Untitled Document
May 18, 2024 [GMT]
சவூதி மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர முரண்பாடுகளை தணிக்க போராடும் அமெரிக்கா!
[Wednesday 2016-01-06 07:00]

சவூதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர முரண்பாடுகளை தணிக்கும் வகையில் இரு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கலந்துரையாடியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் சவூதி துணை இளவரசர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டார்.


ஈராக்கின் ஹடிதா நகரில் ஐ.எஸ். தாக்குதல்: 25 ஈராக் போராளிகள் பலி!
[Wednesday 2016-01-06 07:00]

ஈராக்கின் மூலோபாய ஹடிதா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மூன்று தினங்களாக முன்னெடுத்துவரும் தாக்குதல்களில் சுமார் 25 ஈராக் போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 72 மணித்தியாலங்களில் தாம் 25 உயிர்களை தியாகம் செய்திருப்பதாக பழங்குடி தளபதியான ஷேக் அப்தல்லா அதல்லா குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த வட கொரியா!
[Wednesday 2016-01-06 07:00]

வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.


துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கடலில் மூழ்கி 21 பேர் பலி!
[Tuesday 2016-01-05 17:00]

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.


பிராந்திய பதற்றம்: - இரானுக்கான தனது தூதுவரை மீள அழைத்த குவைத்
[Tuesday 2016-01-05 17:00]

சவுதி அரேபியாவில் ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை அடுத்த பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், இரானுக்கான தனது தூதுவரை குவைத் மீள அழைத்துள்ளது. சவுதி அரேபியா ஷியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கும் மேலும் 46 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து, கடந்த சனிக்கிழமை இரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு, அதற்கு தீயும் வைக்கப்பட்டது. பதிலடியாக இரானுடனான இராஜ்ஜிய உறவுகளை சவுதி அரேபியா துண்டித்துக்கொள்ள, பஹ்ரைன் மற்றும் சுடானும் அதனை பின்பற்றின. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு அமெரிக்கா, ஐநா, மற்றும் துருக்கி ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.


சவுதி தூதரகம் மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம்!
[Tuesday 2016-01-05 17:00]

தெஹ்ரானில் சவுதி தூதரகத்தை இரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய சம்பவத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதலினால் சவுதி அரேபியா மற்றும் இரானுக்கு இடையிலான ராஜீயத் தகராறுகள் மேலோங்கிவருகின்றன.


ஒரு நாள் நாங்கள் இங்கிலாந்து மீது படையெடுப்போம்: - ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!
[Tuesday 2016-01-05 12:00]

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதல்களில் சமீபத்தில் இங்கிலாந்து படையும் இணைந்தது. இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது தங்களுக்கு உரிய இணையதளத்தில் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளனர். அதில் பாலைவன மண்ணில் 5 நபர்கள் முழங்காலில் நிற்பதும், கருப்பு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக்கொல்வதும் பதிவாகி உள்ளது. அதற்கு முன்னதாக பேசும் தீவிரவாதி ஒருவன் இந்த 5 பேரும் இங்கிலாந்துக்காக சிரியாவில் உளவு பார்த்தவர்கள் என குற்றம் சாட்டுகிறான்.


கனடாவில் 43 பந்தயக் குதிரைகள் தீயில் பரிதாபமாக பலி! - விபத்து குறித்து பொலீசார் விசாரணை Top News
[Tuesday 2016-01-05 12:00]

கனடா ஒன்ராறியோவில் குதிரைகள் கட்டப்பட்ட லாயம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட பந்தயக் குதிரைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.குதிரைகள் கட்டப்பட்டிருந்த லாயத்தில் கனேடிய நேரப்படி இரவு 11 மணியளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள போதும், பல குதிரைகள் பலியாகியுள்ளன. உயிரிழந்த குதிரைகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியாத போதும் சுமார் 43 குதிரைகள் பலியாகியிருக்கலாம் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பந்தயத்திற்காக குதிரைகளுக்கு பயிற்சியளிக்கும் குறித்த நிலையம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு சுமார் 222 குதிரைகள் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விபத்து குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டள்ளனர்.


நேபாளத்தில் மாதேசி இனத்தவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி!
[Tuesday 2016-01-05 11:00]

நேபாளத்தின் சப்தாரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். நேபாளத்தில் மாதேசி இனத்தவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சாசனத்தை எதிர்த்து, மாதேசி இனத்தவர்கள் கடந்த பல மாதங்களாக இந்திய


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2016-01-05 09:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இரு வருடங்களில் பிறந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய நிகழ்வு கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள பைசர் பெர்மனேட் சீயோன் மருத்துவ நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ஒரு குழந்தையும் அதற்கு மூன்று நிமிடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டில் இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளன.


கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் கல்லால் அடித்துக் கொலை: - ஏமனில் சம்பவம்
[Tuesday 2016-01-05 08:00]

ஏமனில் தென் மேற்கு பகுதியில் உள்ள ஹட்ராமாவ்ட் மாகாணம் அல்கொய்தா தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர்கள் அன்சர் அல்


ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே குண்டுத் தாக்குதல்: 30 பேர் காயம்
[Tuesday 2016-01-05 08:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தொழில்நுட்ப ஒப்பந்தகாரர்களின் குடியிருப்பு வளாகத்தில் நேற்று குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். குறித்த பகுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்த டிரக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
[Tuesday 2016-01-05 08:00]

சவுதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவின் தலைவர் நிமர் அல் நிமர் உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது ஷியா பிரிவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் காடிப் மாவட்டத்துக்கு உட்பட்ட அவமியா நகரில் நேற்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.


செல்ஃபீ மோகம்: பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட 'திருடன்'
[Tuesday 2016-01-05 08:00]

திருடப்போன இடத்தில் செல்ஃபீ எடுத்து சந்தேக நபர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார் என அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர். சென்ற வாரத்தில் காரொன்றையும் நான்கு பேரிடம் இருந்து பொருட்களையும் திருடியதாக 18 வயது அல்மான்ஸா மார்ட்டினெஸ் மற்றும் வேறு இரண்டு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தான் திருடிய காரை ஒட்டிச் செல்வதற்கு முன்பாக, திருடு கொடுத்த பெண் ஒருவருடன் அல்மான்ஸா தகவல் பரிமாறிக்கொண்டதுடன், அவருடன் சேர்ந்து செல்ஃபீ புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் எடுத்த செல்ஃபீயை வைத்து, அல்மன்ஸாவை தேடிக் கண்டுபிடித்ததோடு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்தது, ஆளைக் கடத்தியது போன்ற குற்றஞ்சாட்டுகளை பொலிசார் அவர் மீது சுமத்தியுள்ளனர்.


மலேஷியாவின் புத்ரஜாயாவில் நடைபெற்ற மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் 2015 அழகுராணி போட்டி:
[Monday 2016-01-04 20:00]

மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் 2015 அழகுராணி போட்டிகளின் இறுதிச்சுற்று மலேஷியாவின் புத்ரஜாயாவில் டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்றது. சுமார் 60 நாடுகளின் அழகுராணிகள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இலங்கையின் சார்பில் ஷெய்லின் சாமுவெல் கலந்துகொண்டார். இப்போட்டிகளில் பிலிப்பைன்ஸை சேர்ந்த லெரென் மாயி பௌட்டிஸ்டா, மிஸ் டுவரிஸம் குயின் ஒவ் த இயர் இன்டர்நெஷனல் விருதை வென்றார். மிஸ் டுவரிஸம் மெட்ரோபொலிட்டன் இன்டர்நெஷனல் விருதை உகண்டா அழகுராணியும் மிஸ் டுவரிஸம் குளோபல் இன்டர்நெஷனல் விருதை லித்துவேனிய அழகுராணியும் வென்றனர். மிஸ் டுவரிஸம் கொஸ்மோபொலிட்டன் இன்டர்நெஷனல் விருதை ஐஸ்லாந்து அழகுராணி வென்றார். வருடத்தின் கனவு யுவதி விருது இந்திய அழகுராணிக்கு வழங்கப்பட்டது.


இஸ்ரேல் ஹெப்ரோனுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ இராணுவ வீரர் காயம்!
[Monday 2016-01-04 17:00]

இஸ்ரேலிய இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் மேற்குக் கரை நகரமான ஹெப்ரோனுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களைத் தேடிவருவதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


சிரிய பிரச்சனை தீர்வுக்கு அரசியல் பேச்சுவார்த்தை அவசியம்: சீன வெளிவிவகார அமைச்சகம்
[Monday 2016-01-04 17:00]

சிரியாவின் மோதல் நிலை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமும் அமைதியான முறையிலும் தீர்க்கப்பட வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இத்தகவலை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுயிங், இன்று நடைபெற்ற தினசரி செய்தி மாநாட்டின் போது தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வாரம் சிரியாவின் எதிர்க்கட்சியான சிரிய தேசிய கூட்டணியின் தலைவர் சீனாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது நாளை செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


2015 ஆம் ஆண்டில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கியூபாவிற்கு விஜயம்!
[Monday 2016-01-04 17:00]

அமெரிக்கா


மியன்மாரில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும்: - ஆன் சான் சூகி
[Monday 2016-01-04 17:00]

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவி ஆன் சான் சூ கி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிடம் இருந்து மியன்மார் சுதந்திரம் பெற்று 68 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை முன்னிட்டு இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆன்சான் சூகி இவ்வாறு தெரிவித்தார். மியன்மாரில் சிறுபான்மை கொரில்லா குழுக்கள் தன்னாட்சி அரசு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து பல தசாப்தங்களாக போராடி வருகின்றன.


எகிப்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல்: - 26 தீவிரவாதிகள் பலி
[Monday 2016-01-04 13:00]

எகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல்


ஐ.எஸ்.தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட 5 உளவாளிகள்: - வீடியோ மூலம் இங்கிலாந்துக்கு மிரட்டல்!
[Monday 2016-01-04 12:00]

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தங்களிடம் பிடிபடும் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வீடியோ மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். சிறிது காலமாக கொலை வீடியோ வெளியிடாமல் இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். அதில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சர்வதேச படைகளுக்கு உதவும் 5 உளவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து ரமாடி நகரின் 80 சதவீதமான பகுதிகளை மீட்ட ஈராக் படையினர்!
[Monday 2016-01-04 11:00]
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் ரமாடி நகரின் 80 சதவீதமான பகுதிகளை ஈராக் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக அன்பர் மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரி மேஜர் ஜெனரல் Hadi al-Rzayej நேற்று உத்தியோக பூர்வமாக தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றி ரமாடி நகரை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரும் முயற்சியில் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து: - 4 பெண்கள் உட்பட 14 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!
[Monday 2016-01-04 08:00]

பாகிஸ்தானில் பெஷாவரைச் சேர்ந்தவர்கள் தேரா இஸ்மாயில்கானில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கந்தாகுர்ரம் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வாகனம் எதிரே வந்த ஒரு வேன்மீது பயங்கரமாக மோதியது. அதில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இந்த விபத்து காரணமாக மோதிய 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 14 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.


ஆப்கானில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
[Monday 2016-01-04 07:00]

ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷரீஃப் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் மீது, ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, எந்த பயங்கரவாத இயக்கமும் இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து இந்திய துணைத் தூதரக அதிகாரி பி.சர்கார், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தொலைபேசியில் கூறுகையில், ""நாங்கள் தாக்கப்படுகிறோம். தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், தூதரகத்தில் உள்ள மூன்று அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம்'' என்று தெரிவித்தார்.


சவுதி தூதரகம் தாக்குதல்: - இரானுடனான ராஜீய உறவுகளை முறித்துக் கொண்ட சவுதி அரேபியா
[Monday 2016-01-04 07:00]

ஷியா சிறுபான்மை இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்தன. கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டதை சவுதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப்படுத்தியுள்ளார்.


மெக்சிகோவில் புத்தாண்டில் பதவி ஏற்ற பெண் மேயர் சரமாரியாக சுட்டுக்கொலை!
[Sunday 2016-01-03 23:00]

மெக்சிகோ நாட்டில் பதவி ஏற்று ஒரு நாள் முடிவடைவதற்குள் மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் டெமிக்ஸ்கோ என்ற நகர் அமைந்துள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மேயராக Gisela Mota என்ற பெண்மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மெக்சிகோ நாட்டின் ஜனநாயகப் புரட்சி கட்சியை சேர்ந்த அவர் கடந்த புத்தாண்டு தினத்தில் நடந்த கோலாகலமான விழாவில் நகர மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், இதே நகரில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நேற்று மர்ம நபர்கள் 5 பேர் துப்பாக்கிகள் ஏந்தியவாறு காரில் வந்துள்ளனர்.


ஹாங்காங்வில் காணாமல்போன புத்தக விற்பனையாளர் சீனாவின் தடுப்புக்காவலில்!
[Sunday 2016-01-03 22:00]

சீன அரசாங்கத்தை விமர்சிக்கின்ற விதத்திலான புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது ஹாங்காங்கில் பல நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவர், சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. ஹாங்காங் எல்லையில் உள்ள ஷென்சென் நகருக்குரிய தொலைபேசி இலக்கம் ஒன்றிலிருந்து லீ போ என்ற அந்த புத்தக விற்பனையாளர், தன்னுடன் பேசியதாக அவரது மனைவி கூறியுள்ளார். விசாரணை ஒன்றில் உதவிக்கொண்டிருப்பதாக அவர் தன்னிடம் கூறியதாகவும் லீ போ-வின் மனைவி கூறியுள்ளார். கோஸ்வே பே புக்ஸ்டோர் நிறுவனத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கடந்த இரண்டு மாதங்களில் காணாமல்போயுள்ளனர். சீன அரசாங்கத்தை விமர்சிக்கின்ற விதத்திலான புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த விவகாரத்தால், ஹாங்காங்கின் சட்டரீதியான சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாக அச்சங்கள் எழுந்துள்ளன.


மதகுரு கொலை எதிரொலி: இரானிய சவுதி தூதரகத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல்
[Sunday 2016-01-03 22:00]

சவுதி அரசுக்கு எதிராக இரானில் போராட்டம் அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர். எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது. ஆனால் சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, அவர்களை கடுமையாக விமர்சித்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் என ஷேக் நிம்ரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா