Untitled Document
April 24, 2024 [GMT]
2000 ஆண்டுகள் பழமையான மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு! Top News
[Thursday 2019-05-16 08:00]

ரஷ்யாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடுபவரின் எலும்புக் கூடு ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடலை ஒட்டிய பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை அகழ்ந்து கொண்டிருந்த போது சில விசித்திரப் பொருட்களைக் கண்டார். இதுகுறித்து தகவலறிந்த தொல்பொருள் ஆய்வுத்துறையினர் நடத்திய சோதனையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடி ஒருவரின் எலும்புக் கூடு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.


நைஜீரியாவில் ரமலான் நோன்பு காலத்தில் உணவு உண்டதாக 80 பேர் கைது!
[Thursday 2019-05-16 08:00]

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


ஒஷாவாவில் தாயை கொன்ற மகன் அதிரடியாக கைது!
[Thursday 2019-05-16 08:00]

ஒஷாவாவில் எரிந்துகொண்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை மீட்ட பொலிஸார் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நொங்குவின் வீதியில் உள்ள குறித்தவீட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.10 அளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயினைக் கட்டுப்பாடடினுள் கொண்டுவந்தனர். இதனை அடுத்து அதற்குள் இருந்து வயதான பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக டேரம் பிராந்தியப் பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.


அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை!
[Thursday 2019-05-16 08:00]

அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.


உலகின் மிகவும் வயதான 123 வயதை கொண்ட அப்பாஸ் இலியிவ் காலமானார்!
[Wednesday 2019-05-15 17:00]

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த 123 வயது முதியவர் காலமானார். ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் ((Appaz Iliev)) என்பவர் சான்றுகளின் படி 1896ம் ஆண்டு பிறந்தவர். ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா ((Ingushetia)) என்ற இடத்தைச் சேர்ந்த அப்பாசின் தினசரி உணவு பச்சை காய்கறிகள்தான். மேலும் சுத்தமான பசும்பால் ஆகியவற்றை அருந்தி வந்த அவர் கடந்த 1917 முதல் 1922 வரை ரஷ்யாவின் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈராக்கில் பணி புரியும் அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு உத்தரவு!
[Wednesday 2019-05-15 17:00]

ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி செல்லுமாறு ஈராக்கின் அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ரொறன்றோவில் ஆடை நன்கொடை தொட்டியை கட்டுப்படுத்த நடவடிக்கை!
[Wednesday 2019-05-15 17:00]

ஆடை நன்கொடைத் தொட்டிகளை இன்னும் கட்டுப்படுத்துவதற்கு ரொறன்றோ நகரசபை நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. ரொறன்றோவில் தற்போதுவரை 200 ற்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆடை நன்கொடைத் தொட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த குளிர்கால பகுதியில் வீடற்ற பெண்ணொருவர் குறித்த தொட்டிக்குள் சிக்கி உயிரிழந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அடுத்து நாளை (வியாழக்கிழமை) உரிமம் வழங்குவது தொடர்பான குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.


பிரக்சிட் விவகாரம்: மீண்டும் வாக்கெடுப்பு!
[Wednesday 2019-05-15 17:00]

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிரக்சிட் முடிவின் மீது, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த மார்ச் மாதமே வெளியேற பிரிட்டன் அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வின் பிரக்சிட் செயல்திட்ட வரைவுக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.


பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
[Wednesday 2019-05-15 06:00]

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பிளாஸ்டிக் மாசு காரணமாக ஒவ்வொரு 30 விநாடிகளுக்கு ஒருவர் மரணம்!
[Wednesday 2019-05-15 05:00]

பிளாஸ்டிக் மாசு மற்றும் சேகரிக்கப்படாத குப்பைகளின் காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடிகளிலும் ஒருவர் உயிரிழப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கொட்டப்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, மலேரியா மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் உயிரிழப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமான Tearfund, அபிவிருத்தி ஆய்வுகள் நிறுவனம், WasteAid மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளையான Fauna & Flora International (FFI) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.


நியூசிலாந்து பிரதமருக்கு 5 டாலர்கள் லஞ்சம் கொடுத்த சிறுமி!
[Wednesday 2019-05-15 05:00]

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள். சிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார்.


அமெரிக்க சிறுமி கொலை வழக்கில் இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி என தீர்ப்பு!
[Wednesday 2019-05-15 05:00]

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்கிற மகள் இருந்தாள். இந்த நிலையில், தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சுக்ஜிந்தர்சிங், ஷம்தாய் அர்ஜூன் மற்றும் அஷ்தீப் கவுர் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தாள். அவள் குளிக்க சென்றபோது, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் அர்ஜூன் தெரிவித்தார்.


மாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைக்க ஒன்ராறியோ தீர்மானம்!
[Tuesday 2019-05-14 14:00]

வரவு செலவு திட்டத்தில் மாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைப்பதற்கு ஒன்ராறியோ தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 46 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் காணப்படும் பற்றாக்குறைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் கொன்சவேற்றிவ் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.


ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
[Tuesday 2019-05-14 14:00]

அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், ஃபுஜைரா துறைமுகம் அருகே 4 வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.


பிரம்டன் நகரில் வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலம் கண்டெடுப்பு!
[Tuesday 2019-05-14 14:00]

ரொறன்ரோவின் பிரம்டன் நகரில் மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரம்டன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 82 வயது மூதாட்டி ஒருவரது சடலம் நேற்று (திங்கட்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டது. கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.


அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபத்து!
[Tuesday 2019-05-14 14:00]

அலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 7 நாள் பயணம் மேற்கொண்டவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் மிதக்கும் விமானத்தில் அலாஸ்கா பகுதியில் உள்ள கெட்சிகன் என்ற இடத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர்.


அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா!
[Tuesday 2019-05-14 08:00]

டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அமெரிக்காவுக்கு பதிலடியாக வரியை உயர்த்த இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வரியை உயர்த்திய டிரம்ப், உடனடியாக வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார். பதிலுக்கு சீனாவும் வரியை உயர்த்தினால் மோசமான நிலையே ஏற்படும் என்று டிரம்ப் டுவிட்டரில் எச்சரித்து இருந்தார்.


சவூதி அரேபியாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!
[Tuesday 2019-05-14 08:00]

சவூதியில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சரான காலித் அல் பாலி இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த தகவலில், அங்குள்ள புஜைரா கடற்பகுதி அருகே 2 எண்ணெய்க் கப்பல்கள் நாசவேலை செய்து தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு கப்பலில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதற்காக கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


ஆப்பிரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு - 6 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2019-05-14 08:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சான்மட்டேங்கா மாகாணத்தின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தது.


இங்கிலாந்தில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்!
[Tuesday 2019-05-14 08:00]

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது. இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


மே 18 தமிழின படுகொலை நினைவு நாளாக கனடா அங்கீகாரம்!
[Monday 2019-05-13 17:00]

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவையும் மே 18 தினத்தை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாகவும் கனடா அங்கீகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறம்ரன் நகரசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 10 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.


வெளிநாட்டு கடனை சமாளிக்க பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதியுதவி!
[Monday 2019-05-13 17:00]

வெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் வழங்க உள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன்கள் 90 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும், ஏற்றுமதியின் அளவு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து சுருங்கி வருவதாகவும் அந்நாட்டு நிதி ஆலோசகர் அப்துல் ஹஃபீஸ் ஷேக் ((Abdul Hafeez Shaikh)) கூறியுள்ளார். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 20 பில்லியன் டாலர்களை எட்டியிருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்பு 50 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பனிச்சரிவில் சிக்கிய 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
[Monday 2019-05-13 17:00]

மவுண்ட் லாசன் பகுதில் உள்ள கானனஸ்கிஸ் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த வனப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை மீட்டுள்ளதாக கல்கரி அவசர மருத்துவ சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.


ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடிய ரஷ்ய அதிபர் புடின்!
[Monday 2019-05-13 17:00]

ஐஸ் ஹாக்கி போட்டியின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறாது. ஸ்கேட்டிங் காலணிகளை அணிந்துகொண்டு விளையாடும் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் புடின் அவ்வப்போது பங்கேற்பது வழக்கம் இந்நிலையில் சோச்சி நகரில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கிப் போட்டியில் புடினின் லெஜன்ட்ஸ் அணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷொய்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை பிடித்த இந்தியர்கள்!
[Monday 2019-05-13 07:00]

இங்கிலாந்தின் இந்த ஆண்டின் முதல் ஆயிரம் பெரும் பணக்காரர்கள் கொண்ட பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில், முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்துள்ளனர். ஸ்ரீ இந்துஜா, கோபிசந்த் இந்துஜா என்ற இந்துஜா சகோதரர்கள், முதலிடத்தில் உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ஆகும். இந்த குடும்பம் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


அமெரிக்காவின் செயல்பாட்டால் போர் அபாயம் - ஈரான் எச்சரிக்கை!
[Monday 2019-05-13 07:00]

அமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக போர் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். ஈரான் உடனான அனுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்தது.


இலங்கை தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்!
[Monday 2019-05-13 07:00]

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் தவறாக பரவிய தகவல்களால் சில வழிபாட்டுத் தலங்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரவியது.


இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொடூரமாக கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!
[Monday 2019-05-13 07:00]

இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா