Untitled Document
May 2, 2024 [GMT]
ஒமக்ரோனை மிஞ்சிய கனடாவின் காலநிலை!
[Wednesday 2021-12-29 08:00]

நாட்டில் காலநிலை காரணிகளினால் பெரும்பாலான விமானப் பயணங்களை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாக என கனேடிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுமுறை காலத்தில் கனடாவில் பல்வேறு விமான பயணங்கள் ரத்து செய்ய நேரிட்டுள்ளது. கடந்த 22ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் பல விமான பயணங்களை ரத்து செய்ய நேரிட்டதாக கனேடிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.


50 சதவீத மாணவர்களுடன் விரிவுரைகளுக்கு அனுமதி!
[Wednesday 2021-12-29 08:00]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.


திருப்பதிக்கு இலவசப் பயணத்தை ஒழுங்கு செய்த இந்திய நண்பர்!
[Wednesday 2021-12-29 08:00]

பிரதமர் மகிந்தவின் திருப்பதி பயண விவகாரம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச,கடந்த 23 ஆம் திகதி புனித யாத்திரைக்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவின் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு நீல நிற எம்ப்ரேயர் லெகசி 600 வணிக ஜெட் விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது.


பஸ் கட்டண அதிகரிப்பு இன்று இறுதித் தீர்மானம்!
[Wednesday 2021-12-29 08:00]

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்படவுள்ளது.


ஜேவிபியுடன் கூட்டணி - தயாசிறியின் தனிப்பட்ட கருத்து!
[Wednesday 2021-12-29 08:00]

மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்தவர் மரணம்!
[Wednesday 2021-12-29 08:00]

தென்மராட்சி, கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சரசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 58 வயதான சுந்தரராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நாட்டின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கியம்!
[Wednesday 2021-12-29 08:00]

சர்வதேச உறவு என்பது மிகவும் விரிவான, பரந்த விடயமாகும். சர்வதேச உறவு என்பது இன்றைய தொழிநுட்ப உலகில், வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் உலகில் நாடொன்றின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று நாம் சர்வதேச உறவுகளுடன் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வர் என்றார்.


நாமலின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா!
[Wednesday 2021-12-29 08:00]

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளது.


பதவிகளை பறித்தாலும் கவலையில்லை!
[Wednesday 2021-12-29 08:00]

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட நாட்டைப் பாதுகாப்பதே முக்கியமெனவும் ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார்.


கியூபெக் முதியோர் இல்லத்தில் கொரோனா! - இருவர் பலி.
[Tuesday 2021-12-28 18:00]

கியூபெக் மாகாண முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்கார்பரோவில் 84 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய தமிழ் இளைஞன்!
[Tuesday 2021-12-28 18:00]

மூதாட்டி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் பொதி விநியோக சேவையில் ஈடுபடும் சாரதியான தமிழர் ஒருவரை ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர்.


கரன்னகொட விடுவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றில் மேன்முறையீடு!
[Tuesday 2021-12-28 18:00]

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தமையை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக முற்றுகையில் கைதானவர்களுக்கு எதிராக வழக்கு!
[Tuesday 2021-12-28 18:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதியன்று, இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.


லண்டனில் இருந்து திரும்பிய மூதாட்டி கிளிநொச்சியில் கொலை! Top News
[Tuesday 2021-12-28 18:00]

இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிபப் பெண் கிளிநொச்சியில், காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கிளிநொச்சியில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள்! Top News
[Tuesday 2021-12-28 18:00]

கிளிநொச்சி- குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


மேஜர் ஜெனரல் ஆனந்த தேரர் மரணம்!
[Tuesday 2021-12-28 18:00]

புத்தங்கல ஆனந்த தேரர் தனது வயது மூப்பின் காரணமாக 78 ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார். இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றிய இவர், பின்னர் பௌத்த பிக்குவாக மாறினார். இவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரர் ஆவார்.


மதகுருக்களின் கார் அடித்து நொருக்கப்பட்டது!
[Tuesday 2021-12-28 18:00]

கிளிநொச்சி - மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.


சீனோர் படகு தொழிற்சாலை தீக்கிரை!
[Tuesday 2021-12-28 18:00]

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள சீனோர் படகு கட்டும் தொழிற்சாலையில் இன்று நண்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் தொழிற்சாலையிலுள்ள படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன.


மேயர் மணிவண்ணனுக்கு எதிராக போராட்டம்! Top News
[Tuesday 2021-12-28 18:00]

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயர் வி.மணிவண்ணனுக்கு எதிராக, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாநகர சபை முன்றலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்களால், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஏப்ரலில் ஆட்சி கவிழும்!
[Tuesday 2021-12-28 08:00]

நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!
[Tuesday 2021-12-28 08:00]

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சீன உர கப்பல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமைச்சர்களை பொரிந்து தள்ளிய ஜனாதிபதி!
[Tuesday 2021-12-28 08:00]

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஊடக ஆசிரியர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் புறக்கணிப்பு!
[Tuesday 2021-12-28 08:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்திருந்தார். இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர்.


திருமணத்துக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியா?- அடிப்படை உரிமை மீறல்!
[Tuesday 2021-12-28 08:00]

திருமணம் என்பது இனம், மதம், மொழி, நாடு உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கு இருக்கக்கூடிய அடிப்படை மனித உரிமையாகும். அதற்கும் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறுமாறு வலியுறுத்துவதன் ஊடாக ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களிலும் அடிப்படை மனித உரிமைகளிலும் அரசாங்கம் தலையீடு செய்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


புதிய அரசியலமைப்பை குழப்புகிறது மொட்டு!
[Tuesday 2021-12-28 08:00]

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் முயற்சிகளில் ஜனாதிபதியின் முழுமையான ஈடுபாடு இருந்தாலும் கூட அரசாங்கத்தின் பிரதான கட்சியே அதனை தடுக்கும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை கொடுக்கும் வேளையில், அரசாங்கத்தின் பிரதான கட்சி அதனை நிராகரிப்பது அரசியல் ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்துகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.


தாவடியில் சிறுவனுக்கு கத்திக்குத்து!
[Tuesday 2021-12-28 08:00]

யாழ்- தாவடி பகுதியில் 16 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நேற்று குறித்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சீமெந்து, கோதுமை , எரிபொருள் விநியோகத்தில் இருந்தும் விலகினர்!
[Tuesday 2021-12-28 08:00]

பேச்சு தோல்வியடைந்தமையால், ரயில் நிலைய அதிபர்கள் தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்தை விரிவுபடுத்தியுள்ளனர். முன்னதாக புகையிரத பயணச்சீட்டு வழங்காமல் மற்றும் பொதிகளை ஏற்று, கொண்டு செல்வதை தவிர்த்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக, சீமெந்து, கோதுமை மற்றும் எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதற்கும் ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.


மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம்!
[Tuesday 2021-12-28 08:00]

மட்டக்களப்பு - கிரான் ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் , வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா