Untitled Document
May 20, 2024 [GMT]
சிரியாவில் ரஷியா விமானங்கள் குண்டு வீச்சு: -பள்ளிக்குழந்கைள் 12 பேர் பலி
[Tuesday 2016-01-12 07:00]

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளனர். அதிபர் பஷர் அல்


ஜெர்மனியில் குற்றச் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் 500 ஐ தாண்டியது!
[Tuesday 2016-01-12 07:00]

ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் 40 வீதமானவை பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பானவை.இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் 6 பேரும் சிரிய நாட்டவர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் 5 பேர் கொண்ட குழு ஒன்று சிரிய நாட்டவர் ஒருவரை தாக்கியுள்ளது.


வடகொரியாவில் கிறிஸ்தவ போதகரின் சிறை அனுபவம்!
[Monday 2016-01-11 22:00]

ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் வடகொரியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதுவடகொரியாவில் கடந்த மாதம் கடூழிய-ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட கனேடிய கிறிஸ்தவ போதகர், அவரது முதல் வார சிறை அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.கடுமையான வேலைகளை செய்வது மிகவும் சிரமமாக இருப்பதாக லிம் ஹையோன்-ஸூ அமெரிக்காவின் சிஎன்என் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும், தான் மட்டுமே கைதியாக உள்ள பழத்தோட்ட சிறை முகாம் ஒன்றில் குழி வெட்டும் வேலை தனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


உலகளவில் நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கா முதலிடம்!
[Monday 2016-01-11 22:00]

போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையே இதற்கு செலவிடுகின்றனர் எனவும், எனவே இப்படியான படங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர் எனக் கூற முடியாது எனறும் புகழ்பெற்ற உளவியல் மற்றும் பாலியல் சிகிச்சை வல்லுநர் டாக்டர் லாரி பெடீட்டோ தெரிவித்துள்ளார்.


சவுதி அரேபியா-அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த அல்கொய்தா இயக்கம்!
[Monday 2016-01-11 18:00]

சவுதியில் சமீபத்தில் ஏராளமான தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பழிவாங்கப்போவதாக சவுதி அரசுக்கும் அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. ஏமனில் உள்ள அல்கொய்தா பிரிவின் வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர் இப்ராகிம் பின் ஹசன் அல் அசிரி இந்த மிரட்டலை அனுப்பியிருக்கிறார். இதுதொடப்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்,


கனடாவில் பிள்ளைகளை அடித்தால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா
[Monday 2016-01-11 18:00]

அதிகாரம் சூழ்நிலைக்கு அதிகமானதாக இல்லாமல் இருக்குமானால் மாணவரை திருத்தும் வழி பாடசாலை ஆசிரியர் பெற்றோர் அல்லது ஒருவர் தங்கள் பராமரிப்பின் கீழ் இருக்கும் ஒரு மாணவர் அல்லது பிள்ளையை திருத்தும் போது சூழ்நிலைக்கு அதிகமாக மீறாத பட்சத்தில் நியாயமானதென குற்றவியல் சட்ட பிரிவு 43 தெரிவிக்கின்றதென கூறப்படுகின்றது.


கவச ஆடையை பரீட்சிக்கும் சோதனை! ! - கத்திக் குத்தினால் ஊடகவியலாளர் காயமடைந்தார்
[Monday 2016-01-11 14:00]

இஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவர், கவச ஆடையொன்றை பரீட்சிக்கும் நிகழ்வின்போது கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார். இஸ்ரேலியர்கள் பலர் கத்திக்குத்து தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் நிலையில், கத்திக்குத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட கவச ஆடையொன்று தொடர்பான விவரண செய்தித் தயாரிப்பில் இஸ்ரேலின் சனல் 2 தொலைக்காட்சி அலைவரிசை ஈடுபட்டிருந்தது. இதற்கான ஒளிப்பதிவின் போது அந்த அலைவரிசையின் ஊடக வியலாளரான எய்தாம் லசோவர் மேற்படி கவச ஆடையை அணிந்து அந்த ஆடையின் திறனை செயற்படுத்திக் காட்டுவதற்கு முன்வந்தார்.


வட கொரியாவை மிரட்டும் அமெரிக்க போர் விமானங்கள்!
[Monday 2016-01-11 10:00]

ஹைட்ரஜன் குண்டை வெடித்து பரிசோதித்ததாக சமீபத்தில் வடகொரியா அறிவித்துள்ள நிலையில் தென்கொரிய வான் எல்லையில் வட்டமிட்ட அமெரிக்காவின் அதிநவீன போர் விமானம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அணு ஆயுத திட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என வடகொரியா வெளிப்படையாக அறிவித்துள்ளது.


மெக்ஸிகோவில் பேரூந்து ஆற்றினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலி!
[Monday 2016-01-11 10:00]

மெக்ஸிகோவின் வெராக்ருஸ் மாநிலத்தில் பேரூந்து ஆற்றினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளனர். வெராக்ருஸ் மாநிலத்தின் அடோயக் நகராட்சிப் பகுதியில் பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த பேரூந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதோடு, 10 பேர் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குhயங்களுக்க இலக்கானவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கூடிய எகிப்திய நாடாளுமன்றம்!
[Monday 2016-01-11 10:00]

எகிப்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக அந்நாட்டின் நாடாளுமன்ற முதல் அமர்வு இடம்பெற்றது. முன்னதாக எகிப்தில் காணப்பட்ட இஸ்லாமியவாத ஆதிக்கம் நிறைந்த சட்டமன்றமானது, கடந்த 2002 ஆம் ஆண்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கலைக்கப்பட்டது. அதை தொடர்ந்து முகமது மோர்சி, தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி ஆனார். ஆயினும் அவருக்கு எதிராக ஜெனரல் சிசி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


சவுதி அரேபியா-ஈரான் பதற்ற நிலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான்!
[Monday 2016-01-11 07:00]

சவுதி அரேபியா மற்றும் ஈரானுக்கிடையிலான பதற்ற நிலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சவுதி அரேபியாவின் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். கடந்த ஜனவரி 7 மற்றும் ஜனவரி 10 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பாகிஸ்தானுக்கான விஜயத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.


ஆன்மாவைச் சுத்திகரிக்க ஜப்பானியர்கள் மேற்கொள்ளும் ஐஸ் குளியல்!
[Monday 2016-01-11 07:00]

ஆன்மாவைச் சுத்திகரிக்க வருடாந்தம் ஜப்பானியர்கள் மேற்கொள்ளும் ஐஸ் குளியல் ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் டோக்கியோவில் உள்ள ஷெரீன் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டில், சிறந்த தேகாரோக்கியம் பெற வேண்டி நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து, வழிபாடுகளின் பின்னர் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட குளிர் நீரில் இறங்கினர். இந்நிகழ்வின் போது, ஆண்கள் பாரம்பரியமாக கோவணத்துடனும் பெண்கள் வெள்ளை நிற அங்கிகளுடனும் காட்சியளித்தனர்.


கெய்ரோவில் கூடியது அரபு லீகின் அவசரக் கூட்டம்!
[Sunday 2016-01-10 16:00]

சவுதி அரேபியாவின் வேண்டுகோளை அடுத்து, அரபு லீகின் அவசரக் கூட்டம் கெய்ரோவில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அரபு லீகின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இரானிலுள்ள சவுதி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விவாதிக்க இந்தக் கூட்டம் சவுதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறுகிறது. சவுதி அரேபியா ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜீய உறவுகள் மோசமடைந்தன.


குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்: - ஜெர்மனி அறிவிப்பு
[Sunday 2016-01-10 16:00]

ஜெர்மனியில் குடியேறும் நோக்கில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என, ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஏங்கலா மெர்க்கல் அம்மையார் தெரிவித்துள்ளார். குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். அந்த நடைமுறையை இலகுவாக மேற்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.


ஆளில்லா விமானங்களை கடத்தி செல்ல முயன்றதாக பாகிஸ்தானியர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு!
[Sunday 2016-01-10 09:00]

பாகிஸ்தானை சேர்ந்தவர் சையத் வாக்கர் அஷ்ரப். இவர் லாகூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி. இவர் பாகிஸ்தான் ராணுவ பயன்பாட்டுக்காக 10 ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள அதிநவீன ஆளில்லா விமானங்களை தயாரிக்கிற ஒரு நிறுவனத்துக்கு, சட்ட விரோதமாக ஆர்டர் வழங்கி உள்ளார். இவற்றின் விலை 3 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2


பாக்-ஆப்கான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல்: - ஐ.எஸ். தீவிரவாதிகள் 20 பேர் பலி
[Sunday 2016-01-10 08:00]

உலக நாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்போது அந்த இயக்கத்தினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றி வருகின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் தங்கள் மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்று கூறி வந்தாலும், கடந்த ஆகஸ்டு மாதம் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த நாடு ரகசிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இஸ்லாமாபாத் நகர தலைவர் அமீர் மன்சூர், துணைத்தலைவர் அப்துல்லா மன்சூரி, சிந்து மாகாண தலைவர் உமர் கதியோ உள்ளிட்ட 40 பேர் சமீபத்தில் அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


இஸ்ரேலிய படைவீரர் மீது கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட முயன்ற இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொலை!
[Sunday 2016-01-10 08:00]

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு சமூகத்தினரும் வழிபடக்கூடிய வழிப்பாட்டுதளங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தான். ஜெருசலேமில் உள்ள அல் அசா மசூதி முஸ்லிம்கள் கட்டுபாட்டில் உள்ளது. அதேசமயம் அந்த வளாகம் யூதர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. சமீபகாலங்களில் அங்கு வருகை தரும் யூதர்களின் எண்ணிக்கையை இஸ்ரேல் அரசு அதிகரித்து வருவதாக பாலஸ்தீன் கூறி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதுடன் அண்மை காலமாக அங்கு அடிக்கடி மோதல்களும் நடந்து வருகின்றன. இந்த மோதல்களில் ஒருவினோதமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது.


வேட்டை நாய்க்கு தங்கப் பதக்கம் வழங்கிய பிரிட்டிஷ் நிறுவனம்!
[Saturday 2016-01-09 22:00]

தென்னாப்பிரிக்காவில் அருகிவரும் உயிரினமான காண்டாமிருகங்களை, சட்டவிரோதமாக வேட்டையாடுவோரிடமிருந்து பாதுகாக்க உதவிவரும் வேட்டை நாய் ஒன்றிற்கு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது. `கே-9 கில்லர்' என்றழைக்கப்படும் இந்த வேட்டை நாயின் கண்காணிப்புத் திறமையால், க்ருகர் தேசிய பூங்காவில் சட்டவிரோதமாக வேட்டையாடிய 115 பேரை கடந்த நான்கு ஆண்டுகளில் கைதுசெய்ய முடிந்துள்ளது. அருகிவரும் காண்டாமிருகங்களை காப்பாற்றுவதற்கு கே-9 கில்லர் ஆற்றிவரும் பங்களிப்பு உண்மையிலேயே கௌரவிக்கப்பட வேண்டியது என்று பி.டி.எஸ்.ஏ எனப்படும் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் மிருகங்களுக்கான அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.


மெக்ஸிகோவில் சிறையிலிருந்து தப்பிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் மீண்டும் கைது!
[Saturday 2016-01-09 22:00]

மெக்ஸிகோவில் சிறையிலிருந்து தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் கோவகீன் கூஸ்மான் எல் சப்போவை தாம் மீண்டும் கைது செய்துள்ளதாக, மெக்ஸிக்கோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே, அவர் அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறார்.


சீனா ஹெனான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை புல்டோசரால் இடிப்பு: - 6 பேர் பலி
[Saturday 2016-01-09 17:00]

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஷெங்ஷுயூ பல்கலைகழகத்தில் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. அதை ஒட்டி ரோடு விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனைக் கட்டிடம் இருந்ததால் அதை வழங்க நிர்வாகம் மறுத்து விட்டது. இதுகுறித்து பிரச்சினை இருந்து வந்த நிலையில் மருத்துவமனையின் கட்டிடத்தை இடித்து அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து மருத்துவமனையின் ஒருபகுதி முன் அறிவிப்பு எதுவும் இன்றி புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டது. அப்போது, அங்கு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.


இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தடம்புரளச் செய்யும் தீவிரவாத குழுவுக்கு அனுமதி இல்லை: - பாதுகாப்புத்துறை மந்திரி
[Saturday 2016-01-09 17:00]

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான செயல்பாடுகளை தடம்புரளச் செய்யும் தீவிரவாத குழுவுக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சக்திகள் மீது கமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியாவை தாக்கிய புயல்!
[Saturday 2016-01-09 15:00]

எல்நினோ தாக்கம் காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தாக்கிய புயலினால் மின்னல் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியாகியிருக்கின்ற காணாளியில் கடற்கரைப் பகுதிகளில் மின்னல் ஏற்படுவதனையும், வீதிகள் மற்றும் கார் தரிப்பிடங்களில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளமையினையும் காணமுடிகின்றது.


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நாயைக் கடத்த முயற்சி செய்த இளைஞர் கைது!
[Saturday 2016-01-09 12:00]

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செல்லப்பிராணியான போர்த்துக்கீச நாயைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது இவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் என்பன கைப்பற்றப்ட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். வடக்கு டகோடா மாகாணத்தை சேர்ந்த 49 வயதான ஸ்காட் டி. ஸ்டாக்கெர்ட் என்பவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா,


எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 140 பேர் படுகொலை- மனித உரிமை கண்காணிப்பகம்
[Saturday 2016-01-09 08:00]

ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த நகரத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒரோமியா பிராந்தியத்தில் பல நகரங்களில் இருந்து விளைநிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் இந்த ஒரோமியா பகுதி, நாட்டின் மிகப்பெரிய இனமான ஒரோமா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிற பகுதி ஆகும். தலைநகரத்தை விஸ்தரிப்பதற்காக இந்த ஒரோமியா பிராந்தியத்தில் விவசாய நிலங்களை எடுப்பதற்கு எதிராக ஒரோமா இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி விட்டால், தாங்கள் இடம் பெயர வேண்டிய நிலை வந்து விடும் என விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளிய அரசு! - முறையான அனுமதி பெறவில்லையாம்
[Saturday 2016-01-09 08:00]

முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு. சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் மா சேதுங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து பீகிங் பல்கலைக் கழகத்தில், நூலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது மன்னராட்சிக்கு எதிராக சன்யாட் சென் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கம்யூனிஸக் கொள்கைகளும் வேகமாகப் பரவின. அதன்பால் ஈர்க்கப்பட்ட மா சேதுங் பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் மா சேதுங். பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் 20-ம் நூற்றாண்டில் சீனாவில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டு போரையும் முன்னின்று நடத்தியவர் இவர்.


தென்கொரியாவின் தொலைக்காட்சிகளில் அதிக ஆர்வம் காட்டும் ஆண் சமையல்காரர்கள்!
[Saturday 2016-01-09 08:00]

தென்கொரிய தொலைக்காட்சிகளில் பிரபலமானவை சமையல் நிகழ்ச்சிகள்தான். அதுவும் ஆண் சமையல்காரர்களை கொண்ட நிகழ்ச்சிகள். அங்கு பாரம்பரியமாக பெண்களுடைய வேலை என்று கருதப்பட்ட சமையலில், இப்போது ஆண்களூம் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.


தள்ளாட்டத்துக்குப் பின்னர் மெதுவாக தலைதூக்கியுள்ள சீனப் பங்குச் சந்தை!
[Saturday 2016-01-09 08:00]

சீனாவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் இரண்டு முறை இடைநிறுத்தப்படக் காரணமான தானியங்கிப் பொறிமுறை அகற்றப்பட்ட பின்னர் நடந்த முதல் நாள் வர்த்தகத்தில், தள்ளாட்டம் இருந்தாலும் இரண்டு சதவீத அதிகரிப்புடன் பங்குச் சந்தை மூடியுள்ளது.


அமெரிக்காவில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேர் கைது!
[Friday 2016-01-08 18:00]

அமெரிக்காவில் சியாட்டல் நகரில் தென்கொரியாவில் இருந்து போலி விசாக்கள் மூலம் அழைத்து வந்த இளம் தென்கொரிய அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தீ லிக் என்ற வலைத்தளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பல் தென்கொரியாவை சேர்ந்த இளம் பெண்களை போலி விசா மூலம் அழைத்து வந்து அமெரிக்காவின் பல மாகணங்களில் பாலியல் தொழிலில் பயன்படுத்தினர். உளத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்த வலை தளத்தை சைபர் கிரைம் பிரிவு ரகசியமாக கவனித்து அதன் தலைமையகமான சியாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அந்த கும்பலை சேர்ந்த 13 பேரை கைது செய்து அவர்களுடன் இருந்த 12 தென்கொரிய இளம்பெண்களையும் மீட்டனர்.

Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா