3 வயது குழந்தையைக் கடத்திய இளைஞனை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தாக்கினர். குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் 3 வயது குழந்தை தனது சகோதரனுடன் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் அந்தக் குழந்தையைக் கடத்திச் சென்றான். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகின.


அமெரிக்காவை புரட்டிப்போட்ட தொடர் சூறாவளித் தாக்குதல்!
[Wednesday 2019-05-22 08:00]

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது.


பாகிஸ்தான் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்!
[Wednesday 2019-05-22 08:00]

பாகிஸ்தானில் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் சர்தார் அலி முகமது மஹர் (52). கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சிந்த் மாகாணத்தின் 25வது முதல் மந்திரியாகவும் இருந்தவர். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தின் கான்கர் கிராமத்தில் வசித்து வந்த மஹர் திடீரென மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்தார்.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் - ஜெர்மனி வலியுறுத்தல்!
[Tuesday 2019-05-21 17:00]

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. தற்காலிக உறுப்பினர்களாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 நாடுகள் உள்ளன. இந்த 10 தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, அந்த இடத்துக்கு வேறு நாடுகள் தேர்வு செய்யப்படும். பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உறுப்பு நாடுகளும் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளது.


24 முறை எவரெஸ்ட்டை அடைந்து நேபாளத்தை சேர்ந்த காமி ரிடா செர்பா என்பவர் சாதனை!
[Tuesday 2019-05-21 17:00]

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் எனும் பெருமையை கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெற்றுள்ளார். காமி ரிடா செர்பா எனும் அவர், 1994ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன் பின்னர் அடிக்கடி எவரெஸ்ட் பயணத்தில் ஈடுபட்டுவரும் அவர், தற்போது 24ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்.


கனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
[Tuesday 2019-05-21 17:00]

கனடாவின் பல பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.


அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் மன்னரின் உணவு விடுதி!
[Tuesday 2019-05-21 17:00]

பொதுவாக ஓட்டல்களில், விலைக்கு ஏற்ப மெனு கார்டு ஒன்று போட்டு, அதில் உணவின் வகைகளுக்கு ஏற்றார்போல் மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகளில் விலை எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்? அதிலும் அமெரிக்காவின் முக்கிய பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட் என்றால், விலையை சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இருக்கும் பகுதிக்கு மிக அருகில் உள்ளது ‘சகீனா ஹலால் கிரில் ரெஸ்டாரண்ட்’. இதன் உரிமையாளர் கசி மன்னன். அவரது பெயருக்கு ஏற்றார்போல் வாரி வழங்கும் மன்னர் குணம் படைத்தவராகவே இருக்கிறார் என்றுதான் கூற தோன்றுகிறது.


இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி!
[Tuesday 2019-05-21 08:00]

இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததையடுத்து, ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இளைஞரின் முட்டாள்தனமான செயலால் ஈபிள் கோபுரத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!
[Tuesday 2019-05-21 08:00]

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா மையமான ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபர் கடும் முயற்சிக்குப் பின் இறக்கப்பட்டதால் 6 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் அனுமதிக்கப்பட்ட தடத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வரவேண்டும். ஆனால் நேற்று திடீரென மர்ம நபர் ஒருவர் ஆங்காங்கு இருந்த கம்பிகளைப் பிடித்து மேலேறினார்.


ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு!
[Tuesday 2019-05-21 08:00]

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது. இந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.


முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானார்!
[Tuesday 2019-05-21 08:00]

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா (70). ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 1975 ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976-ஆம் ஆண்டு விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன.


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் உயிரிழப்பு!
[Monday 2019-05-20 17:00]

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார். ஆசிப் அலியின் மகள் நூர் ஃபாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயானது 4வது கட்டத்தை எட்டி விட்டதால், நூர் ஃபாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


தவிடுபொடியான இம்ரான் கான் ஆசை - பாகிஸ்தானில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பில்லை!
[Monday 2019-05-20 17:00]

பாகிஸ்தான் நாட்டில் சில குறிப்பிட்ட வளங்கள் அண்டை நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. இதையடுத்து சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கான் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் இம்ரான் குறிப்பிடுகையில், 'கடவுளின் கருணையால் நம் நாட்டில் கிடைக்க இருக்கும் பெட்ரோலிய வளம் மிகப்பெரிய அளவில் இருக்கும். இதனால் இந்த வளங்களுக்கு நாம் மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை' என கூறினார்.


கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Monday 2019-05-20 17:00]

கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் புகலிடம்கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின் படி 2015ஆம் ஆண்டு 16,058 பேரும், 2016ல் 50,389 பேரும், 2018ல் 55,000 பேரும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.


அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
[Monday 2019-05-20 17:00]

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், மூத்த பேராசியர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் கலந்துக் கொண்டார். இவர் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அதுவரையில் அங்கு பட்டம் பெற வந்த 400 மாணவர்கள், தங்களுக்காக ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிந்திருக்க மாட்டார்கள். மேடையில் உரையாற்றியபோது ஸ்மித் கூறுகையில், 'இங்கு இருக்கும் 400 பட்டம் பெற்ற மாணவர்களின் கல்வி கடன்களில் மொத்த தொகையை நான் செலுத்துகிறேன்' என கூறினார். இதனை அறிவித்த அடுத்த நொடி அரங்கமே அதிர பெற்றோரும், மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!
[Monday 2019-05-20 07:00]

ஈரான் நாடு போரிட விரும்பினால் அதுவே அந்த நாட்டின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் போரிட விரும்பினால் அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வமாக முடிவாக இருக்கும் என்றும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்கா பயப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய அறிவிப்பின் பின்னர் ஏராளமான துப்பாக்கிகள் கையளிப்பு – ரொறன்ரோ பொலிஸ்!
[Monday 2019-05-20 07:00]

துப்பாக்கிகளை வழங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் பின்னர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் 2,300க்கும் அதிகமான துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டு அதறகான கால எல்லை நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே இந்தளவிலான துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன. 707 கைத்துப்பாக்கிகள் உட்பட 2,338 துப்பாக்கிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு தசாப்தத்தில் இவ்வாறு அதிகளவு துப்பாக்கிகள் சேகரிக்கப்பட்ட முதலாவது சம்பவமாக இது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாட்டுக்காக பணம் எப்படி திரட்டுவது என்று காட்டுவேன் - இம்ரான்கான்!
[Monday 2019-05-20 07:00]

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெஷாவரில் உள்ள கவர்னர் இல்லத்தில் பழங்குடி மாவட்டங்களின் பிரதிநிதிகளை பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன். நாட்டை வழிநடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்” என சூளுரைத்தார்.

Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா