Untitled Document
April 19, 2024 [GMT]
இராமர் பாலத்தை பார்வையிட்ட சீனத் தூதுவர்!
[Saturday 2021-12-18 08:00]

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தை பார்வையிட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக வடமாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்துள்ளார்.


அமைச்சர்கள் கூறினாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை!
[Saturday 2021-12-18 08:00]

காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


வடக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடங்கள்!
[Saturday 2021-12-18 08:00]

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


கொழும்புக்கு வரவுள்ள அமெரிக்க உயர்மட்டக் குழு!
[Saturday 2021-12-18 08:00]

அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.


டொலர் நெருக்கடி - தூதரகங்களை மூடுகிறது இலங்கை!
[Saturday 2021-12-18 08:00]

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக செலவுகளைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள தூதரகம் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது.


கனடாவில் 29ஆம் திகதி முதல் ஊதியம் 15 டொலர்களாக அதிகரிப்பு!
[Saturday 2021-12-18 08:00]

கனடாவில் தொழில் துறை ஊழியர்களுக்கான ஒரு மணி நேர குறைந்தபட்ச ஊதியம் டிசம்பர் 29 முதல் 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. லிபரல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


பெற்றோல் குண்டு வீசிய மூவர் கைது!
[Saturday 2021-12-18 08:00]

யாழ்ப்பாணம்- மானிப்பாயில் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து பெற்றோல் குண்டுத்தாக்குதலை நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.


வலி.வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! Top News
[Friday 2021-12-17 18:00]

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.


சேனைப்பிலவில் இளம்பெண்ணைச் சுட்டவர் கைது!
[Friday 2021-12-17 18:00]

வவுனியா- நெடுங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.


கட்டுப்பாடுகள் தளர்வு - பொது சுகாதார அதிகாரிகள் அதிருப்தி!
[Friday 2021-12-17 18:00]

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஏதாவது அழுத்தங்களுக்கு அடி பணிந்தா என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


2020 நாவலர் ஆண்டாக பிரகடனம்!
[Friday 2021-12-17 18:00]

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.


பிள்ளையாரின் கை , தும்பிக்கை விசமிகளால் சேதம்! Top News
[Friday 2021-12-17 18:00]

அம்பாறை - திருக்கோவில் கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார்!
[Friday 2021-12-17 18:00]

இலங்கையில் ஒமிக்ரோன் திரிபு உறுதிப்படுத்தப்பட்ட மூவரில் ஒருவர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


பெண்ணுக்கு பாலியல் சேஷ்டை! - 70 வயது முதியவர் கைது.
[Friday 2021-12-17 18:00]

நெல்லியடி - கரணவாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ச்சியாக கொடுத்து வந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மத்தொணி பகுதியைச் சேர்ந்த முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


நாளை முதல் 80 வீதமான உணவகங்கள் மூடப்படும்!
[Friday 2021-12-17 18:00]

உள்நாட்டு திரவ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


பரமேஸ்வரா சந்தி வாள்வெட்டு- இருவர் கைது!
[Friday 2021-12-17 18:00]

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முகாபே வழியில் போனதால் வந்த சிக்கல்!
[Friday 2021-12-17 18:00]

மண்டேலாவின் வழி முகாபேயின் வழியென இரண்டு வழிகள் இருக்கும் போது, முகாபேயின் வழியையே மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்தார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


எழிலன் உள்ளிட்டோர் குறித்த வழக்கில் பெப்ரவரி 14இல் தீர்ப்பு!
[Friday 2021-12-17 08:00]

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.


ஒன்ராறியோவில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி!
[Friday 2021-12-17 08:00]

ஒன்றாரியோவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அரசாங்கம் மேலும் விஸ்தரித்துள்ளது. இதன்படி, ஒன்றாரியோ மாகாணத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட- இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டுக் கொண்டு ஆறு மாதங்கள் கடந்த அனைவரும் பூஸ்டர் டோஸ் போடத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்!
[Friday 2021-12-17 08:00]

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்" என்ற தலைப்பில் கருத்தாய்வு நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


இணுவிலை பூர்வீகமாக கொண்ட பெண் கனடாவில் கார் மோதி மரணம்!
[Friday 2021-12-17 08:00]

மிசிசாகாவில் செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் கார் மோதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றில் இருந்து திடீரென வெளியேறிய கார், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நமிர்தலதா பாலசிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் இணுவிலை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், இவரது இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
[Friday 2021-12-17 08:00]

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பிராம்டனில் காணாமல் போன தமிழ் இளைஞன்!
[Friday 2021-12-17 08:00]

பிராம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். 24 வயதான நிவேதன் அழகேஸ்வரன் என்ற இளைஞரை கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.


அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி!
[Friday 2021-12-17 08:00]

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது. யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன்!
[Friday 2021-12-17 08:00]

ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சீன நிறுவனத்துக்கு ஒரு சதம் கூட கொடுக்கக் கூடாது!
[Friday 2021-12-17 08:00]

சீன நிறுவனத்துக்கு ஒரு சதம் கூட கொடுக்கக் கூடாது. ஏனெனில் இது இந்நாட்டு மக்களின் பணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் -


மிக் மோசடி போலவே யுகதனவி மோசடி!
[Friday 2021-12-17 08:00]

மிக் விமானக் கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளையே, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திலும் அரசாங்கம் செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


பருத்தித்துறை முனையில் சீனத் தூதுவர்! Top News
[Wednesday 2021-12-15 17:00]

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா