Untitled Document
May 19, 2024 [GMT]
இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை சிகிச்சை செய்த மருத்துவர் கைது!
[Wednesday 2019-05-29 17:00]

இலங்கையில் திரிகோணமலை நெடுஞ்சாலையில் கருணாகல் பயிற்சி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு சிசேரியன் முறை மூலம் பிரவசம் பார்த்தபோது 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அரபு நாட்டு செல்வந்தர்களின் கைக்கூலியாக செயல்பட்ட டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி இந்து மற்றும் புத்த மதங்களை சேர்ந்த பெண்களுக்கு அடுத்த வாரிசு பிறக்காமல் இருப்பதற்காக சிசேரியன் பிரசவம் முடிந்து மயக்கநிலையில் இருந்த பெண்களுக்கு தெரியாமல் இப்படி அவர் கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.


அமெரிக்க அதிபரின் வருகையால் ஆறுதல் கிடைத்திருக்கிறது - ஜப்பான்!
[Wednesday 2019-05-29 05:00]

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால், வர்த்தகம் தொடர்பான விவகாரத்தில் ஜப்பானுக்கு சற்றே ஆறுதல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. 4 நாள் பயணமாக ஜப்பான் சென்ற டிரம்ப், திங்கட்கிழமை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இருநாடுகளுக்கும் சாதகமான நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்று குறிப்பிட்டார்.


பிளாஸ்டிக் கழிவுகளை அதற்குரிய நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் மலேசியா!
[Wednesday 2019-05-29 05:00]

3 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை எந்த நாட்டில் இருந்துகொண்டு வரப்பட்டதோ அங்கேயே அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் சீனாவுக்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேரும் நாடாக மலேசிய இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளில், 3 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான கழிவுகள் எந்தெந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.


சூடானில் சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய ஸ்டிரைக்- விமானங்கள் ரத்து!
[Wednesday 2019-05-29 05:00]

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் கடந்த மாதம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை!
[Wednesday 2019-05-29 05:00]

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டை நாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை - அதிபர் டிரம்ப் பேட்டி!
[Tuesday 2019-05-28 14:00]

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது முதல், இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்ததோடு, அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும், ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை குவித்து இருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.


அமெரிக்காவின் F35 ரக போர் விமானங்களை வாங்குகிறது ஜப்பான்!
[Tuesday 2019-05-28 14:00]

அமெரிக்காவிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய டிரம்ப், தங்களிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை ஜப்பான் வாங்க உள்ளதாக தெரிவித்தார்.


வயிற்றில் அதிகப்படியான போதைப்பொருள் கடத்தி வந்த ஜப்பான் பயணி பலி!
[Tuesday 2019-05-28 14:00]

குடலில் மறைத்து கடத்தி வந்த கொகைன் ((Cocaine)) பாக்கெட்கள் பிரிந்து ஜப்பானிய பயணி நடுவானில் பலியானார். கொலம்பியா தலைநகர் போகோடாவில் இருந்து டோக்கியோ சென்ற ஏரோமெக்சிகோ விமானத்தில் பயணத்த ஜப்பானை சேர்ந்த 42 வயது பயணிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால், மெக்சிகோ நகரத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர் விமானத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.


கழுகின் ஔிப்படத்தால் புகழ் பெற்ற கனடா ஔிப்படக்கலைஞர்!
[Tuesday 2019-05-28 14:00]

தொழில்முறை சாராத கனடா ஔிப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த பருந்தின் ஔிப்படம் ஒன்று சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக தாம் நெகிழ்ந்து போயிருப்பதாக அந்த புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். கனடாவை சேர்ந்த ஸ்டீவ் பைரொ என்பவர் ‘கனேடியன் ராப்டர்’ சரணாலயத்தில் ஒரு பருந்தின் ஔிப்படத்தையும், காணொளியையும் பதிவு செய்தார். அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த போது ஆரம்பத்தில் சாதாரணமாக அனைவராலும் விரும்பப்பட்டதுடன், மீளப் பகிரப்பட்டது. அந்த ஔிப்படம் பின்னர் எதிர்பாராத விதமாக வைரலாக பரவியது. ஔிப்படங்களை பதிவு செய்த தினத்தில் அங்கு ஸ்டீவ் நூற்றுக்கணக்கான ஔிப்படங்களை எடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்த கழுகின் ​நேர்கொண்ட பார்வை.


பிரேசிலில் பயங்கரம்: சிறையில் கைதிகளிடையே மோதல்; 15 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2019-05-28 08:00]

பிரேசில் உலகிலேயே அதிக சிறைக்கைதிகளை கொண்ட 3-வது நாடாக திகழ்கிறது. கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 1,12,305 கைதிகள் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரேசில் சிறைகளில் கைதிகளுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரங்கள் மூள்வதும், சிறையை தகர்த்து தப்பி ஓடும் முயற்சிகளும் அவ்வப்போது நடக்கின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அமேசோனஸ் மாகாணத்தின் தலைநகர் மனாவுசில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கு இடையே பெரும் கலவரம் வெடித்தது.


ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 19 பேர் படுகாயம்!
[Tuesday 2019-05-28 08:00]

ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.


சிங்கப்பூரில் குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம்!
[Tuesday 2019-05-28 08:00]

குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம் ஒன்று சிங்கப்பூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக குழு ஒன்று இதனை வடிவமைத்துள்ளது. 40 மில்லியன் வெள்ளி செலவில் குறித்த ஆய்வு கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. துவாஸ் சவுத்தில் அமைந்திருக்கும் குறித்த ஆலையில் 1,600 டிகிரி செல்சியஸில் குப்பைகளை எரியூட்டக்கூடிய வசதி உள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு எரிக்கப்பட்டு எரிவாயுவாக மாற்றப்படவுள்ளது.


காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 11 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!
[Tuesday 2019-05-28 08:00]

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.


கியூபெக்கில் காரில் இருந்து சடலம் கண்டெடுப்பு!
[Monday 2019-05-27 17:00]

கியூபெக்கில் காரொன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கியூபெக் – நியூயோர்க் எல்லையில் காரொன்றுக்குள் இருந்து குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹமிங்ஃபோர்ட் எல்லையில் காரை சோதித்த சுங்க அதிகாரிகளே காரில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


மெக்ஸிக்கோவின் அகதிகள் சுமையை குறைக்க உதவுமாறு ஐ.நா. கனடாவிடம் வேண்டுகோள்!
[Monday 2019-05-27 17:00]

மெக்ஸிக்கோவின் அகதிகள் சுமையை சுலபமாகக் குறைக்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கனடாவிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. புதிதாக புலம்பெயர்ந்துள்ள குடியேற்றவாசிகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை மீளக்குடியமர்த்துவன் மூலம் இந்த உதவியை புரியுமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த குடியேற்றவாசிகளில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே உள்ளடங்குகின்றனர்.


ஜப்பான் நாட்டின் புதிய மன்னருடன் டிரம்ப் சந்திப்பு!
[Monday 2019-05-27 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் இன்று விரிவாக விவாதிக்கவுள்ளார். இதற்கிடையில், கடந்த முதல் தேதி ஜப்பானின் புதிய மன்னராக பதவியேற்ற நாருஹிட்டோவை டொனால்ட் டிரம்ப் இன்று சந்தித்தார். மன்னரின் அரண்மனையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


கனடாவில் 19 மொழிகளை சரளமாக பேசும் 20 வயது வாலிபர்!
[Monday 2019-05-27 17:00]

கனடாவின் – மொன்ட்றியலைச் சேர்ந்த ஜோசஸ் அவாட் என்பவர் பிரெஞ்சு மொழியை பெரும்பாலும் பேசும் மொழியாக பயன்படுத்திய போதும் அவர் அரபிக், ஆங்கிலம், ஜப்பானிய மொழிகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசும் திறமையை கொண்டுள்ளார். 20 வயதான குறித்த இளைஞர் அதிகபட்சமாக 19 மொழிகளை சாதாரண பேசும் வல்லமையை பெற்றுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அவர் இணையம் காணொளிகள், இசை மற்றும் நண்பர்களுடனான உரையாடலின் போது அதிகளவில் பயன்படுத்துபவையாகும். தனது திறமை பற்றி குறித்த இளைஞர் கூறுகையில், “நான் மிகவும் கிரகிக்கும் திறமையை கொண்ட மாணவன். அதனால் நான் மொழியறிவை மேற்படுத்துவதற்காக காணொளிகள், திரைப்படங்கள் மற்றும் இசை வடிவங்களை கேட்பது உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்.


நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு!
[Monday 2019-05-27 08:00]

சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில், 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்திலுள்ள ஷாங்ஷூ பகுதியில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான சிறார்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


அமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 முன்னாள் பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு!
[Monday 2019-05-27 08:00]

அமெரிக்காவில் டெட்ராய்ட், லான்சிங், கலமாசோ மறைமாவட்ட பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்களாக 5 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவரது பெயர் ஜேக்கப் வெல்லியன் (84). இவர்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் இவர்கள் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த 4 பாதிரியார்கள் அரிசேனா, கலிபோர்னியா, பிளோரிடா, மிச்சிகன் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.


முதன்முறையாக ஆஸ்திரேலியா மந்திரிசபையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்!
[Monday 2019-05-27 08:00]

151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.


அரசியல்வாதிகள் மற்றும் சமயம் தொடர்பான அடையாளங்களை வெறுக்கும் மக்கள் – கருத்துக்கணிப்பு!
[Monday 2019-05-27 08:00]

அரசியல்வாதிகள் மற்றும் சமயம் தொடர்பிலான அடையாளங்களை அணிந்துகொள்வதை மூன்றில் ஒரு பஙகு கனேடியர்கள் விரும்பவிலலை என்று அண்மையில் மேற்கொள்ளப்படட கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று காட்டுகிறது. குறிப்பாக மத்திய, மாநில, உள்ளூராட்சி அரசியல்வாதிகள் முக்காடுகளையோ, சிலுவை அடையாளங்களையோ, தலைப்பாகையையோ அல்லது அவற்றினை ஒத்த மத அடையாளங்களோ தமது கடமை நேரங்களில் அணியக்கூடாது என்று, இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான கியூபெக் மக்கள் தெரிவித்துள்ளனர்.


நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதலில் 25 இராணுவத்தினர் உயிரிழப்பு!
[Sunday 2019-05-26 14:00]

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இராணுவதளம் அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 துப்பாக்கி தரித்த வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்தே இந்தத் தாக்குதலை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை : அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
[Sunday 2019-05-26 14:00]

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் ராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அவர் பயன்படுத்த முடியும். அதன்படி எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 406 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம்) நிதியாக ஒதுக்க அமெரிக்க ராணுவ தலைமையகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.


‘அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்!
[Sunday 2019-05-26 14:00]

ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அந்நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 6 நாடுகள் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2015–ம் ஆண்டு ஏற்படுத்தின. ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் கூறி வந்தார். இதன் காரணமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வழி கிடைத்தது. அதன் படி ஈரான் மீது அதிகமான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இது ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது.


வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த கவலையும் இல்லை - டிரம்ப்!
[Sunday 2019-05-26 14:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.


கடும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க நகரங்கள்! Top News
[Sunday 2019-05-26 08:00]

அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆக்லஹாமா மற்றும் ஜெபர்சன் சிட்டி உள்ளிட்ட நகரங்களில் அடுத்தடுத்து தாக்கும் சூறாவளிக் காற்றுகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜெபர்சன் சிட்டி பகுதியில் இடைவிடாது பெய்த மழையால் நீர்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


இங்கிலாந்து ராணியின் பிறந்ததினம் ஜூனில் கொண்டாட்டம்!
[Sunday 2019-05-26 08:00]

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்ததினம் அடுத்த மாதம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து மகாராணி 2ம் எலிசபெத்தின் பிறந்ததினம் ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப்பட்டாலும், அவரது அதிகாரப்பூர்வ பிறந்ததினம் ஜூன் 8ம் தேதிதான் கொண்டாடப்படுகிறது.


கருக்கலைப்பு மதரீதியான பிரச்சினையல்ல, மனிதாபிமான பிரச்சினை - போப் கருத்து!
[Sunday 2019-05-26 08:00]

கருக்கலைப்பை ஏற்க முடியாது என்றும் கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்றும் புனித போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் வாடிகனால் ஒருங்கிணைக்கப்பட்ட கருக்கலைப்புக்கு எதிரான மாநாட்டில் பேசிய போப் ஆண்டவர், கருக்கலைப்பு விவகாரம் ஒரு மதரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை என்று கூறினார். பிரச்சினையைத் தீர்க்க மனித உயிரைப் பறிப்பது சட்டப்பூர்வமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா