Untitled Document
March 29, 2024 [GMT]
கறுப்புப் பட்டியலில் சேர்த்த சீனத் தூதுவரை அழைத்து கண்டிக்க வேண்டும்!
[Wednesday 2021-11-03 08:00]

மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனத் தூதரகம் எடுத்த முடிவு தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய மக்கள் வங்கி செயற்பட்டுள்ள நிலையில், அதனைச் சவாலுக்குட்படுத்துவது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


லசந்த கொலை வழக்கு -ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணை!
[Wednesday 2021-11-03 08:00]

சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரம், நெதர்லாந்தின் ஹேக் நகரில் நிறுவப்பட்டுள்ள 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில்' நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


மீண்டும் ஏறுகிறது சீனி விலை!- கட்டுப்பாட்டு விலை தளர்வு.
[Wednesday 2021-11-03 08:00]

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்யவும், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சட்டமா அதிபரிடம் தகவல் கோரிய எம்.பிக்கள்!
[Wednesday 2021-11-03 08:00]

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை நடத்திய வழக்கு விசாரணைகளின் தகவல்களை கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சட்டமா அதிபரிடம் கடிதம் ஒன்றை,நேற்று கையளித்தனர்.


தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க வேண்டும்!
[Wednesday 2021-11-03 08:00]

மாகாணத்தில் இருந்து மாகாணத்துக்குப் பயணிக்கும் போது, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என, ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, ஆலோசனை தெரிவித்துள்ளார்.


மொட்டு விழாவைப் புறக்கணித்த வீரவன்ச!
[Wednesday 2021-11-03 08:00]

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் அவரது பிரநிதியொருவர் கலந்து கொண்டார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.


முக கவசம் அணியாதவர்கள் யாழ். நகரில் கைது!
[Wednesday 2021-11-03 08:00]

யாழ். நகரில் தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் முடிவு! Top News
[Tuesday 2021-11-02 17:00]

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக் கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளது.


சிங்கள குடியேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் முடிவு!
[Tuesday 2021-11-02 17:00]

வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.


இணைந்து செயற்படும் அவசியம் உணரப்படுகிறது!
[Tuesday 2021-11-02 17:00]

தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


ஒரு மணித்தியாலத்துக்கான ஊதியம் 15 டொலர்களாக அதிகரிக்கிறது!
[Tuesday 2021-11-02 17:00]

ஒன்ராறியோ மாகாணத்தில் ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் ஜனவரியில் இருந்து 15 கனேடிய டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்த உத்தியோகபூா்வ அறிவிப்பை மாகாண முதல்வர் டக் போர்ட் இன்று வெளியிடுவார் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கூட்டத்தை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கவில்லை!
[Tuesday 2021-11-02 17:00]

தமிழ் கட்சிகளின் ஒன்று கூடலை தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்! Top News
[Tuesday 2021-11-02 17:00]

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வலிவடக்கு மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வ.பிரபாகரன் தலைமையில் இந்த போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.


கரன்னகொட வழக்கு - சட்டமா அதிபரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
[Tuesday 2021-11-02 17:00]

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கைவிடுமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


கைதுக்கு தடைவிதிக்க கோரி மனுத் தாக்கல்!
[Tuesday 2021-11-02 17:00]

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


கீரிமலையில் காணி அளவீட்டு முயற்சி முறியடிப்பு! Top News
[Tuesday 2021-11-02 17:00]

கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஸ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.


நாளை ஆர்ப்பாட்டம் - வேலைநிறுத்தம் அல்ல!
[Tuesday 2021-11-02 17:00]

நாளை இடம்பெறுவது வேலைநிறுத்தமல்ல எனவும் இது ஆர்ப்பாட்டம் மாத்திரமே என என மின்சார சபையின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை இடம்பெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து தங்களது போராட்டம் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சைத் தினங்கள் அறிவிப்பு!
[Tuesday 2021-11-02 16:00]

2021 ஆம் ஆண்டு பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் சாள்ஸ்?
[Tuesday 2021-11-02 16:00]

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கொரோனா தொற்றும், மரணங்களும் அதிகரிப்பு!
[Tuesday 2021-11-02 08:00]

ஒரு வாரத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12.2 சதவீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளன. இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது நாட்டில் உண்மையில் கொவிட் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதா என்று தோன்றுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.


13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரும் சந்திப்பு!
[Tuesday 2021-11-02 08:00]

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் நடைபெற உள்ளது.


உடைப்பெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!
[Tuesday 2021-11-02 08:00]

வவுனியா நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மின்சாரத்தை நிறுத்தமாட்டோம்- தடைப்பட்டால் திருத்தமாட்டோம்!
[Tuesday 2021-11-02 08:00]

மின்சார விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் பொது மக்கள் வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


இந்திய தூதுவருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!
[Tuesday 2021-11-02 08:00]

வடபகுதி கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வடக்கு மீனவர் தரப்பில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


நாடகம் போடும் அமைச்சர்கள்!
[Tuesday 2021-11-02 08:00]

கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும்.


உள்ளுக்குள் கலந்துரையாடாததே பிரச்சினைக்கு காரணம்!
[Tuesday 2021-11-02 08:00]

பங்காளிகளுடன் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபடாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தின் பிரச்சினைகள் வெளியில் பேச வேண்டி இருந்ததாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில,தெரிவித்தார்.


தமிழர்கள் அவசியமில்லை - நாங்களே பார்த்துக் கொள்வோம்!
[Tuesday 2021-11-02 08:00]

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது. ஏனெனில் மூவின மக்களின் அரசியல் மற்றும் மதம்சார் பிரச்சினைகளை நாம் நன்கறிவோம் என ஒரே நாடு- ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


மோடி - கோட்டா சந்திப்பு!
[Tuesday 2021-11-02 08:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்கொட்லாந்தின் - க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா