Untitled Document
April 28, 2024 [GMT]
ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைப்பு! Top News
[Friday 2021-12-03 08:00]

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.


நான் செய்தியாளர் அல்ல, செய்தி ஆசிரியர்!
[Friday 2021-12-03 08:00]

கட்சிக்கோ, தமக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத திருத்தப்பட்ட செய்திகளை மட்டுமே தாம் ஊடகங்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னைத் தான் ஆசிரியராகக் கருதுவதாகவும் செய்தியாளராகக் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.


எரிவாயு வெடித்தால் இதற்கு அழையுங்கள்!
[Friday 2021-12-03 08:00]

எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இதனை அறிவித்துள்ளார்.


நகர மறுத்த தயாபரன் - ஓரமாய் அமர்ந்தார் சிவலிங்கம்!
[Friday 2021-12-03 08:00]

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்று அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் முதல் அமுலாகும் வரையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


தென்னமரவாடி குளவி கொட்டி ஒருவர் பலி!
[Friday 2021-12-03 08:00]

திருகோணமலை - தென்னமரவாடி பகுதியில் நேற்றுக் காலை குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அசாத் சாலி விடுதலை!
[Thursday 2021-12-02 17:00]

மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அசாத் சாலிக்கு எதிராக பொய் முறைப்பாடு - 3 எம்.பிக்களுக்கு நீதிமன்றம் கட்டளை!
[Thursday 2021-12-02 17:00]

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று அழைப்பாணை வௌியிட்டுள்ளார்.


ஒன்ராறியோ மாகாண தேர்தலில் ஸ்கார்பரோ மத்திய தொகுதி வேட்பாளராக நீதன் சான்!
[Thursday 2021-12-02 17:00]

2022 ஜூன் மாதம் நடைபெற உள்ள கனடா - ஒன்ராறியோ மாகாண சபை தேர்தலில் ஸ்கார்பரோ மத்திய (Scarborough Centre) தொகுதியின் என்.டி.பி. கட்சியின் வேட்பாளராக நீதன் சான் போட்டியிடவுள்ளார்.


ஒரு டொலருக்கு 10 ரூபா ஊக்குவிப்புத் தொகை!
[Thursday 2021-12-02 17:00]

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படுகின்ற பணம் இம்மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக 10 ரூபாவைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.


மாதகல் காணி விவகாரம் - ஆளுநர் மறுப்பு!
[Thursday 2021-12-02 17:00]

மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து, சில ஊடகங்களில் நேற்று செய்தி வெளிகியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பில், இன்று , தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.


துப்பாக்கி முனையில் செய்தியாளருக்கு அச்சுறுத்தல்!
[Thursday 2021-12-02 17:00]

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் ஒருவரை பொலிஸார் மிரட்டியதாக செய்தியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.அதேவேளை, தன்னுடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் றிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டியதாகவும் குறித்த செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.


கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை !
[Thursday 2021-12-02 17:00]

'தேசமாய் சிந்தித்து நாட்டினை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் இடம்பெற இருக்கின்ற இந்த அமர்வின் தொடக்க நிகழ்வில் சர்வதேச பிரதிநிதிகள் பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடக்கு தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா!
[Thursday 2021-12-02 17:00]

வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை சீனா இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.


நல்லூரிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!
[Thursday 2021-12-02 17:00]

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.


சாவகச்சேரி நகரசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!
[Thursday 2021-12-02 17:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.


உகண்டாவில் இருந்து திரும்பியவருக்கு மலேரியா!
[Thursday 2021-12-02 17:00]

காலி – நெலுவ பகுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


கூடுகிறது மத்திய குழு! - தனி வழி செல்லுமா சுதந்திரக் கட்சி?
[Thursday 2021-12-02 17:00]

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


சட்டவிரோத பணப் பரிமாற்றம்- வங்கிக்கணக்குகள் முடக்கப்படும்!
[Thursday 2021-12-02 10:00]

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை பகிர்ந்தளித்து, பெறுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனைவரையும் சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது என்று அவர் அறிவித்துள்ளார்.


தலைமன்னார் பாடசாலையில் 12 மாணவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா!
[Thursday 2021-12-02 10:00]

தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.


கனடா விபத்தில் புங்குடுதீவை சேர்ந்தவர் பலி!
[Thursday 2021-12-02 10:00]

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் - புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இந்திய நிதி அமைச்சருடன் பசில் சந்திப்பு!
[Thursday 2021-12-02 10:00]

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய நிதி அமைச்சர் எஸ்.நிர்மலா சீதாராமனை நேற்று புதுடில்லியில் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வடக்கில் நவம்பரில் தொற்றாளர் அதிகம்!
[Thursday 2021-12-02 10:00]

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
[Thursday 2021-12-02 10:00]

உடன் அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் நேற்று புதிய ஆணையாளர் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகப் பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஓய்வூதிய வயதெல்லையை குறைக்க வேண்டும்!
[Thursday 2021-12-02 10:00]

வடக்கு, கிழக்கில், மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான வேண்டும். இதன் மூலமே தேசியப்பாடசாலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.


ஒமக்ரோன் வரும்... கொஞ்சம் தாமதமாக!
[Thursday 2021-12-02 10:00]

ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


மாணவனின் கன்னத்தில் அறைந்த அதிபர் மீது ஒழுக்காற்று விசாரணை?
[Thursday 2021-12-02 10:00]

யாழ்ப்பாணம் முக்கிய கல்லூரியொன்றில் அதிபர் தாக்கியதில் க.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது.


காணித் தகராறு- கைகலப்பில் நால்வர் காயம்!
[Thursday 2021-12-02 10:00]

வவுனியா- கூமாங்குளம் பகுதியில் நேற்று காணி தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஒன்ராறியோவில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலி!
[Wednesday 2021-12-01 18:00]

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒன்ராறியோவின் பாரி பகுதியில், 77 வயதான ஆண் ஒருவரே மாகாணத்தில் கொரோனாவுக்கு முதன்முதலில் உயிரிழந்தார்.

Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா